Thursday, April 3, 2014

பேரானந்தம் அருளி பரிபாலிக்கும் பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.







sri lakshminarasimha prahlada




துன்பங்களிலிருந்து   விடுவித்து  வெற்றியையும், சக்தியையும் 
அளித்து கண்கண்ட பலன்களை அள்ளித் தரும் தெய்வமாக 
பரிக்கல் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் 
ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.

 குதிரை முகம் கொண்டவன்  பரிகலா சூரன் என்ற அரக்கன். 

திருவதிகையில் திரிபுர அரக்கர்களை சிவபெருமான் தகனம் செய்தபோது, விண்ணிலோ மண்ணிலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றபரிகாசுரன் அசுரன், பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான திருமுதுகுன்றம் பகுதியில் மறைந்து தப்பித்துக்கொண்டான். 
திருமால் நரசிங்கமாக வெளிப்பட்டு பரிகலா சூரனை 
வதம் செய்த இடம்தான் பரிக்கல் திருத்தலம்.
[pkuppam+narasimha.jpg]
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் இத்தலத்து பெருமாளை வழிபட்டு எதிரிகளை வீழ்த்தி பல வெற்றிகளைப் பெற்றதாக வரலாறு.

விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கு தெற்கில் சுமார் 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பரிக்கல்  மிகவும் அமைதியான, அழகான கிராமம். 

கிழக்கு பார்த்த ராஜகோபுரம். கருவறையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கம்பீரமாகக் காட்சி கொடுத்து அருளாசி வழங்குகிறார். 






















தாயாரின் திருநாமம் ஸ்ரீகனகவல்லி. 






















கருவறையில் மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் ஸ்ரீவியாச ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் திருவுருவச் சிலை இருக்கிறது.

கடன், நோய், எதிரி இவற்றுக்கு பரிக்கல் 
பரிகாரத் தலமாக விளங்குகிறது. 
மிகப் பெரிய கடன் தொல்லையிலிருந்து விரைவாகவும், எளிதாகவும் மீளவும், தம்மை வருத்தும் நோய், பிணிகளிலிருந்து விரைவில் குணமடையவும், எதிரிகளால் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீண்டு எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறவும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வழிபட்டு பலனடையலாம்..!

விரதமிருந்து, ஈர ஆடையுடன், “ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்த வண்ணம் இந்த ஆலயத்தை 48 முறை வலம் வந்து வழிபட  பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் - பரிக்கல்








17 comments:

  1. அற்புதமான படங்கள்... அதிலும் முதல் படத்திலிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. பரிக்கல் நரசிம்ம ஸ்வாமியைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு..
    மேலும் அதிக தகவல்கள். அழகிய படங்களுடன்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
    உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற
    நன்மாலை கொண்டு நமோநாரயணா என்னும்,
    சொன்மாலை கற்றேன் தொழுது.

    நரசிம்ம அவதாரம் இரணியனை அழிக்கத்தான் என்று எண்ணியிருந்தேன்.

    இன்று பரிகலா சூரனை வதைத்த பரிக்கல் நரசிம்மரைப் பற்றியும் அறிந்துகொண்டேன்.

    பிரகலாதனை பரிவுடன் நோக்கும் நரசிம்மரும்,
    கனகவல்லித் தாயாருடன் பிரகலாதனுக்கு ஆசி வழங்கும் நரசிம்மரும்
    மிக மிக அழகு.

    பாம்பணையில் உள்ள நரசிம்மரும், வாழைப் பூவை சுவைக்கும்
    பச்சைக் கிளியும் கொள்ளை அழகு.

    ( கட்ட பொம்மன் இவரது அழகில் சொக்கித்தான் மீசை வளர்த்துக் கொண்டானோ ? }

    பதிவிற்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. பரிகல் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் தரிசனம் இன்று. மிகவும் அழகான படங்கள். பரிகலாசூரன் கதை கேள்விப்படவில்லை.தாங்களால் தெரிந்துகொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  5. ஆஹா என்ன அற்புதமான படத்தொகுப்பும் விளக்கமும் அரசர்களின் போர்களை பற்றிய விவரங்களும் தொகுத்தது வெகு சிறப்புங்க.

    ReplyDelete
  6. பரிக்கல்லுக்கே எங்கள் எல்லோரையும் கூட்டிச்சென்று, திவ்ய தரிஸனமாக எம்பெருமாளை ஸேவை சாதிக்க வைத்து, பேரானந்தம் ஏற்படுத்தியுள்ள பெருமை தங்களை மட்டுமே சாரும்.

    >>>>>

    ReplyDelete
  7. முதல் படம் எத்தனை முறை தாங்கள் இதுவரை காட்டியிருப்பினும் கொஞ்சமும் அலுக்கவே அலுக்காத, தன் மடல் விரித்துத் தூக்கிக்காட்டிடும் வாழைப்பூ போலவே, காட்சிக்கும் கருத்துக்கும் சுவையோ சுவையினை கூட்டக்கூடியது .....

    காரசாரமான ‘வாழைப்பூ பருப்பு உசிலி’ போல எனச் சொல்வேன்.

    >>>>>

    ReplyDelete
  8. எல்லாப்படங்களும் அருமையோ அருமை.

    சிரத்தையாகக் காட்டி, ஒவ்வொன்றையும் அழகுடன் விளக்கியுள்ளது பேரானந்தம் அளிக்குது.

    >>>>>

    ReplyDelete
  9. காணொளி கண்டோம்.

    களிப்பினைக் கொண்டோம்.

    >>>>>

    ReplyDelete
  10. கீழிருந்து இரண்டாவது படத்தில் ஜீவன் உள்ளது.

    எப்படித்தான் தத்ரூபமாக கோயிலின் கருவறையில் உள்ள இந்தப் படங்களை எடுத்து தங்களால் காட்ட முடிகிறதோ !

    அது தங்களின் தொழில் ரகசியம் .... கேட்கக்கூடாது தான். தெரியும்.

    இருப்பினும் ஓர் ஆர்வக்கோளாறினால் அவ்வப்போது கேட்கத்தோன்றி விடுகிறது.

    >>>>>

    ReplyDelete
  11. இன்றிலிருந்து சுருக்க நினைத்த என்னை சும்மா விட்டுவிடுவீர்களா .... நீங்கள் !!

    இன்றைக்கும் சற்றே அதிகமாகி விட்டது.

    அதனால் நான் இப்போ இத்துடன் எஸ்கேப்.

    ooo o ooo

    ReplyDelete
  12. முதல் படம் உயிரோட்டமாக இருக்கிறது. புன்னகை தவழும் நரசிம்மர் முகம் ஒரு ஆச்சர்யம். உக்ரமாகப் பார்த்தே பழக்கம்! படங்களும், பதிவும் அருமை.

    ReplyDelete
  13. நரசிம்மரின் படங்கள் கொள்ளை அழகு! சிறப்பான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  14. தங்களுடைய தெய்வீகப் பதிவுகள் மிக சிறப்பாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  15. அற்புதமான படங்களுடன் விளக்கங்கள் ..நன்றி ....

    ReplyDelete