Monday, March 24, 2014

அலை புரளும் கடற்கரையில் அருட்கடல் முரடீஸ்வரர்




ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம் வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம் தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம் பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

மங்களூரிலிருந்து கார்வார் வரையிலான கர்நாடக கடற்கரைப் பகுதியில் பொதிந்து கிடக்கும் கர்நாடகாவின் பொக்கிஷங்களில் ஒன்று தான் முர்டேஷ்வர் கோயில், 
மங்களூரிலிருந்து கோவா செல்லும் ரயிலில் ஏறி முர்தேஷ்வர் ஸ்டேஷனில் இறங்கலாம். நேர் எதிரே இருக்கும் கடற்கரையில், கன்துகா என்ற   குன்றின் மேல் அமைந்திருக்கிறது முர்டேஷ்வர் கோயில்..முர்தேஷ்வர் ஸ்டேஷனில் நேர் எதிரே இருக்கும் கடற்கரையில், கன்துகா என்ற   குன்றின் மேல் அமைந்திருக்கிறது முர்டேஷ்வர் கோயில்.

கோயிலின் அருகிலேயே ஒரு மேட்டுப் பகுதியில் 123 அடி உயரத்தில் 
கடற்கரையை நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உலகத்திலேயே இரண்டாவது மிக பெரிய சிவன் சிலை   பிரமிக்கவைக்கிறது. 
 
அந்த ஊரில்  எவ்வளவு தொலைவிலிருந்து, எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் இந்த சிவனை தரிசிக்கலாம். எதிரே நந்தியின் சிலை.

கோயில் சற்று தாழ்வான பகுதியில்  அமைந்துள்ளது. கோயிலுக்கு முன்னால் பிரமாண்டமான ராஜ கோபுரம். நன்கு  செப்பனிடப்பட்ட சாலை வியப்பளித்தது..!
கோயில்  முழுவதுமாக கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டுள்ளது. 

கோபுரம் மற்றும் சில இடங்களில் தங்க கவசங்கள் மின்னுகின்றன. 

உள்ளே மூலவர் அகோர மூர்த்தியாய் காட்சி தருகிறார். 

கீழே மிகத்  தொன்மையான  லிங்கமும் 
ஆவுடையாரும் அமைந்திருக்கின்றன. 

முர்டேஷ்வர் இங்கே கோயில் கொண்டதற்கு ஒரு புராணக்கதை ஆதாரமாக விளங்குகிறது. கடுந்தவம் இருந்து  சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்ற ராவணன் இலங்கைக்கு  கொண்டு செல்லும்போது வழியில் எங்கும் வைத்துவிடக்கூடாது என்று  நிபந்தனை  விதித்தார் பரமேஸ்வரன். 

ராவணனும் மிகுந்த பக்தியுடன் லிங்கத்தை எடுத்துக் கொண்டு சென்றான். 

 அதிர்ச்சி அடைந்த தேவர்கள்  இந்த ஆத்ம லிங்கம் இலங்கையில்  பிரதிஷ்டை செய்யப்பட்டால், ராவணன் பெரிய பராக்கிரமசாலியாகிவிடுவான்; அவனை யாரும் வெல்ல முடியாது என்று புரிந்து . அப்படி ஒரு  நிலைமை ஏற்பட்டுவிடாதிருக்க தேவர்கள் திட்டமிட்டார்கள். 

அதன்படி, ராவணன் கோகர்ணா என்ற இடத்தை அடைந்த போது திருமால் தன்னுடைய  சக்கராயுதத்தினால் சூரியனை மறைத்தார். பொழுது சாய்ந்து விட்டது என்று நினைத்து ராவணன் மாலைக் கடனை நிறைவேற்ற முற்பட்டான். 

ஆனால் லிங்கத்தைக் கீழே வைக்க முடியாதே! சற்றுத் தொலைவில் ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். அவனை அழைத்த ராவணன், தன் தர்மச்சங்கடத்தைச்  சொன்னான்.

அந்தச் சிறுவனும்  அவனுக்கு உதவ அந்த லிங்கத்தை அவன் வரும்வரைத் தான் தாங்கியிருப்பதாகவும், நேரம் தாழ்த்தக்கூடாது என்றும், அப்படி  நேரமானால் தான் மூன்று முறை அழைப்பேன், அப்படியும் வராவிட்டால் லிங்கத்தைக் கீழே வைத்துவிடுவேன் என்றும் சொல்லிவிட்டான். ராவணனும்  சம்மதித்துச் சென்றான்.
இதற்காகவே காத்திருந்ததுபோல, சிறுவனாக வந்த விநாயகர் மூன்று முறை ராவணனை அழைக்க, அவன் வராது போகவே லிங்கத்தை பூமியில் வைக்க அது  அங்கேயே நிலைகொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் தேவர்களோடு கடவுளர்களும் சேர்ந்து தனக்கு எதிராக செயல்பட்டதை உணர்ந்து ஏமாற்றமடைந்தான்.  

ஆவேசமடைந்ததுடன் லிங்கத்தைச் சுற்றியிருந்த வஸ்திரத்தை உருவி, வீசி எறிந்த வஸ்திரம் விழுந்த இடத்தில் ஒரு லிங்கம் உருவாகியது!  அதுதான் முர்டேஷ்வர்.

கோயிலில் கணபதி, அனுமன், சுப்பிரமணியர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். 

ஆலயத்திற்குப் பின்னால் இரு அழகான தீர்த்தங்கள் உள்ளன.

249 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே செல்லலாம். இந்த கோபுரத்துக்கு  மேலே செல்வதற்கு லிஃப்ட் வசதி உள்ளது. 

மேல் தளத்திற்குச் சென்று பார்த்தால்,  எல்லையற்ற கடற்பரப்பும், விரிந்த கடற்கரையும் இறைவனின் அதிசயத்தை  அழகுற எடுத்துரைக்கின்றன.

மலையின் அழகைப் பல்வேறு கோணங்களில் ரசிக்க வேண்டுமானால், அதற்குப் படகு வசதியும் உண்டு. அலை புரளும் கடலும்  அதன் கரையில் அருட்கடலான ஈசனின் தோற்றமும் மனதை கொள்ளை கொள்கின்றன. 

முரடீஸ்வரர் கோவிலை வீடியோ வடிவில் காண..
http://www.indiavideo.org/karnataka/travel/murudeshwar-temple-karnataka-9091.php





22 comments:

  1. இதுவரை சென்றிராத கோயிலின் சிறப்புகளுக்கும், தகவல்களுக்கு நன்றி அம்மா... படங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. சிறப்பு மிகுந்த கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. பிரமிக்க வைக்கும் படங்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. முதல் படம் மிக அருமை.. அரிய தகவல்கள்..

    ReplyDelete
  5. அழகான சூழலில் அமைந்திருக்கின்றது கோவில். படங்கள் எல்லாமே மிக அருமையாக, அழகாக இருக்கு. பெரிய சிவன் சிலை பார்க்க பிரமிப்பாக உள்ளது.நன்றி.

    ReplyDelete
  6. முரடீஸ்வரர் என்ற பெயர் உச்சரிக்க சற்றே கரடுமுரடாக இருப்பினும்,வழவழப்பாக கிரானைட் கற்களால் இழைத்துள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. பிரும்மாண்டமான படங்களுடன் மிகவும் பிரும்மாண்டமான பதிவாகத் தந்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. கோயில் அமைந்துள்ள இடம், பூஜா நேரங்கள், ஸ்தல வரலாறு எல்லாமே மிகவும் பயனுள்ளதாகத் தந்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் அமைந்தது போல .... புராணக் கதையும் கேட்க சுவாரஸ்யமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. மிகவும் அற்புதமான அசத்தலான பிரும்மாண்ட பகிர்வுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நந்திகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  11. இதுவரை அறிந்திராத ஒரு கோயில் பற்றிய இந்த அருமையான பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி!

    அமைந்துள்ள இடமே பார்ப்பதற்கு மிக ரம்மியமாக உள்ளது!

    நன்றி!

    ReplyDelete
  12. சுமார் 20 வருடங்களுக்கு முன், நெடிதுயர்ந்த ராஜகோபுரம் கட்டப்படுவதற்கு முன், முருடேஷ்வர் சிவனை, குன்றின்மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் அம்மையப்பனைக் கண்டு ஆராதித்திருக்கிறேன் .

    இன்று, ராஜகோபுர தரிசனமும், முருடேஷ்வரரின் தரிசனமும் கண்டு உய்வுற்றேன்.
    பதிப்பிற்கு நன்றி .

    ReplyDelete
  13. 1986 அல்லது 1987 வருஷம் இங்கு சென்று இருக்கிறேன்.

    ஆயினும் இந்த அளவுக்கு கோவில் உள்ளே பார்ப்பதற்கு
    நேரமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

    இன்று முர்டேச்வரர் காட்சியும் அளித்து, என்னைப்
    பாடவும் பணித்திருக்கிறார்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. ஆசையா இருக்குப்பா கோயிலைப்பற்றியும் கோயில் புராணக்கதைப்பற்றியும் நீங்கள் சொல்லி இருப்பதை படித்து சிவன் பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கும் விஸ்வரூபம் பார்க்கும்போது இந்த கோயிலுக்கு போகவேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. பார்ப்போம் இறைவன் கருணையுடன் என்னை இந்த கோயிலுக்கு அழைக்கிறாரா என்று...

    ReplyDelete
  15. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தெய்வ தரிசனம் காண வைத்தமைக்கு இராஜராஜேஸ்வரி...

    ReplyDelete
  16. முர்டேஷ்வர் கோவில் ரம்மியமானது. போயிருக்கிறேன். இந்தப் பிள்ளையாருக்கு இதே வேலை. அங்கு விபீஷணன் அரங்கனின் சிலையை எடுத்துப் போகவிடாமல் தடுத்தார். இங்கு ராவணன் சிவ மூர்த்தத்தை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தார், ஒரே மாதிரி கதை பல இடங்களிலும் கேட்கிறோம்.

    ReplyDelete
  17. மிக அழகான கோவில். முர்டேஷ்வர் மிக அழகு.
    கோவிலைப் பார்க்க மிக அழகாய் இருக்கிறது. பார்க்க ஆவல் வந்து விட்டது.
    படங்கள், செய்திகள், எல்லாம் மிக அருமை.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இங்கு போயிருக்கிறோம். ஆனால் இரவில் போனதால் ரொம்ப அனுபவிக்க முடியவில்லை. உங்களது கட்டுறியைப் படித்தபின் இன்னொருமுறை போய் நீங்கள் சொல்லியிருப்பது போல படகில் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆவல் அதிகரிக்கிறது.

    ReplyDelete
  19. கடலலைஅருகே அற்புதமான கோயில்கண்டுகொண்டோம். அழகு.

    ReplyDelete
  20. Excellent! detailed information. I had been there thrice but still your writing and photographs made me read and look at them interestingly. Thank you.

    ReplyDelete
  21. Excellent! detailed information. I had been there thrice but still your writing and photographs made me read and look at them interestingly. Thank you.

    ReplyDelete