

ஸ்ரீ துர்கா அஷ்டகம்:
வாழ் வுமானவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் துர்க்கா இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

துர்கா தேவி என்றால் சர்வ வல்லமை பொருந்திய, செல்வமும்
இரக்க குணமும் கொண்டவள் நினைப்பதை நடத்திக் கொடுக்கும் நிகழ்கால தெய்வம் என்று வணங்கப்படுகிறாள்..!
சென்னையில் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில்
சுமார் எட்டரை அடி உயரத்தில் பத்துக்கரங்களுடன் மஹாலஷ்மி ,
மஹா சரஸ்வதி, மஹா காளியின் ஆனந்த ரூபமாக - ஏகசக்தியாக
சாந்த முகத்துடன் அன்னை ஸ்ரீகனக துர்க்கா எழுந்தருளியுள்ளது கண்கொள்ளாக்காட்சியாக மனதுக்கு நிறைவளிக்கிறது..!
‘பூலோக வைகுந்த கைலாயம்’ என்று அழைக்கப்படுகிறது..!
குறைதீர்க்கும் நாயகியாய், ஆபத்பாந்தவியாக அநாதரட்சகியாக புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அம்பாள் திருப்பதி வேங்கடாசலபதியாகக் காட்சி அளிக்கும் கோலம் காணக் காணத் திகட்டாதது..!
ஆடிப்பூரத் தன்று ஜாதிமத பேதமின்றி அனைவரும் மூலஸ்தானத்திற்கு சென்று அனைவரும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு பன்னிரெண்டு மணிக்கு
ஜோதி ஏற்றப்படுகிறது..!

பஞ்சகோபுரம் கொண்ட அம்பாள் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கிறாள்
தெற்கே புவனேஸ்வரி, மேற்கே மஹாலஷ்மி,
வடக்கே மஹா சரஸ்வதி, கன்னிமூலையில் வலம்புரி ஜோதி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய் வானை சுப்பிரமணியர்,
சொர்ணபைரவர், சரபேஸ்வர மூர்த்தி,
அதர்வண காளி, உக்கிர பிரத்தியங்கரா தேவி (பிரதிமாதம் அமாவாசை அன்று மாலை பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறும்)
பல சந்நதிகள் அமைந்த கனக துர்க்கா ஆலயத்தில் தனித்தனியே சந்நதிகள் கொண்டுள்ள சரபேஸ்வரர், பிரத்யங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபட, நீண்ட நாட்களாய் வீடு பேறு இல்லாதவர்கள், இல்லம் வாங்கும் யோகம் பெறுவர்.என்பது நம்பிக்கை..!
ஸ்ரீ லஷ்மி சமேத சத்திய நாராயணமூர்த்தி,
பஞ்சமுக ஆஞ்சனேயர், பஞ்சமுக நாகாத்தம்மன்,
லட்சுமி குபேரர் சந்நிதி, ஐயப்பன், சப்த கன்னியர்,
ஈசானியில் பாதாளகங்கையில் தவமிருக்கும் ஜலதுர்க்கா (இந்த அம்பாள் வருடத்தில் ஒரு நாள் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருவாள்).
நவகிரகம் ஆகியவற்றுடன் பொங்கு சனீஸ்வரர் தனிப் பெரும்கோயிலாக அருள்பாலிக்கிறார்.
முதல் தளத்தில் வைகுந்தம்…நுழைவாயிலில் துவார பாலகர்களின்
திரு உருவம் கலைஅம்சம் நிறைந்து ஜொலிக்கிறது..

உள்ளே நுழைந்ததும் வாசலின் இருபக்கமும் ரங்கநாதரைப் பார்த்தபடி ஆஞ்சநேயர், கருடாழ்வார் தரிசனம் கிடைக்கிறது.!,
பார்க்குமிடமெல்லாம் தெய்வீகக்கலை அம்சமாக நாராயணின் திரு அவதாரங்கள் நிறைந்திருக்கிறன• அஷ்டலட்சுமிகள் உப்பிலியப்பர். உலகளந்த பெருமாள், நிமிர்ந்து பார்த்தால், தசாவதாரம் எதிரே மஹாலட்சுமி, என கண்கொள்ளாக் காட்சிகள்...!
இராசி மண்டபம் காட்சி தருவது வைகுந்தத்திற்கே
அழைத்துச் செல்வது போன்றே உணரலாம்..!

