Monday, March 19, 2012

ஜோதியாய் ஜொலிக்கும் ஜோதிர்லிங்கங்கள்




 
பொங்கி வரும் கங்கையையும், 
சந்திர மண்டலத்தையும் தலையிலேயே வைத்திருப்பவரும், 
மூன்று கண்களை உடையவரும், 
மன்மதனையும், காலனையும் அழித்தவரும்,
எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருமான 
ஸ்ரீ வைத்யநாதன் என்கின்ற சிவபெருமானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

“சிவசக்தி ஸ்வரூபன்

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை கொண்ட துவாதஷ 
ஜ்யோதிர் லிங்க சமஸ்தானா என்கிற அருமையான ஆலயத்தை பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்க ஆலயங்களின் அதே மாதிரியான சிவ லிங்கங்களை தனித்தனி சன்னதி அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.

கர்நாடக மாநிலம் சிறப்பான ஆலயங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.. 
அனைவராலும் பல பகுதிகளிலும் அமைந்துள்ள ஜ்யோதிர் லிங்கங்களை 

 அந்தந்த ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய இயலாது என்பதனால் ஒரே இடத்தில் அந்த பன்னிரண்டு சிவ லிங்கங்களையும் விதிப்படி பிரதிஷ்டை செய்து வைத்தால் இந்த இடத்தில் வந்து அவற்றை ஆராதிப்பதின் மூலம் அந்த பன்னிரண்டு ஜியோதிர் லிங்க ஆலயங்களில் சென்று தரிசித்து வணங்கிய பலனைப் பெற முடியும் என்பதற்காக

சமீபத்தில் எழுப்பப்பட்ட மனம் கவர்ந்த ஆலயம்.  
நடுவில் ஓம்காரேஸ்வரர் ஆலய சிவ லிங்கம் சுமார் ஆறு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 
அந்த லிங்கத்தை சுற்றி சன்னதிகள் அமைத்து அவற்றில் மற்ற பதினோரு சிவ லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.  
இந்த ஆலயம் உத்ரஹள்ளி - கென்கேரிக்குச் செல்லும் பாதையில் ஒரு மலைப் போன்ற பகுதியில் எழிலாக இயற்கைச்சூழலில் அமைந்திருக்கிறது. 

மலை மீது சிவன் ஆலயம் உள்ளதே விசேஷம் என்று கூறுவார்கள். ஆகவே மலை போன்ற குன்றில் அமைந்து உள்ள இந்த ஆலயம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் ..

இந்த ஆலய நிர்மாணப் பணியை 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ சிவபுரி ஸ்வாமிகள் துவக்கி வைத்ததாகவும்,  அவருடைய வாரிசாக உருவான ஸ்ரீ மதுசூதானந்த பூரி ஸ்வாமிகள் பணியைத் தொடர்ந்து செய்து 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடித்து வைத்துள்ளார்.  

பன்னிரண்டு ஜோதிர் லிங்க சன்னதிகள் அமைந்து விட்டாலும், ஆலயப் பணிகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுள்ளன...

இந்த சன்னதிகளில் உள்ள சிவ லிங்கங்ள் மிகவும் விசேஷம் கொண்டவை என்பதை உணர்வால் உணரமுடிகிறது..

நர்மதை நதிக் கரையில் இருந்து எடுத்து வந்த பாண லிங்க கற்களில் ஒரு அங்குல நீளத்தில் சிறு சிவ லிங்கங்கள் செய்யப்பட்டு அவை ஒவ்வொரு சன்னதியின் கீழும் உள்ள சிவ லிங்கங்களின் அடியில் புதைக்கப்பட்டு  உள்ளன. 

அப்படி செய்யப்பட்ட 1000  ஒரு அங்குல நீள நர்மதேஸ்வர சிவலிங்கங்கள் மந்திர உச்சாடனைகள் செய்து பீடத்தின் கீழே ஸ்தாபிக்கப்பட்டு அதன் மீதே அந்தந்த ஆலயத்தின் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.  

இப்படியாக பதினோரு சிவ லிங்க சன்னதிகளில் 11,000 சிவலிங்கங்கள் அஸ்திவாரமாக இருக்க ஒம்காரீஸ்வரர் சிவ லிங்கத்தின் அடியிலோ 2000 ஒரு அங்குல சிவ லிங்கங்கள் புதைக்கப்பட்டு உள்ளன.  

ஆக மொத்தம் 13,000 சிவ லிங்கங்கள் நமது கண்களுக்கு தெரியாமலும் பன்னிரண்டு சிவ லிங்கங்கள் கண்களுக்கு தெரியுமாறும் அமைக்கப்பட்டு உள்ளன. 

அதனால்தான் பன்னிரண்டு சிவலிங்கங்கள் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று அந்த பன்னிரண்டு சன்னதிகளையும் ஒருசேர ஒரு பிரதர்ஷணம் செய்த பின் ஒம்காரேஸ்வரர் சிவ சன்னதியின் வாயிலில் நமஸ்கரித்தால் 13012 சிவ லிங்கங்களை வணங்கிய பலனைப் பெறும் புனித ஷேத்திரமாகத் திகழ்கிறது.... 

ஆலயத்தில் நாம் வணங்க வேண்டிய முறை அங்கே படத்தோடு விளக்கப்பட்டிருக்கிறது...

ஒவ்வொரு சிவ லிங்க சன்னதியிலும் சிவ லிங்கத்தின் முன்னால்  பஞ்சலோக உலோகத்தில் செய்யப்பட்டு உள்ள மேரு யந்திரத்தை மந்திர உச்சாடனைகள் செய்து பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். 

 இதற்குக் காரணம் சிவனுடன் சக்தியும் இங்கு சேர்ந்து உள்ளதான ஐதீகத்தைக் காட்டுவதால் சிவசக்தி ஷேத்திரமாக அருள் பொழிவது மிகவும் சிறப்பான விஷேசம்... 

ஆலயத்தில் நுழையும் முன்னால் கொடி மரம், நந்தி போன்றவை இருக்க சன்னதியின் நுழை வாயிலில் வலது புறம் முருகப் பெருமான் இடது புறத்தில் விநாயகர் சன்னதிகளும் அருள்கின்றன. 
 
வைதீக தர்மத்தின்படி விநாயகரை வணங்கிய பின், முருகனை தரிசித்து விட்டே சிவ சக்தியாக உள்ள ஜ்யோதிர் லிங்க கூடத்தில் சென்று தனித் தனி சன்னதிகளில் அமைக்கப்பட்டு உள்ள லிங்கங்களை வணங்கி துதித்த பின் ஒம்காரேஸ்வரர் சன்னதிக்கு முன்னால் வந்து அனைத்து லிங்கங்களுக்கும் சேர்த்தே நமஸ்கரிக்க வேண்டும். 

அதன் பின் வெளியில் வந்து கொடி மரத்தின் முனாலும் நமஸ்கரிக்க வேண்டும். அப்போதுதான் ஆலய தரிசனம் முடிவு பெறும் என்பது தர்ம விதியாகும்.

சிவலிங்க சன்னதிக் கூடத்தில் அனைத்துபுறமும் சண்டிகேஸ்வரர், கால பைரவர் போன்றவர்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.


ஆலயத்தை விட்டு வெளியில் வந்ததும் இடப்புறத்தில் ஒரு குன்று  போல உள்ள இடத்தில் மத்சவநாராயணருக்கு சன்னதி அமைத்து உள்ளார்கள். 

அதில் மகாவிஷ்ணு மத்சாவதாரம் எடுத்த அவதாரக் கோலத்தில் காட்சி தருகிறார். 
 
தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ய அவதாரம் மிகவும் முக்கியமானது. 
 
 
மகாவிஷ்ணு மீன் வடிவம் எடுத்து உலகைக் காத்தார் ..இந்த அவதாரத்தை இங்கு வந்து வேண்டி வணங்கினால் கரையேற முடியாமல் பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கும் நம்முடைய பிரச்சனைகளையும்  மத்யாவதார விஷ்ணு தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை... 

 

This Shila is very auspicious and extremely powerful, it radiates very high energy. As far as its main body is concerned it gives perfect impression of Matsya  
Matsya Shaligrama also provides sixth sense to the worshiper to see the future things happening and also it removes the Vastu Dosha. 
By worshiping this Shila an issueless woman is blessed with a virtuous son. 
Worshiping this auspicious Shaligram brings immense wealth 
and worldly comforts.  

   

  
எப்படி ஒரு மீன் குளத்தில் உள்ள அழுக்குகளைக் களைகின்றதோ அது போலவே நம் மனதில் உள்ள துயரங்களையும் விஷ்ணு களைகின்றாராம் 

ஆகவே இங்கு கிடைக்கும் மத்யாவதார யந்திரத்தை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி அதற்குள் வைத்து வணங்கி  வந்தால் வீட்டில் வாஸ்துவினால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும் , 
பணப் பிரச்சனை தீரும், சரீர நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை...

 
இந்த மத்ஸ்ய நாராயணர் ஆலய சன்னதியின் வாயிலில் உள்ள பெரிய ஆலமரம் அடியில் வன துர்கையின் சன்னதி உள்ளது. 
 
அந்த ஆல மரத்தின் மீது வன துர்க்கை வசித்து வருவதாகவும் அவள் சிலருக்கு அங்கு காட்சி தந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். 

வன துர்க்கை கற்பூரத்தை விரும்புபவளாம். ஆகவே அவளுக்கு அந்த ஆல மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெற்று மன அமைதி கிடைக்கும்....

அவள் சன்னதியை சுற்றி பல மாபெரும் முனிவர்கள், மகான்கள் போன்றவர்களின் சிலைகள் உள்ளன.

தரிசன நேரங்கள் 

Monday - Saturday     
7:00 am - 12:30 pm     4:30 pm - 8:00 pm    

Sunday & Holidays     
7:00 am - 8:00 pm 


ஆலய விலாசம் 
Omkar Ashrama Maha Samasthana
Omkar Hills,
Shrinivasapura,
Bangalore - 560 060
Karnataka
INDIA
 

27 comments:

  1. கட்டாயம் தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலை உண்டாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. இந்தியா வரும்பொழுது பார்க்கவேண்டும். என் அம்மாவுக்குப் பிடிக்கும்.

    ReplyDelete
  3. 13012 லிங்கங்களா? அடேங்கப்பா ஆச்சர்யம்தான்

    ReplyDelete
  4. அற்புதமான துவாதச ஜ்யோதிர் லிங்க கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  5. ஆஹா.. எல்லோரையும் ஒரே இடத்துல தரிசனம் செய்ய முடியுதா.. அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. Interesting information...Your posts always feels like a breath of fresh air.

    With Love
    Lakshmi

    ReplyDelete
  7. "ஜோதியாய் ஜொலிக்கும் ஜோதிர்லிங்கங்கள்”
    இன்று ஸோமவாரத்திற்கு
    ஏற்ற மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  8. 12 ஜோதிர்லிங்கங்களையும் கொண்ட “துவாதஸ ஜ்யோதிர்லிங்க சமஸ்தானா” என்ற அருமையான
    கர்னாடகா உத்ரஹள்ளீ\-கென்கேரி பாதையில் மலையின் மேல் அமைந்த சிவாலயத்தை, ஒருசேர தரிஸித்ததில் மகிழ்ச்சி. அனைவரையும் இன்று தரிஸிக்கச் செய்தது மிகச்சிறப்பு!

    ReplyDelete
  9. கீழே ஸ்தாபிக்கப்பட்டுள்ளவை நம் புறக்கண்களுக்குப் புலப்படாத 11000+2000=13000 குட்டியான லிங்கங்கள்.

    தரிஸனம் செய்து நமஸ்கரித்தால் 13012 லிங்கங்களையும் வணங்கிய புண்ணிய பலன்.

    மிக அருமையான தகவல் ! ;)

    ReplyDelete
  10. முழுமுதற்கடவுளாம் விநாயகரிலிருந்து ஆரம்பித்து, ஓம்காரேஸ்வரரை வழிபட வேண்டிய, வணங்க வேண்டிய வழிமுறைகளைச் சொல்லியிருப்பது மிகச்சிறப்பான தகவல்கள்.

    ReplyDelete
  11. கரையேற முடியாமல் பிரச்சனைகளில் தத்தளித்து மூழ்கிக்கிடக்கும் நம்மை மத்ஸ்யாவதார மஹாவிஷ்ணு காத்தருளுவார்.

    அவரே மீன் போல நம் மன அழுக்குகளைக் களைவார்.

    ஆஹா! அற்புதம்!!

    ReplyDelete
  12. கற்பூரப்பிரியையான வனதுர்க்கை அம்மன் உள்பட ஆலய விலாசம், தரிஸிக்கும் நேரம் போன்ற அனைத்துத் தகவல்களும், பிராப்தம் உள்ள அனைத்து வாசகர்களுக்கும், நன்றாகப் பயன்படும்.

    இதை பதிவிட்டு நல்ல கார்யம் செய்து எல்லோருக்கும் புண்ணியம் ஏற்படச் செய்து தங்களுக்கும் புண்ணியம் கிடைக்க வழிசெய்து கொண்டுள்ளீர்கள்.

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  13. இன்றைய அனைத்துப்படங்களும், அனைத்து விளக்கங்களும் அழகோ அழகு தான்.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. ஜோதிர் லிங்க தலங்கள்:
    1.சோமனாதர் 2. மல்லிகார்ச்சுனம் 3. த்ரியம்பகம் 4. மாகாளெச்வரர் 5. ஓம் காரேச்வரர் 6. மாசங்கர் .7.ராமேச்வரம்
    8.கிருஷ்ணேச்வரர்9.னாகனாத்10.வைத்தியனாத் 11.கேதாரேச்வரர்12.விச்வேச்வரர்

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு.

    முதல் படமே பிரமாதம்.

    ReplyDelete
  16. ஓரிடத்தில் அமையப்பெற்ற தரிசனம், அருமை.

    ReplyDelete
  17. பகிர்வுக்கு மிக்க நன்றி..அனைத்துப்படங்களும், அழகு

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  19. வருகிற வாரம் பெங்களூரு பயணத்தில் அவசியம்
    இத்தலம் சென்று தரிசிக்க உத்தேசித்துள்ளேன்
    படங்களுடன் பதிவு உள்ளம் கொள்ளை கொண்டது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. பல வருடங்களாக பெங்களூரில் இருந்தும் அறியாத விஷயங்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்தது. கோலார் அருகே கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்ட ஒரு கோவில் இருக்கிறது.இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  21. பதிவைப் படித்து சிவானந்த அனுபவத்தில் மூழ்கி விட்டேன்.நன்றி.

    ReplyDelete
  22. ஜோதிர் லிங்கத்தலங்கள் 12 என்று தெரியும். அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது என்பதை உங்கள் பதிவில் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    தவம் செய்ய வேண்டும்!!!

    தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

    தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    video
    ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
    http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

    ReplyDelete
    Replies


    1. நான் தேடிய புதையலை பொக்கிஷமாக அனுப்பிவைத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      உடனடியாக அனைத்து லிங்குகளையும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்...

      Delete