Sunday, March 30, 2014

கலங்காமல் காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி







 முத்தீ கொளுவி முழங்கொ வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே

- திருமூலர் திருமந்திரம்


சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில். அட்ட வீரட்டத் தலங்களில் 6வது தலமாக விளங்குகிறது.நாகப்பட்டினம், வழுவூரில் அமைந்துள்ளது..

தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர். 

அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.

முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை மறந்தனர். 

பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். 

முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். 

வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். 

பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார்.  உலகம் இருள அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். 

பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வந்தாராம்..!
Gajasamharar
அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் “கஜசம்ஹாரமூர்த்தி’ எனப்படுகிறார். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.
 மாசிமகம் – யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா – தினமும் இரண்டு வேளை வீதியுலா. 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி. 10ம் நாள் தீர்த்த வாரி இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். 

 மார்கழி – திருவாதிரை – 3 நாட்கள் திருவிழா புரட்டாசி – நவராத்திரி திருவிழா – 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும், 

இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது.

அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.

இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.


கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், 
சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம் 

அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

 சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்வதும்  அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு 
அர்ச்சனைசெய்து வழிபடுவதும் விஷேசம்..!


: இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி   போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமான் உள்ளங்கால் தரிசனம் கொடுக்கும் திருத்தலம்
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார்.
4
 அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். 

கையிலுள்ள முருகனோ தன் தந்தையை 
ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். 

சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் 
அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு.


இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே, இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.

சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்ததில் விக்கிரமராஜா தோற்றுப்போய் இத்தீர்த்தத்தில் வந்து விழுந்து. தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபட சுவாமி அவருக்கு 
அருள் பாலிக்கிறார். 

சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார். சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். 

சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. 

முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். 
Shri Virateshwaranaswami, Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701278' target='_blank'>R G Kulkarni</a>
கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும்.

கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 
48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது.
Shri Virateshwaranaswami,Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701339' target='_blank'>R G Kulkarni</a>
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகாவனம் என்று குறிப்பிடப்படுகிறது.

 அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளும் நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது. 
திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவை வேண்டிக் கொண்டால் 
நிச்சயம் நிறைவேறுகிறது. 

தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும். 

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
Shri Virateshwaranaswami,Valuvur by <a href='http://www.panoramio.com/photo/25701294' target='_blank'>R G Kulkarni</a>
திறக்கும் நேரம்:  காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

இத்தலத்தின் முகவரி:  அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், 
வழுவூர் – 609 401, நாகப்பட்டினம்

1


6


32



16 comments:

  1. சிவ சிவ!..
    வழுவூருக்குச் சென்று வந்தது போல உணர்வு!..
    கஜ சம்ஹார மூர்த்தியைப் பற்றிய தகவல்கள் அருமை!..

    ReplyDelete
  2. வீரட்டேசுவரர் திருக்கோயிலின் சிறப்புகள் அனைத்தும் அறிய வைத்தமைக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கஜசம்ஹார மூர்த்தி பற்றிய பல புதிய தகவல்கள், புராணக்கதைகள் எல்லாம் அறிய நல்வாய்ப்பாக அமைந்துள்ளது இன்றைய இந்தப்பதிவு.

    >>>>>

    ReplyDelete
  4. சிவபெருமானின் உள்ளங்காலினைப் பார்த்ததில், உள்ளத்தில் ஓர் உவகை ஏற்பட்டது.

    >>>>>

    ReplyDelete
  5. படங்கள் அத்தனையும் அழகோ அழகு. அபூர்வமானவைகள்.

    >>>>>

    ReplyDelete
  6. கோயிலின் பெயர், இருப்பிடம், திறந்திருக்கும் நேரம், தலத்தின் முகவரி மற்றும் ஸ்தல விசேஷங்கள் கொடுத்துள்ளது மிகவும் நல்லது.

    oooo

    ReplyDelete
  7. சிவனின் திருவிளையாடல், தருகாவனம், சினம் சிறப்புற எழுதப்பட்டுள்ளது.
    பல தகவல்கள் இனிய நன்றியுடன் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. காலையிலேயே சிவ தரிசனம்... அதுவும் எங்குமில்லாத உள்ளங்காலோடு நடராஜனை பார்ப்பது இங்கே தான்...

    ஆணவமும் அகங்காரமும் கொண்டு முனிவர்கள் தம்மால் தான் உலகம் இயங்குகிறது என்ற ஆட்டத்தை சிவபெருமானும் திருமாலும் வேறு உருவில் வந்து இவர்களுக்கு பாடம் புகட்ட ஐயனாரை பெற்றெடுத்து மறைய,

    முனிவர்கள் கோபம் கொண்டு சிவபெருமானுடன் யுத்தம் புரிய இறுதி அஸ்திரமாக மதயானையை ஏவி விட யானையின் வயிற்றுக்குள் நடம் புரிந்து வதம் செய்து வெளியே வந்து அருள் பாலிக்கும் காட்சியை உங்கள் வரிகள் கண்முன் நிறுத்தியதுப்பா..

    கல்யாணம் ஆகாதோருக்கும் பிள்ளை வரம் வேண்டுவோருக்கும் அருள் பாலிக்கும் இடமாகவும்,

    உமையவள் அடுத்து நின்று அவர் இடுப்பில் முருகன் கைசுட்டிக்காட்டும் அத்தனை அழகிய காட்சியும் காண முடிந்தது...

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

    ReplyDelete
  9. அருள்மிகு வீரட்டேஸ்வ‌ரின் தலசிறப்புகள் அருமை. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. கடைசி படத்தில் அந்தத்தலையாட்டித் தங்கம் அழகு !

    ReplyDelete
  11. பக்திமணம் கமழும் ஆக்கத்தை அள்ளித் தரும் தங்களின்
    பொன்னான மனம் உவந்து எனக்கொரு வாழ்த்துச் சொல்லவும்
    அழைக்கின்றேன் தோழி ! அருமையான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  12. கஜசம்ஹாரரை கல்சிற்பத்தில் பார்ப்பது எப்பவுமே மன எழுச்சி கொள்ளவைக்கும். சிவனின் கம்பீரமான நடனமும், பார்வதியின் பதபதைப்பும், முருகனை சிவனின் நடனத்தைப் பார்த்து அச்சமடையாமல் பாதுகாப்பதும்....அட அட அட

    ReplyDelete
  13. வீரட்டேஸ்வரர் கோயிலின் கஜ சம்ஹார மூர்த்தி பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. அருமையான தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  15. பல தகவல்கள் அற்புதப் படங்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  16. கஜசம்ஹாரமூர்த்தியின் தகவல்களும் படங்களும் அருமை. நன்றி அம்மா.

    ReplyDelete