Sunday, March 16, 2014

சிறுகதை விமர்சனப் போட்டியில் சில வெற்றிகள்..!



முதலில் விமர்சனப்போட்டி என்று அறிவித்ததும் அதில் கலந்துகொள்ளும் எண்ணம் இருக்கவில்லை..

பாடத்திட்டத்தில்  இல்லாத கேள்விகளைக்கொண்ட வினாத்தாளை தேர்வு அறையில் பார்த்த மாணவனைப்போல் அடுத்த பதிவுக்கு தாவிச்செல்லவே முடிவெடுத்திருந்தேன்..விமர்சனம் எழுதத்தெரியாதே ...
வெளிநாட்டு பயணத் தயாரிப்பிலும் பரபரப்பாக இருந்த நேரம் அது..!

என்னதான் ஸ்கைப்பிலும் , ஃபேஸ்டைமிலும் நினைத்தபோதெல்லாம் மகன்களுடன் பேசவும் பார்க்கவும் முடிந்தாலும் ஏனோ நேரில் பார்க்கவேண்டும் என்கிற தவிப்பு குறையாமல் இருந்தது..

அதே தவிப்பை அடைந்த மகனும்  கிளம்பி இல்லம் வந்துவிடவே பயணம் தள்ளிப்போடப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள முடிந்தது..

மூன்று முறை விமர்சனம் எப்படி எழுத வேண்டும் என்று பரிசு பெற்ற விமர்சனங்கள் பாதை அமைத்துக்கொடுத்தன,, 

இப்போது தொடர்ச்சியாக மூன்று முறை பரிசுக்கு எமது விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது..ஹாட்ரிக் வெற்றி திருப்தி அளிக்கிறது.. வெற்றி என்கிற செய்தி தன்னம்பிக்கையை வளர்க்கிறது..
எழுதியவர் யார் என்பது நடுவருக்குத்தெரியாது.. நடுவர் யார் என்பதும் எழுதுபவர்கள் அறியமாட்டார்கள்..

மிகப்பெரிய நிர்வாகத்திறமை பெற்ற உயர்திரு .வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் சிந்தனையில் உதித்த சிறப்பான சிறுகதை பரிசுப்போட்டி
மேலும் சிறப்படைய வாழ்த்துகள்..!

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html

VGK 06 ] உடம்பெல்லாம் உப்புச்சீடை - விமர்சனப்போட்டி’







மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 



திருமதி. 



இராஜராஜேஸ்வரி 


அவர்கள்






http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"
















VGK 04, VGK 05 and VGK 06 

ஆகிய மூன்று போட்டிகளிலும் 

அடுத்தடுத்து தொடர்ச்சியாக 

பரிசுக்குத் தேர்வாகியுள்ள 

இவர்கள் இன்று



ஹாட்-ட்ரிக் 


வெற்றியாளர் 



ஆக அறிவிக்கப்படுகிறார்கள்.





’ஹாட்-ட்ரிக்’ 


பரிசு பெறவும் 

தகுதியாகியுள்ளார்கள்.


அதைப்பற்றிய மேலும் விபரங்கள் 

கீழே தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி

மகளிர் அணியில் முதன்முதலாக 

’இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டி’யில்

‘ஹாட்-ட்ரிக்’ பரிசுபெறும் வெற்றியினை 

எட்டியுள்ளதைப் பாராட்டி, 


திருமதி. இராஜராஜேஸ்வரி 


அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.









  





மூன்றாம் பரிசினை வென்றுள்ள 


’ஹாட்-ட்ரிக்’ வெற்றியாளர்



திருமதி


இராஜராஜேஸ்வரி 


 அவர்களின் விமர்சனம் இதோ:










உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று அனைவருக்குமே தெரியும்தான்..

தெரியாத தர்மங்களா , நியாயங்களா , சாஸ்திரங்களா பழமொழிகளா..எல்லாமேகரைத்துதான் குடித்திருக்கிறோம்..

ஆனால் நமக்கென்று   மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நிகழும் பொழுது நடந்துகொள்ளும் முறை ,அடுத்தவர்களை வார்த்தைகளாலும் ,பார்வைகளாலும் துன்புறுத்தும் போது நியாயமாகவே எண்ணிக்கொள்கிறோம்..அதனால் பாதிக்கப்படுபவர் படும் மனவேதனைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை..

முதல் பார்வையில் கதையின் தலைப்பு உடம்பெல்லாம் உப்புசீடை என்று கவனத்தைக் 
கவருகிறது..  அடுத்து பொருத்தமான ஓடும் ரயில்கள் , அந்தந்த ரயில் நிலையங்களின் பெயர்களை மிகச்சரியாக அறிமுகப்படுத்தி நாம் அந்தந்த  நிலையத்தில் இருப்பதான உணர்வை ஏற்படுத்தி . , ரயில் நிலையத்தில் விற்பனைக்கடைகள் என்று காட்சிப்படுத்தி காசிக்கு - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் உணர்வை வரவழைத்துவிடுகிறார் கதை ஆசிரியர்.

 ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசைப்படும் சிறுவன் ரவி, சிறுமி கமலா , விநோத உருவத்தைக்கண்டு நடுங்கும் 13 வயது சிறு பெண் விமலா ,  கணவனின் கோபத்துக்கு தூபம் போடும் மனைவி என்று மிகவும் கவனமாக பயணம் செய்யவேண்டிய பயணியாக , தந்தை இறந்து பதினைந்து நாள்தான் ஆன நிலையில் அந்த உடம்பெல்லாம் உப்புசீடை போன்ற தோற்றத்தில் விகார முக மனிதர் தன் குழந்தையுடன் சௌஜன்யமாக பழகுவதைப் பொறுக்கமுடியாத  குடும்பத்தலைவர் பட்டாபி ஐஸ்கிரீம் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடும் மகனிடம் தன் மனதின் அனலைக்காட்டமுடியாத கோபத்தில் எரிந்து விழுவது  அவர் மனநிலையை நமக்குத் தெளிவாக்குகிறது.. 

நமக்குப் புரிகிறது..பேச்சு வாங்கியவரிடம் நமக்கு பச்சாதாபமும் தோன்றுகிறது..
வயதான மூத்தகுடிமகனான உப்புச்சீடை மனிதர் தன் உரிமையான லோயர் பர்த்தை அந்த குடும்பத்திற்கு விட்டுக்கொடுத்துவிட்டு சிரமத்துடன் அப்பர் பர்த்துக்கு ஏறுவதும், அதை சற்றும் உணர மறுத்து அலட்சியப்படுத்தும் நன்றி மறந்த குடும்பம்  - இதை எல்லாம் பார்க்கும் போதுதான் அந்த உப்புசீடை மனிதர் அஸ்தி கலசத்தை தக்க சமயத்தில் பட்டாபி குடும்பத்தினரிடம் சேர்க்க எடுத்துக்கொள்ளும் சிரத்தை உன்னத இடத்தைப்பிடிக்கிறது..

பச்சை வாழைப்பழங்கள் நிரம்பிய பை சிறுத்துப்போவதை சிரத்தையாக காட்சிப்படுத்தி சாப்பாட்டு நேரங்கள் வந்து  போவதை உணர வைக்கிறார் கதை ஆசிரியர்.. 

கொத்துமல்லி துவையலை மோப்பம் பிடித்து சங்கர மடத்தில் அது அவருக்கு பிடித்த உணவு என்று சரியான இடத்தில் மணம் பரப்பவைக்கிறார் கதை ஆசிரியர்..

எந்த மனிதரின் முகத்தில் மற்றொரு முறை விழிக்க விரும்பாமல் லைட்டைக்கூட வேண்டுமென்றே போட மறுத்து நைட் லேம்ப் வெளிச்சத்தில் பெட்டிகளை சரிபார்த்து எடுத்து இறக்கினாரோ அதே காரணத்தால் அஸ்திகலசம் தவறிப்போனது கதையின் வலிமையான முடிச்சு.  

அதே உப்புசீடை மனிதரின் உயர்ந்த உள்ளத்தையும் சாஸ்திர மேதைமையையும் உணர்ந்து மஹா பெரியவாளையே அவர் உருவத்தில் தரிசித்து வித்வத் சம்பாவனையும் அளிக்கத் தயாராகும் போது உன்னத இடத்திற்கு  உப்புசீடை மனிதரை மறக்கமுடியாத சிகரத்தில் அமர்த்திவிடுவது நிஜம்... 

கடைசிப்படத்தில் கீதாசாரியன் ஆன கண்ணனை ரயிலின் இறுதியில்  பதித்திருப்பதைப் பார்க்கும்போது  - கதை ஆசிரியர் தான் சொல்ல நினைத்த கருத்தை கீதையின் சாரத்தைப்போல்  நச் என்று மனதில் பதித்திருப்பதை உணர்கிறோம்..

அந்த ரயிலுக்கு கையசைத்து நம்மையறியாது விடை தரும்போது கதையில் இவ்வளவு நேரம் கரைந்திருந்தது சட் என்று  உறைப்புடன் உரைக்கிறது  
அதுதானே கதையின் வெற்றி முரசு..!

மிகப்பிரபலமான தமிழ் மாத இதழான “மங்கையர் மலர்” மார்ச் 2006 இல் சுடச்சுட வெளியிடப்பட்ட  உடம்பெல்லம் உப்புச்சீடை கதை
என் வாழ்வெல்லாம் மறக்கமுடியாத உண்மைக்கதை ..

இந்த கதையை “மங்கையர் மலர்   புத்தகத்திலிருந்து தனியாக எடுத்து பத்திரப்படுத்தியிருந்தேன் ..

ஏனென்றால்  அதற்கு சில ஆண்டுகள் முன்பாகத்தான் இப்படி உடம்பெல்லாம் உப்பு வெல்லசீடையாக  எங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு பிரபலமான நூற்பாலை அதிபரைப் பார்த்து அந்த 13 வயது சிறுமியைப்போல அலறியடித்து வீட்டிற்குள் ஓடியவள் நான் தான் ..

அவர் மிகவும் தண்மையாக என் மாமனாரிடம் நான் பயந்து ஓடியதை விவரித்தாராம் .. 

இத்தனைக்கும் எங்கள் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு உபசாரம் செய்வதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன் என்று எல்லோரும் சொல்வார்கள்.. அந்த தோற்றத்தைப்பார்த்துதான் அதிர்ந்து ஓடி விட்டேன்.. 

 ஒரு முறை  குடும்பத்தில் குழந்தைகளுடன் சுற்றுப்பயணம் செய்தபோது   பியட்  காரின் 
ஒரு சக்கரம்  பெருத்த மழையில்  சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தில்  இறங்கிவிட்டது.. 

அப்போதெல்லாம் கார் வாங்குவதென்றால் புக் செய்து சில மாதங்கள் காத்திருந்த பிறகே வாங்கமுடியும் ..ஷோ ரூமிலிருந்து புதுக்கார் ஃபேன்சி நம்பருடன் வந்தவுடன் குஷியாக குடும்பத்துடன் குருவாயூருக்கு புறப்பட்டிருந்தோம் நாங்கள்.. 

அந்த இரவில் திறந்திருந்த ஒரே ஒரு தேநீர்க் கடையில் இருந்த கிராமத்து ஆட்கள் சிலர் ஓடி வந்து நிமிடத்தில் அலேக் ஆக வண்டியை பள்ளத்திலிருந்து தூக்கி சரியாக வைத்துவிட்டு இரண்டு குடைகள் கொண்டு வந்து எங்களை மழையில் நனையாமல் பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துசென்று  தேநீர் கொடுத்து உபசரித்தனர்.. 

செல்போன்கள் இல்லாத காலம் .. அந்த கடையில் இருந்த டெலிபோனில் என் கணவர் அழைத்தது  அந்த வெல்லசீடைக்காரரின் எண்ணைத் தான் ..!

அவர் உடனே நாங்கள் எங்கிருக்கிறோம் என விசாரித்து அறிந்து அங்கிருந்து தன் வீட்டுக்கு வரும் வழியை சொல்லி அழைத்தார்..

நாங்களும் சென்றோம் ..என் கணவரை உரிமையுடன் இந்த மாதிரி குழந்தைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு இரவுப்பயணம்  உகந்தல்ல என அறிவுறுத்தினார்.. 

பிரம்மாண்டமான அவரது வீட்டில்  சமையல்காரர்கள் எல்லாம் அவர்கள் இடத்தில் உறங்கச் சென்றுவிட்ட நிலையில் அவர் மனைவியே  சமையலறைக்குச் சென்று கோதுமை உப்புமா தயாரித்து  கெட்டித்தயிருடன் பரிமாறினார் ..

வீட்டில் கோதுமை உப்புமா செய்தால் வீட்டை விட்டு வெளியில் சென்று நின்று அழும் என் பிள்ளைகள் அன்று பாட்டி இன்னும் கொஞ்சம் உப்புமா தாருங்கள் உப்புமா சூப்பர் என்று மழலை மொழி பேசியவாறு சாப்பிட்டதைக் கண்டு அந்த அம்மா மகிழ்வுடன் குழந்தைகளை அணைத்து கொஞ்சினார்..

எங்கே செல்ல வேண்டும் என்று கேட்ட  உப்பு -வெல்லசீடை - குருவாயூர் என்றதும் தானே தனக்குத் தெரிந்த குருவாயூர் ஹோட்டலில் ரூம் புக் செய்து கொடுத்து சித்திரை முதல் நாள் விஷுக்கனி தரிசனம் செய்ய உதவினார்..

ஆகவேதான் இந்த கதையை தனியே எடுத்து பத்திரப்படுத்தி இருந்தேன் ..வீட்டில் எல்லோருக்கும் படித்துக்காட்டினேன்..

பதிவுலகத்திற்கு வந்து இந்த கதையைப்படித்த பிறகுதான் எனக்குப்பிடித்த கதையை எழுதியர் வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்கிற பெண்மணி அல்ல வை. கோபாலகிருஷ்ணன் என்கிற பெயரில் எழுதும் ஆசிரியர்  என்று அறிந்து மகிழ்ந்தேன்..உற்சாகமாக பின்னுட்டங்கள் எழுத கற்றுக்கொண்டேன்..!

30 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...அம்மா
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. அருமையான அழகான விமர்சனம்.
    நீங்கள் வெற்றி திருமகள் அல்லவா!
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    படங்கள், மலரும் நினைவுகள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் அம்மா..! விமர்சனமும் அருமையாக இருந்தது..

    ReplyDelete
  4. வாழ்த்துகள் அம்மா! உங்க விமர்சனமும் அருமையாக இருந்தது..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. விமர்சனம் அழகாக திட்டமிட்டு எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் ...! அழகான படங்களும்.
    குருவாயூருக்கு சென்றவிடத்து பிள்ளைகள் உப்பு மா விரும்பி சாப்பிட்டது சந்தோஷமான விடயம். நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சகோதரி. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  9. முதல் படமே, பசுமை மிக்கதாகவும், தங்களின் தொடர் வெற்றிக்குப்பாதை அமைத்துக் கொடுத்தது போலவும் மிக அழகாக கண்களைக் கவர்வதாக அமைந்துள்ளது.

    சிகப்புக்கம்பள வரவேற்பு என்று பொதுவாகச் சொல்வார்கள். அதை வலது புறம் சிகப்புப்பூக்களுடன் நன்கு உயர்த்திக்காட்டியுள்ளீர்கள்.

    தங்களின் பசுமையான [பச்சைக்குழந்தை போன்ற] எண்ணங்கள் போலவே அந்தப்படத்தில் உள்ள பாதையும் பச்சையாக .... பச்சைக்கம்பளம் விரித்தது போல மிக அழகாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. ’பொதுவாக என் மனஸு தங்கம் ...
    ஒரு போட்டியினு வந்து விட்டால் சிங்கம்’

    என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

    சாதனையையும் எட்டிப்பிடித்து விட்டீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  11. போட்டிகள் என்றாலே அதில் எவ்வளவோ நெளிவு சுளிவுகள் இருக்கும் தான். நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கலந்து கொண்டாலும், பரிசுக்கு அது தேர்வாகவும் என உறுதியாகச் சொல்ல முடியாத நிலை நிச்சயமாக ஏற்படும்.

    இருப்பினும் போட்டியில் கலந்து கொள்வதும், நம்மால் இயன்ற அளவு நம் எழுத்துத்திறமைகளை அதில் காட்டுவதுமே நாம் செய்ய வேண்டிய / செய்யக்கூடிய முதல் வேலை.

    அதுவே வெற்றி என்ற இலக்கை அடைய நாம் எடுத்து வைக்கும் முதல் ஸ்டெப். மற்றவை நம் அதிர்ஷ்டம் + பகவத் ஸங்கல்ப்பம் எப்படியோ அதன்படியே நிகழக்கூடியது. அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படவே கூடாது.

    >>>>>

    ReplyDelete
  12. போட்டியில் நாம் கலந்து கொண்டால் மட்டுமே வெற்றிபெறும் வாய்ப்புக்களை அடையவும், வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புக்களையும் அறிய நாம் ஒரு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கவும் முடியும்.

    >>>>>

    ReplyDelete
  13. போட்டியில் பரிசினை வென்றுள்ளவர்களுடன் நம் எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து ஓரளவு சமாதானம் அடையலாம்.

    நம்மை நாமே சற்றே மேம்படுத்திக்கொள்ளலாம். நம் எழுத்தினை நாம் மேலும் மெருகூட்டிக்கொள்ள இது நிச்சயமாக உதவும்.

    நாம் நம் எழுத்துத் திறமைகளை பற்றி எடைபோட்டுப்பார்க்க இது, நேர்மறையாக நமக்கு உதவும் என்பது மட்டுமே இதில் நமக்குக் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய இலாபமாகும்.

    >>>>>

    ReplyDelete
  14. //விமர்சனம் எழுதத்தெரியாதே//

    நான் தங்களை கவனித்தவரை, நீரை ஒதுக்கிவிட்டுப் பாலைமட்டுமே அருந்தும் அன்னபக்ஷி போன்றவர்கள் தாங்கள்.

    வலையுலக ஆரம்ப நாட்களில், முன்பெல்லாம் எந்தக் குப்பைப்பதிவுகளாக இருப்பினும், எந்த மொக்கைப்பதிவுகளாக இருப்பினும், எந்தக் கச்சடாப் பதிவுகளாக இருப்பினும், ஓடோடிச்சென்று, அவற்றையும் படித்துவிட்டு, அதில் ஏதேனும் ஒரு சிறுதுளி நல்ல விஷயம் மட்டுமே இருந்தாலும், அதைப் பாராட்டி இரண்டு வரிகளாவது பின்னூட்டமாக எழுதிவிட்டு வருவீர்கள்.

    அவற்றைப்பார்க்கும் எனக்கு, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    இவர்கள் போய் ..... அதுவும் இந்தப்பதிவுக்குப்போய் ..... கருத்துச் சொல்லனுமா ? என நினைத்து வேதனைப்பட்ட நாட்களும் உண்டு.

    பிறகு போகப்போகத்தான், சுதாரித்துக்கொண்டு இவற்றையெல்லாம் வெகுவாகக் குறைத்துக்கொண்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + நன்றி.

    >>>>>

    ReplyDelete
  15. இதுபோல நிறைகளை மட்டுமே பாராட்டிப் பழக்கமாகிவிட்ட தங்களுக்கு, விமர்சனம் எழுதுவது என்பது உண்மையிலேயே கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கக்கூடும் என்பதையும் நான் அறிவேன்.

    ஏனெனில் பின்னூட்டம் கொடுப்பது என்பது வேறு, விமர்சனம் எழுதுவது என்பது வேறு.

    விமர்சனத்தில், படைப்பினை நன்கு மனதில் வாங்கிக்கொண்டு, திறனாய்வுகள் செய்து, குறைகள் + நிறைகள் என அனைத்தையுமே எடுத்துச்சொல்ல வேண்டியதாக இருக்கும்.

    பிறரை + பிறரின் படைப்பினை குறைகூறத்தான் தங்களுக்கு மனஸே வராதே ! அவ்வளவு ஒரு குழந்தை மனஸுடையவர் அல்லவா தாங்கள் !!

    >>>>>

    ReplyDelete
  16. இருப்பினும் இந்த என் ’சிறுகதை விமர்சனப்போட்டி’களில், நிறைவுகளை மட்டுமே நிறைவாகச்சொல்லி, தொடர்ச்சியாக மும்முறை அடுத்தடுத்து பரிசுகள் வாங்கியுள்ளீர்களே ... அது மிகவும் அதிசயம் தான் .... ஆச்சர்யம் தான்.

    அதுவும் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளில் ‘ஹாட்-ட்ரிக்’ வெற்றியாளர் என்ற பெருமையினை அடைந்துள்ள முதல் பெண்மணி தாங்கள் அல்லவோ !

    இவை அனைத்தும் மிகவும் இனிமையான நினைவலைகள் தான் !

    >>>>>

    ReplyDelete
  17. மிகவும் திட்டமிட்ட என்னுடைய இந்தப் போட்டியில் உள்ள சிறப்பம்சங்களை நன்றாக உணர்ந்து, தாங்கள் என்னை ஸ்பெஷலாகப் பாராட்டியுள்ளதும், மேலும் இந்தப்போட்டி சிறப்படைய வாழ்த்தியுள்ளதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    என் அன்புக்குரிய அம்பாளே நேரில் வந்து அசரீரி போலச் சொன்னதாக நினைத்து மகிழ்கின்றேன்.

    >>>>>

    ReplyDelete
  18. ஒருசில குறிப்பிட்ட காரணங்களால், நிர்பந்தங்களால், பரிசுக்குத்தேர்வான தங்களின் விமர்சனத்தை முழுமையாக என்னால் என் பதிவினில் வெளியிட முடியாமல் போனது. அதைப்பற்றிய முழு விபரத்தினை தங்களிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ள முடியாமலும் போனது.

    இருப்பினும் தாங்கள் இந்தப்பதிவினில் தங்களின் மனம் திறந்த முழு விமர்சனத்தையும், முழுமையாக வெளியிட்டுள்ளீர்கள், அதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    >>>>>

    ReplyDelete
  19. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேடம். இன்னும் பல பரிசுகள் பெறவும் இனிதே வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  20. பரிசுகள் என்பது ஒருபுறம் தனியாக இருக்கட்டும். அது கிடைக்கட்டும் அல்லது கிடைக்காமல் போகட்டும். அதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

    இந்த என் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’யில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, மிகச்சிறப்பாக விமர்சனம் செய்து எழுதி அனுப்பிக்கொண்டிருக்கும், தங்களைப்போன்ற ஒவ்வொருவரின் விமர்சனங்களையும், நான் மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து மகிழ்ந்து சேமித்து வருகிறேன் என்பதை தாங்களும், தங்களைப்போன்ற மற்றவர்களும் தயவுசெய்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இவற்றையெல்லாம் திரட்டி, தொகுத்து, ஒவ்வொருவருக்கும், பெருமையும், புகழும் கிடைக்க நான் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள பல திட்டங்கள் என் மனதில் உள்ளன.

    அவையெல்லாம் என்றாவது ஒருநாள் நிறைவேற ஆயுஷும் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். குருவருளும் திருவருளும் துணை நிற்க வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  21. தாங்கள் பெற்றுள்ள இந்தப்பரிசுகளை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு, வெற்றி என்ற செய்திகளால் தங்களுக்கு ஓர் தன்னம்பிக்கை ஏற்பட்டதாகச் சொல்லி, தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களின் உற்சாகம் + ஆர்வம் + தன்னம்பிக்கை + ஈடுபாடு முதலியன மேலும் மேலும் தொடரவும், தாங்கள் மேலும் மேலும் இதே போட்டிகளில் பல வெற்றிகளைப் பெறவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் / ஆசிகள்.

    பிரியமுள்ள VGK

    ooo ooo ooo ooo

    ReplyDelete
  22. வாழ்த்துகள் அம்மா. மேலும் மேலும் பல சாதனைகளை அடைய வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  23. வரிசை கட்டி நிற்கும் பரிசுகள் தரும் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அம்மா! மிக அருமையான விமர்சனம்! இந்த விமர்சனப் போட்டியில் கலந்துகொள்ள நினைத்தும் சில சங்கடங்களால் கலந்துகொள்ளவில்லை! கலந்துகொண்டு நிறைவான விமர்சனம் எழுதி வெற்றி பெற்றமைக்கு தங்களுக்கும் வாசகர்களை ஊக்குவிக்கும் கோபாலகிருஷ்ணன் ஐயாவிற்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் மேடம் !! மென்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  26. நல்ல விமர்சனம்.

    வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete