மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் சிவபெருமான், தன்னைத் தானே பூஜித்த தலமாகும். ஒருவர் செய்த பாவத்தை இந்தப் பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவர் என்பதால், சிவன் “இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார்.
இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம்.
ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.
மதுரை நகரின் நடுவில் உள்ள சிவன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவன், சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்ட பின், பாண்டிய மன்னராக பொறுப்பேற்கத் தயாரானார்.
அரசபீடத்தில் அமர்வதற்கு முன், சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்ததன் அடிப்படையில் சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.
தலைமைப் பதவி கிடைக்கவும், பணி உயர்வுபெறவும் சிவனுக்கு,
“ராஜ உபச்சார அர்ச்சனை’ செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
“ராஜ உபச்சார அர்ச்சனை’ செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.
மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி.
"பூலோக கைலாயம்' என போற்றப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
இங்கு சிவன் அம்பிகையுடன் மேற்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்ய, கருவறையில் லிங்கத்தின் முன்பகுதி அவரை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. !!
கோயிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார்.
லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது.
சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும்.
சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்
சிவனுக்கு காலை 7.30 மணிக்கு பூஜையின்போது
தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.
மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.
மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது, அவர் இங்கு எழுந்தருளி, சிவலிங்க பூஜை செய்யும் வழக்கம் இப்போதும் உள்ளது.
மதுரையின் மத்தியில் இருப்பதால் இந்த அன்னைக்கு மத்தியபுரி நாயகி என பெயர் வந்தது.
திருமணமாகாதவர்கள் அன்னையை வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் “மாங்கல்ய வர பிரசாதினி’ என்றும் பெயருண்டு.
தாமரை பீடத்தின் மீது நிற்கும் இந்த அம்பிகையின் பீடத்தில்,
கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி
அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும்.
எதிரிபயம், மனக்குழப்பம் தீரும் வழிபாடாக - பைரவருக்கு ஒரு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கின்றனர்.

மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து, கல் யானையை கரும்பு தின்னச் செய்தார்.
அவர் இங்கு பத்மாசனத்தில் வலதுகையால் ஆகாயத்தைக் காட்டுகிறார். இடக்கையில் சாம்பிராணி குங்கிலியத்துடன் காட்சி தருகிறார்.
அவர் இங்கு பத்மாசனத்தில் வலதுகையால் ஆகாயத்தைக் காட்டுகிறார். இடக்கையில் சாம்பிராணி குங்கிலியத்துடன் காட்சி தருகிறார்.
நினைத்தது நிறைவேற பவுர்ணமி, திங்களன்று சித்தருக்கு பூப்பந்தல் இடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசையன்று வல்லப சித்தருக்கு
விசேஷ பூஜை நடக்கிறது.
விசேஷ பூஜை நடக்கிறது.
கோதண்டராமர்: கோயில் முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள்.
சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார்.
அதன் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள்.
லிங்கத்தின் பின்புறம் கையில் வில்லுடன்
கோதண்ட ராமர் காட்சி அளிக்கிறார்.

சண்டிகேஸ்வரர் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு தருபவராக இருக்கிறார்.
சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டால், சண்டிகேஸ்வரர் சிவனிடம் நமக்காக பரிந்துரை செய்வதாக ஐதீகம்.
எனவே இவரை பக்தர்கள், “பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என அழைக்கின்றனர்.
ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் தரிசிக்கலாம.
உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று இவர்களுக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்மன் கோயில்களில் பூக்குழி இறங்குவதைப் பார்க்கலாம். இங்கு, வைகாசி விசாகத்திற்கு மறுநாள், முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது.
அறுபது, எண்பதாம் திருமணம் (சஷ்டியப்த,
சதாப்த பூர்த்தி) செய்து கொள்கிறார்கள்.
பத்து இலைகளுடன் கூடிய அபூர்வமான தசதள வில்வ மரம்,
தல விருட்சமாக இருக்கிறது.
அறுபது, எண்பதாம் திருமணம் (சஷ்டியப்த,
சதாப்த பூர்த்தி) செய்து கொள்கிறார்கள்.
பத்து இலைகளுடன் கூடிய அபூர்வமான தசதள வில்வ மரம்,
தல விருட்சமாக இருக்கிறது.
ஆலயம் திறக்கும் நேரம்: காலை 6.15 – 11.30, மாலை 4.30 – இரவு 9.30
சிவனுக்கு தோசை நேவேத்யம் - இதுவரை தெரியாதது... பெருமாள் கோவில்களில் தோமால தோசை என்று நேவேத்யம் செய்வது தெரியும்.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.
இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்... பல தகவல்களை இந்தப் பகிர்வின் மூலம் தான் அறிந்து கொண்டேன் அம்மா... நன்றி... படங்கள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மதுரை....
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன்,
வளையல் விற்று, விறகு சுமந்து, நரியை பரியாக்கி, பரியை நரியாக்கி,
தருமிக்கு பொற்கிழி கொடுத்து , ஆயிரம் பிறை கண்ட நல்லாளின் உதிர்ந்த பிட்டுக்கு ஆசைப்பட்டு, அதற்காக மண் சுமந்து , எல்லாம் வல்ல சித்தராய்
கல் யானையை கரும்பு தின்ன வைத்து, வித விதமாய் விளையாடி மகிழ்ந்த ஊர்.
அரகர என்ன அரியது ஒன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே !
கண் நிறைந்த படங்கள்,
விரிவான விளக்கங்கள்.
அருமையான பதிப்பு.
அனைத்திற்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.
ஒவ்வொரு கோவில்களின் சிறப்புகள் ,தகவல்கள் என பகிர்வைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கு. அங்கு செல்லவெண்டுமென ஆர்வம் ஏற்படுகிறது. தோசை நைவேத்தியமாக வைப்பது புதுதகவல்.
ReplyDeleteஅழகான படங்கள்,அருமையான பகிர்வு. நன்றி.
புதிதாக ஒரு கோவிலின் வரலாறைத் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅழகான தலைப்பு.
ReplyDelete>>>>>
அருமையான காணொளி.
ReplyDelete>>>>>
சிறப்பான படங்கள்.
ReplyDelete>>>>>
விரிவான விளக்கங்கள்.
ReplyDelete>>>>>
மத்யபுரி நாயகி அம்மனுக்கு நமஸ்காரங்கள்.
ReplyDelete>>>>>
டாண்ணு காலை ஏழரை மணிக்கு சிவனுக்கு தோசை. கொடுத்து வைத்தவர்.
ReplyDelete>>>>>
இம்மையிலும் நன்மை தருவார் ;)
ReplyDelete>>>>>
புளியோதரைக்குப்போய் இவ்வளவு காரமா ?
ReplyDeleteபடித்ததுமே கண்ணீர் வருகிறது.
புளியோதரைப்பிரியனான எனக்கு இவற்றைப்
பார்க்காமலோ படிக்காமலோ இருக்கவும் இயலவில்லை.
oo oo oo oo
இம்மையிலும் நன்மை தருவார் ஆலய விஷேசங்கள் சிறப்பு! அருமையான படங்களுடன் தொகுத்தளித்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅம்மை, அப்பனின் அருள் தனைப் பெற்று
ReplyDeleteசெம்மையாய் வாழ வழி காட்டி நிற்கும்
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் தோழி !
இம்மையிலும் நன்மை தருவார் -
ReplyDeleteதிருக்கோயிலைப் பற்றிய தகவல்களுடன் அழகிய பதிவு.. மகிழ்ச்சி..
மதுரையில் அடிக்கடி என் தங்கைகளுடன் சென்று இருக்கிறேன்.
ReplyDeleteபுளியோதரை நன்றாக இருக்கும். வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். பைரவர் பூஜை அன்று மட்டும் காரமாய் இருக்கும் போல.
தோசை பிரசாதம் சாப்பிட்டது இல்லை.
படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
வாழ்த்துக்கள்.
இக்கோயிலைப் பற்றி தற்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteசெய்தியும் படங்களும் அருமை அம்மா.
ReplyDeleteஅனைத்தும் புதிய தகவல்கள் இம்மையிலும் நன்மை தருவார், தோசை நைவேத்தியம், காரமான புளியோதரை.
ReplyDeleteஅருமை தோழி வாழ்த்துக்கள்.....!
மதுரையில் மேலமாசி வீதியில் இப்படி ஒரு கோவில் இருப்பதே இப்போதுதான் தெரியும். அடுத்த முறை நிச்சயம் போய்விட்டு வரவேண்டும்.
ReplyDelete