நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
சென்மமும் மரணமும் இன்றி தீருமே,
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்"
‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது.
இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார்.
அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார்.
அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் ....
“ஓம் நமோ நாராயணாயா” என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள ‘ரா’ என்ற சப்தத்தையும், “ஓம் நமசிவாயா” என்ற பஞ்சாட்சரத்திலிருந்து ‘ம’ என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் “நாயணாயா” என்றும் “நசிவாயா” என்றும் மாறுபடும்.

அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது ‘ரா’வும் ‘ம’வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே ‘ராம’ மந்திரம்.
இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே ‘தாரக மந்திரமாகும்’. “தாரகம்” என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது.
நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் ‘ராம’ மந்திரம்.
அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல்.
பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது.
எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை.
இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.
எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.
ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.