நடராஜப் பெருமான் பேரூரில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்பது. என்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது பேரூர்..!.
இறவாத பனை
பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு நின்று கொண்டிருக்கும் பனை மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இறவாத பனை..
சதுர்யுகங்களாகவாழ்ந்துகொண்டிருக்கும்அதிசயத்தைக்காணலாம் பேரூரில்..!
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இறவாத பனை..
சதுர்யுகங்களாகவாழ்ந்துகொண்டிருக்கும்அதிசயத்தைக்காணலாம் பேரூரில்..!
பட்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆற்றங்கரை செல்லும் வழியில் அருள்மிகு வடகயிலாயநாதர் ஆலயத்தின் அருகில் ஆண்பனை ஒன்றும் பெண்பனை ஒன்றும் நான்கு யுகங்களாக செழித்து வளர்ந்திருக்கும் அதிசயத்தைக் கண்டு வ்ணங்கினோம்..
பெண்பனை இன்றும் காய்த்து செழித்திருந்த அதிசயக்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தோம் ..
இறைவன் மரம் என்று இந்த மரங்களில் ஏறமாட்டார்களாம்..!
பெண் பனை மரத்தின் அருகில் வேப்பமரம் ஒன்று ஒளிரும் பச்சை இளம் தளிர்களாலும் இலைகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் கொலுவிருக்க ஆச்சரியமான காட்சி ... தண்ணீர் அபிஷேகித்து வணங்கினோம்..!
\
பிறவாத புளி
பிறவாத புளி
பிறவாதபுளி, என்றுபோற்றப்படும் ஆலயத்தின் முன்புறம் இந்த புளியமரத்தின் விதைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம்.
புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முளைக்கவே இல்லை.
இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளதாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்
மூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் சாணம் மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லை யாம்.
மனித எலும்புகள் கல்லாவது
இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த பிறகு மிச்சமாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள நொய்யல் ஆற்றில் விடுவார்களாம்.
அப்படி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படும். அதிசயம்... அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.
அப்படி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படும். அதிசயம்... அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.
தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடி மரணிப்பது.
ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து
ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இப்படியாக பல அதிசயங்களை பேரூரில் நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர், அமைதியாக காட்சி தரும் வரலாறு ஆச்சரியம் நிறைந்தது.!
முன்பு பேரூர் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்தபோது மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.
இதைப்பார்த்தவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த
இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் பட்டீஸ்வரர்.
கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த. பட்டீஸ்வரரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன•
இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட
ஆரம்பித்திருக்கிறார்கள்.
பட்டீஸ்வரருக்குப் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்களைச்
சொரிந்து அர்ச்சித்துக் கொண்டிருக்கின்றன•
மகிழமரங்களும் தன் மணம் மிக்க மலர்களால்
சூழ்நிலையை சுகந்தமாக்குகின்றன..!
பழனியைப்போலவே இங்கும் மேற்குநோக்கி பேரருள் புரியும்
பேரால் பெரியோனாகிய பேரூர் முருகன் அன்னை த்ந்தையின்
அருகில் தனித்தனி சந்நிதிகளில் தரிசனம் தருகிறார்..
இந்த சந்நிநிதிகளின் பின்புறம் அமைந்திருக்கும் கோரக்கசித்தர் தியான பீடம் அமைதியாக தியானம் செய்ய அமைந்த அழகான சூழல் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கிறது..
தங்க மஞ்சள் பூக்களை வர்ஷிக்கும் சரக்கொன்றை மரங்களும் , பூத்துக்குலுங்கி மணம் வீசும் மல்லிகைக்கொடிகளும் பின்னிபிணைந்து வில்வமரமுமாக ரம்யமான திருத்தலம்..!

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்தரு மன்னன் திப்பு சுல்தான் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு - இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்கடி அசையும் என்று - மீண்டும் ஒரு அதிசயத்தினை சொல்ல--நம்பாமல் சிவாலயத்தின் மீது கைவைத்துப்பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான்
அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்ற நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.
கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டி கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.
ஹைதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன•
பேரூர் கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.
பட்டீஸ்வர.அம்மனின் பெ யர் பச்சை நாயகி.
பச்சை நிறமாகிய மரகதக்கல்லில் அன்னை எழில் ஓவியமாக
எழுந்தருளியிருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும்
அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள்.
அன்னையின் ஆலயத்தின் முன்பு காட்சித்தரும் சிங்கசிலையின் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது.
கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை
உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும்கல்லால் ஆன சங்கிலிகள் போன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன•
குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடைய மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் றன•
சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று எண்ணும் போதே பெருமையால் மனம் மகிழ்கிறது..!
கோயிலின் வடமேற்கில் பிரம்மகுண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.
அருள் நிரம்பிய ஆலயத்தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரி ஷி,கோமுனி, பட்டி முனி
போன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர்.
அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள முருகன் பழனியில் உள்ளதைப் போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் அருட் காட்சி அருள்கின்றான்.
நால்வரில் ஒருவராகிய சுந்தரர், பட்டீஸ்வர்ரை வணங்க வரவேண்டும் என்று நினைக்கிறாராம்.
எப்போதுமே சுந்தரர் எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். இவர் இறை வனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
எப்போதுமே சுந்தரர் எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். இவர் இறை வனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
செல்வசெழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒருமுறை பேரூரில் பணம்
தட்டுப்பாடாம்.
சுந்தரர் வந்தால், பணம் கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாற்று நடும் கூலித்தொழிலாளியாய் மாறிவிட்டாராம்..!
பச்சையம்மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விட இறைவனை அழைத்து வந்து சுந்தரர் ஆட வைக்கிறாராம்.

