Tuesday, April 8, 2014

ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம்










நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்

இரண்டெழுத்து மந்திர மாகிய இராம நாமத்தின் மகிமையை விளக்கும் கம்பரின் பாடல்.இராமபிரானைப் பற்றிய எந்த நினைவும், 
'அமுது அளாவிய புனல்' என தேவரமுதத்தோடு கலந்தநீர்ப் 
பெருக்கு போல இனிமையும்  நல்லவைகளையும் அளிக்கும்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||

 எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான்.   
‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன்.

ராம நாமம், சைவ-வைணவ ஒற்றுமைக்கோர் உதாரணம். 

திருமாலின் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ள ‘ரா’வும் - தென்னாடுடைய சிவனாய் திகழ்ந்து எந்நாட்டவர்க்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் ‘நமசிவாய’  என்ற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள ‘ம’வும் சேர்ந்து அமைந்ததே ‘ராம’நாமம். 

இந்த தாரக நாமத்தை, காசியில் உயிர் விடுபவர்களின் காதுகளில் தனது திருவாயாலே எடுத்துரைத்து அவர்கள் மோட்சம் பெற வழிவகுக்கிறார் சிவபெருமான். 

மற்றைய பல திருவிழாக்களைப் போல நாட்டின் ஒரு பகுதிக்குரிய திருவிழாவாக இல்லாமல், இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும்  மற்றும் உலகளாவிய நிலையிலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. 

இராமனின் புகழை பாடுவோர் அனுமனின் 
அன்புக்கு பாத்திரமாகி விடுகின்றனர். 

அவர்கள் கோராமலே அவர்களுக்கு 
அனுமன் உதவி செய்ய ஆரம்பித்துவிடுவான். 

ஆகையால் அனுமனின் அருளை வேண்டுவோர் ஸ்ரீராமரை 
ஆராதிப்பது மிகவும் அவசியம்.


ஸ்ரீ ராமநவமியன்று உபவாசமிருந்து, இராமருக்கு துளசிமாலை அணிவித்து, சுந்தரகாண்டம் அயோத்தியாகாண்டம் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. 

ஸ்ரீ ராமநவமியன்று இராமர் படம், விக்ரஹம், இராமாயணப் புத்தகம், இராமர் ஜாதகம் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துப் பூஜை செய்யலாம். 

பானகம், நீர்மோர், பருப்பு வடை, வெள்ளரிப்பிஞ்சு, விசிறி 
நைவேத்தியம் செய்து வழங்கலாம்... 
ஸ்ரீ ராமநவமியன்று ஸ்ரீ ராம நாம ஜெபம் செய்து ஆனந்தம் அடையலாம்..!



“ராமருடைய வடிவம் தியானத்திற்குரியது; 
ராமருடைய நாமம் ஜெபத்திற்குரியது; 
ராமருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் 
அனைத்தும் தர்மத்திற்கு விளக்கம்.” 















தொடர்புடைய பதிவுகள்

 *எத்தனை எத்தனை ராமன்..

**ஸ்ரீராம நவமி

***ஸ்ரீராமநாம மகிமை













22 comments:

  1. ஜெய் ஸ்ரீ ராம்........

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  2. ராமரை வணங்கினாலும் அனுமனை வணங்கினாலும் ஒன்று தான்... சிறப்பான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ராமநவமி வாழ்த்துக்கள். அழகான ,சிறப்பான தகவல்கள்+படங்கள். காணொளி மிக அருமை. நன்றி

    ReplyDelete
  4. ஸ்ரீராமஜயம் !

    கடைசியில் காட்டியுள்ள அனிமேஷன் படம் புதுமை + அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. தொடர்புடைய பதிவுகளுக்குச்சென்று வந்தேன்.

    முறையே 4/26; 15/40; 9/21 மார்க்குகள் கிடைத்துள்ளன.

    நடுவில் ஒன்றில், அடித்துப்பிடித்து, அழுது அடம்பிடித்து, தங்கள் திருக்கரங்களால் கொஞ்சூண்டு பிரஸாதமும் வாங்கியுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  6. வெள்ளி டம்ளர்களில் ஏலக்காய் மிதக்கும் பானகங்களை நான் எனக்காக எடுத்துக்கொண்டு பருகி விட்டேன்.

    தித்திப்பான சுவையோ சுவையாக இருந்தது.

    வடையைப்பற்றி எழுதி என் ஆசையைத் தூண்டி விட்டுள்ளீர்கள்.

    ஆனால் இதுவரை வடையை என் கண்களில் காட்டவே இல்லையே ;(

    >>>>>

    ReplyDelete
  7. இரு காணொளிகளும் அருமை.

    பானகம் நீர்மோர் போல சுவையாய் இருந்தன.

    >>>>>

    ReplyDelete
  8. பதிவின் பார்வையாளர்கள் 10 லட்சம் தாண்டியுள்ளதில் மகிழ்ச்சி.

    இன்று தங்கள் தளத்தில் 700 FOLLOWERS !!!!! ;)))))

    இருப்பினும் எப்போதும் முன்னனி இருக்க நினைக்கும் என்னை அவ்வப்போது நீக்கிவிடுகிறீர்கள். ;(

    அதனால் பரவாயில்லை.

    ஒருவழியாக ....... நீ ங் க நினைப்பவனே தான் ...... நானும்.

    காணொளியில் ஸ்ரீராமரை கரை சேர்த்த குகனாக என்னை நினைத்து மகிழ்ந்து ஒதுங்கிக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  9. அருமையான பதிவு.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    நாளைய பதிவு, இந்த ஆண்டுக்கான [2014] வெற்றிகரமான 100வது பதிவு.

    அதற்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    oo oo oo

    ReplyDelete
  10. சங்கும், சக்கரமும். ஆனந்தனும், தம்பியர்களாகவும் ,
    இந்திரன், வாலி மற்றும் அவன் மகன் அங்கதனாகவும்,
    வாயுவின் அம்சமாக மாருதியும் ,
    அக்கினியின் அம்சமாக நீலனும்.
    சிவனே மாருதியாகவும்,
    புடை சூழ

    திருமால் இராமனாக

    அவதரித்த திருநாள்


    நாடிய பொருள் கை கூடும்
    ஞானமும் புகழும் உண்டாம்
    வீடியில் வழியது ஆக்கும்
    வேரியும் கமலை நோக்கும்
    நீடிய அரக்கர் சேனை
    நீறு பட்டு அழிய
    வாகை சூடிய சிலை
    இராமன் தோள் வலி கூறுவார்க்கே !


    அருமையான பதிவு! . பாராட்டுக்கள் ! !

    ReplyDelete
  11. ஸ்ரீராம நவமி - குறித்த கோலாகலமான பதிவு.
    பரவசமாக இருக்கின்றது.

    ReplyDelete
  12. ரசித்தோம் அழகு படம் மற்றும் ஓவியங்களை. ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. " அனந்தனும் " என்று இருக்க வேண்டியது
    ' ஆனந்தனும் " என்று இருக்கிறது.
    சொற்பிழைக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  14. ஜெய் ஸ்ரீராம்! ராம நாம மகிமை சிறப்பும்! படங்களும் மிகச்சிறப்பு! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  15. நல்லதொரு பகிர்வு. ரங்கோலி கோலம் மிக அருமை!

    ReplyDelete
  16. ராம நவமி அன்று ராமர் படங்கள் அத்தனையும் மனதை கொள்ளையடித்தன.
    ராம! ராம்! ராம!

    ReplyDelete
  17. ஸ்ரீராம நவமி என்றால் பானகமும் பாட்டுக்கச்சேரிகளும் தான் நினைவுக்கு வருகிறது ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

    ReplyDelete
  18. அந்தக் கோலம் மிகச் சிறப்பாக போடப்பட்டுள்ளது. வண்ணக் கலவையும் அற்புதம்.
    'கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?'
    ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகம் வந்து சில பதிவுகளை தந்தேன். இந்த ஆண்டு பின்னூட்டம் இடும் முதல் பதிவு உங்களுடைய ராம நவமி. வழக்கம் போல் படங்கள், கருத்துகள் அனைத்தும் பிரமாதம். குறிப்பாக எனது தாய் வழி தாத்தா ராமைய்யர் மறைந்த நாள் இது. அவரது நினைவை இறைவனின் நினைவில் சேர்த்த தங்கள் பதிவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தரும் ராமர்
    தங்களுக்கும் தங்கள் அன்பு பெற்றவர்களுக்கும்
    அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தர வேண்டுமென ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன். ஸ்ரீராமஜெயம்!

    ReplyDelete
  21. ஒரே நேரத்தில் எத்தனை ஸ்ரீ ராம தரிசனம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    ராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. ஸ்ரீ ராம் நாமம் செய்யும் நன்மையையும் மகிமையையும்அறிந்தேன். அவர்பல வகையானபடங்கள் மூலம் தரிசனமும் கிடைக்க பெற்றேன்.ஹனுமான் கடாட்சமும் இதன் மூலம் கிடைக்கபெறும் என்னும் இனிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள் !தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete