Saturday, April 19, 2014

நன்மைகள் ஆயிரம் நல்கும் விசுவரூப ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர்







சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம:

- இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள்  நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.

கோவை வடவள்ளியில் 13 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையுடன் தனிக்கோவிலில் அமைந்து அருள்பாலிக்கிறார்..!
வடவள்ளியில் அமைந்துள்ள பிரமாண்டமான அனுமன் சிலையில் ஆஞ்சநேயருடன் கருடன், வராகம், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகியோரின் திருஉருவங்களையும் தரிசனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும்




















ஆஞ்சநேயரின் வலது கை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு 
யாமிருக்க பயம் ஏன்’ என்று ஆசி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 

இடது கையில் உள்ள கதாயுதம் பக்தர்களின் கோபம், பேராசை, காமம், அகங்காரம் ஆகியவற்றையும், எதிரிகளையும் அழித்து வெற்றியை தரக்கூடியதாகும்.

ராமாயணத்தில் நடந்த போரின்போது மயங்கி விழுந்த லட்சுமணனை காக்க சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் பெயர்த்து எடுத்து வந்த. மலையின் ஒரு பகுதியாக திகழும். மேற்கு தொடர்ச்சி  மலையில் 
சகல நோய்களையும் தீர்க்கும் மூலிகை செடிகள் உள்ளன. 

இந்த மலையை பார்க்கும் வகையில் இந்த கோவிலில் மேற்கு நோக்கி நின்றிருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

ஆஞ்சநேயரை நம்பிக்கையுடன் வழிபட்டால் நோய் நொடியற்ற, வளமான வாழ்க்கை அமையும் என்பது  அசைக்க முடியாத நம்பிக்கை.

ராம நாமத்தையோ, ஆஞ்சநேயரின் நாமத்தையோ கூறி 
வழிபடும் பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்க மாட்டேன்’ என்று  
சனீஸ்வர பகவான் ஆஞ்சநேயரிடம் உறுதி அளித்ததார்

இதன்படி சனிதிசை நடப்பவர்கள், நவக்கிரக தோஷத்தால் 
பாதிக்கப்படும் பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயரை 
வழிபட்டால் நன்மை பெறுவது உறுதி. 

எமதர்மராஜனின் திசை தெற்கு ஆகும். அதனால் தெற்கு நோக்கி 
உள்ள ஹயக்ரீவரை வணங்கினால் மரணபயம் நீங்கி ஞானம் மற்றும் 
ஆயுள் பெருகும்

வேண்டும் வரம் அருளும் பஞ்சமுக ஆஞ்சநேயரை 
நம்பிக்கையுடன் வழிபட்டால் நன்மைகள் பல நடக்கும் 

தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், நல்வாழ்வு பெறவும், குடும்ப பிரச்சினைகள் தீரவும் ஆஞ்சநேயரை நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்கள் விரைவில் தங்களது வேண்டுதல் நிறைவேறி மனமகிழ்ச்சி அடைகிறார்கள். 
 பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், செந்தூரம், சந்தன காப்பு அலங்காரம் செய்தும், உளுந்து வடை மற்றும் வெற்றிலை மாலை சாத்தி அழகு பார்த்தும், சிறப்பு பூஜைகள் செய்தும்  தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்

கோவை வடவள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் காலை கோமாதா பூஜையுடன் பஞ்சமுக ஆஞ்சநேயரின் விசுவரூப தரிசனத்தை  தரிசனம் செய்யலாம்.

வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகின்றன. 

அனுமன் ஜெயந்தி, ராமநவமி,  பண்டிகை நாட்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்ளில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.
பிரத்யங்கரா தேவிக்கு தனி சன்னதி உண்டு..!



 வடவள்ளியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் 
ஒரு பகுதியில் கிழக்கு திசையை நோக்கி மிகவும் சக்தி வாய்ந்த 
பிரத்தியங்கரா தேவி அம்மன் எழுந்தருளியுள்ளார். 

கோவை மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத வகையில் 9 அடி உயரம் உள்ள பிரத்தியங்கரா தேவி இங்கு காவல் தெய்வமாக அருள்கிறார். 

தீயசக்திகள் விட்டு விலகவும், நன்மைகள் பெருகவும் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று நிகும்பலா யாகம் என்ற வரமிளகாய் ஹோமம் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நன்மை பெற்று வருகிறார்கள். 

பவுர்ணமி, வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் அஷ்டமி தினத்தன்று அம்மனுக்கு வரமிளகாயால் மட்டும் அர்ச்சனை நடைபெறும். 

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை உள்பட முக்கிய நாட்களில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 

கடந்த ஜனவரி மாதம் 23–ந் தேதி பிரத்தியங்கரா தேவிக்கு தொடங்கப்பட்ட கோடி அர்ச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையில் பல்வேறு சிறப்புகள் பெற்ற பஞ்சமுக ஆஞ்சனேயர், பிரத்தியங்கரா தேவி சன்னதிகள் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.

பிரதயங்கரா மந்திரம்..!
அனுமன் ஜெயந்தி தினத்தன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.
Coimbatore North trumpet flyover

கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, 
திகழும் வடவள்ளி நவாவூர் பிரிவு ராமசாமி நகரில் உள்ள 
ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அருளும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு  நன்மைகள் ஆயிரம் பெறலாம்.
கோவை வடவள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

13 comments:

  1. கோவையின் சிறப்பான அனுமன் கோயிலின் தகவலுக்கு நன்றி அம்மா... படங்கள் அனைத்தும் அற்புதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஓம் நமோ பகவதே !
    பஞ்ச வதனாய !
    தக்ஷிணே ! கரால வதனே !
    ஸ்ரீ நரசிம்ம முகாய !
    ஸ்ரீ வீர ஹனுமதே நமஹ !

    இன்றைய பஞ்ச முக
    ஆஞ்சனேயரின் தரிசனத்திற்கு, நன்றிகள்.

    வெண்டைக்காய் மாலையணிந்த ,
    பஞ்ச முக ஆஞ்சனேயர்.

    சிறப்பான பதிவிற்கு,
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !.

    ReplyDelete
  3. Thanks for your Anjaneya Mala Stotram.
    Listen here please.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  4. ஸ்ரீராம்.. ஜயராம்.. ஜய ஜய ராம்!..

    ReplyDelete
  5. கோவை ஆஞ்சநேயர் கோவிலின் சிறப்பான தகவல்கள் அருமை. அழகழகான படங்கள். அருமையான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. ஸ்திர வாரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிஸனம் கிடைத்ததில் சந்தோஷம். படங்கள் அத்தனையும் வழக்கம் போல் அழகோ அழகு !

    தங்கள் பதிவினில் என்றுமே பஞ்சமில்லாத ஆஞ்சநேயர்கள் உண்டு தான்.

    இருப்பினும் பார்த்துப் பல நாட்கள் ஆனது போல ஆகிவிட்டது.

    கடந்த மூன்று நாட்களாக வேறு ஏதேதோ புது உலகத்திற்குச் சென்று மீண்டும் நம்ம உலகத்திற்கு மீண்டு வந்ததில் ஓர் நிம்மதி.

    மூன்றே நாட்கள் தான் ..... எனினும் மூன்று யுகங்கள் போல ஓர் உணர்வினை ஏற்படுத்தி விட்டதே !

    ReplyDelete
  7. கோவை வடவள்ளி பஞ்ச முக ஆஞ்சநேயர் குறித்த விரிவான தகவல்களை அறிந்தேன்! அழகான படங்கள்! சிறப்பான ஸ்லோகத்தையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நாளை வெளியாக உள்ள தங்களின் வெற்றிகரமான 1250வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    IN FACT இன்றைய பஞ்சமுக ஹனுமனுக்கே, அந்தப்பெருமை கிடைத்திருக்க வேண்டும்.

    பழைய முதல் மூன்றாண்டு பதிவுகளின் எண்ணிக்கை 1140 லிருந்து ஒன்று எப்படியோ குறைந்து 1139 ஆகியுள்ளது. ?????

    திடீர் திடீன்ன்னு என்னென்னவோ நடக்குது. ஒன்றுமே புரியலை. நடக்கட்டும். நடக்கட்டும். எல்லாம் நல்லதாகவே நடந்தால் சரியே.

    ReplyDelete
  9. கோவை அனுமன் பற்றி அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. பதிவைப் படித்து தெரிந்து கொள்கிறேன் நன்றி

    ReplyDelete
  11. பஞ்ச முக ஆஞ்சநேயர் குறித்து படங்களுடன் அழகான பகிர்வு...
    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  12. பஞ்சமுக ஆஞ்சனேயர் குறித்த தகவல்களுக்கும், அருமையான படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. Amazing article. I request you all to send me these details to my mail id for my personal use. As I desperately need it. My mail ID - renuka.reflect@ gmail.com.

    Thanks & Regards

    Renuka Iyer

    ReplyDelete