கருவறையில் சுமார் ஒன்பது அடி நீளத்தில் ஒரே கல்லான ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் பள்ளிக்கொ ண்டிருப்பது விசேஷமான அமைப்பு.

ஒரு லட்சம் செப்புத் தகட்டில் ஒரு லட்சம் பேர் ஓம் நமோ நாராயணாய' என்ற திருவெட்டெழுத்து மந்திரத்தை வடிக்கும் வைபவம், கனக துர்கா ஆலயத்தில் நடைபெற்றது..!
ஒரு லட்சம் பேர் ஒரு லட்சம் செப்புத் தகட்டில் எழுதி வைக்கும்போது அதனால் ஏற்படும் சக்தி, பெரும் சக்தியாக- கைப்பட எழுதும், "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரம், பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடியது.
சர்வ சக்தி பெற்ற நாராயண மந்திரம், அனைத்து நலன்களையும் அளிக்கவல்லது.
இந்த மந்திரம் மிகவும் ரகசியமாகவே இருந்தது. இதை திருக்கோட்டியூர் நம்பிகள் என்னும் வைணவ ஆசார்யர், ராமானுஜருக்கு பரம ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி கூறி உபதேசம் செய்தார். "இந்த மந்திரத்தை நீ ரகசியமாகப் பாதுகாக்காவிட்டால் நரகத்திற்குப் போவாய்' என்றும் எச்சரித்தார்.
திருவெட்டெழுத்து மந்திரத்தின் சக்தி, ராமானுஜரை பிரமிக்க வைத்தது. "தாம் பெற்ற பேறு இவ்வையகம் பெறட்டும். இதனால் குரு சொல்லை மீறி நரகத்திற்கு தான் சென்றாலும் பரவாயில்லை. சர்வ சக்தி பெற்ற இந்த மந்திரம், மக்களுக்கு சகல செüபாக்கியங்களையும் அளிக்கட்டும்' என்று எண்ணினார் ராமானுஜர்.
உடனே மக்கள் அனைவரையும் சேரவாரும் ஜெகத்தீரே என அழைத்து திருக்கோட்டியூர் அஷ்டாங்க விமான மேல் தளத்திற்கு சென்று திருமந்திரத்தின் சிறப்புகளை அனைவருக்கும் உபதேசித்தருளினார்.
இதைக் கேள்விப்பட்ட நம்பிகள் மிகவும் வருந்தி, "திருவெட்டெழுத்து தெருவிலே உரைக்கத் தகுமோ? தகுதி பாராமல் அனைவருக்கும் மந்திரத்தைக் கூறலாமோ?' என்று ராமானுஜர் மேல் கோபம் கொண்டார்.
ராமானுஜர், தன் குருநாதரிடம் மிகவும் பணிவன்போடு சென்று, ""அடியேனைப் பொறுத்தருள வேண்டும். அடியேன் செய்த செய்கையால் நான் மட்டும்தான் நரகத்திற்குப் போவேன். ஆனால் இதைக் கேட்ட ஏராளமான மக்கள் வைகுண்டத்தை அடைவார்களே'' என்றார்.
உலகம் உய்ய அருள் செய்த ராமானுஜரை கட்டித் தழுவி, "எம்பெருமானார்' என்று போற்றினார் நம்பிகள்.
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்' என்கிறது திவ்விய பிரபந்தம்.
அப்படிப்பட்ட அருமந்திரத்தை கோயிலில் தரப்பட்ட செப்புத் தகட்டில் எழுதி, அதன்மீது எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரை தரிசிக்க கிடைத்த பேறு இப்பிறவியில் கிடைத்த பெரும் பாக்கியம்.
அடுத்த சந்நிதியில், லட்சுமி ஹயக்கிரீவர் சுமார் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.படிக்கும் மாணவ மாணவிகளுக்காக கல்வி குருவான ஹயக்கீரீவருக்கு விசேஷ் பூஜைகள் நடைபெறுகின்றன•

சுதர்ஸன மூர்த்தி, யோக நரசிம்மரை தரிசித்துவிட்டு லட்சுமி நாராயணின் திருப்பாதம் மட்டுமே இருக்கும். லட்சுமி நாராயணின் திருப்பாதங்களை தரிசிக்கலாம். அந்த பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன•
சனிகிழமைகளில் ரங்க நாதரின் பக்தர்கள் வருகிறார்கள். இராமானுஜர் பூஜை நடைபெறுகிறது.
சுவர்களிலும் மேற் கூரைகளிலும் கண்ணைப் பறிக்கும் சித்திரங்கள்,
இதற்காகவே விசேஷமான பெயிண்ட் வரவழைக்கப்பட்டதாம்,
வேறெங்கும் இல்லாத அற்புத வண்ணங்களில் ஓவியங்களும் சிற்பங்களும் பக்தி பரவசப்படுத்துகின்றன..


இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜோதிர் லிங்கங்கள் கைலாய அமைப்பு 108 நாக சிலைகளை பார்க்கும்போது ஹைதராபாத்தில் உள்ள சுந்தரமாய் காட்சியளிக்கும் சுரேந்திரபுரி என்ற அற்புதமான கலைக் கோவிலின் நினைவு வந்தது.

ராகு கால பூஜையின் போது கூட்டம். அலைமோதுகிறது. கைலாயத்தை கண்முன் கொண்டு வருவது போல் அற்புத காட்சியாகத் திகழ்கிறது !
கைலாயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘கயிலாய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அரிதிலும் அரிதான சிவ தத்துவ ஸ்வரூபமான பாரதம் எங்கும் பரவியுள்ள12 ஜோதிர் லிங்கங்களை ஒரே இடத்தில் நிறுவி அந்தந்த மாநிலத்தில் உள்ளது போன்ற கோவில் கோபுரங்களுடனும் துல்லியமான வடிவமைப்புடனும், அளவு, தரத்துடனும், அமைத்திருக்கிறார்கள்..!
ஜோதிர் லிங்கங்கள் பற்றி திருக்கோயிலில்
தனியே புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்..!.

ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயில் திங்கள், புதன், வியாழன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் காலை 12 மணிவரை திறந்திருக்கும் இராகு காலபூஜைக்கு ஏதுவாக செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3 மணிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணிக்கும் திறக்கப்படுகிறது

இப்போது ‘கனகதுர்கை’ கனவில் வந்து சொல்லி ‘ படமாக எடுக்கப்படுகிறது.
"மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா'. என்கிற திரைப்படம் ஒரு பெண்ணின் உருவத்துக்குள் நாக பாம்பு புகுந்து கொண்டு பழி வாங்கும் கதையாக உருவாகி இருக்கிறது.
புதுமுகங்கள் மகி, சரவணன், ஜான்விகா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த திவ்யா நாகேஷ் நாகப் பெண்ணாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தேவா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சந்திர கண்ணையன் எழுதி, இயக்குகிறார். சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள ஸ்ரீகனக துர்கா ஆலயத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீகனகதுர்கா திருக்கோயில், மேற்கு முகப்பேர்
1வது பிளாக், காளமேகம் சாலை, முகப்பேர் மேற்கு,
சென்னை - 600 037. ஃபோன் நம்பர்: 26248706,
செல் : 9382205060, 9840385513.
Location:
The Kanaka Durga Temple is located in Kalamegam Salai, Mogappair West, Chennai. The temple is around 2 km away from the Mogappair West bus terminus.
Description:
The Kanaka Durga Temple is dedicated to Divine Mother Shakti as Kanaka Durga.
ஜோதிஞானபீடம் டிரஸ்ட் என்ற அறக் கட்டளையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது..!











