ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸவம்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்..
ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்தில் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேச திருத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய், பூமிப் பிராட்டியாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார்.
ஆண்டாள் தம் தந்தையை பெரியாழ்வாரைப் போலவே வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தியுடையவராய் திகழ்ந்தார்.
திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகத்திகந்தாள்..!.
ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் கொண்ட
நாச்சியார் திருமொழியையும் அருளிச்செய்தார்.
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என உறுதிகொண்ட
ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்துக்கு எழுந்தருளி பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளி, இன்றும் இச்சன்னதியில் ஸ்ரீஆண்டாளுடன், ஸ்ரீகருடா்ழ்வாருடனும், ஸ்ரீரெங்கமன்னார் என்கிற திருநாமத்தோடு சம ஆசனத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி
தனிச்சன்னதியில் அருளுகிறாள்.
தனிச்சன்னதியில் அருளுகிறாள்.
கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால்
கீர்த்தி உண்டாகும் என்பர்.
எனவே, ஆண்டாளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்
ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம்.
ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள்.
வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள்
கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார்,
ஸ்ரீலட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார்.
இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில்
முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார்.
தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி
இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார்.
எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, 'வர்ணகலாபேரர்' என அழைக்கின்றனர்.
இவரது சந்நிதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது
வித்தியாசமான அம்சம்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே
பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட புத்திசாலியான
பெண் குழந்தைகள் பிறக்கும்.
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.
ஆண்டாள் திருமணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து
திருமணப் பட்டுப் புடவை வரும்
தொடர்புடைய பதிவுகள்
ஆண்டாள் திருக்கல்யாணம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா...
ReplyDeleteகோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கண்ணதாசன் சொன்னார். சூடிக்கொடுத்த அந்த சுடர்க்கொடியின் கல்யாண கோலாகலத்தை அழகான உங்களின் புகைப்படங்களுடன் தரிசித்தது மனதுக்கு மகிழ்வு தருகிறது. மிக்க நன்றி உங்களுக்கு.
ReplyDeleteஇம்மைக்கும் , ஏழேழ் பிறவிக்கும்
ReplyDeleteபற்றாவான்
நம்மை உடையவன்
நாராயணன் நம்பி,
செம்மை உடைய
திருக்கையால்
தாள் பற்றி
அம்மி மிதித்த
ஆரணங்கை,
ஆண்டாளை,
சூடிக் கொடுத்த நாச்சியாரை
கண் குளிர காணவைத்தமைக்கு
நன்றி !!
//கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும்//
ReplyDeleteஅப்படியா?
இந்தக் கோவிலின் கோபுரம் விசேஷமானது. தமிழக அரசின் சின்னமாக இருப்பதும் இந்த கோபுரம்தான்.
89 ம் வருடத்தில் இந்த ஊரில் வேலை பார்த்திருக்கிறேன்!
கோதை ஆண்டாள் - தமிழை ஆண்டாள்..
ReplyDeleteகோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்!..
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் திருவடிகள் போற்றி!..
ஆண்டாள் திருக்கல்யாண படங்கள் மிகவும் அழகாக இருக்கு.ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் சிறப்புகள்,தகவல்கள் அருமை.நன்றி.
ReplyDeleteஎத்தனை பதிவுகள் பார்த்தாலும் அலுக்காத இறை கல்யாணம்.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிகவும் அருமையான அழகான பதிவு.
ReplyDeleteதிருக்கல்யாண ஓவியம் + காவியம்.
>>>>>
வாரணமாயிரம் பாடல் கேட் டாலே மனதுக்குள் ஆண்டாள் நாரணன் கைத்தலம் பற்றி வலம் வருவது போல் தோன்றும். அருமையான படங்கள், செய்திகள்....
ReplyDeleteஆண்டாள் திருக் கல்யாணம் அமோகமாக பார்த்து மகிழ்ந்தோம். நன்றி.
ReplyDeleteஒவ்வொரு படமும் அற்புதம்.
ReplyDelete>>>>>
எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆண்டாளின் பெருமைக்குச் சான்று.
ReplyDeleteதொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன் 7/20 இருக்கக் கண்டேன். அதிலேயே நிறைய கருத்துக்கள் கூறிவிட்டதால் இங்கு புதிதாக ஏதும் சொல்லத்தோன்றவில்லை.
அச்சு வெல்லம்போல 996/1000 அல்லவா அது !.
>>>>>
காணொளியில் ......
ReplyDeleteகோலாட்டம்
தேரோட்டம்
பாலாபிஷேகம்
குதிரை வாஹன வைய்யாளி
தாயாரின் மடியிலே தலை சாய்த்து
ஆனந்தமாகப் பள்ளிக்கொண்டுள்ள
அனந்த சயனப்பெருமாள் ......
என அனைத்துமே அருமையோ அருமை.
>>>>>
’கைத்தளம் பற்றுவதாகக்
ReplyDeleteகனாக் கண்டேன் தோழி’ ;)))))
எல்லாமே சூப்பரோ சூப்பர் !
oo oo oo
ஏதோவொரு குழப்பத்தில் இங்கு எழுதி அனுப்ப வேண்டிய பின்னூட்டங்களில் பல தங்களின் பழைய [தொடர்புடைய] பதிவினில் போய்ச் சேர்ந்துள்ளன. ;)
ReplyDeleteபகற்கனவு கண்டாலே போச்சு .... இதுபோலத்தான் ஆகும் என தாங்கள் நினைப்பது எனக்கும் புரிகிறது.
ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவங்கள் படங்களுடன் அருமை.
ReplyDeleteஆண்டாள் படங்கள் அற்புதம் அம்மா...
ReplyDeleteஆண்டாள் கல்யாண கோலப் படங்கள் என்னையும் ஆட்கொண்டது....
ReplyDeleteசிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.
ஆண்டாள் திருகல்யாணம் கண்டு மகிழ்ந்தேன். சுகப் பிரம்மரிஷி கையில் கிளியாய் இவை புதிய தகவல்களே. அழகிய படங்களும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி வாழ்த்துக்கள்....!
ReplyDelete