சிவராத்திரி அன்று சிந்திக்கத்தக்க சிவபெருமானின் துதிகள்..
ஜகத்திற்கு காரணமானதும், ஜடா பாரத்தில் சந்திரனை உடையதும், கருணை மழையின் ஒரு துளி திவலையாலேயே ஜனனம், மரணம், துக்கத்தை நீக்குவதுமாக ஞான பூமியில் உதித்த ஒரு சந்திரன் ஜெயிக்கட்டும்.
அண்டியவர்களுக்கு உதவுவதையே கங்கணமாக (சபதமாகக் கட்டிக் கொள்ளும் கயிறு) கட்டிக் கொண்டிருப்பவரும்,
நீலோத் பவ வனத்திற்கே ஓர் உன்மத்தத்தைக் கொடுப்பவரும்,அகிலாண்டேஸ்வரியின் தவப் பயனுமான ஒருவர், நம்மை சுகமாக வைத்திருக்கட்டும்.
லக்ஷ்மிதேவியினால் மகிழ்ச்சியுறும் மகாவிஷ்ணுவையே ஓர் அம்பாகக் கொண்டு திரிபுரத்தை அடக்கிய வரும், ஜம்பு (நாவல்) மரத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு பெருங் கருணைப் பேரருவி (பெரிய நீர் வீழ்ச்சி)யுமா னவர், என் எதிரில் வர்ஷிக்கட்டும்.
காட்டுத் தீ போன்ற காமன் என்ற பெரு நெருப்பை அடக்குவதும், இந்திரன் முதலான தேவர்களால் வணங்கப்படுவதும், திருவானைக்காவின் மகா பாக்யமுமாகிய மனமென்கிற மானசரோவரிலுள்ள ஒரு மீன் (ஈசன்) எனது (மன) அழுக்கை நீக்கட்டும்.
மகாவிஷ்ணு மோகினியாக உருவெடுத்தபோது அவரை தன்னுடையவளாக்கி (மனையாளாக) ஆக்கிக் கொண்டவரும்,
ஜம்பு விருட்சத்தின் அருகில் ஆலயம் உடையவரும், நம்மை ரட்சிக்க ஆர்வமுடையவருமான அந்தப் பாசப் பரஞ்சோதி நமைக் காக்கட்டும்.
யமனின் கர்வத்தை அடக்கியவரும், நான்கு வேதங்களையும் தேரின் சக்கரமாக உடையவரும், இந்திராதி தேவர்களால் ஆச்ரயிக்கப்பட்டவரும், நாவல் மரத்தினடியில் தேஜோமயமான ஆபரணமாக ஒளிர்ந்து கொண்டிருப்பவருக்கும் ஆகிய இறைவனுக்கு சரணம்
ஜம்பூ (நாவல்) மரத்தினடியில் இருப்பதும், ஜகதானந்தத்தைத் தருவதும், பிரம்மா முதலான தேவர்களாலேயே வணங்கப்படுவதுமான அந்தக் கருணைக் கடலுக்கு வந்தனம் செய்கிறேன்.
சந்த்ரமௌலியும், நீலகண்டனும், தயாநிதியும், காலகாலனும், ஜம்பூமரத்தினடியிலுள்ள ஜம்புகேஸ்வரரும், சிருஷ்டி (ஜகத்)க்குக் காரண கர்த்தாவுமான ஒருவரை பூஜிக்கிறேன். சகல நன்மைகளையும் அந்த சர்வேஸ்வரன் அருளட்டும்
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, 77 வயதான முத்தம்மாள், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு.வழிபாடு நடத்துவது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாம்...
இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்து இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்து முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடுகிறாராம்...
பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்து 25 பெட்டி நிறைய அப்பம் சுடுவதை பார்த்து ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைகிறார்களாம்..
பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன்வாம்..
கண்ணிமைத்து கருணைக் காட்டும் சிவபெருமானின்
ReplyDeleteஅழகுப் படமும் , தமிழ்த்துதியும் அற்புதம்.
ஓம் நமச் சிவாய !
நல்ல தரிசனம் கிடைச்சுது..
ReplyDeleteசிவபஞ்சாக்ஷரம் போல தொடர்ந்து ஐந்து நாட்களாக ”ஒளிரும் சிவ சிந்தனைகள்” மகிழ்வளிக்கின்றன! ;)))))
ReplyDeleteமுதல் படத்தில் வில்வத்தின் மூவிதழ்களுக்குள்ளும் ஒரு குட்டியூண்டு சிவலிங்கம் அதுவும் பட்டை, ருத்ராக்ஷகொட்டை, பிறை சந்திரன் முதலியவற்றுடன் ஜோர் ஜோர்!
ReplyDeleteஓம் காட்டியருளும் பெரிய சிவனும் நல்ல கம்பீரம் தான்.
திருவானக்காவின் மஹா பாக்யமுமாகிய, மனமென்ற மானசரோவரிலுள்ள ஒரு மீன் [ஈசன்] எனது [மன] அழுக்கை நீக்கட்டும்.