ராமானுஜர் அவர்களின் மற்றவர்கள் பேறு பெற வேண்டும் எனும் எண்ணம் சிறப்பு... சிறப்பான படங்களுடன் அருமையான தகவல்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான பதிவு.
ReplyDeleteஇராசி மண்டலங்கள் இடம் வலமாக
காட்டப் பெற்றிருக்கின்றன !
அதன் காரணத்தை அறிந்தால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
( ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் என்ற சிற்றூரில்
அமைந்திருக்கும் ஸ்ரீ சனீச்வரரின் ஆலயத்தில்
ஸ்ரீ சனீச்வரரின் யந்த்ரம் இடம் வலமாக
( mirror image ) அமைந்திருப்பது சிறப்பு )
வாழ்த்துக்கள் !
ஸ்ரீகனக துர்கை அனைவருக்கும் நல்ல வழி காட்டுவாளாக!..
ReplyDeleteநம் அனைவரின் நலனுக்காகவும் அம்பிகையைப் போற்றும் தங்களின் எண்ணம் பாராட்டத்தக்கது. நன்றி. எனது பதிவைக் காண உங்களை அன்போடு அழைக்கிறேன்.
ReplyDeleteமுகபேர் ஸ்ரீகனகதுர்க்கை அம்மனின் சிறப்பம்சங்கள், அழகான படங்கள், பல தகவல்களுடன் சிறப்பான பகிர்வு. நன்றி
ReplyDeleteகண் போல் காக்கும் தெய்வம் ஸ்ரீ கனகதுர்க்காவுக்கு என்
ReplyDeleteஅன்பு வந்தனங்கள் ... நமஸ்காரங்கள்.
அழகிய தலைப்பு
அற்புதமான படங்கள்.
அசத்தலான விளக்கங்கள்.
108 நாகர் சிலைகள் ஜோர் ஜோர்
கொம்பு முளைத்த 927வது பதிவினையும்
மீண்டும் வாயைப்பிளந்தபடி ஆச்சர்யமாக
சுந்தரமாய்க் கண்டு மகிழ்ந்தேன்,
இன்றைய தங்களின் பதிவினில் சுமார் 10 படங்கள் இதுவரை திறக்கவே இல்லையாக்கும்.
ஆஹா இங்கு வந்தாலே போச்சு ! சுருக்கமாக எழுத வேண்டும் என நினைப்பதை நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. அதனால் இத்துடன் நான் .......... Bye Bye !
எதுவும் எழுதாமலே விட்டாலும் போச்சு ! கடைசி படத்தில் அம்பாளின் கையினில் உள்ள வாளையும், அம்பாள் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருக்கும் சிங்கத்தையும் நினைத்து பயந்து ஏதாவது எழுதியே தீர வேண்டியதாக உள்ளது. ;)
கனக துர்க்கை அம்மன் ஆலய தகவல்களும் படங்களும் மிக அருமை! சிறப்பான தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteதலைப்பைப் பார்த்ததும் விஜயவாடா கனக துர்க்கா கோவில் பற்றியோ என்று நினைத்தேன் மீண்டும் வந்து படிக்கவேண்டும்
ReplyDeleteகனக துர்கா ஆலயத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.
ReplyDeleteசில படங்களை என்னால் பார்க்க முடியவில்லை.
இதுவரை திறக்காமல் காட்சியளிக்காமல் உள்ள ஏராளமான படங்கள் பற்றிய விபரங்கள், தங்கள் தகவலுக்காக:
ReplyDelete’சுதர்ஸன மூர்த்தி, ...... செய்யப்படுகின்றன’
என்ற சிகப்பு எழுத்துக்களுக்கு அடியே உள்ள படம்
’கைலாயத்தில் ....... செய்யப்பட்டுள்ளது’ என்ற கருப்பு + நீல எழுத்துக்களுக்குக் கீழேயுள்ள படம்
’அரிதிலும் ......... அமைத்திருக்கிறார்கள் ... !’
என்ற பச்சை எழுத்துக்களுக்குக் கீழேயுள்ள படம்
‘செவ்வாய் ...... திறக்கப்படுகிறது என்பதற்குக் கீழே உள்ள ராமர், ஸீதை, ஹனுமன் + நாரதர்உள்பட நால்வர் தெரிகிறார்கள். அதற்குப்பிறகு ஒரு படமுமே தெரியவில்லை. மொத்தம் 17 கட்டங்கள் காலியாக உள்ளன.
‘இப்போது கனகதுர்க்கை கனவில் வந்து’ என்ற வாக்கிய ஆரம்பம் தான் தெரிகிறது. நடுவிலே அத்தனைப்படங்களையும் காணோம். ;(
’ஜோதிஞானபீடம் ......... நிர்வகிக்கப்படுகிறது...!
என்ற வாக்கியத்திற்குக்கீழே, கடைசி சிங்க வாஹன அம்பாளுக்கு இடையே ஒருபடமும் [சுமார் 7] தெரியவே இல்லை.
நானும் காலையிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து வந்து பார்த்து தரிஸனம் கிடைக்காமல் ஏமாந்துபோய், பொறுமை இழந்து இதனை எழுதியுள்ளேன்.
ஒன்றா இரண்டா ......... ஒரே பதிவினில் 27 படங்கள் திறக்கப்படாமல் உள்ளதே !
காட்சியளிப்பவை காணொளி உள்பட 15 மட்டுமே.
Just for your information, please.
vgk
இதுவரை திறக்காமல் காட்சியளிக்காமல் உள்ள ஏராளமான படங்கள் பற்றிய விபரங்கள், தங்கள் தகவலுக்காக:
ReplyDelete’சுதர்ஸன மூர்த்தி, ...... செய்யப்படுகின்றன’
என்ற சிகப்பு எழுத்துக்களுக்கு அடியே உள்ள படம்
’கைலாயத்தில் ....... செய்யப்பட்டுள்ளது’ என்ற கருப்பு + நீல எழுத்துக்களுக்குக் கீழேயுள்ள படம்
’அரிதிலும் ......... அமைத்திருக்கிறார்கள் ... !’
என்ற பச்சை எழுத்துக்களுக்குக் கீழேயுள்ள படம்
‘செவ்வாய் ...... திறக்கப்படுகிறது என்பதற்குக் கீழே உள்ள ராமர், ஸீதை, ஹனுமன் + நாரதர்உள்பட நால்வர் தெரிகிறார்கள். அதற்குப்பிறகு ஒரு படமுமே தெரியவில்லை. மொத்தம் 17 கட்டங்கள் காலியாக உள்ளன.
‘இப்போது கனகதுர்க்கை கனவில் வந்து’ என்ற வாக்கிய ஆரம்பம் தான் தெரிகிறது. நடுவிலே அத்தனைப்படங்களையும் காணோம். ;(
’ஜோதிஞானபீடம் ......... நிர்வகிக்கப்படுகிறது...!
என்ற வாக்கியத்திற்குக்கீழே, கடைசி சிங்க வாஹன அம்பாளுக்கு இடையே ஒருபடமும் [சுமார் 7] தெரியவே இல்லை.
நானும் காலையிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து வந்து பார்த்து தரிஸனம் கிடைக்காமல் ஏமாந்துபோய், பொறுமை இழந்து இதனை எழுதியுள்ளேன்.
ஒன்றா இரண்டா ......... ஒரே பதிவினில் 27 படங்கள் திறக்கப்படாமல் உள்ளதே !
காட்சியளிப்பவை காணொளி உள்பட 15 மட்டுமே.
Just for your information, please.
vgk
நன்றி ! நன்றி ! நன்றி !
ReplyDeleteஇப்போ எல்லாப்படங்களும் தெரிகின்றன.
முக்கியமாக விஸ்வநாத் ஆனந்த் / ஸ்ரீதர்ஷன் தரிஸனம் மும்முறை கிடைத்துள்ளது என் பாக்யம் தான்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அதுபோல நான் அழுது அடம் பிடித்து படங்களைக் கேட்டதால் ‘குட்டிப்பயலை’, ’சுட்டிப்பயலை’’பட்டுத்தங்கத்தை’என்னால் இப்போது பார்க்க முடிந்தது.
இனி நிம்மதியாகத்தூங்க முயற்சிப்பேன்.
[ஆனால் தூக்கம் வந்தால் தானே !!!!! அது இப்போதைக்கு வராதூஊஊ ]
அருமையான படங்களும் விபரங்களும் ராமானுஜர் தான் நரகத்திற்கு போனாலும் பரவாய் இல்லை மக்கள் வைகுண்டம் போகட்டும் என்று நினைப்பது என்பது எவ்வளவு சிறந்த எண்ணம். இனிய பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....!
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
கனகதுர்க்கா என்றவுடன் விஜயவாடாவில் இருக்கும் கனகதுர்க்கா கோவில் பற்றியோ என்ற நினைவுடன் வந்தேன்....
ReplyDeleteபுதியதோர் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.....