Monday, April 14, 2014

முத்திரை பதிக்கும் சித்திரை தமிழ்புத்தாண்டு














முத்திரை பதிக்கும் சித்திரையின் முதல்நாள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன..கணி காணுதல் இனிய ஆண்டு தொடக்கமாக கனிகிறது..!

விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற்பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாகவும், செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும்,  அமையுமென்பது நம்பிக்கை..!

விஷூக்கனியின் போது பூஜை அறையில் முதல் நாள் இரவு பழவகைகளை  தட்டில் வைத்து நாணயங்களையும் ., தங்க நகைகளையும் வைப்பார்கள்.  வாழைப்பழம், ஆரஞ்சு எலுமிச்சை, மாம்பழம், அன்னாசி, ஆப்பிள், முந்திரி என ஏராளமான பழவகைகள் போன்ற நன் மங்கலப்பொருட்கள் இடம் பெறும்.

 அதிகாலை எழுந்து பூஜைகள் செய்துவிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கைநீட்டம் கொடுத்து மகிழ்வார்கள்.  விருந்துண்ணுவார்












குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விஷூக்கனி காழ்சா" என்ற குருவாயூரப்பனின்  காட்சியை தரிசித்தல் விஷேசம்.. 

இரவில் கோவில் நடையில் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி தங்கி மிக அதிகாலை விடியலில் நிர்மால்யத்ரிசனம் பெறுவது பரவசமான நிகழ்ச்சியாகும்..

குருவாயூர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிர்ருக்கும் பிரம்மாண்டமான விஷு ஏற்பாடுகளும் தங்க சிம்மாசனத்தில் குருவாயூரப்பன் அருட்காட்சியும் அந்த ஆண்டு முழுவதும் நலம் சேர்க்கும் ..


விஷு நன்னாளில் அஷ்ட மாங்கல்யம் எனச்சொல்லப்படும்,

பஞ்சலோக பாத்திரம்
தாம்பூலம்
மஞ்சள் அரிசி
குங்குமம்
கண்ணாடி
புதிய துணி
கொட்டைப்பாக்கு
சுந்தரகாண்டம், இராமாயணம், பகவத்கீதை போன்ற 
இந்து மதநூல்களுள் ஒன்று
மற்றும் பழவகைகளுள்,மாம்பழம்
தேங்காய்
முந்திரி
வாழைப்பழம்
பசுமையான காய்கறிகள்
இவைகளோடு சேர்த்து,தங்ககாசுகள்
வெள்ளிக்காசுகள்
நெல்மணிகள்
தூய நீர்!

இது போன்ற பொருட்களை காண்பதன் மூலம் எதிர்வரும் அந்த வருடம் மிகஇனிமையான வருடமாக செல்வம் கொழிக்கும் வருடமாக, எனபது 
நம்பிக்கை..

கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளிஉபயோகப்படுத்தப்படுகின்றது.

வெண்கலத்தினால் ஆன  பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது

அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும்
ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

அட்சதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு.  உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப்படுத்துகின்றனர்.

அவ்வருட  வெற்றி- தோல்விகள் புதுவருடத்தின் துவக்க நாளில் உள்ளடங்கி இருக்கின்றது என்ற நம்பிக்கை உள்ளதால் வருட துவக்கம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டாடப்படுகின்றதே விஷு பண்டிகை. 
கேரளாவில் விஷு: கனி கொண்டாட்டம் நாளை நடக்கிறது
முதல் அடி அடுத்த அடிக்கு தளம் என்பதால் வருடத்தில் முதல் நாளில் அதாவது பிரம்ம முகூர்த்ததில்)நல்லதை காண்பது வழியாக அந்த வருடத்தின் முழு  ஐஸ்வரியமும்  தங்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்று  முத்திரை பதிக்கும் மாதம் சித்திரைத்திருநாள்


தங்க நகைகளைத்தாராளமாகவும், ஏராளமாகவும் அணிந்து 
இனிய புன்னகை பூக்கும் எழிலான புதுமணப்பெண்களைப் போன்ற 
தங்க மழை சொரியும் சரக் கொன்றை மரங்கள் , 

இயற்கை அன்னையின் கொடையாக நோய்கள் தீர்க்கும் மருத்துவப் பெட்டகமான வேப்பம்பூக்களை மலர்விக்கும் வேப்பமரங்கள்.. ,!!

இலைகளே தெரியாமல் காடே தீப்பற்றிவிட்டதோ.. என்று தன் தாயிடம் அண்டி புகலிடம் கோரி கூச்சலிடும்  அறிவு முதிராத சின்னஞ்சிறு புத்தம்புது பறவைகளைக் குழந்தைகளைப் பராமரித்து வாழும் 
செந்நிற மலர்களை புஷ்பிக்கும் மேபிளவர் மரங்கள்..!!

நீல மலர்களை அணிந்து கண்களுக்கு 
ரம்யமான தோற்றத்தை தரும் மரங்கள்..

இன்னும்..இன்னும் ... பலவகை மரங்கள் எல்லாம் பழைய முதிர்ந்த இலைகளை உதிர்ந்த்துவிட்டு ஒளிரும் இளம் தளிர்களையும் புத்தம் புது புன்னகை சிந்தும் பூக்களையும் அணிந்து கண்களுக்கு விருந்தளிக்கும் நாள் சித்திரை முதல்நாளாகும்..! 

எனவே நாமும்  இயற்கையைப் பார்த்து பாடம் கற்று பழையன நீக்கி 
புத்தம் புது எண்ணங்களையும் வண்ணங்களையும் ஏற்று 
வாழ்வில் இனிமை சேர்ப்போமாக..!!

தொடர்புடைய பதிவுகள்..

* விஷுக்கனி


21 comments:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    அருமையான பதிவு.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  3. விடியலில் விஷுக் கனி கண்டேன் !
    குருவாயூரப்பனின் தரிசனமும் கொண்டேன் !
    தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் ,
    பதிவை பார்வையிட வரும் அனைத்து நண்பர்களுக்கும்,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete

  4. வணக்கம்!

    முத்திரை போல்பதிக்கும் சித்திரைத் திங்களே
    இத்தரை ஓங்க இயங்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. உளங் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  6. புத்தாண்டில் மனம் கவர்ந்த பதிவு! தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி ....!

    ReplyDelete
  8. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  9. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ! உங்களுக்கும் என் இனிய
    சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  13. கண்ணுக்கு வயுந்தாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமைந்துள்ளது. இனிய புத்தாண்டு வழத்க்க்கள்

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. ஆஹா! கண்ணுக்கும் மனதுக்கும் மிக அருமையான விருந்து.

    தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ஸ்ரீராமஜெயம்!

    ReplyDelete
  16. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஜய ஜய ஜய ஜய ! ஜய ஜய ஜய ஜய !
    ஜய ஜய ஜய ஜய ! ஜய ஜய ஜய ஜய !

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டின் சிறப்புகளை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  20. மனதில் பதிந்த புத்தாண்டு பதிவு. நன்றி.

    ReplyDelete
  21. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete