ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில்,
"தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம்'' என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.தண்ணீர் தினத்துக்கான நோக்கம்,
‘ஆரோக்கியமான உலகத்துக்கு தூய்மையான தண்ணீர்’ என ஐநா அறிவித்துள்ளது.“தண்ணிர் சிக்கனமே தன்னலமற்ற சேவை
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி..
கோவிலைச் சொல்லும் போது குளத்தையும் சேர்த்தே சொலவது நமது பண்பாடு..
நமது மரபுப்படி பெரும்பாலான கோவில்களில் குளம் வைத்திருக்கிறோம்...
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்...
ஆற்றங்கரைகளே மனித நாகரிகத்தின் தொட்டில்கள்....
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்றெல்லாம் ஆயிரம் பழமொழி சொல்லியும், நதிகளுக்கு காவிரி, வைகை, கங்கா மாதா , யமுனா , பவானி என்று தெய்வங்களின் பெயரையும் , பெண்களின் பெயரையும் சூட்டியும் பெருமைப்படுத்துவோம்..
ஆடிப்பெருக்கு அன்று தாய்மை நிலையில் நதி இருப்பதாக பூரித்து சித்ரான்னங்கள் படைத்து ஆரத்தி எடுப்போம்...
கங்கைக்கரையில் அருமையாக அடுக்கு ஆரத்தி எடுத்து அருமையாய் வணங்கத்தான் செய்கிறோம்..
இந்தமாதிரி எந்தச்சடங்கும் செய்யமலே மற்ற நாட்டு
நீர்நிலைகள் தூய்மை காக்கப்படுகின்றன..
மாசுபடுத்துவதிலும் நம்மை மிஞ்ச முடியுமா என்ன ??
திருச்சி மலைக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் தெப்பக்குளம்
பார்த்து வேதனைதான் மிஞ்சும்..
பார்த்து வேதனைதான் மிஞ்சும்..
ஹாங்காங் துறைமுகப்பகுதியை ஒட்டி எத்தனையோ அடுக்கு மாடி கட்டிடங்களும், குடியிருப்புகளும், ஹோட்டல்களும் இருந்தும் தண்ணீரின் தூய்மையைப் பார்த்து வியந்து போய் விசாரித்தேன் காரணத்தை...குப்பை போட்டால் அபராதம் என்று ஒரு பெருந்தொகை குறிப்பிட்டிருந்தார்கள்.. பாரபட்சம் பாராமல் அமல்செய்கிறார்கள்..
அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள் ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.
தண்ணீர் வெட்டு”.
“குடி நீர் கிடைக்காமையால் மக்கள் பெரும் கஷ்டம்” என்ற செய்திகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன
எதிர்காலத்தில் மூன்றாம் உலக யுத்தம் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது வல்லுனர்களின் கருத்து.
மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப் பு.. அருட்கொடையான மழை நீரைச் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர்வளத்தை பெருக்க இயலும்.
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மழை தான் உலகத்திற்கு அமிழ்தமென்று உணரும் பான்மையையுடைத்தது..
"வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிர்தம் என்றுரைற் பாற்று"
"அமிழ்தம் உண்டோர் இவ்வுலகில் சாகாவரம் பெற்று நிலையாக வாழ்வது போல, உலக உயிர்களை வாழ வைக்கும் மழை நீரும் அமிழ்தெனப் போற்றப்படுகிறது.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூவும் மழை -
என்னும் குறளில் "உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவிப்பதற்குக் காரணமாக இருக்கும் மழை உணவாகவும் பயன்படுகிறது. உயிர் வாழும் மனிதர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, உணவுப் பொருட்களை விளைவிப்பதற்குக் காரணமாக இருக்கும். பயிர்களுக்கு நீர் உணவாக அமைகிறது என்கிறார் வள்ளுவர்..
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது"
நீரில்லாமல் உடல் இல்லை. மனமும் இருக்காது ஒரு பொழுதேனும் உயிர் வாழ்தல் முடியாது ..நீரே உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது என்று குரு நானக் உணர்த்துகிறார்.குருகிரந்தம் நீரை இறைவனாகக் காண்கிறது.
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால்
அந்த நாட்டில் பருவமழை பெய்யாமல் போகும்.
அந்த நாட்டில் பருவமழை பெய்யாமல் போகும்.
எங்கே ஏழைகள் பேணிப் பாதுகாக்கப் படுகிறார்களோ
அங்கு இறை அருள் எனும் மழை தவறாமல் பொழிகிறது
அமிர்தத் துளிகளான மழை நீரை வீணாக்காமல் சேகரித்தாலே
தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்.
தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்.
வேண்டாம் என்று மிச்சமிருக்கும் எச்சலிலைத் துப்புவது போல வெள்ள அபாயத்தைத் தடுக்கவே அண்டை மாநிலங்கள் தண்ணீர் திறந்து விடுகின்றன..
விவசாயத்திற்கு ஏற்ற காலத்தில் தந்து விவசாயியின் கண்ணீரைத் துடைப்பதில்லை..அப்படி திறந்திருந்தால் வெள்ள அபாயமே ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை..
விவசாயத்திற்கு ஏற்ற காலத்தில் தந்து விவசாயியின் கண்ணீரைத் துடைப்பதில்லை..அப்படி திறந்திருந்தால் வெள்ள அபாயமே ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை..
கடவுளின் தேசம் என்று கூறிக்கொள்ளும் மாநிலம் கழிவுப்பொருள்களை தமிழக நீர்நிலைகளில்தான் கொட்டுகின்றது..
கட்டட இடிபாடுகள், மருத்துவக் கழிவுகள் எல்லாம் குடி நீர் ஆதாரமான நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன.
ஆகாயத்தாமரைகள் செழித்து வளர்ந்து நீர் ஆதாரங்களை மாயமாக்குகிறது..
லண்டன் மாநகர தேம்ஸ் நதி மாதிரி போக்குவரத்திற்கும் பயன்பட்டு கரை ஓரம் சிறப்பான கோவில்களைக் கொண்டு ஆரோக்கியமாக குடிநீராகவும், புனிதமான தீர்த்தமாகவும் விளங்கிய சென்னையின் கூவம் என்கிற புனித நதியை சாக்கடையாக்கியது யாருடைய சாதனை???.
ஊட்டி ஏரியில் படகுச்சவாரி என்று சந்தோஷப்படமுடியுமா!
அது கழிவு நீர் நிரம்பிய அருவருப்பான இடமாகத்தான் பார்க்கமுடிகிறது...
உலகிலேயே அதிக மழை பொழியும் சிரபுஞ்சியில் சரியான மழைநீர் சேகரிப்புத் திட்டமின்மையால் அங்கே நீர்த்தட்டுப்பாடு..உண்டு.
குறைந்த மழைப் பொழிவே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பான .மழைநீர் சேகரிப்புத் திட்டமிருப்பதால் அவ்வளவாக தட்டுப்பாடில்லை.
எங்கும் பசுமையைக் காணமுடிகிறது..
நீர்வளமேலாண்மை மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும்..
பழங்காலக்கோவில்கள் பலவற்றில் இக்கால பொறியியல் நிபுணர்களால் கூட கண்டுபிடிக்கமுடியாத நுணுக்கங்களுடன் மழை நீர் வெளியேறி கோவில் குளங்களுக்குச் செல்லும் வண்ண்ம் அமைத்திருக்கும் பாங்கு வியத்தற்குரியது..
தமிழ் மன்னன் கரிகாலனின் கல்லணை இன்றும் காலத்தை வென்று நம் சாதனையை சொல்லுமே உலகுக்கு.!.
கடல் நீரை குடிநீராக மாற்ற வெளிநாட்டுத் தொழில் நுட்பம் அறிந்து வர அதிகப்பொருட் செலவில் வெளிநாட்டு உல்லாசச் சுற்றுப்பயணம் செய்து விரயமாக்குவதை விட்டு அந்த நதிநீர் கடலில் சேரும்முன்பே சேகரித்துப் பயன்படுத்த முடியுமே !
மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல் படுத்தினால் சும்மா காட்சிப்படுத்திவிட்டு சாக்கடையில் கலக்கவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருத்தப்பட்டார்கள்..
அவற்றை முழுமையாக செயல் படுத்தியிருந்தாலே பயன் கிடைத்திருக்கும்..
சாலைகள் அமைக்கும் போது மழை நீர் வடிகால்கள் மழைநீர் சேகரிப்புகள் முறையாக அமைக்காமல் இன்னும் கற்காலம் போல எந்த நுணுக்கமும் திட்டமிடுதலும் இல்லாமல் பணவிரயத்திற்காகவும் ,நேர விரயத்திற்காகவுமே சாலைகள் அமைக்கும் பாங்கு வேறு எந்த நாட்டிலும் காணக்கிடைக்காத சோகம்..
அக்காலங்களில் சாதாரண தவறுகளுக்கு சாலை ஓரங்களில் மரம் நட்டு குறிப்பிட்ட காலங்கள் பராமரிக்கவேண்டும் என்று தண்டனை அளிக்கப்பட்டது..
சாலைகளின் விரிவாக்கத்திற்கு வெட்டப்படும் மரங்கள் மீண்டும் நடப்பட்டாலே மழை பெற முடியும்.. மரங்களே பூமியின் நுரையீரல்களாகச் செயல்படுகின்றன..
நுரையீரல்களையும், சிறு நீரகங்களையும் இழந்த பூமிப்பந்தினை எப்படிக்காப்பாற்றமுடியும் ??
குளிர் பதன சாதனங்கள் வெளியிடும் குளோரா புளோரா கார்பன்கள் விளைவாக ஓசோன் ஓட்டைகளும் , பனிமைலைகள் அளவற்ற வெப்பத்தினால் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து நிலபரப்பைக் கபளீகாரம் செய்வதும் தொடரத்தான் செய்கின்றன..
அதற்கு கடற்கரை ஓரம் அந்தந்த இடங்களுக்கு ஏற்ற சுரபுன்னைக்காடுகள் போன்ற இயற்கைத் தாவரங்களையும் கடற்கரை ஓரம் அலைகளைச் சம்ன்படுத்தும் நண்டு போன்ற் உயிரினங்களை அழிக்காமல் வளர்த்தும், பவளப் பாறைகள் ,கடல் வாழ் தாவரங்கள் ஆகியவற்றை முழுவதுமாக வெட்டி எடுக்காமல் வள்ர நடவடிக்கை எடுப்பதும், வைரம் , மார்பிள் கற்கள் போன்ற கனிமங்களுக்கு சுரங்கங்கள் வெட்ட வெட்ட அவை பூமித் தட்டுகளின் இடையே உறுதித் தன்மையை பாதித்து நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவுகளுக்கு வழி வகுக்கும் என்பதை அறிந்து கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும்..
ரக்த சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்கள் இயற்கைச் சீற்றத்தை குறைக்கும் அதிர்வுகள் கொண்டவை என்பது விஞ்ஞான உண்மை..
ஆகவே இந்த மரங்களை வாய்ப்புள்ள இடங்களில் அதிகம வளர்த்து இயற்கைச் சீற்றங்களைக் கட்டுப்படுத்தலாம்..
இயற்கையான அருமையான எளிய வாழ்வைத் தொலைத்ததற்கு நாம் கொடுக்கும் விலை கண்டறியமுடியாத நோய்களே!
மற்ற நாடுகளிலும் சிறு குற்றங்களுக்குத் தண்டனையாக சாலைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் அளிக்கப்படுகின்றன.. சிறைச்சாலைகளில் அமரவைத்து உபசாரம் செய்யப்படுவதில்லை ...
ஹோட்டல்களில் தங்குபவர்கள் மின்சாதனங்களையும், தண்ணீரையும் மிகவும் விரயமாகுவது வழக்கம்.. ஏனென்றால் எத்தனை உபயோகித்தாலும் அதே கட்டணம்தானே ! பொறுப்பு உணர்ந்து விரயம் தவிர்க்கலாம்..
இங்கிலாந்தில் கார்களை கழுவினால் ரூ.80ஆயிரம் அபராதம்
வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் பிரிட்டன் முழுவதும் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக வீடுகளில் ஹோஸ் பைப் பயன்படுத்தி தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றவும், வாகனங்கள் கழுவவும் தடை விதிக்கப்படுகிறது. --
இம்மாதிரி எந்த தடையும் நம் நாட்டில் கொண்டுவர முடியாது..
குளங்களை ஆக்ரமித்து , குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகளையும் அடைத்து குடிசைகள் போட்டும், வீடுகள் கட்டியும் குடியிருப்பவர்களுக்கு அபராதம் போட்டு அகற்றாமல் அவர்களுக்கு உதவிப்பணம் கொடுப்பதால் இன்னும் நிறைய பேர் குளங்களில் குடியிருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்..
நீதி மன்றமும் , அரசு அலுவலகங்களும் குளத்தையே ஆக்ரமித்துத்தான் கட்டப்பட்டதாகவே இருக்கும்..
வருங்காலத் தலைமுறைகளை தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம் என்று பொறுப்பில்லாத முறையில் விட்டுச்செல்லாமல்
தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்று சிந்திப்போம்.. செயல்படுவோம்..
விரிந்து பரந்த... இந்த பூமிப்பதில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீரே உள்ளது. மீதம் உள்ள 2.5 சதவீதம்தான், நிலப்பரப்பில் நல்ல நீராக இருக்கிறது. ஆனால், இதிலும் 2.24 சதவீதம் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்களும் மாண்டுபோகும் நிலைதான் ஏற்படும்.
எஞ்சியுள்ள 0.26 சதவீத நீரைத்தான் குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
ஆனால், இது எப்படி பெருகி வரும் மக்கள் தொகையின்
தேவைகளை பூர்த்தி செய்யும்.
இந்த உண்மையை அறிந்த ஐ.நா. சபை கடந்த 1992 ம் ஆண்டு
சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது.
கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22 ந் தேதி உலக தண்ணீர் தினம்' சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
சிறு நதிகளே நதி தொடும் கரைகளே
நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே,
தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்..
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தேன்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால்
பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும்
மயில்தோகை அழைத்தால் மழைமேகம் இறங்கும்..
மிக மிக அருமையான பதிவு. ஒன்றை கூட விட்டுவிடாமல் நீர்வள குறைப்பாட்டுக்கு காரணம், அது கலையபட என்ன செய்யவேண்டும் என்ற தகவல் முதல் கொண்டு அருமையாக அழகிய படங்களுடன் மிக சிறப்பாய் தந்து விட்டீர்கள்.
ReplyDeleteநானும் போன உலக் தண்ணீர் தினத்திற்கு ’ தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன்.
அருமையான பாடல் பகிர்வு.
நம் தேசத்தை தண்ணீர் இல்லாத கண்ணீர் தேசம் ஆக விடாமல் காக்க எல்லோரும் சேர்ந்து தண்ணீரை சேமிப்போம்.
அது நம் கடமை.
நன்றி நன்றி.
தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தினை ஒரு விழிப்புணர்வோடு மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.....
ReplyDeleteநல்ல பகிர்வு...
மிக மிக அருமையான கட்டுரை. ஒரு வரி விடாமல் படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநதி நீர் போன்றே ஆழம், அகலம், நீளம் நிறைந்த நிறைவான கட்டுரை.
தண்ணீரைப்போலவே இந்தக் கட்டுரையையும் அனைவரும் தங்கள் மனதில் சேமித்துக்காக்க வேண்டிய பொக்கிஷமான கட்டுரை.
திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக நன்றாகவே தூய்மையாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது.
ReplyDeleteமக்கள் இறங்கி துணிதுவைப்பது குளிப்பது போன்ற அனைத்துக்கும் பயன்படுத்தி வந்த கிழக்குப்பார்த்த படித்துறையை நிரந்தரமாகவே மூடிவிட்டார்கள்.
