மணிகளால் செய்யப்பட்ட ஹனுமான் வடிவம்
ஹனுமான் அனிமேஷன் படத்துக்காக, துளசிதாசரின் ஹனுமான் சாலிசா என்ற 40 வரிப் பாடலைப் பாடி பிரபலப்படுத்தியது.
அப்போது, அந்த நிறுவனத்துக்குத் தோன்றிய வித்தியாசமான கருத்தின் விளைவாக, 16,500 மணிகள் மூலம் ஹனுமான் வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது.
வெவ்வெறு நீள அகலங்களில் மணிகளைக் கோத்து, அவற்றை மேலிருந்து கீழாக கட்டித் தொங்கவிட்டு, அவற்றுக்கு அனுமன் உருவம் வருமாறு அமைக்கப்பட்டது.
அனுமன் உருவம் மனதுக்கு ரம்யமாக இருக்கும் வகையில்
ஒலியெழுப்புவது குறிப்பிடத்தக்க அம்சம் ,
இந்த ஹனுமனின் பாதுகைகளைத் தொட்டால் போதும்...
அதன் அதிர்வலைகள் ஒரு மணிக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து மணிகளும் ஒலிக்கும்.
அந்த ஒலி, மனதுக்கு ரம்யமாக இருப்பதுடன்,
தியான நிலைக்கும் அழைத்துச் செல்கிறது.
மணி ஒலி என்பது ஆன்மிக நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
26 அடி உயரத்தில் மணிகளால் ஆன இந்த ஹனுமான் வடிவம், மிகச் சிறந்த கலைநுணுக்க வேலைப்பாடாக திகழ்கிறது.
இதற்காக, பொறியாளர்கள் 48 மணி நேரத்துக்கும் மேல் உழைத்துள்ளனர்.
ஹனுமான் சாலீஸா அனிமேஷன் படத்தின் விளம்பரத்துக்காக அமைக்கப்பட்டாலும் மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வணங்கி, ரசித்துச் செல்லும் வண்ணம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது...
பார்த்தேன்
ReplyDeleteவியந்தேன்
மலைத்தேன்
சகோதரியாரே
நன்றி
அருமையான தகவல்கள். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராம ஜெயம்.
ReplyDeleteஅசர வைக்கிறது அம்மா... நன்றி...
ReplyDeleteகாணொளி, அனுமன் படங்கள் செய்திகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஅனுமன் சாலீஸாபாடல் பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
கொஞ்சநாள் இணையம் பக்கம் வர முடியவில்லை, பயணங்கள் காரணமாய்.
மணிகளினால் ஆன அனுமன்.. படிக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
ReplyDeleteஅடடே!!
ReplyDeleteமக்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்!
அற்புதம் அழகு அருமை அருமை...
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteமணிமணியான
ReplyDeleteபடங்கள்
அத்தனையும்
ஜகமணியாக
ஒளிர்கின்றன!
கற்கண்டாய்
இனிக்கும்
காணொளிகள்
கண்டோம்!!
கீழிருந்து ஐந்தாம் படம் சூப்பர் !
ஒவ்வொரு தூண்களிலும்
ஏராளமான மணிகள் கட்டியுள்ளது
ஒலிப்பதுபோலவே ஒளிமயமாய்
கண்களுக்கு நல்லதோர் விருந்து !
அனுமனைப்பற்றி புதுமையான
இனிமையான செய்திகள்.
சனிக்கிழமைக்கு ஏற்ற
இவ்வாறான
அதிநவீனப் பதிவுகள்
அற்புதமான படங்களுடன்
தங்களைத்தவிர வேறு
யாரால் தர இயலும்?
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அசரவைக்கின்றது காணொளி. மிக அழகாக அனுமன். பாடல்,படங்கள் தகவல்கள் அருமை. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவெகு அருமை ராஜராஜெஸ்வரி. இதுபோன்ற நற்செய்திகளைக் கொடுத்துப் பிரமிக்க வைக்கிறீர்கள். தங்கள் பெருமையும் அனுமன் போல வளரட்டும்.நன்றி.
ReplyDeleteமணிகளாலான அனுமன் அருமை....
ReplyDeleteமணிகளால் ஆன அனுமன் பக்தியில் உருக வைக்கிறார். இது வெறும் காணொளி மட்டும் தானா? புரியவில்லையே!
ReplyDeleteஅருமையான பதிவு, ஹனுமனின் கிருபை தங்களுக்கும் இந்த பதிவை பார்த்த எங்களுக்கும் கிடைக்கும். மிக மிக நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு, ஹனுமனின் கிருபை தங்களுக்கும் இந்த பதிவை பார்த்த எங்களுக்கும் கிடைக்கும். மிக மிக நன்றி
ReplyDeleteவியக்க வைக்கிறார் மணிகளால் ஆன ஆஞ்சநேயர்!
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteதேடி கண்டுப்பிடித்து பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.
அனிமேஷன் படம் வெளியாயிற்றா. இத்தியாசமான சிந்தனை பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete