ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்வண்ணங்களில் களங்கமற்ற வெண்மை நிறத்தில் கோடி சந்திரன் சேர்ந்த குளுமையான பிரகாசத்தில் ஞானம்அருளும் அவதாரமாகத் திகழ்கிறது அஞ்ஞான இருளில் மூழ்கிய உலகை ஞான ஜோதியால் விளங்கச்செய்த பெருமை ஒளிரும் அவதாரம் ஹயக்ரீவ அவதாரம் .
மஹாவிஷ்ணுவின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி!
அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!சரஸ்வதி தேவியின் ஆதி குருவாகவும் அகத்தியருக்கு ஆசானாகவும் திகழ்ந்தவர்..
சகல வித்தைகளுக்கும் ஆதாரம் ..
பரி வடிவில் வந்து பரிபாலிக்கும் அவதாரம்..
"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்''
-திருமொழி
மத்வாச்சாரியார் ஏற்படுத்திய எட்டு மடங்களில் ஒன்றான ஸ்ரீசோட் மடத்தின் அதிபதியாக இருந்த வாதிராஜர் தினமும் தொழும் தெய்வம் ஸ்ரீஹயக்ரீவர்...
சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டு
அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும்,நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.
அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயகருக்கு பதில் ஹயக்ரீவ விக்ரகம் தான் வந்தது.
அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது.
வாதிராஜர் ஹயக்கீரவருக்கு கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் ஹயக்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம்செய்வார்.
பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது முன்னங்கல்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சம் பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது.
கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் அஞ்ஞானத்தில் ஏற்பட்ட பொறாமையால் நைவேத்தியத்தில் நஞ்சைக்கலந்துவிட வாதிராஜரின் தோள்களில் தன் கால் பதித்து நைவேத்தியத்தை உண்ட் ஹயக்ரீவரின் குளம்புகளிலும் கால்களும் நீல நிறம் பரவி இறைவனின் திருமேனி முழுவதும் நீல நிறமானது....
பாத்திரத்தைத் தாழ்த்திய போது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வாதிராஜர் பெருந்துயரத்தில் ஆழ்ந்தார்.
” நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன்.
என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன், ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே !!! ” என வருந்தினார்.
இவரை அறியாமல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது.
தாமே விஷத்தை உட்கொண்டிருந்தாலும் இவ்வளவு துன்பப் பட்டிருக்கமாட்டார் வாதிராஜர்.
பொழுது புலரும் வேளை, அர்ச்சகர்கள் கண்ணயர்ந்திருக்குக் சமயம், வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி, விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, ” மட்டி ” என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் ” என்று அருளிச்செய்தார்.
விழித்தவுடன் வாதிராஜர் ‘ மட்டி ‘ என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார்.
அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார்.
இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய, திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று.
48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.
Shree Adbhut Hayagreeva Bhimeswaradeva Shaligram
Lakshmi Hayagreeva
கத்தரிக்காய்க்கு தெய்வ அம்சமும், நச்சுத்தன்மையை ( விஷம் ) முறிக்கும் சக்தியும் உண்டு.. அம்மை நோயை குணப்படுத்தவும் சிறந்த ஔஷதம் .
சமீப ஆராய்ச்சிகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபணமாகியும் உள்ளது. இத்தகைய கத்தரிக்காயில் பல வகைகள் உள்ளது, அதில் சிறந்த வகைகளில் ஒன்றே ” மட்டிக்குள்ளா கத்தரிக்காய் ”
கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.ஹயக்ரீவபிரசாதம் தயார்.
ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும ச்ரவண(திருவோண) நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரீவருக்கு ஹயக்ரீவ ப்ராசதம் செய்து, மஞ்சள் நிறப்பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம்.
ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத திருவோண நட்சத்தித்தன்று
கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்)
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது.
கல்விச்செல்வத்திர்க்கு அதிபதி, ஸரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் . தேர்வு சமயத்தில் மிகவும் நல்ல பதிவு.
ReplyDeleteஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளன. எந்த சமயத்தில் எதுபற்றி கூறவேண்டும் என்பதனை நன்குணர்ந்து அது பற்றி வெளியிடும் அழகே அழகு.
ReplyDeleteஹயக்ரீவர் சாளக்கிராமம் {7-வது படம்} மிகவும் அபூர்வமானது. ஒரு பதிவு குறித்த விளக்கப்படங்களை தேடி எடுத்து அளிக்கும் பாங்கு வியப்பளிக்கிறது
ReplyDeleteஆன்மிகம், மருத்துவம், புராணம் என்று கலந்து அருமையாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி
ReplyDeleteஹயக்ரீவ ப்ரசாதம் அருமை! கத்தரிக்காயின் வகைகள் கண்ணுக்கு அழகு! சாளகிராமம் கண்டு பிரமிப்பு!!
ReplyDeleteஹயக்ரீவர் பற்றி பல புதிய செய்திகளை அறிந்துகொண்டேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
விளக்கங்களிலும், படங்களிலும் உங்கள் மெனக்கெடலும், ஆன்மிகப்பற்றும் புரிகிறது. பக்தி பரவசப்படுத்திய பதிவு.
ReplyDeleteLAKSHMI HAYAGRIVAR S SUPERB PICTURE NICE STORY AMMA GOOD KEEP IT UP
ReplyDeleteஆன்மிகம், மருத்துவம், புராணம் என்று கலந்து அருமையாக கொடுத்திருக்கிறீர்கள். நன்றி
ReplyDeleteபடங்களும், விளக்கங்களும் அருமை....
ReplyDeleteArputham. Migavum Nanraaga irunthathu.
ReplyDeleteVaazthukkal.
anbu magan,
Prakash
கடவுளோடு காய்கறியைச் சேர்த்தது சுவாரசியம். கத்தரிக்காய் இனிமே சாப்பிடணும் போலிருக்குதே!
ReplyDeleteநடனமாடும் நான்கு கத்திரிக்காய்களுக்கு மேல் இரண்டாவதாகக் காட்டப்பட்டுள்ள படம் படு அமர்க்களமாக உள்ளது. மேலே முதன் முதலாகக் காட்டப்பட்டுள்ளதும் இதே படம் தான் என்றாலும் இது சற்று பெரிய சைஸில் தெளிவாக இருப்பதால் நல்ல ஜகத்ஜோதியாக பிரகாஸிக்கின்றன.
ReplyDeleteசங்கு சக்ரம் மற்றும் அனைத்து ஸ்வாமி+அம்பாள் ஆபரணங்களும் அப்படியே ஜொலிக்கின்றன.
வெகுநேரமாக அதையே அணுஅணுவாக ரஸித்து மகிழ வைத்தது. ;)
செய்முறை வர்ணனைகளுடன் சுடச்சுட தயாராக, கேசரிக்கலவை போல காட்டியிருக்கும் ஹயக்ரீவர் பிரஸாதமும், அதன் மேல் மிதக்க விட்டிருக்கும் [ஒடித்து நெய்யில் பொரித்த] முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் போன்றவைகளுடன் அழகுறக் காட்டியிருப்பது, நாக்கில் நீரை வரவழைக்கிறதே! ;)
ReplyDeleteஞானம் அருளும் அவதாரம்; அஞ்ஞான இருளில் மூழ்கிய உலகை ஞான் ஜோதியால் விளங்கச்செய்த பெருமை ஒளிரும் அவதாரம் ஹயக்ரீவ அவதாரம்.
ReplyDeleteஅழகான மிகச்சிறப்பான விளக்கங்கள்.
பாராட்டுக்கள்.
வாதிராஜர் படமும், அவர் தலையில் வைத்திருக்கும் பிரஸாதத்தட்டில், குதிரை ஒன்று ஏதோ சாப்பிடுவது போன்ற படங்களும் நான் பல இடங்களில் கோயில்களில் பார்த்துள்ளேன். இத்ன் பின்னனியில் உள்ள இவ்வளவு கதைகளும் இன்று உங்களின் இந்தப்பதிவினால் மட்டுமே அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபடத்தில் காட்டப்பட்டுள்ள சாலிக்கிராம அமைப்பு மிகவும் விசித்திரமானதாக உள்ளது.
