மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே !
என்னும் மா மாயனே ! என்னும்
செய்ய வாய் மணியே ! என்னும் தன் புனல் சூழ்
திருவரங்கத்து உள்ளாய் !
என்று ஆழ்வார்களால் பக்தியுடன் கொண்டாடப்படும் வைணவத் திருப்பதிகள் 108-இல் முதலிடம் வகிக்கும்பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள கோயில் 236 அடி உயரம்! கொண்டது.
வைணவத்தில் கோயில் என்று பொதுவாகச்
சொன்னால் அது ஸ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும்
காவேரி-கொள்ளிடம் என்னும் இரண்டு நதிகளுக்கு நடுவில் ஏழு பிராகாரங்கள் சுற்றி இருக்கின்றன.
அந்த ஏழு மதில்களுக்கு உள்ளாக, பாம்பணை மேல்
ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளியிருக்கிறார்.
108 திருப்பதிகளில் 7 பிராகாரங்கள் உடைய ஒரே கோயில் ஸ்ரீரங்கம். பிராகாரங்களின் மொத்த நீளம் 14 கி.மீ. ஏழு பிராகாரங்களும் 7 லோகங்களைக் (உலகங்கள்) குறிக்கின்றன.
ஏழு பிராகாரங்களும் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு அரசர்களால் கட்டுவிக்கப்பட்டவை.
ஏழு சுற்றையும் சுற்றி வளைத்திருக்கும் திருவீதி அடையவளஞ்சான் வீதி, மேற்கு, வடக்கு, கிழக்கு அடையவளஞ்சான் வீதிகள் உள்ளன.
தெற்கு அடையவளஞ்சான் பெயர் மாற்றப்பட்டு திருவள்ளுவர் வீதி, சாத்தார வீதி அல்லது பூ மார்க்கெட் வீதி என்ற பெயருடன் திகழ்கின்றன.
முதல் பிராகாரம்: முதல் சுற்று தர்மவர்ம சோழனால் கட்டப்பட்டது. இது தர்மவர்ம சோழன் சுற்று - திருவுண்ணாழி (கர்ப்பக்கிரக கோடு) எனப்படுகிறது. இது சத்திய லோகத்தைக் குறிக்கிறது.
இரண்டாம் பிராகாரம் - இரண்டாம் சுற்று இராஜ மகேந்திரன் சுற்று என்படுகிறது. கர்ப்பக்கிரகம் வெளிச்சுற்று. இது இராஜமகேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்டது. இது தபோ லோகத்தைக் குறிக்கிறது.
மூன்றாம் பிராகாரம் = மூன்றாம் சுற்று குலசேகரன் சுற்று. சொர்கவாசல் மடப்பள்ளி உள்சுற்று. இது குலசேகரனால் கட்டப்பட்டது.
இது ஜநோலோகத்தைக் குறிக்கிறது.
நான்காம் பிராகாரம் - நான்காம் சுற்று ஆலிநாடன் திருவீதி
திருமங்கை மன்னன் சுற்று. திருமங்கை மன்னனால் கட்டப்பட்டது.
இது மஹர்லோகத்தைக் குறிக்கிறது.
ஐந்தாம் பிராகாரம் - ஐந்தாம் சுற்று அகலங்கன் திருவீதி
கிளிச் சோழன் சுற்று. கிளிச்சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்டது.
இது சுவர்லோகத்தைக் குறிக்கிறது.
ஆறாம் பிராகாரம்- ஆறாம் சுற்று திருவிக்கிரமன் சுற்று
(உத்தர வீதிகள்) எனப்படுகிறது. திருவிக்கிரமனால் கட்டப்பட்டது.
இது புவர்லோகத்தைக் குறிக்கிறது.
ஏழாவது பிராகாரம்- ஏழாவது சுற்று கலியுகராமன் சுற்று (சித்திரை வீதிகள்) எனப்படுகிறது. கலியுகராமன் என்ற மன்னரால் கட்டப்பட்டது.
இது பூலோகத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு ஏழு உலகங்களையும் அதன் தத்துவங்களையும்
ஏழு பிராகாரங்களின் மூலம் விளக்கும் ஒரே கோயில் ஸ்ரீரங்கம்.
காவேரி-கொள்ளிடம் என்னும் இரண்டு நதிகளுக்கு நடுவில் ஸ்ரீரங்கம் உள்ளது. இது மனித உடம்பில் உள்ள இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளுக்கு நடுவில் இறைவன் கோயில் கொண்ட இடம் உள்ளது என்று குறிக்கிறது.
அடுத்து ஏழு பிராகாரங்கள். அவை எல்லாம் ஏதோ கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டவை என்று எண்ணி ஏமாந்து போகக்கூடாது.
அந்த ஏழும் சப்த(7)தாதுக்களைக் குறிக்கின்றன. மஜ்ஜை, ரத்தம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் போன்ற ஏழு தாதுக்களும் இதயத்தைச் சுற்றி அமைந்திருப்பதைப் போல, ஸ்ரீரங்கநாதரைச் சுற்றி ஏழு மதில்களும் அமைந்துள்ளன.
அவற்றிற்கு நடுவில் பாம்பணை மேல் பகவான் எழுந்தருளி இருக்கிறார் என்பது, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் பஞ்சப் பிராண விருத்திகளாகிய படங்களைக் கொண்ட நிர்மலமான பிராணவாயு என்னும் பாம்பணையில் சயனித்தபடி விபீஷணன் என்னும் ஜீவனுக்குக் காட்சி அளித்து அருள்புரிகிறார் இறைவன் என்பதைக் குறிக்கும்.
ஸ்ரீரங்க க்ஷேத்திர மகிமையும் அதன் உள்ளார்ந்த தத்துவங்களும்
அள்ள அள்ளக்குறையாதவை
வழிபாடு செய்தால் வாட்டமில்லா வாழ்வை வழங்குபவை..
ஸ்ரீரங்கநாதருக்கு ஏழு தேவிமார்கள். ரங்கநாதர் அவர்களை மணந்து "அழகிய மணவாளன்' என்ற பெயர் பெற்றார். அந்த ஏழு தேவிமார்கள்
1. ஸ்ரீதேவி, 2. பூதேவி, 3. ஸ்ரீரங்கநாச்சியார், 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்,
5. உறையூர் சோழமன்னன் மகள் கமலவல்லி நாச்சியார்,
6. சேரகுல மகள் சேரகுலவல்லி, 7. தில்லி பாதுஷா மகள் பீபி நாச்சியார் என்ற துலக்க நாச்சியார் ஆகிய எழுவர்.
மேலும், நீளாதேவி, மடப்பள்ளி நாச்சியார்,
காவிரி தாயுடன் சேர்த்து 10 பேர் என்றும் கூறுவர்.
வைணவத் திருத்தலங்கள் 108-இல் தானே தோன்றியவை -
சுயம்வியக்த தலங்கள் என ஏழு திருத்தலங்களைக் குறிப்பிடுவர்.
அவை: 1. திருவரங்கம், 2. ஸ்ரீமுஷ்ணம், 3. திருப்பதி, 4. சாளக்கிராமம்,
5. நைமிசாரண்யம், 6. புஷ்கரம், 7. பத்ரிநாத்.
இவற்றுள் முதன்மை பெற்று முதலில் இருப்பது
ஸ்ரீரங்கம் திருக்கோயில்தான்!
Srirangam perumal yazhi vaganam
பசுமையான மரங்களுக்கிடையில்
ReplyDeleteபரந்தாமன்!
பச்சை மாமலை போல் மேனி
பவள வாய்
கமலச் செங்கண்
அச்சுதா
அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே
என்னும்
இச்சுவை தவிர
யான் போய்
இந்திரா லோகமாளும்
அச்சுவை பெறினும்
வேண்டேன்,
அரங்கமா நகருளானே !
ஸ்ரீரங்கம் சிறப்புகள் அனைத்தும் அருமை... ஒவ்வொரு படமும் அற்புதம் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய பகிர்வில்...
ReplyDeleteவாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...! - இந்த தலைப்பில் உள்ள விவரங்கள் உங்களுக்கு உதவக் கூடும்... நன்றி...
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
அரங்கனைப் பற்றி ,
ReplyDeleteசிந்திக்கவும் வந்திக்கவும் -
அருமையான தகவல்கள். மகிழ்ச்சி!..
அரங்கன் தரிசனம், அற்புத திருவரங்க சுற்றுலா...
ReplyDeleteதிருவரங்க கோவிலின் சிறப்புகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்போ தான் எதிர்பாராமல் கிடைத்த ரங்கநாதரின் திவ்ய தரிசனமும், ரங்கநாச்சியார், உள் ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் தரிசனமும் மாசி மாத தெப்போற்சவ உற்சவப் பெருமாளை ”ரங்க விலாஸ்” மண்டபத்தில் தரிசனமும் கிடைக்கப் பெற்று வீடு வந்தடைந்தேன். வந்தவுடன் எங்கள் ஊரின் சிறப்புகள் இங்கே....
நாங்கள் வடக்கு அடையவளஞ்சான் வீதியில் தான் வசிக்கிறோம்....:)
”அற்புத ஆலயம் ஸ்ரீரங்கம் !”
ReplyDeleteசொன்னாலும் சொல்லாவிட்டாலும் மிக அற்புதமான ஆலயம் தான் ஸ்ரீரங்கம்.
தங்களைப்போல எவ்வளவு புண்யாத்மாக்கள் காலம் காலமாக, யுகம் யுகமாக ஸேவித்து வரும் கோயில் இது !
>>>>>
ரெங்கநாயகி என்றும் ரங்கநாதன் என்றும் எத்தனைக்கோடி பேர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன !!!!!
ReplyDeleteஸ்ரீ ரெங்கநாயகி என்ற கம்பீரமான பெயரை உச்சரித்தாலே எத்தனைக்கோடி இன்பம் ஏற்பட்டு, மனதை மகிழ்விக்கிறது !!!!!
>>>>>
அழகழகான படங்கள் அத்தனையும் அசத்தலாக உள்ளன.
ReplyDeleteஆம். கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும் தான்.
>>>>>
ஏழு பிரகாரங்களையும் கட்டிய மன்னர்கள் யார் யார் ?
ReplyDeleteஅவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
அவை ஒவ்வொன்றும் எந்த எந்த லோகத்தைக்குறிக்கிறது ?
என்ற விபரங்கள் தாங்கள் சொல்லிக் கேட்பதில் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சியாக உள்ளன தெரியுமா ?
எதுவுமே சொல்பவர் சொல்லணும்.
அதில் தான் தனி சுகமும், சுவாரஸ்யமும், தனி ருசியும் உண்டு. ;)))))
சொல்பவரே ..... பிறரை தன் சொல்லால் சொக்குப்பொடி போட்டு வெல்பவரும் ஆவார்.
>>>>>
நம் காவிரியும் கொள்ளிடமும் இரண்டு நாடிகளா !
ReplyDeleteஇதைக்கேட்டதும் என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்க்கின்றனவே !!
>>>>>
ஏழு பிரகாரங்களும் நம் இதயம் சுற்றியுள்ள ஏழு தாதுக்களா !
ReplyDeleteஆஹா, என் இதயத்தில் உள்ளதை அப்படியே படம் பிடித்தல்லவா காட்டிவிட்டீர்கள்.
அதன் ஆழத்தில் வேறு ஏதும் தெரியவில்லையோ?
>>>>>
பாம்பணையே பிராணவாயுவா !
ReplyDeleteஅடடா, என்ன ஒரு வர்ண ஜால வர்ணனைகள் !
அடேங்கப்பா !!
அம்மாடியோ !!!
அதிபுத்திசாலி !!!!
>>>>>
ஸ்ரீ ரங்கநாதருக்கு மட்டும் ஏழு தேவிமார்கள் !
ReplyDeleteபத்துமோ பத்தாதோ என பத்து தேவிமார்கள் என்றும் சொல்லுவதுண்டு !!
அவர் ராஜாவல்லவா ! ரங்கராஜாவல்லவா !! தாங்கும், தாங்கும்.
ஏழு எந்த மூலைக்கு? ;)))))
ஏழாயிரம், ஏழு லக்ஷம், ஏழு கோடி, எழுபது கோடி, எழுநூறு கோடி, ஏழாயிரம் கோடி தேவிகள், பக்தைகளாக தங்களைப்போல இன்றும் உள்ளனரே !
ஏங்கித்தான் போகிறோம் .... நம்மையும் தடுத்தாட்கொள்ள மாட்டார்களா என்று.
>>>>>
தங்களின் வழிகாட்டுதல்படி ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கத்தையும் தொடர்பு கொண்டு மீண்டும் ரஸித்தேன்.
ReplyDeleteகாணொளி அருமை.
பொறுமையாகப் பார்த்தேன்.
அதனால் மட்டுமே தாமதம். ;)
>>>>>
குதிரை வாஹன வையாளிப் புறப்பாடு, முத்தங்கி .... ரத்னாங்கி ..... முதலிய அபூர்வப்படங்கள், தாங்கள் காட்டக்காட்ட, எத்தனைமுறை தான் காட்டினாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது.
ReplyDeleteஅவ்வளவு ஒரு அழகோ அழகு.
திவ்ய தரிஸனம் தான் !
தினமும் பலமுறை திறந்து பார்த்து நான் மட்டும் தனியே ரஸித்து மகிழ்வதுண்டு. தூங்காத இரவுகளுக்கு வேறென்ன தான் மருந்து !
>>>>>
அந்த ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போலவே தங்களின் அன்றாடப் பதிவுகளும் சும்மா ஓங்கி உயர்ந்து உன்னதமான காட்சிகளைத் தரவல்லதாக உள்ளன.
ReplyDeleteஅனைத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். வாழ்க !
oooo oOo oooo
வணக்கம் ..வாழ்க வளமுடன்..
Deleteநிறைவான ஆழ்ந்த - செறிந்த - கருத்துரைகள், பாராட்டுரைகள் வாழ்த்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
அற்புத ஆலயம் ஸ்ரீரங்கம் பற்றிய தகவல்கள் தெரியாதன தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே அற்புதமான ஆலயம்தான். 2முறை செல்லும் பாக்கியம் பெற்றேன். படங்கள் அருமை.நன்றி.
ReplyDeleteஆறிரண்டும் காவேரி! அதன் நடுவே சீரங்கம்! – என்று சொல்வார்கள்! எங்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி அரங்கனின் புகழ் பாடிய உங்களுக்கு நன்றி!
ReplyDeleteஎனது பிறந்த ஊர் பெருமையை மனம் நிறைந்த மகிழ்வுடன் படித்தேன். உங்கள் வலைபூ அமெரிக்காவிலிருந்து வரும் தென்றல் இதழில் பாராட்டப்பட்டு இருக்கிறது, பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்!
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன்..
Deleteகருத்துரைகளுக்கும் இனிய தென்றல் பத்திரிகை பற்றிய தகவல்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..
லிங்க் இருந்தால் தாருங்கள் மேடம்..
கருமணித் துயில்வதை மனம்கவர் பதிவாக்கித் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஸ்ரீ ரங்கம் கோவிலைப் பற்றிய விளக்கங்கள் அருமை. அதிலும் ஒவ்வொரு பிரகாரத்தைப் பற்றிய விளக்கங்கள் சிறப்பு. நன்றி அம்மா.
ReplyDeleteதிருவரங்கத்தின் பெருமைகளைச் சொல்லும் பகிர்வு....
ReplyDeleteசிறப்பான படங்களும்.
சிறப்பான பகிர்வு ரங்கநாதர்தர்சனம்.
ReplyDeleteawesome photos and info abt sriranganathar...sir please tell how to save these photos please my humble request iam unable to save this images..
ReplyDeletethanks & regards
madhu
respected sir
ReplyDeleteawesome photos nd info abt sri ranganatha swamy...please tell how to save these images please sir..humble request
thanks®ards
madhu