Saturday, March 22, 2014

உலக தண்ணீர் தினம் 2014








Captura de pantalla 2014-01-16 a la(s) 15.57.41
உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர்
ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டம் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்ததன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் 
தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். 

பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். 

குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் 
உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. 

எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு 
குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. 

ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. 

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும்.

‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை  ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டு‌ம், த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌க்கவேண்டுமே  ம‌னித சமூக‌ம்? ‌

நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

இந்த அத்து மீறலை விசாரிக்கும் நீதிமன்றமே நீர்நிலைகளை ஆக்ரமித்துக்கட்டப்பட்டதாக இருக்கும் போது எங்கே சென்று முறையிடுவது இந்த கொடுமையை..!1?/

கோயில்கள் தோறும் குளம் வைத்திருப்பது நமது மரபு.
இன்றும் பெரும்பாலான குளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?

புனித நதிகள் யாவும் படும்பாடு சமயச் சடங்குகள் 
என்ற பெயரால் தொலைக்கின்றோம்.

உயிர் வாழ்வதற்குச் சுத்தம் முதலாம் பட்சம் சமயச் சடங்குகள் இரண்டாம் பட்சம் என்ற நிலையை எப்போதுதான்  உணரப் போகிறோமோ?

அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள் ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

விரைவில் இதற்கெல்லாம் தீர்வு கண்டு நலவாழ்வுக்கு 
வழி செய்வோம். என உறுதி பூணவேண்டும். !.

தொடர்புடைய பதிவுகள்:
உலக தண்ணீர் தினம் 2012
உலக தண்ணீர் தினம் 2013



14 comments:

  1. தண்ணீர் சிக்கனம் தேவை எக்கணமும்... ஒவ்வொருவரும் வரும் தலைமுறையை நினைவில் கொண்டு செயல் பட வேண்டும்...

    ReplyDelete
  2. தண்ணீர் குறித்த விழிப்புணர்வு நம்க்கு நிச்சயம் தேவை சகோதரியாரே.

    ReplyDelete
  3. கடைசி படத்தில் ஒரு பெண், கடந்த 2-3 வருடங்களாகவே, தண்ணீரைத் தொடர்ந்து [உங்கள் பதிவினில்] வீணாக்கிக்கொண்டே இருக்கிறாள்.

    நீர் சிக்கனத்தைப்பற்றி வலியுறுத்திக்கூறும் நீர் அவளை அங்கிருந்து [அந்தப்பழைய பதிவிலிருந்து] கடத்தி வந்து இங்கு இன்று மீண்டும் காட்சிப்படுத்தியிருப்பதை அடியேன் வன்மையாகக் கண்டிக்கிறேன் ;)))))

    ஆனாக்க அந்தப்பட நல்லாவே இருக்குதூஊஊஊஊ.

    >>>>>

    ReplyDelete
  4. கீழிருந்து இரண்டாம் படத்தில் அந்தப்பூனையார் என்ன செய்கிறார்?

    நீல கலர் பலூனைக் கடித்து அதில் உள்ள நீரைக் குடித்து விடுகிறாரா ?

    எதையாவது இதுபோல குறுக்குசால் விட்டு காட்டி அசத்துவது தங்களின் ஸ்பெஷாலிடி. ;)

    >>>>>

    ReplyDelete
  5. என் ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடியும்வரை தங்களைப்போன்ற சுறுசுறுப்பான, ஆர்வமான, ஈடுபாட்டுடன் கூடிய மிகச்சிறந்த எனக்கு மிகவும் பிடித்த நபர், என்னுடன் எனக்கு உதவியாளராக இருந்தால் எனக்கு எவ்வளவு வசதியாக இருக்கும் என கற்பனை செய்து பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

    நினைப்பதெல்லாம் .... நடந்துவிட்டால் ......... ;)))))

    >>>>>

    ReplyDelete
  6. அதுபோல அந்த மஞ்சள் கிளி என்ன செய்கிறது?

    செல்ஃபோன் போன்ற எதையோ கொத்தி, அதிலிருந்து ஷவர் போல நீரை வரவழைத்துக் குளிக்கிறதா?

