Tuesday, April 15, 2014

சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு



 சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக
சிறப்புறக் கொண்டாடுகிறோம்..

நாம் மட்டுமல்ல ..இயற்கை அன்னையும் பழுத்த பழைய இலைகளை உதிர்த்து மண்ணுக்கு உரமாக்கிவிட்டு பச்சைப்பசும் இலைத்தளிர் ஆடைகளை அணிந்து கண்களிக்கும் வண்ணம் காட்சிதருகிறாள்...

மரம் முழுக்க இலைகளே தெரியாமல் சரக்கொன்றை மரம் தங்கநகைகளை தாராளமாக அணிந்த புதுமணப்பெண்ணாய் ஏராள புன்னகையொடு வரவேற்பதைக் கண்குளிரக்காணும்போதே சித்திரை பிறக்கப்போகிறது என கட்டியம் கூறும்..

வாகை மரத்தின் பூக்கள் சித்திரையை சாமரம் வீசி வரவேற்கும்..

அப்போதுதான் முட்டையிலிருந்து வெளிவந்து அனுபவம் கற்காத இளம் குஞ்சுப்பற்வைகள் கண்திறந்ததும் செந்நிறமலர்கள் மரம் முழுவதும் பூத்திருப்பதைப் பார்த்து காடே தீப்பற்றிவிட்டதோ என அலறி தாயின் சிறகிற்குள் தஞ்சமடைந்து மழலை மிழற்றுவதைக் கேட்டு இயற்கை அன்னை ஆனந்தமடைந்து தன் வண்ணமலர்களால் அர்ச்சித்து மண் மகளையும் நதி மகளையும் பூவாடை போர்த்துகிறாள்..

வேப்பம்பூக்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்து 
மணம்பரப்பி மகிழ்ச்சியூட்டும்..

சித்திரை முதல்நாளில்  வேப்பம்பூக்களையும் , வாழைப்பழத்தையும் ,கரும்பு சர்க்கரையும் , புளிப்புக்கு சிறிது மாங்காயும் கலந்து அறுசுவையாக முதல் உணவாக எடுத்துக்கொள்வது ஆண்டுமுழுவதும் பிணிகளை அறுத்து நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்பது  நம்பிக்கை..

முக்கனிகளும் கனிந்து வாசம் வீசும் திருநாள்..

சித்திரையின் முதல் நாளில் நித்திரைநீங்கி எழுந்ததும் முதல்காட்சியாகக் காணும் கனிகாணல் நிகழ்ச்சி ஆண்டின் மங்களகரமான தொடக்கத்திற்கு அச்சாரமாக திகழ்கிறது..

பெரியோர்களிடம் ஆசிபெற்று கைநீட்டம் என்று நாணயம் பெறுதல் செல்வ வளம் ஆண்டுதோறும் சிறப்பாக இருப்பதை குறிக்கிறது..

ஆலயங்களில் சிறப்புப்பூஜைகளும் , நாணயம் பெறுதலும் இறைவனின் அருளை பெற்றுத்தருகிறது..

சித்திரைப்புத்தாண்டு அன்று சிறப்பு விருந்து உணவுகளும் பூஜை அறை அலங்காரங்களும் அன்று தொடங்கும் உறுதியான முதலடி ஆண்டு தோறும் தொடர்ந்து வருவதான தன்னம்பிக்கையைத்தருகிறது..! 

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.

 இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்ததமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம்.

 பூஜை அறையில் உள்ள படங்களை  மங்களகரமான மஞ்சள் நிற மலர்களால் மலர்களாலும்  ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து   வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.

 வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கிறோம்..

தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.

கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும்.

அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில்  வைத்து நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம்.

செல்வத்தின் திரு உருவான  லட்சுமி தேவி  வீட்டில் வாசம் செய்ய தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச் சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம்

பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.

வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள்.

விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத் தருகிறது.

வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கம்..


