
பெரியபிராட்டியார் திருவடிகளே சரணம்.
பங்கயப் பூவிற் பிறந்த பாவைநல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே.

வைணவ தலங்களில் முதன்மையாகத்திகழும் ரங்கநாதர் திருத்தலமாம் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை வைபவம் பங்குனி மாதம் நடைபெறும்
"ஆதி பிரம்மோற்சவம்' விபீஷணனால் தொடங்கப்பட்டது

இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு நம்பெருமாள் செல்லும்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார்.
பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார்.பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.
ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி வைபவம் மிகவும்
சுவாரஸ்யமாக சிறப்பாக நடைபெறும்..!

ஸ்ரீரங்கநாதரான அழகிய மணவாளன், ஒரு பங்குனி மாதத்தில் உறையூர் அருகே வேட்டையாடச் சென்ற போது கமலவல்லியைச் சந்தித்தார்.
ஸ்ரீ கமலவல்லியே சோழ மன்னனின் மகளாகப் பிறந்திருந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். பின்னர் கமலவல்லியைத் திருமணம் செய்த ரங்கநாதர், இரண்டு நாட்கள் உறையூரில் தங்கிவிட்டு, ஸ்ரீரங்கம் திரும்பினார்.
அன்றைய தினம் பங்குனி உத்திரம்; ரங்கநாயகி தாயாரின் ஜென்ம நட்சத்திரத் திருநாள்!
ஸ்ரீரங்கநாதர்- கமலவல்லி தாயார் திருமணத்தகவல் ஸ்ரீரங்கநாயகி தாயாரை எட்டியது. எனவே ரங்கநாதர் மீது கடுங்கோபத்தில் இருந்தார் தாயார்.
ரங்கநாயகி தாயாரை சமாதானப் படுத்த ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்று எண்ணிய ஸ்ரீரங்கநாதர், "காவேரி ஆற்றைக் கடக்கும்போது, நீ அணிவித்த மோதிரம் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடிக் கண்டெடுக்க காலத்தாமதம் ஆகிவிட்டது' எனக் கூறினார்.
எனினும் தாயாருக்கு கோபம் தணியவில்லை. இந்த ஊடலை அறிந்த நம்மாழ்வார்,அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
பின்னர் ரங்கநாதர் உண்மையை ஒப்புக் கொண்டதால், நம்மாழ்வார் சொற்படி ரங்கநாயகி நாச்சியார், பெருமாளை ஏற்றுக் கொண்டார்.
இதையொட்டி கொண்டாடப்படும் வைபவத்தை
"சேர்த்தி' என்று போற்றுவர்.
ஆதி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளான பங்குனி உத்திரத்தன்று "நம்பெருமாள்' சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் சேர்த்தி வைபவம்
பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும்.

"மட்டையடி உற்சவம்'என்றும் சொல்வார்கள்.
பத்தாம் நாள் ஸ்ரீ ரங்கநாச்சியாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்த பின்னர், பெருமாள் "கோ' ரதத்தில் (சிறிய தேரில்) எழுந்தருளி
திருவீதி உலா வந்து மூலஸ்தானத்தை அடைவார்.
ஸ்ரீரங்கநாயகி தாயார் படி தாண்டா பத்தினி என்பதால் கோ ரதத்தில் பெருமாளுடன் சேர்ந்து வருவதில்லை .


பதினோராம் நாளன்று பெருமாள், ஆடும் பல்லக்கில் புறப்பட்டு
திருவீதி உலா வரும் காட்சி, அனைவரும் சேவிக்க வேண்டிய ஒன்று.

ஆதி பிரம்மோற்சவ விழாவில் தாயாரையும் பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.
தொடர்புடைய பதிவுகள்:
* ஆச்சர்யம் நிறைந்தஸ்ரீரங்கம்
தொடர்புடைய பதிவுகள்:
* ஆச்சர்யம் நிறைந்தஸ்ரீரங்கம்
*மணிராஜ்: அற்புத ஆலயம் ஸ்ரீரங்கம்


ஸ்ரீரங்கம் பங்குனி உத்தர சேவை வைபயம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அருமையான படங்களுடன் சிறப்பான வைபவ தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிந்தேன் - சேர்த்தி சேவையின் அருமையையும், பெருமையையும்
ReplyDeleteகண்டேன் - கண் குளிரும் படங்களை !
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,
பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே..
மனம் கவர்ந்த பதிப்பிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
பங்குனி உத்திர சேர்த்திசேவை தகவல்கள், படங்களுடன் சிறப்பானபகிர்வு.நன்றி.
ReplyDeleteஆடும் பல்லக்கில் உலா கண்டது போன்றதொரு நிறைவை தரும் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஸேவை சாதிக்கும் பெருமாளும் ... தாயாரும்
ReplyDeleteபார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள்.
>>>>>
கேட்கக்கேட்க இனிமையான செய்திகள்..
ReplyDeleteபடிக்கப்படிக்க மதுரமான விளக்கங்கள்.
>>>>>
மிகுந்த ஆச்சர்யமும் அற்புதமும் சந்தோஷமும் அளிக்கும் தொடர்புள்ள பதிவுகள்.
ReplyDeleteஅவைகள் மட்டுமாவது, எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே இருப்பதில், ஓர் மட்டற்ற [சின்ன] மகிழ்ச்சி எனக்கு.
>>>>>
பெருமாளுடன் தாயார் ’டூ’ விடாமல் ’சேத்தி’ யானதில் சந்தோஷமே.
ReplyDeleteகாணொளிக்காட்சிகளைச் சொன்னேன்.
o o o o
சேர்த்தி உற்சவம் உருவான வரலாறும் உற்சவ விளக்கங்களும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபங்குனி உத்திர சேர்த்தி வைபவத்தின் பதிவு - படங்களுடன் அருமை..
ReplyDeleteஸ்ரீரங்கம் பங்குனி உத்திர சேவையை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.
ReplyDeleteவெள்ளிக்கிழமை தாயார் பெருமாள் சேவை அற்புதம். எத்தனி தடவை கேட்டாலும் அலுக்காத காவியம். நன்றி மா.
ReplyDeleteபங்குனி உத்திரம் போய் சேவிக்க முடியாத குறையை இங்கு தாயார் பெருமாள் சேர்த்திப் புகைப்படங்களைப் பார்த்துப் போக்கிக் கொண்டேன்.
ReplyDeleteபங்குனி உத்திர சேர்த்தி சேவை - மிகச் சிறப்பாக இங்கே சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete