

ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’

வரமஹாலக்ஷ்மி சுப்ரபாதம் பார்க்க..கேட்க .. சுட்டவும் ..!





தும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி கிராமத்தில் உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது.
கோரவனஹல்லி கிராமத்தில் அப்பையா என்ற பால் வியாபாரம் செய்பவர் தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது அசரீரியாக ஒரு குரல்.' என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா'. என்று கேட்டதாம்..
மனப்பிரமையாக இருக்கும் என்று எண்ணி வீடு சென்று விட்டார்.
ஆனால் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அதே குரல் அதே இடத்தில் கேட்கவே பேயோ பிசாசோ தன்னை துரத்துகிறது என பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார்.
அடுத்த நாள் அவர் கனவில் லஷ்மி தேவி தோன்றி அவரை குரல் கொடுத்து அழைத்தது தான்தான் எனவும், தான் அங்கு மறைந்துள்ள இடத்தில் இருந்து தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் அவர் வாழ்வு வளம் பெறும் என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்தையும் கூறினாளாம்.
மறுநாள் கனவில் லஷ்மி தேவி காட்டிய இடத்தில் சென்று பார்க்க அவருக்கு அங்கு கிடைத்தமகாலஷ்மியின் சிலையை வீட்டிற்கு எடுத்து வந்து வணங்கி வந்தார்.
நாளடைவில் அவர் வியாபாரம் செழித்தது. நிலபுலன்களை வாங்கி செல்வந்தர் ஆனார். மகாலஷ்மியை விடாமல் பூஜித்து வந்தார்.
ஒரு நாள் அவர் கனவில் மீண்டும் தோன்றிய மகாலஷ்மி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜைகளை செய்யுமாறு கட்டளையிட, தான் இந்த நல்ல நிலைக்கு ஆளானது மகாலஷ்மியின் அருளினால்தான் என்பதை உணர்ந்தவர் சிறிய தனியார் ஆலயம் ஒன்றை அமைத்து பூஜைகளை செய்யத் துவங்கினார்.
நாலு சுவற்றுக்குள் தன்னால் முடிந்த அளவு சிறிய அளவில் ஆலயம் அமைத்ததோடு கிராமத்தில் தான தருமங்கள் செய்து வந்தார்.
பூஜைகள் துவங்கின. அந்த ஆலயத்துக்கு வரத் துவங்கியவர்கள் அற்புத அனுபவங்களைப் பெற்றார்கள். வாய்மொழி வாய்மொழியாக ஆலய மகிமை பக்கத்து கிராமம், நகரம் எனப் பரவியது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்து கொண்டவர்களின் வாழ்வில் வசந்தம் பெறத் துவங்கின.
ஆலயத்தில் கூட்டம் பெருகியது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமாம்.
கார்த்திகை மாதங்களில் லக்ஷ தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

வேண்டிக் கொண்டவர்கள் இல்லத்தில் மகாலஷ்மியே வந்து அமர்ந்து உள்ளதைப் போல வளம் வர்ஷிக்கவே மகிழ்ந்தனர்..
கோரவனஹல்லி ஆலயம் பெங்களூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. Kempe Gowda கெம்பகௌடா பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இங்கு செல்ல KSRTC பஸ் வசதி உள்ளது.


![[GoravanahalliTemple2.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1wXNgMl0Q6ZrEdVhTFRm3M9_nY4VTz4vZXlA3MC3zivHL-kgV-w_U233na9bNWk6WNGoB_dyvT1lNphQf3kFWM2IkmLP-RrIKjis1y7HzPzox8pG2G0FqxBBWP7Dr2aGuWBwZKm5uvk5U/s1600/GoravanahalliTemple2.jpg)


அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅரமையான படங்கள்
ReplyDeleteசிறப்பான தகவல்கள்
நன்றி
கோரனஹல்லி கிராமத்திலுள்ள மஹாலக்ஷ்மி தாயார் கோவில் பற்றிய பல விவரங்களையும் அழகிய புகைப் படங்களையும் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteமஹா மாயே !
ReplyDeleteசங்கு சக்ர கதாஹஸ்தே !
நானாலங்கார பூஷிதெ !
ஜகஸ்திதே !
ஜகன்மாதே !
மஹா லக்ஷ்மி ....
மாபெரும் துக்கங்களையும்,
பாபங்களையும்
போக்குவாய்,
காப்பாய்,
அருள் புரிவாய் !!
வெள்ளியன்று,
கொரவனஹல்லியில்
வாழும் தெய்வமாய் வீற்றிருக்கும்
மகாலக்ஷ்மியைக் காண
வழி வகுத்த
வனிதா மணியே !
வாழ்க, நீடூழி !!
’வர’ மிளகாய் [விரை மிளகாய்],
ReplyDelete’வர’ட்டுப்பொடி,
’வர’ளி’ மஞ்சள்,
‘வர’தக்ஷிணை
என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.
அதுபோல ’வரலக்ஷ்மி’ பூஜையும் கேள்விப்பட்டுள்ளேன்.
வர மஹாலக்ஷ்மி என்பதை இன்றுதான் தங்கள் வாயிலாகக் கேள்விப்படுகிறேன்.
வர மஹாலக்ஷ்மிக்கும், தங்களுக்கும் என் முதல் வந்தனங்கள்.
>>>>>
அடுத்ததாக தலைப்’பூ’
ReplyDeleteவரம்
வர்ஷிக்கும் அன்னை
வரமஹாலக்ஷ்மி
அழகோ அழகு.
இதை கேட்கவும், பார்க்கவும், படிக்கவும் வரம் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். இது சத்தியம்.
>>>>>
படங்கள், ஸ்லோகங்கள், விளக்கங்கள் அத்தனையும் வழக்கம்போல் அருமையோ அருமை.
ReplyDelete>>>>>
’தும்கூர்’ என்றது எனக்கு புளி ஞாபகமே முதலில் வந்தது.
ReplyDelete’தும்கூர் புளி’ என்பது மிகவும் ஒஸத்தி .... தங்களின் அன்றாடப் பதிவுகள் போலவே.
அதில் புளிப்புடன் கூட ஒருவித இனிப்பு கலந்திருக்கும்.
சவளம் சவளமாக அந்தப்புளியைப் பார்க்கவே நன்னா இருக்கும்.
குப்பை சத்தைகளோ, நார்களோ, புளியங்கொட்டைகளோ நடுநடுவே கலக்கப்படாமல் நன்கு பதம் செய்யப்பட்டு, பனை ஓலைக் கூடைகளில் வைத்து சுருட்டித் தருவார்கள்.
நிறைய பருப்புப்போட்டு தும்கூர் புளியில் காரசாரமாக வெங்காய சாம்பார் வைத்தால், அதை அப்படியே ஒரு அடுக்கு நிறைய குடித்துவிடலாம். அவ்வளவு டேஸ்ட் ஆக மணமாக இருக்கும்.
>>>>>
’அபையா’ என்ற பால் வியாபாரிக்குக் கேட்ட குரல்
ReplyDelete“அ ச ரீ ரி “ யாகத்தான் இருக்க வேண்டும்.
எனவே சரியாகப்பாருங்கோ ......
அது ‘அசிரியாக’ இருக்கவே முடியாதூஊஊஊ.
அசரீரி போன்று நான் இதை இப்போது சொல்லியுள்ளேன்.
திருத்தினால் திருத்துங்கோ ....
திருத்தாவிட்டாலும் போங்கோ ....
பலமுறை எனக்கு புத்திக்கொள்முதல் கிடைத்தும்,
எனக்கென்ன? என என்னால் ஏனோ சிலவற்றை
தங்களுக்குச் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
>>>>>
சற்றே தாமதம் ஆனாலும், அசரீரி + அப்பையா [தீக்ஷிதர்] மாற்றத்தில் ஏமாற்றம் ஏதும் இல்லாமல் போச்சு. நன்றீங்கோ.
Deleteகோரவனஹல்லி ஆலயத்தின் இருப்பிடம், அதற்கு எப்படி எந்த பஸ்ஸில் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் வெகு அழகாக .....
ReplyDelete‘அமுதப்பொழியும் நிலவே’ சிறுகதையில் வரும் பகல் கனவு காணும் ஹீரோ, அரைத்த சந்தனக்கலரில் வந்த கனவுக்கன்னி அமுதாவுக்கு எடுத்துச்சொல்வது போல, அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.
>>>>>
மேலேயுள்ள என் பின்னூட்டத்தின் இரண்டாம் பத்தி ஆரம்பத்தில் ’அமுதைப்பொழியும் நிலவே’ என்று இருக்க வேண்டும். எழுத்துப் பிழையாகிவிட்டது. I feel very sorry for that. - vgk
Deleteயானைக்கும் ..... அடி சறுக்கும், என்பது இது தானோ ?
Deleteமுதல் படம் இதுவரை திறக்கவே இல்லை.
ReplyDeleteமூன்றாவது படத்தை எனக்காக இன்று வெள்ளிக்கிழமை தரிஸனம் செய்வித்து உதவியுள்ளதற்கு நன்றிகள்.
>>>>>
// “பார்க்க ... கேட்க .... சுட்டவும்” //
ReplyDeleteஆகட்டும், எனக்கு ஒரு நேரம் வரும்போது சுட்டுத் தள்ளி விடுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது சுட்டிப்பார்க்கிறேன் என்பதை மட்டுமே அவ்வாறு சொல்லியுள்ளேன். பயந்துடாதீங்கோ.
>>>>>
அனைத்துக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்வாழ்த்துகள்.
பதிவுக்கு பகிர்வுக்கும் நன்றிகள்.
வாழ்க வாழ்கவே !
ooo oOo ooo
தெரியாத கோவில்களைப் பற்றியும், அக்கோவில்களின் சிறப்பைப் பற்றியும் பகிர்ந்துக்கொள்ளும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அம்மா.
ReplyDeleteமுதல் படத்தில், விரிந்த செந்தாமரையில் வீற்றிருக்கும் அழகிய கஜலக்ஷ்மி + தனலக்ஷ்மி அம்பாளை, கண்குளிரக் கண்டு மகிழ்ந்தேன். சந்தோஷம். பச்சைப்புடவை, ரோஸ் ரவிக்கை, ஜிமிக்கி என எல்லாமே ஜோர் ஜோர் ! ;) - vgk
ReplyDeleteபிற மொழிச் சொற்களை
ReplyDeleteஉச்சரிக்கும்போதும்,
தட்டச்சு செய்யும்போதும்
சிறு பிழைகள்
ஏற்படுவது சகஜம்தான்.
இடுகையில் உள்ள
கருத்தினைக் கொள்ளும்போது
இவை குறையே அல்ல.
திரு. வைகோ அவர்கள்
சுட்டிக் காட்டியதால் மேலும்
சில.
பால் வியாபாரியின் பெயர்
' அப்பைய்ய " என்றிருக்க வேண்டும்.
( அப்பைய்ய தீட்சிதர் நினைவுக்கு
வருகிறாரா? )
பஸ் நிலையத்தின் பெயர்
கெம்பே கெளடா ( கவுடா ) ( Kempe Gowda )
நான் நக்கீரன் அல்ல.
நான் இதை குறிப்பிட்டது
மொழி தெரியாத பலருக்காக .
படங்களும் பகிர்வும் அருமை அம்மா..
ReplyDeleteஅழகியபடங்களுடன் மகாலஷ்மி பகிர்வு மனம்கவர்ந்து விளங்குகிறது.
ReplyDeleteகர்நாடகத்திலிருக்கும் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDelete