
யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம


ஆந்திரமாநிலம், விசாகப்பட்டினத்தில் தேவிபுரம் எனும் இடத்தில் லலிதாம்பிகை, ஸஹஸ்ராக்ஷி எனும் பெயரில் திருவருள் பாலிக்கிறாள். தமிழில் ஆயிரங்கண்ணுடையாள் என பொருள். மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள ஆலயம், 33.6 சதுர மீட்டர் பரப்பில், 10 மீட்டர் உயரத்தில் மேரு யந்திர வடிவாக விளங்குகிறது.


அதன் உள்ளேயும், சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட யோகினிகளின் எழிலார்ந்த உருவங்கள் சுதை வடிவில் தரிசனமளிக்கின்றன. இந்த யோகினிகள் அனைவரும் தேவி கட்கமாலா எனும் அம்பிகையின் துதியில் வரும் யோகினியர் ஆவர்.

ஸ்ரீவித்யா உபாசகர்கள் விரும்பிச் செல்லும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
மூலக் கருவறையில் உள்ள ஸஹஸ்ராக்ஷியை பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே அர்ச்சித்து பூஜை செய்யலாம். இந்த நடைமுறை, அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள காமாக்யா திருக்கோயிலை பின்பற்றி நடக்கிறது. 1985ல் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலில், காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பிகையை தரிசிக்கலாம். இங்கேயே தங்கிக்கொள்ள நிறைய அறைகள் கொண்ட விருந்தினர் விடுதி உள்ளது. -
மூலக் கருவறையில் உள்ள ஸஹஸ்ராக்ஷியை பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே அர்ச்சித்து பூஜை செய்யலாம். இந்த நடைமுறை, அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள காமாக்யா திருக்கோயிலை பின்பற்றி நடக்கிறது. 1985ல் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலில், காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பிகையை தரிசிக்கலாம். இங்கேயே தங்கிக்கொள்ள நிறைய அறைகள் கொண்ட விருந்தினர் விடுதி உள்ளது. -





லலிதாம்பிகை அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அருமையான படங்களுடன் தகவலுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகோவில் வடிவமைப்பு அழகு..
ReplyDeleteவாள்நுதல் கண்ணியை ,
ReplyDeleteவிண்ணவர் யாவரும்
வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை ,
பேதை நெஞ்சில்
காணுதற்கு
அண்ணியள் அல்லாத
கன்னியை ,
காணும் அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ
முன்செய் புண்ணியமே !!
தேவியின் ஆயிரம் கண்களைப் போல்,
இரவில் ஜொலிக்கும்
அற்புத ஆலயம்.
பதிவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
அம்பிகையைப் பற்றி சிந்தித்தாலும் எழுதினாலும் பேசினாலும் ஆனந்தம் .. ஆனந்தம் தான்!.. அழகிய பதிவு!.. வாழ்க நலம்..
ReplyDeleteகோவில் அமைப்பு நான் இதுவரை கண்டதில்லை.தேவியின் சிறப்புகள்,தகவல்கள்,படங்கள்,பாடல் மிக அருமை.நன்றி.
ReplyDeleteஎன்ன அழகிய கோவில்? ஊஞ்சலில் கம்பீரமான அம்மன் அழகு.
ReplyDeletesuperb structural wonder.
ReplyDeleteyaa devi sarva bhooteshu,
maaya roopena sastita.
namasthasmai namasthasmai namo namaha
subbu thatha.
www.subbuthatha.blogspot.com
லலிதாம்பிகை கோயில் பற்றிய தகவல்களுக்கு நன்றி! அழகான படங்கள்! நன்றி!
ReplyDeleteஆயிரம் கண்ணுடையாள் லலிதா அம்பிகை. அழகிய தலைப்பு.
ReplyDeleteமுதல் படத்தில் மலர்களால் தொங்கிடும் ஊஞ்சல் அம்பிகையைத் தாங்கிக் கொண்டிருப்பது சிறப்பாக உள்ளது.
ஒய்யாரமாக வீற்றிருக்கும் அம்பாளின் இரு பாதங்களையும் தரிஸித்து மகிழும் பாக்யம் கிடைத்தது.
அம்பாளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.
>>>>>
காட்டியுள்ள காணொளி கற்கண்டாக இனிக்குதே !
ReplyDelete>>>>>
ஆந்திர மாநிலம் ... விசாகப்பட்டிணம் ... தேவிபுரம் வரை ... தங்களுடனேயே நேரில் சென்று தரிஸித்து வந்தது போல மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
ReplyDelete>>>>>
அபூர்வமான படங்கள், அசத்தலான விளக்கங்கள் .... அனைத்துமே ஜோர் ஜோர் !
ReplyDelete108 மேருக்கள் படமும்
கோயிலின் ஒட்டுமொத்த தோற்றமும்
மிகவும் சூப்பராக உள்ளன.
o o o o
வணக்கம் அம்மா
ReplyDeleteதேவிபுரம் லலிதாம்பிகை அருள் கிடைத்தது போன்ற உணர்வு பதிவை படித்து முடிக்கையில். படங்களோடு பகிர்ந்து புதிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா..
மிகவும் அழகானக் கோவில், கோவிலைப் பார்த்தவுடன் சென்னை அஷ்டலக்ஷ்மி கோவில் நினைவிற்கு வந்தது
ReplyDeleteபார்க்காத இடம் , கேட்காதபாட்டு .அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஆஹா, கோவிலின் தோற்றம் மிகவும் அழகு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.
ReplyDelete