Saturday, April 13, 2013

விஷூக்கனி








விஷூ தரிசனம்
மலையாளத்தில் "கணி" என்பதற்கு "முதலில் காண்பது" என்பது பொருள்.."
விஷுக்கணி" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.
தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. 

தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். 

கொன்றை மலர்கள் சூரியன் உச்சத்தில் உள்ள  விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. 

பூஜை அறையில் கொன்றைப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது.
 தங்க நாணயம்  பொருளாதார நிலையையும்  கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது.

கண்களைத் திறந்து காணும்போது இறைவனின் தரிசனத்தால் காண்பவர் பூரிப்படைவார். 
பகவதியை நினைவூட்டும் கண்ணாடி ஒளி பிரதிபலிப்பால் விஷூக்கனியை ஒளிரச் செய்வதுடன் அதில் அவரவர் முகங்களையும் காட்டுகின்றது. 
விஷூக்கனியில் வைக்கும் கண்ணாடி நம் மனத்தை தூய்மையாய் வைத்திருப்பதையும் குறிக்கின்றது.   
தூய மனத்துடன் உண்மையான மாசற்ற பற்றுடன் கிருஷ்ணருக்குச் செய்ய வேண்டிய பக்தி சேவையையும் (நவ வித பக்தி) உணர்த்துகின்றது.

விஷூக்கனி வரப் போகும் வருடத்தின் செழுமையைக் குறிக்கின்றது - 

ஆன்மீகமாகவும், செல்வங்களாகவும், உணவு, விளக்கு, பணம், அறிவு - இவையாவும் நம் வாழ்வை நிறைக்க வேண்டும். 
விஷூக்கனியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு இவையாவும் வருடம் முழுதும் நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர். 
விஷூக்கனி பார்வைக்கான விருந்து மட்டுமன்று. 
விஷூக்கனி காட்சி அவரவர் மனதிலும் செயல்களிலும்  
பிரதிபலிக்க வேண்டும். 
இறைவனின் ஆசியுடன் காட்சியுடனான இப்படிப்பட்ட சிறப்பான வருட ஆரம்பம் அவரவருக்கு மட்டுமே உரியது அல்ல. 

இதனை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் சமூகத்தில் பரப்புவது கடமையாகும்.




20 comments:

  1. சித்திரைக்கனி என்று தமிழ்நாட்டிலும் கொண்டாடுகிறார்கள். கனிகள் நிறைய வைப்பதால் "கணி" கனியாக மாறிவிட்டதோ?

    ReplyDelete
  2. படங்கள் விளக்கங்கள் அருமை அம்மா...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சித்திரை விஷுக்கனி கண்டேன்.
    படங்கள் எல்லாம் அழகு.
    இறவனின் அருளால் நல்ல மழை பொழிந்து இயற்கை செழித்து , பயிர் பச்சைகள் வளர்ந்து மக்கள் எல்லாம் நல்மாக வாழ இந்த புத்தாண்டு மலரட்டும்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. அருமையான விளக்கம். இத்தனை நாளாக இதன் கருத்து என்னவென அறிந்திருக்கவிலை...
    அழகான படங்கள். எல்லாமே சிறப்பு.

    உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. புதிதாக விளக்கம் அறிந்தேன் .மிக்க நன்றி.
    சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்கள் நல் வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா அன்ட் மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  7. "விஜய” வருஷ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    விஷூக்கனி என்ற தலைப்பில் தங்களின் இன்றைய பதிவு வெகு அருமையாக உள்ளது. படங்களும் விளக்கங்களும் வெகு ஜோர்.

    முடிந்தால் மீண்டும் வந்து கருத்தளிக்க் முயற்சிக்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  8. //விஷூக்கனி வரப் போகும் வருடத்தின் செழுமையைக் குறிக்கின்றது; ஆன்மீகமாகவும், செல்வங்களாகவும், உணவு, விளக்கு, பணம், அறிவு - இவையாவும் நம் வாழ்வை நிறைக்க வேண்டும்.//

    வரப்போகும் வருஷம் தங்களின் வாக்குப்படி அனைவர் வாழ்விலும் செழுமையையும் புத்தின்பத்தையும் ஏற்படுத்தி மகிழ்விக்கட்டும்.

    >>>>

    ReplyDelete
  9. ////விஷூக்கனியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு இவையாவும் வருடம் முழுதும் நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர். //

    சந்தோஷமான பிரார்த்தனை தான்.

    //விஷூக்கனி பார்வைக்கான விருந்து மட்டுமன்று. விஷூக்கனி காட்சி அவரவர் மனதிலும் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும். //

    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அதே அதே !!

    >>>>>

    ReplyDelete
  10. விஷூக்கனியின் விளக்கமும், கனிகளுடன் கூடிய படங்களும் முக்கனி போல மிகச்சிறப்பாக உள்ளன. விஷுக்கனியில் தங்கம் முதலிடம் பெறுவது போல, தங்கமான தங்களின் தங்கமான இந்தப்பதிவும் மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ;))))) ooooo 878 ooooo ;)))))

    ReplyDelete
  11. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //பழனி. கந்தசாமி April 13, 2013 at 5:20 AM
    சித்திரைக்கனி என்று தமிழ்நாட்டிலும் கொண்டாடுகிறார்கள்.
    கனிகள் நிறைய வைப்பதால் "கணி" கனியாக மாறிவிட்டதோ?//

    நாம் ’க ண னி’ யில் அவசர அவசரமாகத் தட்டுவதாலும்,

    ‘கனி’ ’கணி’யாகவும்,

    ’கணி’ ’கனி’யாகவும்

    மாறும் வாய்ப்பு உள்ளது, என நான் நினைக்கிறேன், ஐயா.

    ReplyDelete
  13. அனைத்து படங்களும் அருமை இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  14. இப்போது தான் இந்த தகவல்கள் அறிந்துகொண்டேன். தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. விஷு கனியை பற்றிய விரிவான தகவல்களும் படங்களும் நிறைவைத்தந்தன. அருமை! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இனிய 'விஜய' வருட வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. அருமையான படங்களுடன
    சிறப்பாக பதிவு

    ReplyDelete
  18. இனிய “விஜய” தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    14.04.2013 புத்தாண்டின் முதல் நாளே வலைச்சரத்தில் முதல் அறிமுகமாக தங்களின் செந்தாமரை மலர்ந்துள்ளது காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_1170.html

    மேலும் மேலும் தங்களுக்கு பல்வேறு வெற்றிகள் குவியட்டும். ;)))))

    ReplyDelete