A Giant Hanuman Statue in Delhi
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்!
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்!
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்!
நம் தலை நகர் டில்லியில் 108 அடி ஆஞ்சநேயருடன் உருவாகியுள்ள
நவீன ஆலயம் வியப்புக்குரியது..
டில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ‘சங்கட மோக்ஷன் தாம்’ என்னும் ஒப்பற்ற, நூதனமான அனுமன் கோவில் அதிபயங்கர டில்லிப் போக்குவரத்துக்கு இடையே, பறக்கும் மெட்ரோ ரயில் பாதை அருகே பிரம்ம்மாண்ட உருவத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் 35 அடி அஸ்திவாரத்துடன் அமைந்த மிகப் பெரிய அனுமன் சிலையை கண்களிக்கும் வண்ணம் கண்டு அதிசயிக்கலாம்..!
சிலைக்குக் கீழே பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டி உள்ளது.
ரோம ரோமமு ராம நாமமே...ஆஞ்சநேயரின் உடலிலுள்ள ஒவ்வொரு தனி முடியும் கூட, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்குமாம். அனுமனின் மயிர்க்கால்கள் தோறும் ராம நாமம் கேட்கும் ..அனுமனின் வாலை யாராலும் வெல்ல முடியாத சிலம்பக்கம்பு என்று பெருமை மிக்கது...
குடிகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம்
வாரத்துக்கு இரண்டு முறை நெஞ்சைத் திறந்து காட்டுகிறார்.
ராமரும் சீதையும் வெளியே தோன்ற பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுகிறார்கள். ஒலிபெருக்கி மூலமும் ராம நாமம் ஒலிக்கிறது.’
எலெக்ட்ரானிக் முறையால் இயக்கப்படும் அதி நவீன ஆஞ்சநேயனைக் காண லட்சக்கணக்கானோர் கூடி நின்று ரசிப்பார்கள்...
தினமும் வெல்லம், உளுந்து, எள், கடுகு எண்ணை, கருப்புத் துணி, இரும்புப் பொருட்கள், பூ, பழம் ஆகியன கொண்டு வருகின்றனர்.
மேலதிகத்தகவல்களுக்கு ..!
தொடர்புடைய பதிவுகள்...
விஸ்வரூப நவீன ஆஞ்சநேயர்
தொடர்புடைய பதிவுகள்...
விஸ்வரூப நவீன ஆஞ்சநேயர்
சிறப்பான படங்களுடன் தகவலுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபிரமாண்டம் வியக்க வைக்கிறது சகோதரியாரே
ReplyDeleteநன்றி
சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று.....
ReplyDeleteஅதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....
மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.
கண் நிறைந்த, மனம் நிறைந்த பதிவு.
வாழ்த்துக்கள்.
வியக்க வைக்கும் ஆஞ்சநேயர்.மிக பிரம்ம்ம்மாண்டமாக இருக்கார். படங்கள், தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteஅற்புதமான காட்சிப்பதிவுகள். பகிர்வுக்கு நன்றிங்க..
ReplyDelete10 நிமிடங்கள் முன்பு தோன்றிய தலைப்பு
ReplyDelete’விஸ்வரூப நவீன ஆஞ்சநேயர்’
மிகவும் பிரும்மாண்டமான பதிவு.
>>>>>
அனைத்துப் படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல் அருமையோ அருமை.
ReplyDelete>>>>>
ஏற்கனவே 'TEMPLESINDIA' வின் காணொளி கொடுத்துள்ளது JACKPOT அடித்தது போல அமைந்திருந்தது.
ReplyDelete>>>>>
’நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா ?’
ReplyDeleteஎன்பது போல ஒரு அனிமேஷன் படம் இருந்தது.
ஆனால் இப்போ அதைக்காணோம். ;(
>>>>>
அதற்குள் ஐந்து நிமிடத்தில் தலைப்பையும் மாற்றி,
ReplyDeleteபுதிய காணொளியை இணைத்து,
ஏதேதோ செய்து,
அந்தக் காணொளியில் என்னை டெல்லிக்கேக் கூட்டிச்சென்று,
அந்தக் காணொளியில் ஹனுமன் காலடியில் சிக்குண்டிருப்பவன் போல வாயைப்பிளக்க வைத்துவிட்டீர்களே. !!!!!
சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.
>>>>>
தொடர்புடைய பதிவிக்கும் சென்று தரிஸித்து வந்தேன்.
ReplyDeleteஆஹா அங்கு 7(8) / 27 இருக்கக்கண்டேன்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
oo oo oo
அரிய, வியக்கவைக்கும் படங்கள் மற்றும் செய்திகள். நன்றி.
ReplyDeleteவிஸ்வரூப ஆஞ்சநேயர். சூப்பர்!
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=-XwRJKTVfQo
ReplyDeletesri rama dhootam namo namaha
subbu thatha
பிரும்மானடமான ராம தூதுவன் படங்களுடன் செய்திகள் அருமை.
ReplyDelete