எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு வோணத் திரு விழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு..!

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரேஷ்டம்
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமந்விதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி!
ஜெய் லக்ஷ்மிந்ருஸிம்ஹா!!
யானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ஷேத்ரமாகத் திகழ்கிறது சாளக்ராமம் எனும் சிற்றூர்

அரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூரில் சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார்.
கி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ஷேத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குவதால்
ஸ்ரீகுரு நரசிம்ம ஷேத்திரம் என்றே பெயர்.
Gurunarasimha

ராஜகுரு என்னும் தீவிர கணபதி உபாசகர் ஒருவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார்.
Moola Vigraha
(Period: 4th Century AD)

வைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படும் அதிசயம் ...

தசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது.
Dhashabhuja Ganapathi

ஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது.
விநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும்.
இப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்களும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இந்த இடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்!
இதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.

Car Festival, Saligrama

இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு நல்ல தலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. தேரின் மேற்பகுதி வித்தியாசமான முறையில் உள்ளது.
ReplyDeleteஇதுவரை அறியாத கோவிலின் சிறப்புகளை அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteஆகா... ....அழகு .... குரு நரசிம்மர் படங்களும் விளக்கமும் ....
ReplyDeleteபதிவும் படங்களும் மிகச்சிறப்பாக இருக்கும்மா.
ReplyDeleteசாளக்கிராமம் ஊரைப் பற்றியத் தகவல்கள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறியாத ஓர் ஆலயம்! அழகானபடங்களும் தகவல்களும் தரிசிக்க தூண்டியது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅம்மா நலமா சிறப்பு வாய்ந்த ஆக்கம் நேரில் சென்றதுபோல ஒரு உணர்வு உண்மையில் பாராட்டுகள்.
ReplyDelete