குன்றுதோராடும் குமரன் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள புகழிமலை. குன்று உச்சியில் கார்த்திகேயன், பாலசுப்ரமணிய சுவாமியாக அருள்புரிகிறார்.
நானூறு அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில்
விநாயகர் சந்நிதி உள்ளது.
மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில்வாகன சந்நிதி அமைந்துள்ளது.
மயில் மண்டபம்
மலையின் உச்சிக்கு சென்று கார்த்திகேயனை தரிசிக்க 354 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.
கோயில் முன்பிரகாரம்
இதன் அருகில் கிழக்குதிசை நோக்கி 7 கன்னிமார்கள் உள்ளனர். எதிரே பூங்காவும் அமைந்துள்ளது.
இங்கு கடும் தவத்தில் இருக்கும் அகத்தியரின் சிலையைக் காண முடிகிறது. மேலும் 14 படிகள் ஏறியதும், வடதிசை நோக்கி இடும்பன் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு பின்புறம் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் உள்ளன.
இதையடுத்து கிழக்கு திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்திற்குள் நுழைகிறோம். அங்கே பாலசுப்ரமணிய சுவாமி தரிசனம் தருகிறார். ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு நின்ற நிலையில் அருள்புரிகிறார்.
முருகன் தரிசனத்திற்குப் பின் சந்நிதியை விட்டு வெளியே வந்தவுடன், சிவலிங்கம், மீனாட்சி அம்மன் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கிறோம்.
காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள 6 கிராமங்களுக்கு புகழிமலை சொந்தமானது. ஆகையால் இம்மலையை "ஆறுநாட்டான் மலை' என்றும் கூறுகிறார்கள்.
சங்க காலத்தில் சமணர்கள் இம்மலையில் வாழ்ந்து வந்தனர். சமணர்களுக்கு புகழிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகழி மலை என்றும், இந்த ஊர் புகழூர் என்றும் பெயர் பெற்றது என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த மலையில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டுள்ளனர். இதையும் அருணகிரிநாதர் பதிவு செய்துள்ளார்.
வேல் ஊன்றிய இம்மலையை வேலாயுதம்பாளையம் என்று குறிப்பிடுகிறார்.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா ஆகியவை
மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திருமணத் தடை உள்ளவர்கள் குமரனை வழிபடுகின்றனர். அந்தத் தடை நீங்கியவுடன் இங்கேயே திருமணம் செய்கின்றனர்.
புகழி மலை குமரனை வழிபட்டு நாமும் புகழ் பெறுவோம்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
மிகவும் நல்ல பழைய படங்களுடன் எம்பெருமான் முருகனை கண் முன் நிருத்தியமைக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
ReplyDeleteமிகவும் நல்ல பழைய படங்களுடன் எம்பெருமான் முருகனை கண் முன் நிருத்தியமைக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
ReplyDeleteபுகழிமலை குமரனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்
ReplyDeleteகுன்றுதோறாடலில் ஒரு புதிய குன்று அறிமுகம்.நன்று;நன்றி.
ReplyDeleteநேற்று மாங்கனிப் பிள்ளையார்!
ReplyDeleteஇன்று அவர் தம்பி முருகன்!!
’புகழ் தரும் புகழிமலை குமரன்’
பற்றிய செய்திகளால் என் மனம் புளகாங்கிதம் அடைந்தது.
புகழிமலை பற்றி அறிந்திருக்கிறேன்..
ReplyDeleteஅதன் பூரண விளக்கமும்..
அங்கே குடியிருக்கும்
கடம்பனின் தெய்வாதீனங்களையும்
அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல
சகோதரி.
நல்ல தகவல்கள்.இந்த கோவில் வேலாயுதம் பாளையம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.புகழூர் என்ற ஊர் அங்கே இருந்து ஒரு சில கிலோ மீட்டர்களில் அமைந்து இருக்கிறது.நஞ்சை புகழூர் , புஞ்சை புகழூர் என்றும் இருக்கிறது.புகழூரில் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது.வேலாயுதம் பாளையத்தில் தமிழ்நாடு பேப்பர் மில் ஆலை இருக்கிறது.TNPL செல்லு வழியில் இக்கோவில் அமைந்து உள்ளது.கரூரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் இந்த வேலாயுதம் பாளையம் உள்ளது.வேலூரில் இருந்து 6 km தொலைவு தான் இக்கோவில்.
ReplyDeleteநல்ல தகவல்கள்.. கந்தவேளின் புகைப்படங்கள் அற்புதம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
திவ்யமா இருக்கு. நன்றி...
ReplyDeleteபுகழிமலை முருகன் தரிசனதிற்கு மிக்க நன்றி மேடம்.படங்கள் சிறப்பாக இருக்கு.
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள் அம்மா.
அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete17. சிஷ்ட பரிபாலன கோவிந்தா
ReplyDelete2290+2+1=2293
ReplyDeleteகந்தனின் கருணை எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDelete