வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியேன் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்
சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் குருவே சரணம்
சரணம் சரணம் அறிவே சரணம் சரணம் சரணம் அருளே சரணம்
சிலு சிலு என்று குளிர் காற்று வீசி ஜில்லிட வைக்கும் குளிர் பூமியின் தலைமையகமாய் திகழும் சிம்லா இமாசலப் பிரதேசத்தின் தலைநகரமாகும்..!
கனவுதேசமான சிம்லா, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள அற்புதமான மலை நகரம்.
சுமார் 5 கி.மீ. நீளமுள்ள - மால் ஸ்ட்ரீட்- என்று அழைக்கப்படும் கடைவீதியில், சுட்டெரிக்கிற வெயிலையும் ஜில்லிட வைக்கிற குளிரையும் உள்வாங்குவதற்காக, ஆங்காங்கே பலரும் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
சிம்லாவின் உயரமான சிகரமாகத் திகழும் ஜாக்கூ மலையின்
பிரமாண்டத்தை இங்கிருந்தபடி பார்த்து ரசிக்கலாம்.
மலை முழுவதும் மரங்கள் அடர்ந்திருக்க, அந்தப்
பிரமாண்டமான மலையின் உச்சியில், பூமிக்கும் வானுக்குமாக
நின்றபடி விஸ்வரூபக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன்!
108 அடி உயரம், செந்தூர நிறம் என அழகு மிளிரக் காட்சி தரும் ஸ்ரீஅனுமனை, சிம்லாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.
சிம்லாவில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

1817-ஆம் வருடம், கேப்டன் அலெக்சாண்டர் ஜெரால்டு என்பவரின் டைரியில், ஜாக்கூ மலை குறித்தும், ஸ்ரீஅனுமன் கோயில் குறித்தும் குறிப்புகள் உள்ளனவாம்.
சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வரும்போது, அதில் இருந்து
சந்தன மரத்தின் கிளை ஒன்று முறிந்து இங்கு விழுந்ததாம்.
ஆகவே, இமாசலப் பிரதேசத்தில் எங்கு புதிய கோயில் கட்டினாலும், ஸ்ரீஅனுமன் கோயிலைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து கிளையை ஒடித்துக்கொண்டு வந்து, அங்கு நடுவது இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன, இங்கேயுள்ள கல்வெட்டுக்கள்.

ஸ்ரீஅனுமன் சஞ்சீவி மலையைத் தேடிச் சென்ற போது, இந்த மலையில் தவத்தில் இருந்த யாக்கூ மகரிஷி இடம் 'சஞ்சீவி மலை எங்கே இருக்கிறது?' என்று விசாரிப்பதற்காக, ஜாக்கூ மலையில் அனுமன் இறங்க... அனுமனின் உடல் பளுவைத் தாங்க முடியாமல், மலையின் ஒரு பகுதி அப்படியே அமுங்கிப் போனதாம்.
பிறகு, முனிவரிடம் சஞ்சீவி மலை இருக்கும் இடத்தைக் கேட்டறிந்த அனுமன், 'திரும்பி வரும்போது சந்திக்கிறேன்' என உறுதியளித்துச் சென்றார்.
ஆனால், திரும்பும் வழியில் அசுரன் ஒருவனுடன் போரிட நேர்ந்ததால் முனிவரைச் சந்திக்க இயலாமல் போனது.

பிறகு, தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, மீண்டும்
இங்கு வந்து, தனக்காகக் காத்திருந்த யாக்கூ முனிவரைச்
சந்தித்தாராம் அனுமன்.
அதன் பிறகு, அந்த மலையில், ஸ்ரீஅனுமனின் சுயம்புத் திருமேனி தோன்றியதாகவும், அந்தத் திருமேனிக்குச் சந்நிதி அமைத்து, சிறியதொரு ஆலயமும் எழுப்பி வழிபட்டார் யாக்கூ முனிவர் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, 108 அடி உயர ஸ்ரீஅனுமனின் விக்கிரகத்தை, இந்தப்பிரதேசத்தின் முதல்வர் திறந்து வைத்து வழிபட்ட தினம், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

சிம்லாவின் ஸ்பெஷல் தலமான ஜாக்கூ மலையையும் 108 அடி உயர ஸ்ரீஅனுமன் விக்கிரகத்தையும் தரிசித்து உள்ளம் பூரிக்கலாம்
சேட்டைக் குரங்குகளை மிரட்டும் வேட்டை நாய்கள்!
ஆலயத்துக்குச் செல்லும்போது, குச்சி ஒன்றை
5 ரூபாய் வாடகைக்குக் கொடுக்கின்றனர்.
காரணம்... வானரங்கள்! பார்ப்பதற்கு மிரட்சியை ஏற்படும் விதத்தில் கொழுக் மொழுக் என்றிருக்கும் இந்தக் குரங்குகள், நம் கையில் வைத்திருக்கும் தேங்காய், பழங்கள், செல்போன் ஆகியவற்றை மட்டுமின்றி, கண்களில் அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடியையும் பறித்துக்கொண்டு ஓடுவதில் கில்லாடிகளாம்!
ஆகவே, குரங்குகளை மிரட்டுவதற்காகவே
குச்சியை வாடகைக்குத் தருகின்றனர்.

அதுமட்டுமின்றி, சேட்டைக்காரக் குரங்குகளை அடக்கி ஒடுக்குவதற்காக, கட்டுமஸ்தான வேட்டை நாய்களை வளர்த்து வருகிறது
கோயில் நிர்வாகம்.
கோயில் நிர்வாகம்.
சிம்லா அனுமன் கோவில் தரிசனம் கிடைத்து விட்டது இன்று நன்றி.
ReplyDeleteபடங்கள் செய்திகள் மிக அருமை.
குரங்குகள் படம் மிரள தான் வைக்கிறது.
வாழ்த்துக்கள்..
சிறப்பான தகவல்களுடன் பிரமாண்டமான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபிரம்மாண்ட அனுமன்.. அழகான படங்கள்..
ReplyDeleteசனிக்கிழமை காலைப் பொழுது இனிதாக விடிந்துள்ளது!..
வாழ்க நலம்!..
பிரம்மாண்டமான அனுமன் தான்.....
ReplyDeleteபடங்களும் தகவல்களும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ஹனுமானின் அதியயுர்ந்த சிலைகளும் படங்களும் விபரங்களும். மன நிறைவு கொண்டன. நன்றி வாழ்த்துக்கள்.....!
ReplyDeleteஆஹா, சிம்லாவுக்கே நேரில் சென்று வந்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
ReplyDelete>>>>>
மொத்தத்தில் இன்று ஜில்லென்ற பதிவு தான்.
ReplyDelete>>>>>
படங்கள் அத்தனையும் பிரும்மாண்டம் ..... விஸ்வரூபமே தான்.
ReplyDelete>>>>>
செந்தூரப்பூவே ........ செந்தூரப்ப்பூவே ..........
ReplyDeleteபாடலை நினைவு படுத்தும் செந்தூர நிறம் ! அருமை.
>>>>>
சேட்டைக்குரங்குகளும் வேட்டை நாய்களுமாக பதிவு பக்கம் வரவே, வரவர மிகவும் பயமாகவும், நடுக்கமாகவும் உள்ளது.
ReplyDeleteooooo
அனுமன் தரிசனம்
ReplyDeleteஅற்புத அனுபவம்.
சுப்பு தாத்தா.
வானர மைந்தன் கோவிலில் வானரங்கள் இல்லாவிட்டால் எப்படி! 108 அடி உயர அனுமனின் கம்பீரத்தோற்றம் அழகு! சிறப்பான தலபுராணத் தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteசிம்லாவில்
ReplyDeleteஅனுமன்
அறிந்தேன்
வியந்தேன்
நன்றி
சகோதரியாரே
அருமையான தகவல்களுடன் கூடிய பகிர்வு.
ReplyDeleteவானளாவ நிற்கும் வாயு மைந்தனின் தரிசனம் அற்புதம். தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
ReplyDeleteமிக உயரமான சாமி சிலைகளை நிறுவுவதில் போட்டி போல் இருக்கிறதுஎது மிக உயர்ந்த சிலை என்று தெரியவில்லை. தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteயக்கூ மலை, சிவந்த அனுமார்,
ReplyDeleteகுரங்குச் சேட்டை பல தகவல்கள் சுவையுடனுள்ளது.
இனிய நன்றியுடன் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அழகிய படங்களுடன் அருமையான ஆன்மிகப் பதிவு! பகிர்விற்கு மிக்க நன்றி!
ReplyDeleteசிம்லாவில் அனுமனா, அதுவும் மிக பிரம்மாண்டமாக. ஆச்சிரியமாக இருக்கிறது. அருமையான படங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
ReplyDelete