







வடுவூர் தெப்ப்போற்சவம்


ஸ்ரீரங்கம் ரங்நாதர் கோவில் மாசி தெப்போற்சவம் துவக்கத்தையொட்டி,
நம்பெருமாள் எழுந்தருளி,திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்த திருக்காட்சி..



ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவும் எல்லையற்ற சிறப்புப் பெற்ற
கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு காணும் மாசி மக
கடலாட்டு விழா அற்புத காட்சி..!

சென்னை சைதை திருக்காரணியிலும்சந்திரசேகரர் தெப்போற்சவம் கண்டருளி அருள் பாலிக்கின்றார்.


வன வள்ளி, கஜ வள்ளியுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில்சண்முகர் தெப்போற்சவம் கண்டருளும் அருட்காட்சி..!

திருமயிலை கபாலி தீர்த்ததில் தெப்பம் உலா வரும் திருக்காட்சி


மயிலை கபாலீஸ்வரரும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரையில் தீர்த்தவாரி காண்கின்றனர். அன்று எல்லா தலங்களிலுள்ள மூர்த்திகளும் அருகிலுள்ள கடற்கரையிலோ, ஆற்றங்கரையிலோ தீர்த்தமாட வருவார்கள்.

மாசிமாதத்தில் காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச்செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமாத கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.
உகந்ததாகத் திகழ்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா - தங்க சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், , தெப்பத்திருவிழா முதல் நாளில் ஆண்டாள், ரெங்கமன்னாரும், 2 ம் நாளில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, பெரியாழ்வார், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோரும், 3 ம் நாளில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சவுந்தரவல்லி ஆகியோரும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கும்




பத்ராச்சலம் ராமர் கோவில் தெப்போற்சவம்...

பத்ரகாளியம்மன் சமேத வீரேஸ்வரர் தெப்போற்சவம்..


The illuminated swan-shaped float and the Pushkarini Mandapam in the centre of the
'Pushkarini' at the annual Teppotsavam at Simhachalam in Visakhapatnam

.jpg)
திருப்பதி- கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்- தெப்போற்சவம்..


திருச்சானூர் பத்மாவதி அம்மன் தெப்போற்சவம்..

வானமாமலை தெப்போற்சவம்..

மன்னார்குடி தெப்போற்சவம்..



மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான படங்கள் அம்மா... சிறப்பான பகிர்வு... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அழகான படங்கள்.. கண்கள் குளிர்ந்தன.. மகிழ்ச்சி!..
ReplyDeleteநகர் இழைத்து
ReplyDeleteநித்திலத்து
நாள் மலர் கொண்டு
ஆங்கே திகழும்
அணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப்
பைங்கமலம் ஏந்தி
பணிந்தேன்,
பனி மலராள்
அங்கம் வலம்கொண்டான்
அடி!
ஒன்றா, இரண்டா ? எடுத்துச் சொல்ல ?
அனைத்துப் படங்களும் அற்புதம்!.
வடுவூர்,
ஸ்ரீரங்கம்,
திரு மயிலை,
சைதை ,
திரு அல்லிக்கேணி,
செந்தூர் ,
ஸ்ரீ வில்லிபுத்தூர்,
பத்ராசலம்,
திருப்பதி,
திருச்சானூர்,
வானமாமலை,
மன்னார்குடி மற்றும்
வன வள்ளி, கஜவல்லி சமேத சண்முகர்,
பத்ரகாளியம்மன் என
வாசகர் அனைவரையும் ஆன்மீக இன்பச் சுற்றுலாவிற்கு
நொடியில் அழித்துச் சென்ற
நீவிர் வாழியவே !
அழகிய தெப்போற்சவத்திருவிழானை தரிசிக்க செய்த தாங்களுக்கு மிக்க நன்றிகள். அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை.
ReplyDeleteவடுவூர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோயிலைப்பற்றி நான் நிறையவே கேள்விப்பட்டுள்ளேன்.
ReplyDeleteநான் பணியாற்றும் காலத்தில், என் சக ஊழியர் - நண்பர் ஒருவர் [திரு. மோஹன் என்று பெயர்] அந்தக்கோயிலுக்காக ஆண்டுதோறும் ஒரு சிறிய நன்கொடைத்தொகையை என்னிடமிருந்து வசூலித்துச் செல்வார். பிறகு பிரஸாதமும் கொண்டுவந்து தருவார்.
இருப்பினும் நான் இதுவரை அந்தக்கோயிலுக்கு நேரில் சென்று வந்தது இல்லை. அந்தக்குறை தங்களின் இந்தப்பதிவின் மூலம் இன்று பூர்த்தியானதில் மிக்க மகிழ்ச்சி.
>>>>>
தெப்பம் + இதர அனைத்துப்படங்களும் அழகோ அழகு.
ReplyDeleteசிறிய அகல் விளக்குகளால் அணிவகுக்கப்பட்டு அமைந்துள்ள “ஸ்ரீ” என்ற படம் என்னை மிகவும் கவர்ந்தது.
பத்ராசலம் இராமர் கோயில் தெப்பமும் ஜோர் ஜோர் !
விளக்கங்கள் யாவும் அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
o o
தெப்போற்சவங்கள் நேரில் கண்டதில்லை. இருந்தால் என்ன.?உங்கள் பதிவின் மூலம் பார்த்துவிட்டேன். அருமையான படங்கள். எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்க மாட்டேன், கேட்டால் சொல்லவா போகிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்கொள்ளா தெப்போற்சவங்கள். கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
ReplyDeleteதெப்போற்சவ படங்கள் எல்லாமே அருமை. நேரில் தரிசித்ததுபோல ஒரு உணர்வு.
ReplyDeleteஇந்த தொகுப்பு என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.... ம
ReplyDeleteபடங்களின் தரிசனம்... தெய்வீக தரிசனம் அம்மா...
ReplyDeleteஒவ்வொரு கோவிலின் தெப்போற்சவத்தின் படங்களும் கண்ணுக் விருந்தாக இருக்கிறது. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
ReplyDeleteanaithum arumai
ReplyDeleteஅனைத்து தகவல் நன்றாக இருக்கிறது
ReplyDelete