




இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது,
அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுகிறோம்
மங்களகரமான் ஐஸ்வர்யம் நிறைந்த இல்லம என்று, மனிதர்களின் மனம் சஞ்சலமின்றி இருக்கும் நேரமான .பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாகத் திகழவைத்து விடுவாளாம்.

அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும் என்பதால்தான் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த காலத்தில் புதுமனை புகுதலைச் செய்துவிடுவது வழக்கம்..
கணபதி ஹோமம் சூரிய உதயத்திற்கு
முன்பே நிறைவேற்றப்படவேண்டும்..
காயத்ரி மந்திரமும் பிரம்ம முகூர்த்த வேளையில் ஜபிப்பது
நலம் தரும் என்பதை அனுபவத்தில் உணரலாம் ..!

அமைதியுடன் மிகச் சாந்தமாக வழிபாட்டைத் தொடர்ந்தால்,
அதிர்ஷ்ட தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஞானநூல்கள், அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் செய்ய வழிகாட்டுகிறது..

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து,
ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி,
சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும்.
இனிப்பு, பழங்கள், தாம்பூலம் நைவேத்தியம் செய்யவேண்டும்..

முதலில், விநாயகர் துதி!
அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும்.
அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி,
கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு,
தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.

பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.

தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து,
செந்தாமரை மீது அமர்ந்தவளாக,
வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.
தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன.
இந்த அதிர்ஷ்டதேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.

அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.


காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

26 திருநாமங்கள்:
ஓம்ஸ்ரீம் தாராயை,
ஓம்ஸ்ரீம்வித்யாயை,
ஓம்ஸ்ரீம்ஓம்ஸ்ரீம்முநின்யை
ஓம்ஸ்ரீம்சரத்தாயை,
ஓம்ஸ்ரீம்ஜராயை,
ஓம்ஸ்ரீம்மேதாயை,
ஓம்ஸ்ரீம்ஸ்வதாயை,
ஓம்ஸ்ரீம்ஸ்வஸ்தியை,
ஓம்ஸ்ரீம்வர்மின்யை,
ஓம்ஸ்ரீம்பாலின்யை,
ஓம்ஸ்ரீம் ஜ்வாலின்யை,
ஓம்ஸ்ரீம்க்ருஷ்ணாயை,
ஓம்ஸ்ரீம் ஸ்மிருத்யை,
ஓம்ஸ்ரீம் காமாயை,
ஓம்ஸ்ரீம்உன்மத்யை,
ஓம்ஸ்ரீம்ப்ரஜாயை,
ஓம்ஸ்ரீம்சிந்தாயை,
ஓம்ஸ்ரீம்க்ரியாயை,
ஓம்ஸ்ரீம் க்ஷ£ந்த்யை,
ஓம்ஸ்ரீம்சாந்த்யை,
ஓம்ஸ்ரீம்தாந்த்யை,
ஓம்ஸ்ரீம்தயாயை,
ஓம்ஸ்ரீம்ஸ்வஸ்திதாயை,
ஓம்ஸ்ரீம்தூத்யை,
ஓம்ஸ்ரீம்கத்யாயை,
ஓம் அதிர்ஷ்ட கலாயை நம
நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,
'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே
கமல ஹஸ்தாய தீமஹி
தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’
என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி,
ஆரத்தி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து, '
ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’
என்று 108 முறை ஜபம் செய்வது விசேஷம்!

அதிர்ஷ்ட தேவியை வழிபடுவதோடு உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், இன்முகப் பேச்சும் இருந்தால்... அதுவே, அதிர்ஷ்டதேவி அந்த இல்லத்திற்குள் அடி எடுத்து வைக்கும் தெய்வீகப் படிகளாகும்.
.உழைப்பாலும், சரியான நேரத்தில் கடமையைச் செய்வதாலும்,
அதிர்ஷ்டம் தடை இன்றி தேடிவரும்
அதிர்ஷ்ட தேவையை வணங்குகிறபோதும், தலையாய பணிகளையும் காலத்தில் செய்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..!





LUCK FOLLOWS ONE WHO BELIEVES IN ONE'S OWN LEGS
ReplyDeleteBTW, EVEN AN UNTIRING WORKER NEEDS LUCK. IS IT THAT POORVA JANMA VINAIP PAYAN ? ONLY DIWAAJI OR VAI.KO. JI OF TIRUCHY WILL BE ABLE TO ELUCIDATE.
SUBBU THATHA.
Respected & Dear Sir,
Deleteநமஸ்காரங்கள்.
According to me, Our Mrs. Rajarajeswari Madam is the only Competent Authority for all these matters, in this Blog World.
மேலிடம் சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாது.
தங்களின் சந்தேகங்கள் அம்பாளால் தீர்க்கப்படட்டும்.
VGK
சிறப்பான பதிவு !
ReplyDeleteமனம் கவர்ந்த படங்கள் !
ஒரு குட்டி தகவல் !
( எங்கேயோ படித்தது )
ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை
அருளியது, நம் தமிழகத்தில்தான் !
ஸ்தல யாத்திரையாக , பாரதம் முழுவதும்
சுற்றி வருகையில் .
திருவண்ணாமலையிலிருந்து ,
காஞ்சிபுரம் செல்லும் வழியில்
நடந்த நிகழ்ச்சி இது .
பதிவிற்கு பாராட்டுக்கள் !
வெள்ளிக் கிழமை அதுவுமாக - மங்கலகரமாக,
ReplyDeleteஸ்ரீஅதிர்ஷ்ட தேவியைப் பற்றிய பதிவு!..
அழகான படங்களுடன் - இனிய செய்திகள்..
வாழ்க நலம்!..
அற்புதமான படங்கள் அம்மா... பாராட்டுகள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் அன்னை அருள் புரியட்டும்...
மிகமிக அழகான அதிர்ஷ்டதேவியின் படங்களுடன் சிறப்பான தகவல்கள்.
ReplyDeleteஅத்துடன் அதிர்ஷ்டதேவியை எப்படி வழிபடனும் என்பதை நேர்த்தியாக, அந்தந்த ஸ்லோகங்கள் தந்து, சொல்லியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கு. ரெம்ப நன்றிகள். வாழ்த்துக்கள்.
சுபிக்ஷம்
ReplyDeleteஅருளும்
ஸ்ரீ அதிர்ஷ்டதேவிக்கு
அடியேனின் வந்தனங்கள் ..
நமஸ்காரங்கள்.
அத்தனைப்படங்களும்
அத்தனை செய்திகளும்
அழகோ அழகு.
இதைப்பார்க்கவும், படிக்கவும்,
இதிலுள்ள சாரத்தை அனுபவிக்கவும்
இன்று வெள்ளிக்கிழமை நான்
அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.
வங்கிக்கணக்கை சரி பாருங்கோ ...
அங்கேயும் ஏதேனும் அதிர்ஷ்டம்
இந்நேரம் வந்து சேர்ந்திருக்கலாம்.
மஹாலக்ஷ்மி சுப்ரபாத காணொளியும்
அம்பாளின் திருநாமங்களும் திவ்யம் !
அதிஷ்ட தேவி வழிபாடு அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஅதிர்ஷ்ட தேவி பற்றி மிகவும் அருமையான படங்களுடன் அழகான பகிர்வு அம்மா....
ReplyDeleteஅதிர்ஷ்ட தேவி வழிபாடு! அறியாத தகவல்! விரிவான விளக்கங்களுக்கு நன்றி!
ReplyDeleteநீங்கள் இப்படி எங்களுக்கு எல்லா வகையான வழிபாடுகளையும், கோவில்களையும் அறிமுகப்படுத்டுவதால், உங்களுக்கும் அந்த அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிட்டும் அம்மா.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் கண்களை விட்டு அகலவில்லை.
மிக அருமையான ஒருத் பதிவு! ஆன்மீகம் கமழ்கின்'றது
ReplyDelete1
அதிர்ஷ்ட தேவியை பற்றிய செய்திகள் புதிது. அதிர்ஷ்ட தேவியின் அருள் எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போமாக.
ReplyDeleteஅதிர்ஷ்ட தேவி வழிபடும் முறை, ஸ்லோகம், லக்ஷ்மி சுப்ரபாதம், அழகான படங்கள் என்று பதிவுலக்ஷ்மி கடாக்ஷ்ம் நிறைந்து இருக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் அந்த திருமகளின் கடைகண் பார்வை கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
வழிபடும் முறைகளையும் பலன்களையும் அழகான படங்களையும் தந்தீர்கள். அதிர்ஷ்ட தேவதை நிச்சயம் தங்கள் பக்கத்திலேயே இருப்பாள் மிக்க நன்றி !எப்படி இத்தனை அழகான படங்கள் எடுக்கிறீர்கள். அத்தனையும் அருமை ! வாழ்த்துக்கள்...!
ReplyDelete