Thursday, April 10, 2014

மங்களங்கள் மலரும் பொன்னாள் பங்குனிஉத்திரம்



பல தெய்வத்திருமணங்கள் நிகழ்ந்த  பங்குனி உத்திர்த் திருநாள் கல்யாண விரதமளென்றே சிறப்பிக்கப்படுகிறது..

மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
மாங்கல்யதாரணம் செய்த பொன்னாள் பங்குனி உத்திரம்..!
அன்னை   தாட்சாயணி தேவி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது பங்குனி உத்திரத்திருநாள்..இந்த சிவ-பார்வதி திருமணத் திருக்கோலம் அம்பிகை உபாசனையில் சுயம்வரா பார்வதி தேவிக்குரிய திருவுருவை பூஜித்தால் மணப்பருவத்திலுள்ளோருக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகிவிடும். 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது.

பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். 

காஞ்சி மாவடியில் நிஷ்டையில் ஆழ்ந்த பார்வதி 
ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு 
சிவனின் அருளைப் பெற்று ,பெருமை பெற்ற்  நன்னாள்
மதுரையில் சொக்கநாதருக்கு சொக்கத்தங்கமான
மீனாட்சி மாலையிட்ட நன்னாள்..
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் ...
என ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் சீதா ராமனானார்.
லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; 

முழு முதற்பொருளான  விநாயகருக்கு அம்மையப்பனான 
உமா மகேஸ்வரர். சித்தி- புத்தி எனும் இருவரை திருமணம் செய்வித்து உளம் மகிழ்ந்தார்கள் 

 சித்தி-புத்தியுடன் திருமணக் கோலத்தில் தோற்றமளிக்கும் 
விநாயகப் பெருமான் வாழ்வில் வளங்கள் பெருக அருள் தருகிறார்...

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட
27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

மகாலட்சுமி  விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் 
திருமார்பில் இடம் பிடித்தாள்.

திருவரங்கத்தில் சேர்த்தித் திருவிழா

பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே
வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

இந்திராணி இந்திரதிபதிக்கு கிடைத்த பொன்னாள்

இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; 

திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; 

ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; 

Search Results

அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது 
பங்குனி உத்திர நன்னாளில்தான்.

திரௌபதியின் சுயம்வரத்தில் பரமாத்மாவான கண்ணன் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களும் கலந்து கொண்டனர். 
சுயம்வரத்தில் தலைக்கு மேலே சுழன்றோடும் மீனை கீழே தெரியும் நீரில் காணும் பிரதிபிம்பத்தை பார்த்து அம்பு எய்து வீழ்த்தினான் அர்ஜுனன். பிறகு, தாயிடம் ‘வெற்றிக்கனி பறித்து வந்துள்ளேன்’ என அர்ஜுனன் கூற, ‘அதை ஐவரும் சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்ற தாய் குந்தியின் வாக்குப்படி திரௌபதி ஐவருக்கும் பத்தினியானாள். 

ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியை 
கண்ணனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்த நாள்..
திருமகளை திருமால் மணந்தாற்போல் 
ருக்மிணியை கிருஷ்ணர் திருமணம் புரிந்தார். 

மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்

பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது

சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திர நன்னாளில் தெய்வத் திருமணங்கள்
ஈசனின் ஆக்ஞையில் எரிந்த மன்மதனை 
ரதிக்கு காட்டியருளிச் செய்த பொன்னாள்

 சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். 

 பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார்.

சிவனுக்கு வெப்பமான அக்னி நெற்றிக்கண்ணாக இருப்பது போல, அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது  திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள 
 தித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணிஅம்மன். 
அகத்தியர்  அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ள  அம்பாளை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பேச்சுத்திறமைக்காகவும் இவளுக்கு பூஜை செய்து வரலாம் சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலில்  அம்பாள் மனோபலமும் தருபவள் 

சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். 

ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்கும் பூரண பவுர்ணமி நிலாவில் களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். 

எனவே, பங்குனி உத்திர நாள் கூடுதல் பலன்களை 
தரக்கூடிய நாளாகத்  திகழ்கிறது..!

சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். 
அந்த அடிப்படையில் பங்குனியிலேயே 
சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் 
செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் 
என்று சூரியபுராணம் கூறுகிறது. 

பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், 
சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் 
இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர கிடைக்கிறது

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்.எனவே 12 பன்னிருகை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்திர  திருவிழாக்கள்-மஹோற்சவமாக நடைபெறும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபமாக முருகன் இருந்தாலும், 
உலக நியதிக்கு கட்டுப்படவேண்டும் என்று, முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள திருப்பரங்குன்றில் தவத்தில் ஆழ்ந்தார். .

முருகனின் அறுபடைவீடுகளில் முதல் தலமாக உள்ள திருப்பரங்குன்று தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம் கயிலாயத்திற்கு ஈடானதாகும். 
சம்பந்தர் பாடிய தேவாரத்தில்  சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையை நக்கீரர் திருப்பரங்குன்ற முருகன் மீது பாடினார். பங்குனியில் முருகப்பெருமானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் வீழா நடைபெற்றாலும்,  அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியில் 
பாங்குற அருள்கிறான் பழனி அப்பன்..!
தேரோட்டம் காண்போருக்கு தேன் மதுர வாழ்வளிக்கிறான் முருகன்..


பால் மணக்குது, பழம் மணக்குது, பழனி மலையிலே!
பழனி மலையைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்!
தேன் இருக்குது, தினை இருக்குது, தென் பழனியிலே!
 பழனி மலையைச்சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!

பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!
பழனி மலையைச் சுற்றி, காவடி ஆட்டம், தினமும் நடக்குதாம்!
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.

உச்சிக்காலம் (மதியபூஜை) முடிந்ததும் நடை சாத்தப்பட்டு, மாலையில் திறப்பர். ஆனால், அதிகாலை முதல் இரவு வரை  நடையே அடைக்காமல், கருணையோடு கால்கடுக்க நின்றருள் புரிகிறான் பழநி முருகன். 
ஞானப்பழமாய் நிற்கும்  நன்மையளிக்கும் நெஞ்சமே! 
தஞ்சம் ஏதுநமக்கினியே என்பது கந்தர் அலங்காரம்   .. 
Palani malai (View from top)Mega structure of palani murugan temple outer footpath
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 
பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருமணம் நடக்கிறது
அன்னாள் எனக்கு பொன்னாள்
என் அம்பிகை புன்னையம்பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகா யாக தீட்சைப் திருப்பெருநாள்.
அன்னாள் மங்கையருக் மாங்கல்ய விரதமேற்கும் பொன்னாள்".

மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்ற சிவபக்தரின் புதல்வி பூம்பாவை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பூஜைக்கு மலர் கொய்யச் சென்றபோது அரவம் தீண்டி மரணமெய்தினாள். அவளது சாம்ப லையும் எலும்பையும் ஒரு பொற்குடத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
கபாலீஸ்வரருக்கு பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் ஒன்பதாம் திருவிழாவின் போது சம்பந்தர்  வந்து அரவம் தீண்டி மரணமெய்தி   பொற்குடத்தில் பாதுகாத்து வைத்திருந்த.சாம்பலையும் எலும்பையும் 


என்ற  பதிகம் பாடி முடித்ததும் பூம்பாவை உயிர் பெற்றெழுந்த வரலாறு கொண்ட திருநாள் பங்குனிஉத்திரம்...!
தொடர்புடைய பதிவுகள்...

**பாங்காய் அருளும் பங்குனி உத்திரம்
** பங்குனி உத்திரத்திருநாள்
** தெய்வத் திருமணத் திருநாள்
** பங்குனி உத்திரம் -பேரூர் தேர் திருழா..

வடபழனி முருகன் ஆலய பங்குனி உத்திரத்திருவிழா கொண்டாட்டம்..!


சிங்கப்பூர் பங்குனி உத்திர கொண்டாட்டம் ..


LED Kavadis -சுட்டுக...


பழனி பங்குனி உத்திர காணொளி...!




