குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்
அழையா மேயருள் நல்குமே.
-திருஞானசம்பந்தர்..
சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வீர நடனம் புரியும் வேதபுரீஸ்வரரை
வழிபட்டுள்ளனர்.
சிவபெருமான் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளினார்.. தற்போது "திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது.
அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கும்
கார்த்திகையில் சுவாமிக்கும் சங்காபிசேகம் நடைபெறுகிறது.
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.
ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.
ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது.
அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம்.
9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும்.
பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.
ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
மூலவர் வேதபுரீஸ்வரர்
சேயாறு சேயோன் முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் "செய்யாறு' என அழைக்கப்படுகிறது.
ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு சேயாற்றின் கரையில் உள்ளகோயிலின் சுவர்கள் பாழானதால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார்.
பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன.
இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை.
இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், ""எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்ததனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர்.
உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர்.
தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர்.
அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார்.
இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
நந்தி மூலவரை நோக்கி நிற்காது. அதற்கு நேர் மாறாக வாயிலை பார்த்தபடி இருக்கும்.
ஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம்.
அப்போது தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள் நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது.
தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்ல தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,"பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன்,' என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
நாகநாதர்:திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர்.
சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார்.
உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப் பாம்பினை பிடித்து மறைந்தார்.
இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள நாகலிங்கத்தை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும்.
இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது.
தலவிருட்சமாகிய பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் சிறப்பு மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன.அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.
வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.
நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.
சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது.
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
தை மாதம் - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் நடைபெறும் - அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் - வாகனங்கள் வீதி உலா - கடைசி நாளில் ராவணேசுவரன் கயிலாய காட்சி - மிகவும் அதிக அளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம்.
ஆடி மாதம் - லட்ச தீபம் - ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்), நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் -விளக்கு பூஜை - ஆடி தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும்.
தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.
இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.
மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான்.நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம்.. . தற்போது "திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது.
http://jaghamani.blogspot.in/2011/03/blog-post_03.html
அற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதுயில்கொள்ளும் பால சிவன் படம் வீட்டில் இருந்தால் வீட்டில் அமைதி சேரும் என்று கேள்விப்பட்டேன் உண்மையா .அதன் விளக்கம் தேவை
ReplyDeleteReally Great.... Superb....
ReplyDeleteகீழிருந்து நாலாவது படத்திலுள்ள குட்டிப்பிள்ளையார் நல்ல அழகோ அழகு.
ReplyDeleteஇடுப்பு வஸ்திரம் நழுவாமல் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளதே ;))))
மேலிருந்து 14 கீழிருந்து 9
ReplyDeleteகலர்ஃபுல் தனி கோபுரம் அருமை! ;)
தொடர்ந்து ஆறாவது நாளாக சிவனைப்பற்றிய செய்திகள், அதுவும்
ReplyDelete“வேதனை தீர்க்கும் வேதபுரீஸ்வரர்”
என்ற் அழகிய தலைப்பில்!
வேதனை தீர்ந்தது போலவே உணர்கிறோம். மகிழ்ச்சி!
//நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.//
ReplyDeleteஅடடா!
அது என்ன சாதாரண லிங்கமா ?
அற்புதமாக நாகலிங்கம் அல்லவோ!
செய்திகள் வியப்பைத்தருகின்றனவே!
// மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான்.
ReplyDeleteநமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம்.
தற்போது "திருவத்திபுரம்” என அழைக்கப்படுகிறது. //
வேதத்திற்கு அந்த வேதநாயகனான சிவபெருமானே பொருள் கூறிய இடமா? அருமையான தகவல்!
கீழிருந்து மூன்றாவது படத்தில் பாலாபிஷேகம் கண்டேன்.
ReplyDeleteபரவஸம் கொண்டேன்.
சிவராத்திரி சமயம் தந்துள்ள இத்தகைய நல்லதொரு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
சிவபெருமை சொல்லச் சொல்ல விரிகிறதே!
ReplyDeleteஇத்தனை அழகாக கை தேர்ந்த ஓவியர்களின் ஓவியங்கள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது ராஜராஜேஸ்வரி? சிறப்பான பதிவும்கூட!!
ReplyDeleteவேதபுரீஸ்வரர் பற்றிய அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு.படங்கள் மிக அழகு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஒரு தலத்தை அழகுறக் காட்டி அதன் பெருமைகளை விவரிக்கும் தங்கள் பாங்கு நான் கற்றுக் கொள்ள வேண்டியது..
ReplyDeleteவழக்கம்போல், அழகான படங்கள்;தல புராணத்துடன் வேத புரீஸ்வரர்கோவில் பற்றிய அருமையான பகிர்வு.
ReplyDeleteஅற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
தலபுராணங்கள் மிக சிறப்பு. எல்லா கோபுரங்களும் ஒரு சேரத் தரிசிக்கலாம் என்பது அற்புதம் தானே வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteVetha.Elangathilakam.
அன்பின் இராஜராஜேஸ்வரி - செய்யறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய செய்திகளும், படங்களூம், விளக்கங்களும் அருமை. ஆன்மீகத் தொண்டினை அருந்தொண்டாக ஆற்றி வரும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
ReplyDeleteAnpe Sivam.
ReplyDeleteபனைமர தலவிருச்சத்துடன் வேதபுரீஸ்வரர் அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சி.
ReplyDeleteபனைமர புராணத்துக்கு நன்றி.
ReplyDeleteசதி தேவி, தக்ஷன் யாகத்தை இல்லாமல் செய்து தானும் தன்னை அக்னிக்கு இறையாக்கிக்கொண்டாள் என்றே புராணம் கூறி கெட்டிருக்கிறேன். மீண்டும் மலைத்வஜன் மகளாக பார்வதியாக பிறந்து ஈசனை அடைகிறாள் அன்னை.
சிவராத்திரியின் காலப்பகுதியில் சிவனைப்பற்றி அருமையான படங்களுடன் வேதபுரிஸ்வர் சிறப்பை சிரத்தையுடன் சொல்லியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வித்தியாசமான படங்கள் குட்டிப்பிள்ளையார் சிலிக்கின்றது பார்க்கும் போதே.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete23. தசரத நந்தன கோவிந்தா
ReplyDelete2319+7+1=2327
ReplyDelete