உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, உறவையும் நட்பையும் வெளிப்படுத்தும் உற்சாகமான பாசத்திருவிழாவாகத் திகழ்கிறது ..!
வசந்த விழா எனப்படும் வண்ணமயமான ஹோலிப் பண்டிகை
வடநாட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஹோலி விழாநாளில் பல வண்ணப் பொடிகளைத் தண்ணீரில் கரைத்து ஒருவர்மீது ஒருவர் தெளித்து மகிழ்வதோடு வண்ணப் பொடி கலந்த நீரில் மக்கள் நனைவார்கள்.
ஹோலி விழாக்காலத்தில் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தெய்வத்திருமேனிகளை அலங்கரித்து ஊஞ்சலில் அமர்த்திக் கொண்டாடுவார்கள்.
பெரிய அளவிலான உருவ பொம்மைகள் செய்து பொது இடங்களில் சொக்கப்பனை கொளுத்துவதுபோல் கொளுத்தும் வழக்கமும் உண்டு.
கண்ணன் கோகுலத்தில் குழந்தையாக வளர்ந்தபோது, விஷ்த்தால் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியை அழித்ததன் நினைவாக உருவ பொம்மைகள் கொளுத்தப்படுகின்றன என்றும்; காமதேவனாகிய மன்மதனை சிவபெருமான் எரித்ததன் நினைவாகவும் இவ்வாறு கொளுத்தப்படுகின்றன என்றும் நம்பிக்கை நிலவுகிறது ..!
இரணியகசிபுவின் மகனான பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோதே, நாரதர் மூலம் ஸ்ரீமன் நாராயண மந்திரத்தை அறிந்ததனால்தான் எப்போதும் ஸ்ரீமன் நாராயண நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தான்.
பிரகலாதனின் தந்தையான இரணிய கசிபு, ஸ்ரீமன் நாராயணனை கடும் எதிரியாகக் கருதிய நிலையில், அவன் மகனே நாராயணன் பெயரை ஜெபித்ததால் கோபம் கொண்ட அவன், பலமுறை மகனுக்கு அறிவுறுத்தினான்.
பிரகலாதன் அதைக் கேட்காமல் போகவே, கொடுத்த அனைத்து தண்டனைகளிலிருந்தும் ஸ்ரீமன் நாராயணன் அருளால் மீண்டுவந்ததால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற இரணியகசிபு, தன் தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான்.
ஹோலிகாவை நெருப்பு ஒன்றும் செய்யாது என்பதால், நெருப்பு வளையத்திற்குள் தன் மகனை இழுத்துச் சென்று சாம்பலாக்கும்படி பணித்தான்.
தன் அண்ணன் சொன்னபடி பிரகலாதனின் கையைப்பிடித்துக் கொண்டு பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள் நுழைந்தாள் ஹோலிகா.
சிறுவன் பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை ஜெபித்துக்கொண்டேயிருந்ததால், அக்னிதேவன் பிரகலாதனுக்கு குளிர்ச்சியையும், ஹோலிகாவிற்கு கடுமையான தீயின் உஷ்ணத்தையும் கொடுக்கவே, ஹோலிகா நெருப்பு வளையத்திற்குள் பஸ்பமானாள்.
அதேசமயம் பிரகலாதன் புத்துணர்ச்சியுடன் எவ்வித ஆபத்துமின்றி நெருப்பு வளையத்திலிருந்து வெளி வந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.
வடநாட்டில் மதுரா போன்ற நகரங்களில், கிருஷ்ணலீலையை நினைவுகூறும் வண்ணம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒன்றுகூடி ஆடிப்பாடி வண்ணக்கலவை
நீரைப் பாய்ச்சி விளையாடுகிறார்கள்.
ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் புனித நாள் என்றும் கூறலாம் ..!
அருமையான படங்கள் மனத்தைக் கவர்ந்தது.... இரு குழந்தைகளின் படங்கள் சூப்பர்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteஹிரணயகசிபுவின் தங்கை பெயர் ஹோலிகாவா? புதுத் தகவல் எனக்கு. கதையும் புதிதுதான், படங்கள் அத்தனையுமே மனதைப் பறித்தன.
ReplyDeleteஇதுதான் ஹோலிப்பண்டிகையின் பின்கதையா? ஓகே ஓகே.
ReplyDeleteஹோலி
ReplyDeleteநட்பு தழைக்கட்டும்
உறவு பெருகட்டும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ஹோலி - வசந்த திருவிழாவினை வரவேற்போம்!..
ReplyDeleteஇருப்பினும் பலவிதமான வண்ணப் பொடிகளில் - கொடிய இரசாயனங்கள் கலந்திருப்பதாக சொல்கின்றார்கள். கவனம் தேவை.
வாழ்க வளமுடன்!..
முன்பெல்லாம் வன்முறை இல்லாது இருந்த இந்த ஹோலிப் பண்டிகையில் இப்போதெல்லாம் அதிகம் வன்முறை...... க்ரீஸ், கெமிக்கல், பெயிண்ட், சேறு-சகதி என அனைத்திலும் ஹோலி விளையாட ஆரம்பித்து விட்டார்கள்......
ReplyDeleteநாளை மறுநாள் இங்கே ஹோலி. பல வண்ணமயமான முகங்களைக் காணமுடியும்...... புகைப்படம் எடுக்க மனம் சொன்னாலும், அதன் மேலும் தண்ணீரை அடித்துவிடும் அபாயம் இருப்பதால் எடுப்பதில்லை! :)
ஹோலிகா [DH]தக[h]ன் சிறப்பாக இருக்கும். சென்ற வாரத்திலிருந்தே மதுரா, விருந்தாவன், பர்சானா போன்ற இடங்களில் ஹோலி கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது!
ஹோலி! ஹோலி!! ..... கொண்டாட்டங்கள் ...
ReplyDeleteபற்றிய தங்களின் பதிவு படிக்கவும் பார்க்கவும்
ஜாலி ஜாலியாக உள்ளது.
>>>>>
ஹோலிப்பண்டிகை பற்றிய பல்வேறு கதைகளை சுவைபடக்கூறியுள்ளது படிக்க மிகவும் ருசியாக உள்ளன.
ReplyDelete>>>>>
வழக்கம்போல படங்கள் எல்லாமே மிகப் பொருத்தமாக அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
’தீ’யுக்கும் அஞ்சாத ஹோலிகாவை அந்தத்தீயே சுட்டெரித்ததும் .........
ReplyDeleteபக்தப் பிரகலாதனுக்கு அதே தீயே குளிர்ச்சியைக் கொடுத்ததும் ........
படிக்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அதீதப்பிரியம் வைத்துள்ள அன்பானவர்களை, பக்தர்களை, தன்‘நலம் விரும்பிகளை _ _ _ ......... ‘தீ’ யானது ஒருபோதும் சுட்டெறிக்காது ...
குளிர்ச்சியை மட்டுமே கொடுக்கக்கூடியது என்பதை நானும் நன்கு அறிவேன்.
>>>>>
பிறந்தது முதல் இறக்கும் வரை
ReplyDelete‘தீ’ இல்லாமல் எந்தக்காரியங்களாவது நடைபெறுவது உண்டோ !
அக்னி சாக்ஷியாகத்தானே நாம் எல்லாவற்றையும் செய்து வருகிறோம்.
'தீ’ க்குள் விரலை வைத்தால் ............
உன்னைத் தீண்டிய இன்பம் ...... என்று
அழகான பாடலே உள்ளதே !
>>>>>
மேலிருந்து 8 கீழிருந்து 11 ஆகிய படமான [முக்கண்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteஇமையிலுள்ள ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளது.
ஆப்பிள் கன்னங்களுடன் அந்தப்படத்திலுள்ள அம்பாள், மிகவும் அழகாக, கண்களைக்கவர்வதாக உள்ளது. ;)
சும்மா ஜொலிக்குது ! ;)
’ஹோலி’யான ‘ஜாலி’யான இன்றைய பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
oo oo oo
இந்த ஆண்டின் [2014], தங்களின் வெற்றிகரமான 75வது பதிவுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteஹோலிப்பண்டிகையின் வரலாறு , ஹிரண்யகசிபு தங்கை தகவல்கள் அறியாதன.படங்கள் எல்லாமே அழகாயிருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹொலிகா கதை அறியாதது! சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகோலியின் விபரங்கள் புதிது தான். ஆனால்கதை தெரியும் ப! டங்களும் பகிர்வும் அசத்தல். நன்றி வாழ்த்துக்கள்....!
ReplyDelete