16 comments:

  1. ஒன்றா ! இரண்டா !!
    எத்தனை திருமணங்கள் !
    அனைத்திற்கும் அழைத்துச் சென்று
    அருள் விருந்து படைத்த
    அம்மை வாழியவே !!

    ReplyDelete
  2. பங்குனி உத்திர தகவல்கள், படங்கள் அனைத்தும் அருமை அம்மா... இணைப்புகளுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மனதிற்கு இனிய காட்சிகள்.. அருமை!..

    ReplyDelete
  4. பங்குனி உத்திர நன்னாளின் பல்வேறு சிறப்புகளை தங்களது
    பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இத்தனை விரிவான
    விளக்கங்களுக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. அத்தனை தெய்வ தரிசனமும் ஒருங்கே கிடைக்கப் பெற்றது கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அரியகாட்சிகளும் கண்டு பங்குனி உத்தரத்தின் சிறப்பும் அறிந்தேன். மிக்க நன்றி வாழத்துக்கள்...!

    ReplyDelete
  6. பங்குனி உத்திரத்தில் நடந்த தெய்வத்திருமணங்களையும்,இந்
    நட்சத்திரத்தின் சிறப்புகளையும், அழகான படங்கள்,காணொளியுடன் ,பல தகவல்களுடன் சிறப்பான பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. அடேங்கப்பா.... பங்குனி உத்திரச் சிறப்புகள்!

    ReplyDelete
  8. காஞ்சி மாவடியில் இவ்வளவு கதை இருக்கா ? இன்றும் துளிர்த்து பல சுவைகளில் கனி தருவதாக கேள்வி.

    ReplyDelete
  9. LED Kavadis சுட்டுக .....
    என்றதும் சுட்டினேன்.

    காட்சிகள் கண்ணைப்பறித்தன.

    இருப்பினும் 2012 ம் ஆண்டு காட்சிகளாக இருப்பதாலோ என்னவோ, காட்சிகள் அனைத்தும் மனதில் மீண்டும் ஒருமுறை தோன்றி, வேல் நுனிபோல என்னைக் குத்திக்கிழித்தன.

    >>>>>

    ReplyDelete
  10. 2013ம் ஆண்டு காவடி ஆட்டக்காட்சிகள் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. எவ்வளவு கஷ்டமான ஆட்டங்கள். முதுகில் முரட்டு மூங்கில் கழி, கைகளில் பேலன்ஸ் செய்து பிடித்துள்ள இரண்டு குடங்கள். நாக்கில் குத்தியுள்ள வேல், குனிந்ததலை நிமிராமல் கஷ்டப்பட்டு ஆடுகிறார்களே ..... பாவம் !

    >>>>>

    ReplyDelete
  11. பழனி பங்குனி உத்தரக் காணொளி .... பஞ்சாமிர்தமாக !

    >>>>>

    ReplyDelete
  12. கடைசி படத்தில் படிக்கட்டில் சறுக்கி இறங்கும் யானையைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது.

    ‘உண்மை சற்றே வெண்மை’யென உடம்பினில் ஆங்காங்கே காயங்கள் + தழும்புகள்.

    காலிலும், முதுகிலும் முரட்டு சங்கலிகள்.

    சற்றே வயதான தெம்பு குறைந்த தோற்றம்.

    தோலில் சுருக்கங்கள்.

    இப்படி பலவித துயரங்களுடன் அடிக்கும் வெயிலில் இறை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, பாவம் அந்த யானை.

    ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்களே ! அது இது தானோ ?

    >>>>>

    ReplyDelete
  13. மற்றபடி எல்லாப்படங்களும், விளக்கங்களும், இந்தப்பதிவும், பகிர்வும் அருமை.

    ooooo

    ReplyDelete
  14. பங்குனி உத்திரம் பற்றி அறிந்து கொண்டோம், நன்றி.

    ReplyDelete
  15. ஒரே பதிவில் அதிகமான செய்திகள், படங்கள். அனைத்தும் மனதில் பதியும் வண்ணம் உள்ளன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. ஆஹா தகவல் களஞ்சியமாய் அருமையான பகிர்வு அம்மா...

    ReplyDelete