ReplyDeleteமனம் = மானசரோவர்
ஒரு மீன் = ஈசன் [சிவன் of TV Koil]
சபாஷ்! மிக நல்ல உதாரணம் இது.
சின்னக்குழந்தையாய் இருக்கும் போதே காலண்டருக்குப் பின்னால் நகைச்சுவையாக கதை எழுதியவராயிற்றே!
இப்போ பெரிய மிகப்பெரிய ஆளானபின் கேட்கவா வேண்டும்! ;)))))
உங்கள் படங்களும் தமிழ்த்துதியும் வெகு அருமை...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteமுத்தம்மாள் என்கிற மூதாட்டியைப் பற்றி ஏற்கனவே செய்திகள் படித்தேன். அவரையும் நீங்கள் விட்டுவிடாமல் இங்கு கொண்டுவந்து இணைத்துள்ள சாமர்த்தியமே சாமர்த்தியம் தான்.
ReplyDeleteசுலோகங்களை தமிழில் தந்தது அருமை...படங்களும் அருமை!
ReplyDeleteஇரண்டாவது படத்தில் .....
ReplyDeleteநஞ்சுண்ட நீலகண்டன்
பக்த மார்க்கண்டேயன்
அர்தநாரீஸ்வரர்
ஒரு ஞானப் பழத்திற்காக மயிலேறி உலகை மும்முறை சுற்றிவந்த சுப்ரஹ்மண்யர், சுலபமாக பழத்தை வென்ற நம் தொந்திப்பிள்ளையார்
சிவன் தலையிலமர்ந்து சிவனையே ஆட்டிப்படைக்கும் கங்காதேவி என பலகதைகள் உள்ளனவே!
எங்குதான் போய் எப்படித்தான் இவ்வளவு படங்களை சேகரிப்பீர்களோ, எவ்வளவு நேரம் தான் எடுத்துக்கொள்வீர்களோ !
இதில் தினமும் சூர்யன் உதிப்பது போல, தினமும் கட்டாயம் ஒரு பதிவு என்ற Target வேறு!
பொறுமை, ஆவல், ஆர்வம், ஈடுபாடு, தியாகம், கடவுள் நம்பிக்கை, அறிவு, ஆற்றல் and what not?
எல்லா சிறப்பம்சங்களும் ஒருங்கே சேர்ந்தவர் தானே எங்களின் அன்புக்குரிய இந்தப் பதிவர்.
அதுவும் சிவனின் சக்தியின் பெயராகிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அவர்கள்! ;))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மிகப் பணிகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
சிவராத்திரி அன்று சிவ தரிசனம் செய்யமுடிந்தது, நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் சிவ சிந்தனைகள் அருமை.
ReplyDeleteமுத்தம்மாள் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.
"த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருகமிவ ப்ந்தனாத் மருத்யோர்--முஷீட்டியமாம்ருதாத்"
ReplyDelete[வெள்ளரிப்பழம் அதன் செடியில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது போன்று உலகபந்தங்களில் மிகுந்த ஈடுபாடின்றி இருக்கவும்]
1.திருவாரூரில் பிறந்தால் முக்தி..... ஓம் நமச்சிவாய எனும் பஞ்சாட்சரத்தை கூற முக்தி
ReplyDeleteகண்சிமிட்டும் சிவன் தத்துரூபம் [காபி எடுத்துவிட்டேன்]
ReplyDeleteநல்ல தரிசனம்.
ReplyDeleteசிவராத்திரி சிறப்புப் பதிவு
ReplyDeleteதிரு உருவப் படங்களுடன்
மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
சிறப்பான சிவ தரிசனம்.. ஓம் நம சிவாய...
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
நன்றி.
ReplyDeleteஎங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரும் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
தேவாங்கர் என்று ஒரு வகுப்பினர் 'சவுண்டியம்மன்" அல்லது இராமலிங்க சௌடேஸ்வரி இவர்களது குலதெய்வம் என்று சொல்கிறார்கள். இந்த இன மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ஈரோடு போன்ற ஊர்களில் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தெலுங்கு, கன்னடம் பேசுகிறார்கள். நீங்கள் தீர விசாரித்து ஒரு பதிவு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.
படங்களுடன் தகவல்கள் அருமை.
ReplyDeleteஅன்பின் இராஜராஜேஸ்வரி - அழகிய படங்கள் - அருமையான விளக்கம் - சிறந்த சிந்தனை - ஈடுபாடு - நாளுக்கொரு பதிவு - பாராட்டுவதற்குச் சொற்களே இல்லை. உழைப்பின் பெருமை - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஸ்ரீவில்லிப்புத்தூர் முத்தம்மாள்...என்னே ஒரு நம்பிக்கை ! பக்தி!
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete22. கோவர்த்த நோத்தார கோவிந்தா
ReplyDelete2312+6+1=2319
ReplyDelete