ReplyDeleteகிடைப்பதற்கு அரியதொரு வகையைச் சேர்ந்ததாக இருக்கும் போலத் தெரிகிறது.
தெய்வாம்சமும் நச்சுத்தன்மையையும், நோயையும் குணப்படுத்தும் ’மட்டிக்குள்ளா கத்தரிக்காய்’ என்பது இப்போது தான் நான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteபலவகையான கத்தரிக்காய்களை, குட்டையும் நெட்டையுமாகவும், குண்டும் ஒல்லியுமாகவும், சைஸ் வாரியாகவும், நிற வாரியாகவும், காட்டி அசத்தியுள்ளீர்கள்!
[இருப்பினும் கத்தரிக்காய்கள் பற்றி நேர் மாறானதொரு கதையை ஒரு பெரியவர் எனக்குக் கூறியிருக்கிறார்.
ஏகாதஸி போன்ற விசேஷ நாட்களில் ஏன் கத்தரிக்காய் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதைப்பற்றிய் கதை அது.
பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அதைப் பற்றிப் பேசுவோம்]
’கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்சது போல’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல 4 கத்திரிக்காய்களை ஆட விட்டுள்ளீர்கள். அவைகளின் ஆட்டம் நல்ல அழகாக உள்ளது. ;)
சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பார்கள்.
ReplyDeleteதிருச்சி BHEL Township "C" Sector இல் அமைந்துள்ள ஸ்ரீ பெருமாள்
கோயிலில் நாளைய தினம் 01.03.2012 ஸ்ரீ ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுவதாக மெயில் தகவல் வந்துள்ளது:
இதோ இங்கே:
==============================
SRI HAYAGRIVA SAHASRANAMA ARCHANAI
TOMORROW: 1/3/2012, THURSDAY
FOR THE BENEFIT OF STUDENTS
A SAHASRA NAMA ARCHANAI FOR SEEKING THE BLESSINGS OF SRI LAKSHMI HAYAGRIVAR,THE GOD OF KNOWLEDGE IS BEING ORGANISED AT 7-30 PM TOMORROW(1/3/2012) THURSDAY EXCLUSIVELY FOR THE BENEFIT OF STUDENTS APPEARING FOR EXAMS.
TAKE PART AND BE BLESSED. PARTICIPATION FEE IS RS.100/- ONLY.
திருவேங்கடமுடையான திருவடிகளே சரணம்.
From:
K Murali
DGM/Public Relations & Administration
BHEL, Tiruchi 620 014
Mobile: 94425 03108
==============================
தாங்களும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும் சமயமாகப் பார்த்து இந்தப்பதிவை வெளியிட்டுள்ளது மிகச் சிறப்பாக பொருத்தமாக அமைந்துள்ளது.
நேற்றைய பதிவை விட இந்தப் பதிவின் படங்கள் நல்ல பளிச் பளீச்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//தெய்வக் கிளிகள் என்று கிளிகளைப் பெருமைப் படுத்தியதில் மணிராஜுக்கும் பெருமைதான்//
ReplyDeleteவலைச்சரத்தில் இன்று 01.03.2012 மீண்டும் ஜொலிப்பதற்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இந்த சீசனில் ஹயக்ரீவர் பற்றி இவ்வளவு தகவல்கள் கொடுத்து அச்த்திவிட்டீர்கள்!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
படங்களுடன் பலவிடயங்களையும் தருகின்றது. நல்ல பகிர்வு.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteகேள்விப்படாத கதைகளுடன் படங்கள்...
ReplyDeleteரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.
ஹயக்ரீவர் பற்றிய விளக்கங்கலூம் படங்களும் அருமை - பல புதிய செய்திகள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா
ReplyDelete31. பலராமானுஜ கோவிந்தா
ReplyDelete2375+9+1=2385
ReplyDelete