தெற்கு நோக்கி உள்ள ஒரே படித்துறையிலும் இப்போது யாரையும் குளிக்கவோ மற்ற உபயோகங்களுக்கு இறங்கவோ அனுமதிப்பதில்லை.
நாலாபுறமும் நல்ல உயரமாக கம்பி வலைகள் அமைத்து விட்டார்கள். எனவே முன்பு போல வியாபாரிகளோ பொதுமக்களோ அதில் குப்பைகளை வீச முடியாமல் செய்து விட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழாவுக்காக குளத்தை சுத்தப்படுத்தி விடுகின்றனர்.
தெற்கு பார்த்த ஒரே படித்துறையில் தினமும் மாலை 6.30 க்கு, ஆதரவற்ற ஏழைகளுக்கு, வடலூர் வள்ளலார் நற்பணி மன்றத்தினரால், இலவச உணவுகள் அளிக்கப்படுகின்றன.
அதில் மீதியிருக்கும் மிஞ்சும் உணவுகள் மட்டும், தெப்பக்குள மீன்களுக்கு, ஆகாரமாகப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி இன்று திருச்சி தெப்பக்குளம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவுமே பயன் படுத்தப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தண்ணீர் தினத்தில் அருமையான விழிப்புணர்வுப் பதிவு..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
நீர்வளம் பற்றிய அருமையான கட்டுரை.
ReplyDeleteஎல்லோரும் படிக்கிறோம், பேசுகிறோம்.
நீர்,உணவுப்பொருள்,மின்சாரம்,இயற்கைவளம்... போன்றவைகளை எவ்வாறு பாதுகாப்பது, சேமிப்பது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதில் தான் தயக்கம் காட்டுகிறோம்.
தண்ணீர் சிக்கனம் மிகவும் தேவையான ஒரு விஷயம் தான் அதுபற்றிய தெளிவான பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு ராஜராஜேஸ்வரி ..வாழ்த்துக்கள்..
ReplyDeleteஆகா எத்துனை அழகாக, ஆக்கப்பூர்வமாக, படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி.
அவசியமான பகிர்வு.
ReplyDeleteஇந்தப் பதிவில் உங்கள் கோபம் சற்று தூக்கலாகத் தெரிய வருகிறது. நீருக்காக நடையாய் நடந்து அல்லல்படுபவர் மத்தியில் அதை வீணாக்கினால் கோபம் வருவது இயற்கையே.
ReplyDeleteதாகம் தீர்ந்தது !
ReplyDeleteமிக அத்தியாவசியமான தகவல் பகிர்வு.எப்பொழுதுமே தங்களிடமிருந்து நிறைய தகவல்கள் அறிந்து கொள்வேன்.
ReplyDeleteசில நாட்களாக பின்னூட்டம் அளிக்க இயலவில்லை.இனி படிப்பதுடன் அதையும் தொடர்வேன்.
படங்களும் தண்ணீர் சார்ந்த குறிப்புக்களும் அருமை.மயில் படம் கொள்ளை அழகு.கடைசியில் நதியையும் பெண்ணையும் ஒப்பிடும் பாட்டையும் சேர்த்து அசத்திவிட்டீர்கள்.எப்போதும் போல பதிவுக்கான தொகுப்புக்களை பிரமித்தபடியே போகிறேன் !
ReplyDeleteதண்ணீர் பற்றி நன்கு சொன்னீர் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மிக அருமை வாழுதுகள்.
ReplyDeleteசேகரித்துத் தந்திருக்கும் தகவல்களும் படங்களும் மிக நன்று.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
56. ப்ரஸன்ன மூர்த்தி கோவிந்தா
ReplyDelete2550+3+1=2554
ReplyDeleteஅருமையான கட்டுரை.இன்றைய தலைமுறையினர் உணரவேண்டிய உண்மை
ReplyDeleteவீ.சுந்தர்,திருமங்கலம்.மதுரை