யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!"
தப்பளாம்புலியூர் தேர் திருவிழா
தப்பளாம்புலியூர் எனும் வினோதமான பெயருடன் விளங்கும் தலம் வெவ்வேறு யுகங்களில் விதவிதமான திருப்பெயர்களோடு திகழ்ந்திருக்கிறது.
கிருத யுகத்தில் தற்பரவனம் என்றும், த்ரேதா யுகத்தில் மதுவனம் என்றும், துவாபர யுகத்தில் தேவ வனமென்றும் கலியுகத்தில் வியாக்ரபுரம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
தற்பரன் புலியூர் என்கிற பெயரே தப்பளாம் புலியூராகியிருக்கிறது. தவளையை வட்டார வழக்கு மொழியில் தவக்களை, தப்பளை என்றெல்லாம் அழைப்பார்கள். வியாக்ரம் என்றால் புலி.
தவளையும், புலியும் இத்தல ஈசனை பூஜித்ததால் தப்பளாம் புலியூர் என்றானது. புலி பூஜித்ததாலேயே ஈசனின் திருப்பெயர் வியாக்ரபுரீஸ்வரர்.
900 வருடத்திய மிகப் பழமையான ஆலயம் இது.
இதே தலத்தில் 200 ஆண்டுகள் பழமையான பூமி நீளா சமேத நீலமணி வரதராஜப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
தற்பர மகரிஷி, இத்தலத்திலேயே வசித்து இறைவனை பூஜித்தார். வியக்ரபுரீஸ்வர சுவாமியை நினைத்த மாத்திரத்திலேயே, வேண்டிய
கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்.
பேசும் தெய்வமாகவே நித்ய கல்யாணி அம்மன் திகழ்கிறாள்.
வடநாட்டிலுள்ள உஜ்ஜயினி மற்றும் தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரத்தில் பிரசித்தியோடு வீற்றிருக்கும் கல்யாணி அம்மனுடன் இந்த கிராமத்தில் இருக்கும் நித்ய கல்யாணி அம்மனை ஒப்பிடலாமென்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அருளியிருக்கிறார்கள்.
இத்தல நித்ய கல்யாணி அம்மன் பாரத தேசத்திலும் மற்றும் வெளிநாட்டிலும் வசித்து வரும் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.
தப்பளாம்புலியூர்தலத்தின் அபூர்வ மூர்த்தியான ஏகபாத ருத்திரருக்கு, தென்னகத்திலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் தனிச் சந்நதி அமைக்கப் பட்டுள்ளது.
தப்பளாம்புலியூர் ஏகபாத மூர்த்திக்கு செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும் கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.
நடராஜரும் மூல ஸ்தான இறைவனுக்கு இணையாக தனிச் சந்நதியில் காட்சிளிக்கிறார்.
சகல நோய்களையும் போக்கும் 'ஜ்வர தேவர்' இங்கே வீற்றிருப்பதும் விசேஷமானது. இவரிடம் நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு, புளி இல்லாமல் மிளகு, உப்பு மற்றும் கடுகு போட்டுப் பொரித்த ரசம் படைக்கிறார்கள்.
படிப்பு, திருமணம், தம்பதி ஒற்றுமை ஆகிய பேறுகளை அருளும்
சப்த கன்னிகை சந்நதி இங்குள்ளது.
சப்த கன்னிகை சந்நதி இங்குள்ளது.
சோழர் கால முறைப்படி நவகிரக சந்நதி இல்லை;
சூரியன், சனீஸ்வரருக்கு மட்டும் தனித்தனி சந்நதிகள்.
எலும்பு முறிவு மற்றும் கை கால்களில் ஏற்படும் பிரச்னையை இங்குள்ள
கால பைரவரை வேண்டிக் கொண்டால் உடனே தீருகிறது.
கிழக்கு நோக்கி அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் விளங்குகிறார்.
சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரங்களை தாங்கியபடி
விஷ்ணு துர்க்கை காட்சியளிக்கிறாள்.
விஷ்ணு துர்க்கை காட்சியளிக்கிறாள்.
மழலை பாக்கியம் பெற வேண்டி பக்தர்கள், நித்ய கல்யாணி அம்மனுக்கு வளையல் சாற்றுதல், தொட்டில் கட்டுதல், நெய் மெழுகுதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
நித்ய கல்யாணி அம்மன் மற்றும் வியாக்ரபுரீஸ்வர சுவாமிக்கு
பதினோரு முறை ருத்ரத்தை ஜபித்து (ஏகாதச ருத்ர ஜபம்)
ருத்ராபிஷேகம் நடத்துவது ஆலயத்தின் தனிச் சிறப்பு.
ஸ்ரீ ருத்ரம் - பார்க்கவும் கேட்கவும் ....................
தப்பளாம்புலியூரில் இருக்கும் மற்றொரு பிரசித்தி பெற்ற ஆலயம், பூமிதேவி-நீளாதேவி சமேத நீலமணி வரதராஜப் பெருமாள் சுவாமி ஆலயம் கிராமத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. -
பதினோரு முறை ருத்ரத்தை ஜபித்து (ஏகாதச ருத்ர ஜபம்)
ருத்ராபிஷேகம் நடத்துவது ஆலயத்தின் தனிச் சிறப்பு.
ஸ்ரீ ருத்ரம் - பார்க்கவும் கேட்கவும் ....................
தப்பளாம்புலியூர், திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. -
superb description.
ReplyDeleteyaa devi sarva bhooteshu shanthi roopena samsthitha
namas thasmai namas thasmai namas thasmai namo namaha
subbu thatha
புண்ணியம் செய்தனை,
ReplyDeleteமனமே !
வாள் நுதல் கண்ணியை,
விண்ணவர் யாவரும்
இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை
இன்று வலைத்தளத்தில்
காணுதற்கு
புண்ணியம் செய்தனை
மனமே !!
உங்கள் சேவை
வாழ்க
பல்லாண்டு, பல்லாண்டு..
அழகான படங்களுடன் - ஸ்ரீ நித்யகல்யாணி அம்பிகையின் தரிசனம்..
ReplyDeleteநித்ய வரம் வர்ஷிக்கும்
ReplyDeleteநித்ய கல்யாணி அம்மனுக்கும்
நித்யப் பதிவு நிச்சயம் தரும்
தங்களுக்கும் என் வந்தனங்கள் !
தலைப்பு அருமை, அழகு,
மனதுக்கு மிகவும் ஆறுதல் தருகிறது.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு!
ReplyDeleteஸ்ரீருத்ரம் + பாலாபிஷேகம் காணொளி சூப்பர்
ரெளண்ட் ஷேப்பில் காட்டியுள்ள
தங்களின் தங்கத் தாமரைகள்
மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன்.
பத்துமோ பத்தாதோ என வரிசையாக பத்து
தாமரைகளைக்காட்டியுள்ளது, இந்தப்
பதிவுக்கே மிகவும் எடுப்பாக அமைந்துள்ளன.
ரஸித்’தேன்’ ..... தேனினும் இனிமை !
>>>>>
தம்பளாம்புலியூர் அமைந்துள்ள இடத்தையும்
ReplyDeleteதெளிவாகச் சொல்லி, பெயர் காரணம், ஸ்தல
வரலாறு, வழிபடுவதன் விசேஷம் போன்ற
அனைத்தையும் வெகு சிரத்தையாக வழக்கம்போல
புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.
உதிரு உதிராகச் செய்யும் புட்டுப்போல மிகவும்
இனிப்பாகவும், ருசியோ ருசியாகவும் உள்ளது.
[இனிப்புப்புட்டு என்றதும் ஜிகினாஸ்ரீக்கு நடந்த திரண்டூளி நினைவுக்கு வந்தது. ;))))) ]
>>>>>
ஸ்ரீ ஏகபாத மூர்த்தி, ஸப்த கன்னிகைகள் ஆகிய
ReplyDeleteபடங்கள் கண்களுக்கு விருந்தாக கருத்துக்கு
மருந்தாக அமைந்துள்ளன.
>>>>>
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
வாழ்க !
o o o o o
அருமையான ஆலயத்தின் சிறப்பான தகவல்கள்! ஒரு ஆலோசனை! செல்லும் வழி தங்குமிட வசதிகள், பேருந்துகள், ஆலய நடை திறக்கும் நேரங்களை தந்தால் புதிதாக செல்வோருக்கு உதவியாக இருக்கும். நன்றி!
ReplyDeleteதிரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில்( எண் .5 ), முதல் பரிசினை வென்ற சகோதரி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteஅவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
தப்ளாம்புலியூர் அருகே களப்பணி சென்றுள்ளேன். ஆனால் தாங்கள் கூறிய கோயில்களைப் பார்க்கவில்லை. இனி பார்ப்பேன்.
ReplyDeleteஸ்ரீ நித்தியகல்யானியின் தரிசனமும் படங்களும் விபரங்களும் அருமை !நன்றி!
ReplyDeletewow முதல் பரிசினை வென்றமைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
ஸ்ரீநித்யகல்யாணி அம்மனின் தகவல்கள் சிறப்பு. அழகான படங்கள் விபரங்கள் அத்தனையும் அருமை.நன்றி.
ReplyDeleteமுதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான தகவல்கள்.... வழமை போலவே அருமையான படங்கள்.... எங்கிருந்து தான் இத்தனை படங்களை தேடுகிறீர்களோ....
ReplyDelete