Monday, February 27, 2012

குருவருளும் திருவருளும் கூடி அருளும்..





"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாமத் ததுல்யம் ராம நாம வராணனே

என்று மூன்று முறை ராம நாமத்தை மனதாரச் சொன்னால், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தையே பாராயணம் செய்த பலன் கிடைக்கும்' என்று பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறியுள்ளார். 

அதனால் ஏதோ முடியாத காரணத்தால் விஷ்ணு சஹஸ்ர நாமம் முழுவதும் சொல்ல முடியவில்லையே என்பதற்கு ஒரு மாற்றாக ராம நாம ஜபம் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. 

 "நாராயண' நாமத்திலிருந்து "ரா'வும் "நமசிவாய' நாமத்திலிருந்து "ம'வும் சேர்ந்து அமைந்ததே "ராம' என்னும் திருநாமம். இப்படி எழுத்துகள் சேர்ந்து ராம நாமம் அமைந்ததுபோல், சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில், ஜி.எஸ்.டி. சாலையில் ஸ்ரீராமாஞ்சனேயர் திருக்கோவிலும் ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோவிலும் அமைந்துள்ளது.. 

 ஸ்ரீராமாஞ்ச னேயர் டிரஸ்ட் அமைப்பு பல சமுதாயப் பணிகளையும் ஆன்மிக சேவைகளையும் அருமையாகச் செய்து வருகிறது.

சென்னை நுழைவு பாகத்தில் அமைந்து பஸ்ஸிலும் காரிலும் பல வாகனங்களிலும் செல்பவர்கள் இவ்விடத்தை நெருங்கும்போதே திருக்கோவில்களின் கோபுரத் தைத் தரிசித்தே செல்கின்றனர். 
சிவன் கோவிலும் விஷ்ணு கோவிலும் அருகருகே அமைந்து பல் விசேஷங்களைத் தன்னகத்தே கொண்ட திருக்கோவில் ...

ஆழ்வார்களில் பூதத்தாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் போற்றிப் பாடிய திவ்ய தேசமான திருநீர்மலைக்குத் தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை என்ற மலையடிவாரத்தில் இத்திருக்கோவில்கள் அமைந்துள்ளன. 

இராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கை நோக்கி எடுத்துச் செல்கையில் இங்குள்ள பச்சை மலையைக் கடந்து சென்றதாக ஐதீகம். அதனால் இன்றும் இம்மலையிலிருந்து வீசும் காற்றாலும் கிடைக்கும் பச்சிலைகளாலும் பலரின் தீராநோய்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

அதனால்தான் இக்கோவிலின் அருகிலேயே காசநோய் மருத்துவமனையை அரசு நடத்தி வருவதும், அதன்மூலம் பலர் நன்மை பெறுவதையும் அறிய முடிகிறது. 

 இங்கு முதன் முதலில் கோவில் கொண்டவரும் ஆஞ்சனேயர் தான். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.  பரமாச்சாரியார் ஆக்ஞைப்படி அமைக்கப்பட்டதால், இத்திருக்கோவிலில் ஆஞ்சனேயருக்காக ராமபிரான் எழுந்தருளியுள்ளார். 
நோய் தீர்க்கும் இடமாக ஆலயம் அமைந்திருந்ததால் வைத்யநாத சுவாமியும் இங்கு கோவில் கொண்டு விட்டார். அடியார்களின் தீரா நோய்களைத் தீர்க்க வைத்தியநாத சுவாமியும் பிறவிப் பிணி தீர்க்க ராமபிரானும் ஒருங்கே அமைய, குருவருளும் திருவருளும் கூடி அருள்கிறது..

வரம் தருவதில் வல்லவரான ஆஞ்சனேயர் சந்நிதியில் மட்டைத் தேங்காய் கட்டிப் பிரார்த்தனை செய்துகொண்டால் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருகிறார்..
லக்ஷ்மி கடாட்சம் அருளும் மஹாலக்ஷ்மி சந்நிதியும், சகல காரிய சித்திக்காக சுதர்சன நரசிம்மருக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன..
"மனத்துக்கினியானை' என்று ராமரைப் பாடிய 
ஆண்டாளுக்கும் தனிச் சந்நிதி உள்ளது. 

புனர்வஸு நட்சத் திரத்தில் ராமனுக்கும், மூல நட்சத்திரத்தில் அனுமனுக்கும், உத்திர நட்சத்திரம், வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கும், சித்திரை, ஸ்வாதி நட்சத்திரத்தில் சுதர்ஸன நரசிம்ம மூர்த்திக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. 

நித்தமும் யாராவது ஒரு பக்தர் மூலம் நித்ய உற்சவம் நடந்து வருகிறது. ஸ்ரீராம நவமி, அனுமத் ஜெயந்தி உற்சவங்கள் மிக விமரிசையாய் நடந்து வருகிறது.

 ஸ்ரீவைத்யநாத சுவாமியைத் தரிசிப்பவர்களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படுவது போன்றே மருந்து பிரசாதம் அளிப்பதால், அதையுண்டு நோய்கள் தீரப் பெற்றவர்கள் பலர். வைத்தீஸ்வரன் கோவிலுக்கே சென்று வந்த நிறைவு பெறுகிறார்கள்..
வைத்யநாத சுவாமி சந்நிதியில் சசிமங்கள கணபதி, வள்ளி தேவசேனாவுடன் முருகன், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நடராஜர் சந்நிதிகளுடன் நவகிரகங்களும் அருள் பாலிக்கிறார்கள்.

இந்த சந்நிதியில் அங்காரகனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சென்னையில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது..

அனுமத் ஜெயந்தியன்று அகண்ட நாம ஸங்கீர்த்தனம் நடக்கும். தியாகராஜ கீர்த்தனைகள் பாடப் பெறும். மட்டைத் தேங்காய் கட்டும் பிரார்த்தனைகளும், வடை மாலைகள் சமர்பிக்கப்படுவதும் அன்பர்களால் நடைபெறும்.




23 comments:

  1. அருமை,அருமை,அருமை. ராம, லட்சுமண, சீதா, அனுமன் சமேத படம் காலம் காலமாக புகழ் பெற்றது. பார்த்தாலே ராமாயணம் படித்த புண்ணியம் வந்து சேரும்.

    ReplyDelete
  2. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

    ReplyDelete
  3. கடைசிபடத்தில் காட்டப்பட்டுள்ள, சிவனை பூஜிக்கும் ஸ்ரீராமரும், கீழிருந்து ஆறாவது படத்தில் உள்ள தொந்திப் பிள்ளையாரும், இன்று என்னை மிகவும் கவர்ந்த படங்கள். ;)

    ReplyDelete
  4. ”குருவருளும், திருவருளும் கூடி அருளும்...” அழகானதோர் பதிவு தந்துள்ளது மிகமகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  5. சென்னை தாம்பரத்தில் அருகருகே அமைந்துள்ள சிவா + விஷ்ணு கோயில்கள் பற்றியும், அங்குள்ள பல்வேறு சந்நதிகள் பற்றியும், அவற்றின் நோய் தீர்க்கும் மகத்தான மருத்துவ சக்திகள் பற்றியும் வெகு அழகாக விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளது, படிக்கும்போதே மனதிற்கு இதமளிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  6. சுக்லாம்பரத்ரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்!
    ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ-விக்நோப சாந்தயே!!

    =====

    வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸூதேவோ பிரக்ஷது!
    ஸ்ரீ வாஸுதேவோ பிரக்ஷது ஓம் நம இதி:

    [3 முறை சொல்ல வேண்டியது]

    ======

    ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே!!

    ஸ்ரீ ராம நாம வராநந ஓம் நம் இதி.

    [3 முறை சொல்ல வேண்டியது]

    =====

    ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா: கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமாநா:

    ஸங்கீர்த்ய ”நாராயண, நாராயண, நாராயண, நாராயண, நாராயண”*** சப்த மாத்ரம்

    விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்து.

    [3 முறை சொல்ல வேண்டியது]

    {*** இந்த இடத்தில் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண என ஐந்து முறை உச்சரிக்கும்படி ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் ஒரு சமயம் ஒரு பக்தரிடம் கூறியுள்ளார்கள், எனக் கேள்விப்பட்டதிலிருந்து நானும் அந்த இடத்தில் 5 முறைகள் சொல்வது வழக்கம்.}

    ========

    வெகு அழகான பதிவு.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. வழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பதிவும் படங்களும் தெய்வீக மயமாக இருக்கிறது... பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  9. Aha!
    Very nice post and pictures and information to all too.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  10. அருமையான விளக்கத்துடன் ராம,ஆஞ்சநேய படங்களும் ராமனுடன் சீதை இலக்குமணனனை வீர அஞ்சநேயர் பணிந்து தொழும் படமும் மனம்கவர்ந்தது.

    ReplyDelete
  11. ராமனுக்கு சகஸ்ரா நாமம் சொல்வது சாலச் சிறந்தது அந்த நாமத்தைப் பகிர்ந்த பதிவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. ஆஞ்சநேயர் துதி எப்போதும் மனதிற்கு இதமானது அவரின் அழகிய படங்கள் பத்திமணம் கமழ்கின்றது.

    ReplyDelete
  13. அருமையான தகவல்கள் +படங்கள் மனம் கவர்கின்றன.
    பக்தி மணம் பரப்புகின்றன .

    ReplyDelete
  14. அருமையான படங்கள். புதுப்புது தகவல்கள்.

    ReplyDelete
  15. மிகவும் அருமை.ராம ஆஞ்சனேயர் பற்றிய அரிய தகவல்கள், படங்கள்.சிறப்பான பதிவு,மேடம்.

    ReplyDelete
  16. மந்திரங்களுடன் நீங்கள் சொல்லும் தலப்புராணம் அதுவும் ஸ்ரீராமன் படத்துடன் மிகவும் அருமை.

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
    நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
    நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
    http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete
  19. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. குருவருளும் திருவருளும் கூடி அருளும் பதிவு - நன்று நன்று - படங்களும் விளக்கங்களும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. 29. வராஹ நரசிம்ஹ கோவிந்தா

    ReplyDelete