Wednesday, March 12, 2014

செல்வவளம் வர்ஷிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்.





வேதத்தில் உள்ள . ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் . ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது.. 

மந்திரங்களுக்கெல்லாம் ராஜாவான ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் கிடைக்கும்..; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் .. நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது.. நினைத்த  அந்த க்ஷணத்திலேயே வரம்வாரி வழங்குவதில் நிகரற்றவர் அருள்மாரி பொழியும் உத்தம அண்ணல் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்..

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:
   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

ஸ்ரீ ஈச்வர உவாச:-
 
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
 
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
 நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
 
பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
 
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
 
ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்!
 
நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மன:!
மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
 
யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:!
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்!!
 
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே!
 ச்யா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

 ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
 பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
 
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்!
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
 
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மான: பரமாத்மன:!
அதோஹமபி தே தாஸ: இதிமத்வா நமாம்யஹம்!!
 
சமங்கரேணா தராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!


வீரபாண்டி ஆலயத்தில் வீற்றிருந்து அருளும் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக் கொண்டால்  கவலையெல்லாம் பறந்தோடிடும்'' என்பது நம்பிக்கை..!
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில்  சுமார் 
5 கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி பிரிவு ரோடு.  அருகில் அற்புதமாக  கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்..!

ஒருகாலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வனமாகத் திகழ்ந்த போது பூமியில் இருந்து சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.

பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்வாமியின் விக்கிரகத்தைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு,  அருகில் உள்ள கிணறு ஒன்றில் போட்டுவிட்டார்கள். 

கால ஓட்டத்தில் இந்த விஷயம் எவருக்குமே தெரியாமல் போய்விட்ட நிலையில், ஊர்ப்பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'கிணற்றுக்குள் இருக்கும் என்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், இந்த ஊரே செழிக்கும்’ என்று அருள்புரிந்தாராம். 

அதன்படி கிணற்றில் இருந்த ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, அவருக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கி இன்று வரை, காரமடையைச் சுற்றியுள்ள மொத்த கிராமங்களையும் கிராமத்து மக்களையும் காத்தருளி வருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள்.

மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அருகில் பிரகலாதனும் காட்சி தருவது ஆலயத்தின் தனிச்சிறப்பு! 
ஒரே கல்லால் ஆன கொடிமரம், பன்னிரு ஆழ்வார்களின் சந்நிதி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதமான கோயில் ...

பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 
ஸ்ரீநரசிம்மர் வழிபாடு அமர்க்களப்படும்

Rajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photo
அந்த நாட்களில் மட்டுமின்றி, செவ்வாய்க்கிழமைதோறும் 
ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தாமரைப் பூவால் அர்ச்சித்து வழிபட்டால், சகல சந்தானங்களும் பெறலாம்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எடுத்த காரியம் இனிதே வெற்றி பெறும் என்பது ஐதீகம்!
Rajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photo
Rajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photoRajeswari Jaghamani's profile photo
ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாளில் பெருமாளுக்குக் கலசாபிஷேகமும், வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெறும். 

புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, இங்கு நடைபெறும் நாட்டிய நாடகம் வெகு பிரசித்தம். அன்று இரவு முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி வழிபடுவார்கள்... 

நவராத்திரியில் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன. நவராத்திரி கொலு வைபவமும், அப்போது சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா வருவதும் கொள்ளை அழகு!

ஐந்து, ஏழு, பதினொன்று அல்லது 16 சனிக்கிழமைகள், இங்கு தொடர்ந்து வந்து பெருமாளுக்கு விளக்கேற்றி, 16 முறை சந்நிதியை வலம் வந்து ஸ்வாமியை வழிபடுவது விசேஷம்

இதனால், கடன் தொல்லை நீங்கும்; விவசாயம் செழித்தோங்கும்; 
வியாபாரம் லாபம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Sree Lakshmi Narasimha Swamy Tempe at Cheeryala Village Keesara,at Cheeryala, Hyderabad.

Lakshmi Narasimha Swamy Temple, Andhra Pradesh

Gramalayam Utsava Swamy Temple


ஸ்ரீலஷ்மி நரசிம்ஹர் அற்புத பாத தரிசன்ம்,

17 comments:

  1. லட்சுமி நரசிங்கப் பெருமாள் மகத்துவம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. சிறப்பான ஸ்தோத்திரம்... அற்புதமான படங்கள்... மிக்க நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நாதனே.. நரசிங்கா!.. நம்பினேன் கோவிந்தா!..
    நாராயண ஹரி!.. நாராயண ஹரி!..
    நரசிங்கப் பெருமாளே.. சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  4. செல்வவளம் வர்ஷிக்கும் தலைப்பு அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. காணொளி சிறப்பு. அதிலுள்ள படங்களும் ஸ்லோகங்களும், அதற்கான பொருளினை ஆங்கிலத்தில் அவ்வப்போது காட்டியுள்ளதும் ரஸிக்கும் படியாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. காயத்ரி மந்த்ரம் + ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் நன்னா இருக்கு.

    >>>>>

    ReplyDelete
  7. பாதுகாப்புக்காக கிணற்றில் போடப்பட்ட விக்ரஹம் பிறகு கனவில் வந்து சொன்னதால் மீட்கப்பட்ட கதை சுவாரஸ்யமே.

    >>>>>

    ReplyDelete
  8. பல்வேறு கோயில்களைப்பற்றிய அனைத்துப்படங்களும், கடைசியில் காட்டியுள்ள பாத தரிஸனமும் கண்டு மகிழ்ந்தோம்.

    >>>>>

    ReplyDelete
  9. தாமரைப்பூக்களால் ஆன அர்ச்சனை காண மனதுக்குக் கொஞ்சம் ஹிதமாகவே உள்ளது.

    அனைத்துக்கும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    oo oo oo

    ReplyDelete
  10. லஷ்மி நரசிங்க பெருமாளின் தகவல்கள்,அழகானபடங்கள்,ஸ்தோத்திரம்
    அருமை,சிறப்பு.

    ReplyDelete
  11. லட்சுமி நரசிங்கப் பெருமாள் சிறப்புகளையும், ஸ்தோத்திரங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி அம்மா.

    ReplyDelete
  12. நல்ல தரிசனம்... நன்றி!

    ReplyDelete
  13. பாத தரிசனம் கிடைக்கப்பெற்றோம். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  14. லட்சுமி நரசிங்க பெருமான் தரிசனம் அருமை! ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்திர பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமானின் பெருமைகளை அறிந்தேன்.கனவில் தோன்றி பிரதிஷ்டை செய்யக் கேட்ட சிறப்பான விபரம் அறிந்தேன் .அழகான படங்கள் மூலம் தரிசனமும் பெற்றேன். நன்றி! வாழ்த்துக்கள் ....!தோழி.

    ReplyDelete
  16. சிறப்பான படங்கள். கோவில் பற்றிய தகவல் என அசத்தலான பகிர்வு..... தொடர்ந்து சந்திப்போம்...

    ReplyDelete
  17. அசத்தலான பகிர்வு

    ReplyDelete