Tuesday, March 25, 2014

சமராபுரிவாழ் சண்முகத்தரசே..!



காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகன் கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே) தோன்றியவர். சுயம்புவாக அவர் தோன்றியிருப்பதால், அவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

அபிஷேகங்கள் மற்றும் பிரதான பூஜைகள் செய்வதற்காக, கோயிலில்  கருவறைக்கு இடது புறத்தில்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுப்ரமணியர் யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

கருவறையில் முருகனுக்கு பூஜை நடந்ததும், இந்த யந்திரத்துக்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்காதவர்களும், இந்த யந்திரத்தை வணங்கினால் நிச்சயம் நற்பலன் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோயில்  பழமை வாய்ந்தது.., ஏற்கனவே பல்வேறு இயற்கை காரணிகளால் ஆறு முறை இந்த திருக்கோயில் அழிந்து, தற்போது ஏழாவது முறையாகக் கட்டப்பட்டுள்ள கோயிலையே வழிபடுகிறோம்.
 திருப்போரூர் முருகன் மும்மூர்த்திகளின் அம்சமாகக் 
காட்சி தருவது  சிறப்பாகும்.

பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை இவரிடம் உள்ளது.

சிவனைப்போல வலது கையை ஆசிர்வதித்தபடி அபயஹஸ்த நிலையிலும்,

பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து 
ஊருஹஸ்த நிலையிலும் காட்சி தருகிறார்.

முன்பு, முருகன் சிலை மட்டுமே இத்தலத்தில் இருந்தது.

பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். 

முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர்.

திருப்போரூர் கோயிலின் வடிவமைப்பே ஓம் என்ற ஓம்கார அமைப்பில் இருப்பது கோயிலின்  தனிச்சிறப்பாகும்.

 சாலையில் இருந்து திருக்குளத்தை சுற்றி கோயிலுக்கு வர வேண்டும்.

திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலின் கோபுரத்துக்கு வெளியே கொடிமரம் அமைந்துள்ளது. 

கோயிலுக்குள் கருவறையில் சுவாமிக்கு எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக அமைந்துள்ளது.

 வள்ளி, தெய்வானை உடனுறை சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள கந்தசுவாமியைக் காண கண் கோடி வேண்டும் ..

நவக்கிரக சன்னிதி கிடையாது. சனி பகவான் மட்டுமே காட்சி தருகிறார்.


முருகன் கோயில் சன்னதி சுற்றுச் சுவரில், முருகனின் ஒரு வடிவமான குக்குடாப்தஜர் சிலை உள்ளது. 

ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோரும், வெளிநாட்டில் உள்ள உற்றார், உறவினர்கள் நலமாக இருக்க வேண்டுவோரும், இங்கு வந்து குக்குடாப்தஜரை வணங்குகின்றனர்.

பொதுவாக சிவ ஆலயங்களிலும், பெருமாள் கோயில்களிலும் நடத்தப்படும் நவராத்திரி போன்று, இங்கு வள்ளி, தெய்வயானைக்கும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

 சிவன் கோயில்களில் நடைபெறும் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், சிவராத்திரியன்று இரவில் நான்கு கால பூஜைகளும் இங்கு முருகனுக்கு செய்யப்படுகிறது.
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க பூமியில்  
மூன்று இடங்களில் போரிட்டார்.

திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணத்தை) அடக்கினார். 

திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். 

திருப்போரூரில், விண்ணில் போர் புரிந்து 
ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார்.

திருப்போரூரில் கந்தசுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ள 
முருகனை அகத்தியர் வழிபட்டுள்ளார்.

தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், 
தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன.

கந்தசஷ்டி கவசத்திலும், இத்தலத்து முருகன் பெயர் 
சமராபுரிவாழ் சண்முகத்தரசே என பாலதேவராய சுவாமி 
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்போரூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பக்தர்களின் குறைகளை போக்கி, தெவிட்டாத இன்பம் தருகிறார்!திருப்போரூரில் கோயில் கொண்டுள்ள கந்தசுவாமி..!
thiruporur

17 comments:

  1. வியக்க வைக்கும் தகவல்களுடன் சிறப்பான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நண்பர் ஒருவரின் திருமணத்தின்போது சென்றிருந்தேன். மீண்டும் எப்போது செல்வேன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  3. தினம் தினம் ஒரு கோவில்.......

    காலையில் வீட்டிலிருந்தபடியே கிடைக்கும் தெய்வ தரிசனம்.

    நன்றி.

    ReplyDelete
  4. திருப்போரூர் முருகனைப் பற்றிய இனிய தகவல்கள். அழகிய படங்கள்..
    முருகு எனில் அழகு!.. பதிவும் அப்படியே அழகு!..

    ReplyDelete
  5. முருகனைப்பற்றிய அருமையான பதிவு.

    >>>>>

    ReplyDelete
  6. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  7. திருப்போரூர் முருகன் வரலாறு,தகவல்கள்,அழகான படங்களுடன் அருமையான பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கீழிருந்து மூன்றாம் படம் பியூட்டிஃபுல் கவரேஜ். மிகவும் பிடித்துப்போனது. வெகு நேரம் பார்த்து ரஸித்தேன்.

    >>>>>

    ReplyDelete
  9. கோயிலின் ஸ்தல வரலாறு, அமைந்துள்ள இடம், புராணக்கதைகள் விளக்கங்கள் எல்லாமே வழக்கம்போல சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. மேலிருந்து இரண்டாம் படத்தில் ஆடும் மணிகளும், கீழிருந்து எட்டாம் படத்தில் ஜொலிக்கும் தெப்பமும் ஜோர் ஜோர் !

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  11. நாங்கள் ஒருமுறை போய் தரிசனம் செய்து இருக்கிறோம்.

    வெளி நாட்டுக்கு செல்ல விரும்புவோர் வெளிநாட்டில் உள்ள்வர்கள் நலமாக இருக்க பிராத்தனை செய்வது புது செய்தி.

    எல்லோரும் நலமாக இருக்க அருள்புரியட்டும் திருப்போரூர் முருகன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சண்முக நாதனைப் பற்றிய அரிய தகவல்கள் அருமையான படங்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  13. குக்குடாப்தஜர் - புதிய பெயர். இன்றே அறிகிறேன்.

    ReplyDelete
  14. திருப்போரூர் முருகன் கோவில் பற்றிய செய்திகளை அறிதேன். நன்றி

    ReplyDelete
  15. அரிய தகவல்கள். அழகான புகைப் படங்கள். நேரில் பார்ப்பது போன்று இருந்தது. மிக மிக நன்றி.

    ReplyDelete
  16. ஆஹா எம்பெருமானின் திவ்ய தரிசனம்...

    ReplyDelete
  17. முருகப்பெருமானின் கோயிலைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம், நல்ல புகைப்படங்களுடன். நன்றி.

    ReplyDelete