    எப்படித்தான் இதுபோன்ற அனிமேஷன் படங்களைப் பொருத்தமாகப் பிடிக்க முடிகிறதோ, உங்களால் !!!!!

    >>>>>

    ReplyDelete
  7. நீர் மனித சமுதாயத்துக்கு எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம்
    நீ....ரு....ம் தங்களின் அன்றாடப் பதிவும் ....... எனக்கு.

    தெவிட்டாத இன்பம் தரும் தேன் சொட்டும் பதிவுகள்.

    >>>>>

    ReplyDelete
  8. _ _ _ தீ...யை அ ணை க் க வு ம்
    ’நீ ரே’ தேவையாக உள்ளது.

    திருப்பதியிலேயே ’தீ’ யாம்.

    செய்திகள் படித்தேன்.

    ‘தீ’ எப்படியும் ஒருநாள்
    அ ணை க் க ப் ப ட் டே தீரும்.

    >>>>>

    ReplyDelete
  9. எல்லாப்படங்களும், செய்திகளும், தொடர்புடைய பதிவுகளும் அருமையோ அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

    ooo O ooo

    ReplyDelete
  10. நியாயமான கருத்துக்கள்.. அழகான பதிவு!..

    ReplyDelete
  11. பள்ளிப் பருவத்தில் ( 1968 - 1970 ) , வாரப் பத்திரிகை ஒன்றில் " எங்கு பார்த்தாலும் கான்கிரீட் காடுகள் " என்ற சுஜாதாவின் வரிகளைப் படித்து ரசித்ததுண்டு. " என்ன ஒரு அதிதமான கற்பனை " என்று வியந்ததும் உண்டு. பின்னர் பல எழுத்தாளர்களின் கற்பனையில் ' பளபளவென்ற தார் ரோடு, மழ மழவென்ற சிமெண்ட் சாலைகளை" சந்தித்ததுண்டு.

    பாரதியின் ' காணி நிலம் வேண்டும், வீடு வேண்டும், வீட்டைச் சுற்றி தோட்டம் வேண்டும் " என்ற கனவில் பாதி நினைவானது. பின் வந்த எழுத்தாளர்களின் கற்பனையில் வந்த கான்கிரீட் காடுகளும் பளபளவென்ற சிமெண்ட் சாலைகளும் நினைவானது. வீடும், வீட்டைச் சுற்றிய கான்கிரீட் காடுகளும், சிமெண்ட் தளங்களும்தான் இன்றைய நிஜம்.

    நகரங்கள் மட்டுமல்ல, சிறு கிராமங்களும் சிமெண்ட் தரையில் பளபளவென
    மின்னுகின்றன.

    ஏரிகள், குளங்கள் இருந்தாலும், அதற்கு நீர் கொணர்ந்த பாதைகளும், கால்வாய்களும் காணாமல் போய்விட்டன.

    கான்கிரீட் போர்வையால் , வான் தரும் மழை நீரை உறிஞ்சமுடியாமல் இந்த மண் தவிக்கும் தவிப்பு மனிதனுக்கு புரியவில்லை.

    சிறு வயதில், திருவானைக்காவல் ஜம்புகேச்வரரையும், அவரைச் சுற்றி நீர் ஊற்றெடுத்துப் பெருகுவதையும் கண்கள் விரிய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று, ஊற்றுக் கண்கள் அடைபட்டுப் போனதால், சிவ லிங்கத்தை சுற்றி நீர் ஊற்றெடுப்பதில்லை என்று எங்கோ படித்து கண் கலங்கியிருக்கிறேன். கோவிலைச் சுற்றி கான்கிரீட் காடுகள் முளைத்ததின் விளைவோ இது ?

    இறைவா !! வானவர்களுக்கு அமுதம் தந்த நீ , இந்த வெறும் நரர்களுக்கு நீரைத்தரமாட்டாயா?

    ReplyDelete
  12. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.......

    இன்று முதலாவது தொடங்குவோம்.....

    ReplyDelete
  13. திரு வென்கட் நாகராஜ் சொன்ன மாதிரி தன்னீர் சிக்கனம் தேவை இந்த நேரம்...

    ReplyDelete
  14. உலக தண்ணீர்தினத்தில் நீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்பு கட்டுரை அருமை.

    ReplyDelete