Thursday, March 27, 2014

ஆனந்தம் அருளும் அனந்தசயன ராமர்..!




ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்

ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் அருள்பாலிக்கிறார்.

துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

கலியுகத்தின் அடிப்படையில் மோகினி அவதார சிலை அமைந்துள்ளது.

திரேதா யுகத்தில் ராமபிரான் இலங்கை சென்று

அனுமன் அகம் மகிழ, அமர்வீரர் அகம் மகிழ
அணுகின அத்தனையும், அனந்த ராமன் ஆனதே!
அணுப் பொழுதில்  இராகவன்
அணுவுக்குள் அணுவாகி ஒன்றாகி நின்றனன்!

அங்கு-காணினும் ராகவா, இங்கு-காணினும் ராகவா
எங்கெங்கு காணினும் என் ராகவா ராகவா!!!
என்று வீரமாகப் போரிட்டு வெற்றியுடன் சீதாதேவியை மீட்டு .  திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். 
சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடன் கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச்  சென்றார். 

இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு- கிழக்காக பள்ளி கொண்டார். 
சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள்.
அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான்

களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.
புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமன்























இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி. இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆலயம் அமைக்க 
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன.

பல ஆண்டுகள் கடந்தபின் சிற்றரசர் ஒருவர் தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கிய இந்த பகுதியில்  இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். 

மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், 
ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே  நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். 

பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்யோடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை  செய்யப்பட்டார்.

கலியுக வரலாற்றின்படி, ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் ஆலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது.

முற்காலத்தில்  திருவேங்கடத்தின் நினைவாக வேங்கடபுரி என்னும் பெயரில் விளங்கியது. 

பின்னர் ஆலயத் திருப்பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள்பேட்டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம்பேட்டை என மருவி வழங்குகிறது.
""இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத் திருவடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது. 

இவரை தரிசிக்கும்போது மன நிம்மதி உண்டாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். 

பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். 

காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது. 

"சீதையை மீட்டுவிட்டோம்; இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி' என்ற எண்ணத்தோடு  ராமபிரான் துயில் மேற்கொண்டதால்,  ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும்  மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கும் கிட்டுகிறது''     


""பெருமாளைத்தான் நின்ற    கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண்டுள்ளோம். 

ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம். 

அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. 

இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.
மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு போன்ற எல்லாமே சித்திக்கும்'' .
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வெங்கட்டாம்பேட்டை  உள்ளது.


https://www.youtube.com/watch?v=wmRL2qSGsMk&list=FLnXPlXoKHsHXJF4y5iFiI0A&index=3



ஏழு நிலை ராஜகோபுரம்
The seven-tier rajagopuram of Vengadampettai temple.
ஊஞ்சல் மண்டபம்
Calls for attention: The seven-tier rajagopuram and (right) the unjal mandapam at the Vengadampettai temple.The view of the Unjal Mandapam with the seven-tier rajagopuram of Vengadampettai temple. Photo: Special Arrangement

20 comments:

  1. வெங்கட்டாம் பேட்டை அனந்த சயன ராமர் அறிந்தேன் சகோதரியாரே
    படங்கள் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. ராமரின் ஆனந்த சயனம் ஆபூர்வம் தான்... வெங்கட்டாம்பேட்டை தகவல் உட்பட விளக்கங்கள் + அற்புதமான படங்களுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஜய ஸ்ரீ ரகு நாயக வித்தகனே !
    ஜய வாரிதி தாண்டிய சத்துவனே !
    ஜய லங்கிணி யட்சய கூற்றுவனே !
    ஜய மாமறை வாசக மாருதியே !

    படரும் வினையும் பழியும் இழிவும்
    தொடரும் பாவமும் தொடராது எனையே !
    கொடையும் துதி மெய்குறியும் அறியும்
    நடையும் தருவாய் நய மாருதியே !

    கோசலம் வாழ் பரதன் , " ராமா, ஜெகதிச்வரா " என
    தீ மூழ்கும்போது அணுகி , திடமும், ஆமோதமும்
    ஈந்த அருள் மாருதியைத் தோழ,
    வழிவகுத்தமைக்கு நன்றி !

