ஓம் தம் வாகீச்வராய வித்மஹே ஹயக் ரீவாய தீமஹி
தந்நோ ஹஸென ப்ரசோதயாத்.
கல்வி, கேள்விகளில் ஞானம் பெற தினமும்
பதினெட்டு முறை இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பிக்கலாம்..
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினாம்
நரம் முச்யந்தி பாபானி தரித்ரமேவ யோஷித
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜஹ்னு கன்யா பிரவாஹவத்
தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜஹ்னு கன்யா பிரவாஹவத்
வாதிராஜ யதிகள், தன்னுடைய "ஹயக்ரீவ ஸம்பதா' என்னும் ஸ்தோத்திரத்தில், ஹயக்ரீவ என்னும் மந்திரச் சொல்லை மூன்று முறை உச்சரிப்பவருக்கு கங்கா பிரவாகம்போல் வாக்கு சக்தியானது ஏற்படும்' என்று கூறியுள்ளார்.
ஹயக்ரீவ !ஹயக்ரீவ !! ஹயக்ரீவ!!!
லட்சுமி ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..
திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும்
ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்.
பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.
ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறி பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர்.
குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார்.
உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின.
குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்து "லட்சுமி ஹயக்ரீவர்' என்று ஞான அருள் மழை பொழிகிறார்...
வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார்.
கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது மடியில் அமர்த்தியிருக்கிறார்.
கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது மடியில் அமர்த்தியிருக்கிறார்.
நடுவில் புதுச்சேரிமுத்தியால் பேட்டை அருள்மிகு லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயில் அமைந்து அருள்பாலிக்கிறது...
சாளக்கிராமத்தால் ஆன பெருமாளின் திருமேனி இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது.
பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.
பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.
மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்
மூலவர் சன்னதி, கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு, சொர்ண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தினமும் மாலையில் மாணவர்கள் இங்கு வந்து
"ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்!
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்கின்றனர்.
ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசிப்பவர்கள் ஜெயிப்பது நிஜம்!
கோயில் பிரகாரம்
படங்களுக்கும் ஸ்லோகங்கள் மற்றும் தகவல்களுக்கும் நன்றி.
ReplyDeleteஆனால் ஹயவதனப் பெருமாளுக்கு குதிரை முகம் வந்ததற்கான காரணம் நான் ஒரு உபன்யாசத்தில் வேறு மாதிரி கேட்டிருக்கிறேன்(உபயம் சேங்காலிபுரம் கல்யாணராம தீட்சிதர்.இவர் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சம்)
ஒரு முறை தேவாசுர யுத்ததில் இந்திரன் வேண்டிக் கொண்டதற்கிணங்க
மகாவிஷ்ணு வில் அம்புடன் தோன்றி போரிட்டு அசுரர்களை வீழ்த்திய களைப்பில் ஒரு மரத்தடியில் வில்லினை முகவாயில் தாங்கிக் கொண்டு களைப்பு தீர அமர்ந்திருக்க,அவருக்கு தனது நன்றியை தெரிவிக்க இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.ஆனால் மகாவிஷ்ணு
அறிதுயிலில் ஆழ்ந்திருப்பது கண்டு பிரம்மாவிடம் என்ன செய்வது என யோசனை கேட்க பிரம்மா,"நீ ஒரு புழுவாக மாறி அவர் மீது ஊறினால் அறிதுயிலில் இருந்து எழுவார்.அப்பொழுது நீ நன்றி கூறலாம்" என யோசனை சொல்லவும் இந்திரன் புழுவாய் மாறி மண்ணில் இருந்து மகாவிஷ்ணுவின் பாதம் அருகில் செல்வதற்காக போகும் பொழுது வில்லின் நாணில் பட்டு விட நாண் அறுந்தது.அதில் முகவாய் தாங்கியிருந்த மகாவிஷ்ணுவின் மதி வதனத்தை அது கொய்து விட இந்திரன் பதறிப் போனான்.
பிரம்மாவோ, "பதற்றம் வேண்டாம்.அடுத்த அவதாரத்திற்கான காரணமே இது.எங்கிருந்தாவது ஒரு குதிரையின் தலை கொண்டு வந்து பொருத்து.மது கைடபர்களை அழிக்க அது அவசியம்" எனவும் இந்திரன் அவ்வாறே செய்தான்.அந்த வதனத்துடன் மது கைடபர்களுடன் போரிட்டு வேதத்தை மீட்கச் சென்றார் ஸ்ரீமன் நாராயண்ன்.
இம்மாதிரியாகக் கேட்டிருக்கிறேன்
raji said...//
ReplyDeleteஅது பற்றியும் ஒரு பதிவு தயாரித்திருக்கிறேன்..
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
நல்ல பகிர்வு...
ReplyDeleteசிறப்பான தகவல்கள்,அழகான படங்களுடன் அருமையாக இருக்கு பதிவு. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஅழாகன படங்கள் அருமையான செய்திகள்.
ReplyDeleteஅறிவு, குடும்ப ஒற்றுமை தரும் தெயவத்தை வணங்குவோம்.
ராஜிசொல்லும் கதையும் கேட்டு இருக்கிறேன்.
அரிய தகவல்கள்.. சிறப்பான படங்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
சிறப்பான தகவல்கள்,அழகான படங்களுடன் அருமையாக இருக்கு பதிவு. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteசிறப்பான பதிவு ஹயக்ரிவர் ஆலயத்தின் பெருமை சிறப்புக்குரியது கல்வி வேதகனைத் துதித்தால் சகல சம்பத்தும் கிடைக்கும் என்பார்கள் பெரியாவாள் .ஹயக்கிரிவில் தருசனம் மறக்கமுடியாத அனுபவம் எனக்கு. நன்றி நல்ல சுலோகம் ஒன்றை மனப்பாடம் ஆக்க பகிர்ந்ததற்கு.
ReplyDeleteசிறப்பான பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
சிறப்பான பகிர்வு.
ReplyDeleteதங்கள் கடந்த பதிவின் போதே எங்கள் ஊர் அருகிலுள்ள கடலூர் திருவந்திபுரம் லக்ஷ்மிஹயக்ரீவர் நினைவில் வந்தார். நேரம் கிடைக்கும் போது செல்வதுண்டு. இந்த பதிவில் காணவும் பெருமகிழ்வு. மற்றைய இரு ஹயக்ரீவர்களை தரிசிக்க விழைகிறது மனம். ஒரு மூடிய கதவிலும் பக்தர்களுக்கான குறிப்பு இருப்பதை கண்டு மெய் சிலிர்த்தேன். இறையருளை யாவருக்குமாக்கும் தங்களைப் போன்ற நன்நெஞ்சம் கொண்டோர் ஆங்காங்கே உள்ளனர் போலும்!
ReplyDeleteஹயக்ரிவர் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteகடைசி படத்தில் காசு மாலையும், பவழமாலையும் ஜோர் ஜோர்.
ReplyDeleteகீழிருந்து நான்காவது படத்தில் கருடனின் முகத்தில் நல்ல தெளிவு.இறக்கைகள் இரண்டும் பளிச் பளீச்
ReplyDeleteகிழிருந்து ஒன்பதாவது படம் விக்ரஹரம் + சிகப்பு [அரக்குப்] பட்டு வஸ்த்ரம் தங்க ஜரிகையுடன் அருமையோ அருமை
ReplyDeleteகீழிருந்து 10 ஆவது படத்தில் வாடாமல்லி புஷ்பமாலை தனிச்சிறப்பு.
ReplyDeleteமுகத்திற்கு வைத்துள்ள அலங்காரம் அற்புதமான வடிவமைப்பு.
மேலே எழுதியுள்ள இருவரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்துள்ளது தனிச்சிறப்பு என்று எழுதியிருப்பதே எனக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.
படத்தைவிட உங்கள் எழுத்தில் தான் அந்த அற்புதமான ஆலிங்கனத்தைக் காண முடிகிறது..
கீழிருந்து 4 ஆவது படமும் மேலிருந்து 6 ஆவது படமும் திரும்பவும் ரிபீட் ஆகியுள்ளன.
ReplyDeleteமேலிருந்து 5 ஆவது படம் நல்ல அழகோ அழகு.
அதற்கு காரணம் தாமரைப்பூ ரோஸ்கலர் வெள்ளைப்பூச்சரங்களுக்கு நடுவே காட்டப்பட்டுள்ளது, அழகுக்கு அழகு சேர்க்கிறது.
[செந்தாமரையே .... செந்தேன் நிலவே ...... பாட்டுப்போல் நல்ல அழகு]
மூன்றாம் நாளாக ஹயக்ரீவர்
ReplyDeleteஹயக்ரீவா!
ஹயக்ரீவா!!
ஹயக்ரீவா!!!
மும்முறை உச்சரித்து விட்டேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமூன்றாம் நாளாக ஹயக்ரீவர்
ஹயக்ரீவா!
ஹயக்ரீவா!!
ஹயக்ரீவா!!!
மும்முறை உச்சரித்து விட்டேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.//
சிறப்பான ரசனையான கருத்துரைகள் வழங்கி பதிவைப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்லதொரு பதிவு - படங்கள் கண்டு களித்தேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete32. பெளத்த கல்கீ கோவிந்தா
ReplyDelete2385+7+1=2393 ;) ஓர் பதிலுக்கு நன்றி.
ReplyDelete