மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப்
போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்கள்
தாமரை இதழ்களாக எழிலுடன் திகழ்கின்றன....
ஒருமுறை தேவேந்திரன் - விருத்ராசுரன், விஸ்வரூபன் என்ற பிறப்பால் அந்தணர்கள் ஆன இருவரை கொன்றான்.
இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதிலிருந்து விடுபட குருபகவான் இந்திரனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் கெடுதல் நீங்கும் என்று கூறினார்.
அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு
தெற்கு நோக்கி வந்தான்.
ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப்
பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.
மகிழ்ச்சியடைந்த இந்திரன் முன் தேரோடும் சீரான மதுரையிலே
கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் இந்திரனுக்கு காட்சி கொடுத்தார்.
இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். மதுரைத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று ஈசன் கட்டளையிட்டார்.
அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.
மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
இதுவே மதுரையில் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் காரணம் ஆகும்..
சீர்மிகு தெப்பத் திருவிழா
அற்புதமான படங்கள் + விளக்கங்கள்... அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்திரனையே பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததென்றால் நாமெல்லாம் எம் மாத்திரம் ம்...ம்.. அருமையான படங்களும் விபரங்களும்.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள் ...!
சித்திரைத் திருவிழாவுக்குக் கட்டியம் கூறுவது போல -
ReplyDeleteஅழகிய படங்களுடன் இனிய பதிவு!..
சித்திரைத்திருவிழா படங்கள் மிக அழகாக இருக்கு.தகவல்கள்,விபரங்கள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி வாழ்த்துக்கள்.
முத்திரை
ReplyDeleteபதிக்கும்
சித்திரைத்
திருவிழா
முத்திரை பதிக்கும்
முத்தான பதிவு.
பளிச்சிடும்
படங்கள்.
வியப்பளிக்கும்
விளக்கங்கள்.
தங்கமான
தலைப்பு
பார்க்கப்பார்க்க
பரவஸம்.
அழகோ
அழகு !
அனைத்துமே
அசத்தல் தான் !!
இன்று இந்தியா பூராவும் தங்களின் ‘தாமரை’யைப் பார்க்காத, நினைக்காத, எண்ணாத, எதிர்பார்க்காத அல்லது எதிர்க்காத உள்ளங்களே இல்லை எனச்சொல்லலாம்.
ReplyDeleteவெற்றி என்ற தாமரை மலராதா என்ற ஏக்கம் பலரிடமும் உள்ளதை அறிய முடிகிறது.
அது என்ன மோடி மஸ்தான் வேலையோ தெரியவில்லை.
எப்படியோ அனைவரும், ஏதோ ஒருவிதத்தில், தங்களின் PROFILE PHOTO வை நினைக்குமாறு நேர்ந்துள்ளதில் என் மனதில் தங்களின் தங்கத்தாமரையே நினைவுக்கு வந்து பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
எது எப்படியோ எல்லோருக்கும் ஓர் நல்லாட்சி கிடைக்கப் பிரார்த்திப்போமாக !
சித்திரைத் திருவிழா விளக்கங்களும் படங்களும் அருமை. நன்றி அம்மா
ReplyDeleteமதுரை வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள். காரணம் தெரிந்து கொண்டேன். வழக்கம் போல...... ... படங்கள் அருமை என்று சொல்லவும் வேண்டுமோ?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
விளக்கமும் படங்களும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சிறப்புக்களை எளிமையாக சிறப்பாக சொன்னது கட்டுரை! அருமை! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமதுரை என்றாலே விழாக்கள். அதுவும் சித்திரை என்றால் இன்னும் சிறப்பு. மிக அழகான புகைப்படங்களுடன் சிறப்பான விளக்கங்கள். நன்றி.
ReplyDeleteஒருமுறையாவது சித்திரைத் திருவிழா அதிலும் குறிப்பாக அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வேண்டும் என்று என் கணவர் (அவர் மதுரையில் பல வருடங்கள் இருந்தவர்) என்னிடம் சொல்லுவார். அழகான புகைப்படங்களைப் போட்டு திருவிழாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்துவிட்டீர்கள்!
ReplyDeleteதங்களது எல்லாப் பதிவுகளையும் போலவே, இந்தப் பதிவும்
ReplyDeleteபளிச்சென்றும், நல்ல விரிவான தகவல்களுடனும், அழகிய
படங்களுடனும், நல்ல நிறைவான பதிவாக அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி. தாங்கள் அளிக்கும், பலருக்கும் தெரியாத தகவல்கள் தங்கள் பதிவுகளின் தனிச் சிறப்பு. தங்களது பணி மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.
பதிவுடன் பிரமாதமான படங்கள்.
ReplyDeleteபாராட்டுகள்.
இனிய வாழ்த்தும்.
வேதா. இலங்காதிலகம்.
சித்திரைத் திருவிழா கண்டு மகிழ்ந்தோம்...
ReplyDeleteCAN YOU TELL ME WHERE IS THIS CHARIOTE FESTIVAL?
ReplyDeleteTHANKS FROM BARCELONA
மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் ஆலயத்தில்
Deleteசித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும்..