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்களுடன் - பழைமையான திருக்கோயிலை அடையாளங் காட்டியமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  5. "அனந்தசயனராமர்" சிறப்பானபடங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனந்த சயன ராமரைத் தரிசிக்க வசதியாக வெங்கடாம்பேட்டை இருக்கும் இடத்தின் தகவலையும், மற்ற விவரங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். படங்கள் மிக அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அறிந்திரா தகவல் அனந்த சயன ராமபிரான் பற்றியது. படங்கள், விளக்கங்கள்,காணெளி அருமை. நன்றி.

    ReplyDelete
  8. ராமபிரானின் நிம்தியான சயனம் நிம்மதி தருகிறது. அழகான படங்களும் தகவல்களும். அருமை ! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  9. தலைப்பைப்போல ஆனந்தம் அளிக்கும் அருமையான பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  10. காண இயலாமல் இருப்பினும் காணொளி அருமையாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

    பிறகு மீண்டும் மீண்டும் முயற்சித்ததில் ........

    ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை மூலம் பெருமாளை இப்போது கண்டு மகிழ முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  11. படங்கள் அத்தனையும் அழகு.

    >>>>>

    ReplyDelete
  12. விளக்கங்கள் யாவும் விசித்திரமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  13. அருள்மிகு ஸ்ரீ அனந்தசயன ராமரை கண்குளிரக்காண முடிந்தது.

    ’அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...... அகப்பட்டவன் நானல்லவா .... ’
    எனப்பாடவும் முடிந்தது.

    வேறு எதுவும் சொல்லத்தோன்றவில்லை.

    ok

    இனி நானும், எதற்கும் என்னை நானே வருத்திக்கொள்ளாமல், ’அனந்தசயனம் மட்டுமே’ செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டுள்ளேன்.

    ooooo

    ReplyDelete

  14. அனந்தசயனராமரை தரிசனம் செய்து விட்டேன்.

    எல்லோர் வாழ்விலும் நிம்மதி, ஆனந்தம் இவற்றை அருளட்டும் அனந்தசயன ராமர்.
    படங்கள் எல்லாம் அழகு. தற்போதைய நிலை கவலை அளிக்கிறது.
    கோவில் புதுபொலிவுடன் திகழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அனந்த சயன ராமரை தரிசித்தோம்.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. ஊஞ்சல் மண்டபத்தின் நிலை பரிதாபமாக இருக்கிறது. கோவில் அழகாய் இருக்கிறது. படங்கள் ஜோர்.

    ReplyDelete
  17. ஆஹா ....இங்கேயும் இன்று சீத்தா ராமன் குறித்த பகிர்வா !!
    ராம லட்சுமணன் அன்பைக் கண்டு வியக்காத மனமும் உண்டோ
    எப் புவிதனிலும் ! லட்சுமணன் தான் ஆதிஷேசனாக உருவடுத்து
    இராம பிரான் தூங்குவதற்கு மெத்தையானார் என்ற உண்மையை
    இன்று தான் தோழி தங்களின் பகிர்வின் மூலம் அறிந்தேன் .மிக்க
    மகிழ்ச்சி .அருமையான இப் பகிர்வுகள் மேலும் தொடர என் இனிய
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. அனந்த சயன ராமர்......

    வெங்கட்டாம்பட்டி - கேள்விப்பட்ட ஊராக இருக்கிறதே எனப் பார்த்தேன். எங்கள் ஊராம் நெய்வேலியின் அருகில் தான் இருக்கிறது. இருந்தாலும் சென்றதில்லை!

    ReplyDelete
  19. ராமர் அனந்த சயனக் கோலத்தில் இருப்பது எனக்கு செய்தி. நானும் தரிசனம் செய்தேன். மன சஞ்சலங்கள் தீர வேண்டிக் கொள்வோம்.

    ReplyDelete
  20. நேற்று நான் போட்ட காமென்ட் காணுமே!

    கோவிலும், கோபுரமும் படு கம்பீரமாக இருக்கின்றன. இத்தகைய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்காமல் பாழடைய விடுகிறோமே என்று இருக்கிறது, அந்த ஊஞ்சல் மண்டபத்தைப் பார்க்கும்போது.

    ReplyDelete