




நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:


ஸ்ரீகிருஷ்ண பகவான் சொர்க்கத்திற்குச் சென்ற பின் துவாரகை கடலில்
மூழ்கியது.
அந்த நேரத்தில் மகா விஷ்ணுவின் விக்கிரகம்
தண்ணீரில் மிதந்து வந்தது.
அந்த நேரத்தில் மகா விஷ்ணுவின் விக்கிரகம்
தண்ணீரில் மிதந்து வந்தது.
குருவும், வாயுவும் சேர்ந்து விக்கிரகத்தை எடுத்துப்
பிரதிஷ்டை செய்வதற்கு, வானில் சஞ்சரித்தபடி தகுந்த
இடத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.

வாசுதேவனும் ஸ்ரீ கிருஷ்ணனும் பூஜை செய்திருந்த அந்த விக்கிரகத்தின் தெய்வீக ஒளி ரிஷிகளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.

குருவும், வாயுவும் கேரளக்கரைக்கு வந்த போது பரசுராமரைக் கண்டனர்.
அவர் காட்டிய வழிப்படி, மகாதேவன் பல யுகங்களாகத் தவம்
செய்து வந்த ருத்ர தீர்த்தக் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன் அவர்களை வரவேற்று, தனக்கு அருகே அந்த விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார்.

அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் விக்கிரகமே மம்மியூரப்பன் ஆலயத்தில் மகாதேவனின் அருகே தனி ஆலயத்தில் உள்ளது.
காலப் போக்கில் இந்தத் தலம் மம்மியூர் எனவும்,
இங்குள்ள மகாதேவன் மம்மியூரப்பன் என வும் அழைக்கப்படுகி றார்.
கலியுகம் தொடங்கும் முன்பே உள்ள திருக்கோவில்
என்ற பெருமைக்குரிய ஆலயம் மம்மியூரப்பன் ஆலயம்.

சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒரே ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அதிசயம் மம்மியூர் ஆலயத்தில் தான் உள்ளது.
கேரள மாநிலத்தில் கோவில்கொண்டு அருளும் குருவாயூரப்பனைத் தரிசிக்க வருபவர்கள் குருவாயூர் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரப்பன் ஆலயத்திற்கு வந்து மகாதேவனையும், மகாவிஷ்ணுவையும் தரிசனம் செய்தால் மட்டுமே அவர்களுடைய புண்ணிய பயணம் பூர்த்தியாகும் என்பது வழிவழி யாக வரும் ஐதீகம்

எந்த ஆலயத்திலும் இல்லாத சிவபெருமானும், மகா விஷ்ணும் இந்த
ஆலயத்தில் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர்.
இருவருக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.
இரண்டு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக் கும் ஒரே நேரத்தில் பூஜைகளையும் ஆராதனைகளையும் நடத்தும் சம்பவம் இந்த ஓர் ஆலயத் தில் மட் டுமே நடக்கும் அதிசயம் எனலாம்.
ஆலயத்தின் முகப்பு மண்டபத்தைக் கடந்தவுடன் ஒரு பெரிய ஆலமரம் அதைத் தொடர்ந்து பெரிய மண்டபம் உள்ளது.
அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.
அதைத் தொடர்ந்து மம்மியூரப்பனின் கருவறை உள்ளது.
ஆலயத்தின் வடபுறத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ள பகவதியம்மன் சன்னதியில் அன்னை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.

.

ஆலயத்தில் மகாதேவனுக்கும் உள்ள முக்கியத்துவம்
மகாவிஷ்ணுவுக்கும் தரப்படுகிறது.
காலை 4.45க்கு ஆலயம் திறந்தால் நிர்மால்ய தரிசனம்,
எண்ணெய் அபிஷேகம், மாலை சார்த்துதல், மலர் நைவேத்தியம்,
திருமதுர நைவேத்தியம் முதலியவற்றைச் செய்கின்றனர்.
அனைத்து தினங்களிலும் மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவிற்கும்
ரிக் வேத தாரை, பாலாபிஷேகம், உஷ பூஜை முதலியன நடைபெற்று
பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
மீண்டும் மாலை 4.45 க்குக் கோவில் திறக்கப்படுகிறது.
தீபாரதனை, உமா-மகேஸ்வர பூஜை, இரவு பூஜைக்குப் பிறகு,
அன்ன நைவேத்தியம், பால் பாயசம், அப்பம் முதலியவற்றை
எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்து,
இரவு 8.30 மணிக்கு ஆலயம் சாத்தப்படுகிறது.
ஆலயத் தில் ஆதி காலம் முதல் கோவிலின் ஆச்சார முறைப்படி
வேத மந்திரம் சொல்லி, எல்லாச் சடங்குகளையும்
விதிமுறைப்படி நடத்தி வருகின்றனர்.
1930 ஆம் ஆண்டு ஆலயத்தில் நடப்பட்ட ஆலமரம் ஒன்று இப்போது வளர்ந்து நெடிதுயர்ந்து, சுவாமி சன்னதியின் முன் பிரம்மாண்டமான உருவில் நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும்..!.
1961 ஆம் ஆண்டு ஒரு பெண் இந்த ஆலமரத்துக்கு உபநயனம் நடத்தி,
வேத மந்திர விதிமுறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து வைத்தார்.

ஆலமரத்தை ஒரு வரனாகப் பாவித்து, மணப்பெண்ணாக வேப்ப மரத்தை நட்டு வைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, வாத்தியங்கள் முழங்க,
இரண்டு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது...
பத்து நாட்கள் நவராத்திரி விழா ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
நவராத்திரி மண்டபத்தில் வாணி தேவிக்கு விசேஷ பூஜையும்,
அனுமனுக்கு வடைமாலை சாத்துதலும்,
அஷ்டமி தினத்தில் பூஜைக்காக புத்தகங்கள் வைப்பதும்,
நவமி நாட்க ளில் லட்சார்ச்சனை யும் நடைபெறுகிறது.


பூஜைகளில் கலந்து கொள்வதால் , அனைத்துத் தோஷங்களும் பாவங்களும் விலகி.நிம்மதி, புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..!







அறியாத மம்மியூரப்பன் ஆலயத்தின் சிறப்புகள் அனைத்திற்கும் நன்றி அம்மா... படங்கள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகுருவாயூர் சென்றிருந்தபோது மம்மியூரப்பனைக் கண்ணாரத் தரிசனம் செய்திருக்கின்றேன்.
ReplyDeleteதங்களுடைய பதிவு கண்டு மகிழ்ச்சி..
மனம்
ReplyDeleteமகிழும்
மம்மியூர்
மஹாதேவர் ......
மகத்தான தலைப்பு
மனதை மயக்கும் படங்கள்
மகிழ்ச்சியளிக்கும் செய்திகள்
மம்மின்னா ..... மம்மிதான் ;)
மம்மியூர். பெயரே வித்தியாசமாக உள்ளது. வழக்கம் போலவே அழகிய படங்களுடன் பகிர்வு சுவாரஸ்யம்.
ReplyDeleteமம்மியூர் மகாதேவர்.
ReplyDeleteஅறிந்திராத ஆலயம்.
அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம்.
பார்த்திருக்கிறேன் !
ஆல மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் .
நான் கேள்விப் படாத ஒன்று !
அதேபோல்.. மலர் நைவேத்தியம் !
அறிந்திராத ஒன்று !
மம்மியூர் மகாதேவர் ஆலயம்
புதுமைகள் நிறைந்த ஆலயம் !
தகவலுக்கு நன்றிகள் !
மம்மியூர் மகாதேவன் கோவில் உண்மையிலே அதிசயமான கோவில்தான்.அறிந்திராத தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமம்மியூரப்பன் ஆலயத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி அம்மா. படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteமம்மியூரப்பன் ஆலய தகவல்களும் படங்களும் அருமை! அறிந்திராத ஆலயம்! விரிவான தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteமுழுவதும் புதுத் தகவல்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அறிந்திராத தகவல்கள். சிறப்பான கோவில் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களுக்கு நன்றி.
ReplyDelete