பங்குனி மாதத்தின் முழுநிலவுநாளை ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடுகிறோம் ..தெய்வங்களின் திருவீதி உலாவும் தேர்த்திருவிழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன...
Displaying WP_20140413_004.jpg
ஆஸ்திரேலியாவில் மார்ஸ் என்னும் செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வருவதால் விழாக்கோலம் பூண்டு ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற உடைகள் அணிந்துகொண்டு வானியல் ஆராய்ச்சிமையத்தில் குழுமி தொலை நோக்கிகள் வழியாக செவ்வாய் கிரகத்தைக்கண்டு களித்திருகிறார்கள்..  
இதோ மகன் அனுப்பிய படங்கள்....!!
 ஏன் அவ்வளவு சிறிதாக தெரியும் கிரகங்களை கஷ்டப்பட்டு தேடிப் பார்க்கவேண்டும் ..முழு நிலவு நாளாயிற்றே .. இன்று களங்கம் சற்றே குறைந்து ஒளி வீசும் நிலவைக் கண்டுகளிக்கலாமே என்று சந்திரனை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பினால் நிலவின் பிரகாசம் கண்களை கூசச்செய்ததாம் ..
பொதுவாக சக்திவாய்ந்த வானியல் தொலைநோக்கிகள் வழியாக சந்திரனைப் பார்க்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லையாம் ..
அத்தனை பிரகாசமான ஒளி கண்களுக்கு ஊறு விளைக்குமாம் ..
வானியல் ஆராய்ச்சியாளரான கலிலியோ கூட இந்தமாதிரி தொலை நோக்கிகள் வழியே பிரகாசமான கோள்களை உற்று நோக்கி ஆராய்ச்சிகள் செய்ததால் கண் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாராம்..!
Marsorbitsolarsystem.gif





20 comments:

  1. சித்திரைப் புத்தாண்டு சிறக்கட்டும்
    நன்மைகளை எல்லாம் வழங்கட்டும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. மகன் அனுப்பிய படங்கள் உட்பட அனைத்தும் அருமை அம்மா... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நிலவின் பிரகாசம் போல கண்களைக் கூசச்செய்யும் நல்லதொரு பகிர்வு. அழகான படங்கள் + அற்புதமான விளக்கங்கள்.

    இந்தப்புத்தாண்டில் அனைவருக்கும் அனைத்து முயற்சிகளிலும் அடுத்தடுத்து ஜயம் உண்டாகட்டும்.

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    நிலவின் பிரகாசம் (?) நிச்சயம் கூசும்.

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. சித்திரை மாதத்தின் சிறப்பினையும், சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் முறைகளையும் அழகான படங்களுடன் பதிவிட்டிருக்கிறீங்க. மகனின் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நிறைந்த கருத்துகளும் சிறந்த படங்களும்.
    வருடம் நிறைய வளமான கருத்துகளுடன் பதிவு நிறைந்து வழியட்டும்
    இனிய புத்தாண்டு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. படங்களும் தாங்கள் தந்திருக்கும் தகவல்களும் மிக அருமை, உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல படங்கள். அவற்றைக் கண்டதிலியே புது மகிழ்ச்சி. நாங்களும் செவ்வாய்க் கிரகத்தை ஒரே ஒரு நாள் கண்டு மகிழ்ந்தோம். அப்படி ஒரு சிகப்பு வர்ணம். மிக நன்றி இராஜராஜேஸ்வரி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அரிய அற்புதத் தகவல்களுடன்
    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்தக்கள் தங்களுக்கும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் இயற்கை பற்றிய அழகிய வர்ணனை வெகுவாக கவர்ந்தது.

    ReplyDelete
  14. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. மனதில் நிற்கும் புகைப்படங்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  16. விஷுக்கணி வைப்பதும் அதை அதிகாலையில் காண்பதும் மறைந்து கொண்டு வரும் நேரத்தில் விஷுக் கை நீட்டம் மட்டும் போகவில்லை. ....!

    ReplyDelete
  17. படங்களும் செய்திகளும் அருமை. நன்றி

    ReplyDelete
  18. இனிய தமிழ் புத்தான்டு வாழ்த்துக்கள் அம்மா....
    படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  19. மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  20. ஜய வருடத்தில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் கிடைக்கட்டும்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete