பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது.
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு
எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும்.
பெரிய வியாழன் "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" (Easter Triduum) முதல் நாள் ஆகும்.
இரண்டாம் நாள் புனித வெள்ளி (Good Friday),
மூன்றாம் நாள் புனித சனி (Holy Saturday) என்று அழைக்கப்படுகின்றன.
இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.
இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவி தலைமைக்கு முதல் பண்பு முதலில் நாம் ஒரு தொண்டனாக இருக்க வேண்டும் என்று பாடம் கற்பித்த நாள் -தம்மைத் தாழ்த்துகிறவர், உயர்த்தப்படுவார்” என்று அவரே மொழிந்ததற்கேற்ப, தன்னை அவர் தாழ்த்திக்கொண்டார்.
அவருடைய தாழ்ச்சி புகழப்படுகிறது “சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்குமளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்
என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்..என வேண்டிக்கொள்கின்றனர்..
மனிதம் மலரும் மகத்தான திருநாள் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteசிறப்பான பாடத்துடன் அருமையான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபெரியவியாழன் சிறப்புகளை அறிந்தேன்.அழகான படங்கள்.நன்றி.
ReplyDeleteஅருமையான புதிய தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபெரிய வியாழன் பற்றி அறிந்தேன். அழகான படங்களும்.
ReplyDeleteதாழ்த்தப் படுபவர் உயர்த்தப்படுவர் என்றும் அறிந்து மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....!
ஏசு பிரான் திருக்கழல்கள் போற்றுகிறேன்!
ReplyDeleteஅன்பே சிவம்! அன்பே ஏசு!
அன்பே சிவம்! அன்பே ஏசு!
பெரிய வியாழன்! அடுத்துபுனித வெள்ளி! அசத்தல்!
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்து முடித்ததும், சிறுவயதில் கிறிஸ்தவ நண்பர்களோடு இரவுநேரம் திருச்சி மெயின்கார்டு கேட் அருகேயுள்ள சர்ச்சிற்கு சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன.
ReplyDeleteபல புதிய செய்திகளைத் தங்களுடைய பதிவின் மூலமாகத் தெரிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteகிறித்தவம் பற்றி எவ்வளவு அருமையான பதிவு.!!!!!..
ReplyDeleteஉண்மையிலேயே மிக மிக அற்புதமான படைப்பிற்க்கு அன்பனின் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
மனிதம் மலரும் நாள்.... தகவல்கள் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபடங்களுன் அருமையான விளக்கம், நன்றி அம்மா
ReplyDelete