சுந்தரரிடமிருந்து அற்புதமான பாட்டு வருகிறது
பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!
சுந்தரருக்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன்
அதைக்க ண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர்.
பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட வரலாற்றை இன்றும் பேரூரில் ஆனி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
நாற்று நடவு உற்சவம்...!

அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறு பெறும் நாம்
அவனிடம் பணம் கேட்டுப்போனால் ஓடி ஒளிந்து கொள்வான்.
அருள் வேண்டி போனால் அவன் அருளை அள்ளித் தருவான்.
அருள் வேண்டி போனால் அவன் அருளை அள்ளித் தருவான்.
தொடர்புடைய பதிவுகள்....
*பேரூர் அருள் மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில்
**பேரூர் தேர் திருவிழா
***பேரழகு பேரூர்
****முக்தித்தலம் பேரூர்
*****ஆனி திருமஞ்சனத் திருவிழா
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் நால்வரால் பாடல்பெற்ற ஸ்தலம் மேலைச்சிதம்பரம் எனச்சிறப்பு பெற்ற பேரூர் அமைந்துள்ளது..!
5 அதிசங்கள் - தகவல்கள் அருமை. நான்கும் ஐந்தும் மிக ஆச்சர்யமான தகவல்கள். கோவில் பற்றிய விளக்கங்களும், படங்களும் அருமை. அவசியம் பார்க்க வேண்டிய திருத்தலம்.
ReplyDeleteபஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்றால் எவ்வளவு பழமையான தலமாயிருக்க வேண்டும்?
அற்புதமான பல படங்களுடன் வியக்க வைக்கும் பல தகவல்கள்... பேரூர் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇதுவரை அறிந்திராத புதிய ஆனால் அதிசயமான அருள் தகவல்கள். நிச்சயன் சென்று கண்டுவர ஆசைபடும் கண்களும் மனசும். நன்றி.
ReplyDeleteஅற்புதமான படங்கள், சிறப்பான தகவல்கள். கோவை சென்றிருந்தாலும் பேரூர் சென்றதில்லை. செல்லத் தூண்டுகிறது உங்கள் பதிவு.
ReplyDeleteஅடுத்த முறை வரும்போது வாங்க வெங்கட் சார்.. நான் கூட்டிட்டு போறேன்.. :)
Deleteஸ்கூல் படிக்கும் போது தினமும் கடந்து சென்ற கோயில். அப்போதெல்லாம் நொய்யல் ஆற்றில் நீர் பெருகி ஓடும் காட்சியை கண்டிருக்கிறேன்.. பேரூரின் மகத்துவத்தை அருமையாக விளக்கிவிட்டீர்கள்..
ReplyDeleteவழுவறு மோலித் தேவர் ,
ReplyDeleteமானுடர் , விலங்கு , புள்ளும் தழுவி ,
நீர் உறைவ, ஊர்வ , தருவென
மறைகள் சாற்றும்
எழுவகை தோற்றத்துள்ள
எவ்வெவ்வகை உயிரும் உய்ய
கொழுமணி இமைக்கும்
வெள்ளிக் குன்றமாய்
தென் பால் நின்றான் ---- மரகதவல்லி உடனுறை பேரூர் பேரரசன் , பட்டீச்வரன்.
இவர்களுடன், நர்த்தன கணபதியையும் , ஊர்த்துவ தாண்டவரையும்
கண்டு களித்தேன்.
நிறைவான பதிவு. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !.
அழகான அருமையான பதிவு. அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன். மகிழ்ச்சி.
ReplyDeleteபடிக்கும்போது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது பேரூர் அதியசங்கள். சிறப்பான தகவல்கள்,அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு.நன்றி
ReplyDeleteஅப்பப்பா எத்தனை அதிசயங்கள் ஒரே ஊரில் அத்தனை தகவல்களையும் ஒருங்கே தந்தது வியப்புக்குரியது. நன்றிங்க.
ReplyDeleteI have visited so many times but I dont know about history after this post I m really surprice. THANKS
ReplyDeleteOm Namashivaaya
ReplyDeleteதரிசித்திருக்கிறோம்!. அருமையான பகிர்வு! மிக்க நன்றி!
ReplyDelete