ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள்..!
நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும்.
இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.
தவக்காலம் என்பது தவறுகளை உணர்ந்து திருந்தவும், தம்மை தாமே அறிந்து தம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.
பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.
நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.
தவக்காலம் தமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். தமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு.
நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.
இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.
குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார்.
அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார்.
இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட்டப்படுகிறது. நாளை முதல் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் தவக்காலம் தொடங்குகிறது.
இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். வீடுகளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது. அன்னதானம் வழங்குவர். ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் ஏசுவின் இறப்பை நினைவூட்டும் சிலுவைபாதை வழிபாடு நடைபெறும்.
இந்த தவக்காலத்தின் கடைசி வாரமான ஏப்ரல் 17, 18–ந்தேதிகளில் புனித வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
புனித வியாழன் அன்று ஏசுவின் கடைசி விருந்து, புனித வெள்ளியில் ஏசுவின் சிலுவை மரணம் ஆகிய வற்றை நினைவூட்டும் வழிபாடுகள் நடைபெறும்.
புனித சனி இரவில் ஈஸ்டர் வழிபாடும், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டமும் நடைபெறுகிறது.
இறை வார்த்தை
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.
ReplyDeleteஅருமை
திருநீற்று புதன் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தன்னை தானே உணர்ந்து திருத்திக் கொள்ளும் காலம் சிறப்பு அம்மா... விளக்கமான தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteஅழகான படங்களுடன் - பதிவு.
ReplyDeleteவிளக்கமான பல தகவல்கள்,அழகான படங்களுடன் சிறப்பான பதிவு. நன்றி.
ReplyDeleteதிருநீற்று புதன் - அருமையான தமிழாக்கம்.
ReplyDeleteமிக எளிதாக கிருஸ்துவ பண்டிகையை விளக்கி விட்டீர்கள் அம்மா.
வெந்துயர் நீக்குவது நீறு !
ReplyDeleteஉண்மை உள்ளது நீறு !
அது எம்மதமாயிருந்தாலென்ன !
தெரியாதன தெளிந்தேன் !
தகவலுக்கு நன்றியும்,
பதிவிற்கு பாராட்டுதலும், வாழ்த்துக்களும் !
திருநீற்று புதன் பற்றி தெரியாதன அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteபல அறியாத செதிகளின் உள்ளடக்கம் இப்படிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇதுவரை அறியாத தெரியாத பல விஷயங்களை படங்களுடன் விளக்கியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதலைப்பைப் படித்ததும் யோசித்தேன்.படித்த பின் புரிந்து கொண்டேன் “ash wednesday "என்று..நல்ல பகிர்வு
ReplyDeleteதிருநீற்றுப் புதன் பற்றிய விவரங்கள் அனித்தும் தெரிந்து கொண்டேன் . நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteபுனித வெள்ளிபற்றிய பல அரிய தகவல்களைப் படித்து அறிந்தேன். படங்கள் அருமையாக உள்ளன.
ReplyDeleteதெரியாதன பல தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி மேடம்!
ReplyDeleteதெரியாத விஷயங்கள்.....
ReplyDeleteமனிதா நீ மண்ணாய் இருக்கிறாய்.... மண்ணுக்கே திரும்புவாய். - உண்மை.