Thursday, April 11, 2013

யுகாதித் திருநாள்




Posted Image
Posted Image


யுகாதி என்றால் யுகத்தின் ஆதி  ஆரம்பம் என்று பொருள்

யுகாதி பண்டிகை அன்றுதான் பிரம்மா உலகத்தைப் 
படைத்ததாகக் கூறுவார்கள். 

யுகாதி  தினம் புதிய வேலை, கல்வி, தொழில் 
போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது.

வசந்தகாலத்தில் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

யுகாதி அன்று ஆறு சுவைகள்  கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள்.


வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி - வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். 
யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள். 
மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் ..
வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்   தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாட்டத்தில் 40 நாள் நடக்கும் நித்ய உற்சவம் தொடங்கும் ...
மாடவீதியில் தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி எழுந்தருளி சகஸ்ர தீப அலங்கார சேவை  நடைபெறுவது வழ்க்கம் ...

வாழ்க்கை என்பது கசப்பும் இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 

யுகாதி விருந்தில் பண்டிகையின் முக்கிய இனிப்பு பண்டமான "புரண் போளி" இடம்பெறுவது சிறப்பம்சமாகும். 

புத்தாண்டு தினத்தை ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது  சிறப்பு ...

Posted Image
Posted Image

Posted ImagePosted Image








17 comments:

  1. தெலுங்கு, கன்னட நண்பர்களுக்கு மனம் கனிந்த யுகாதி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அனைத்து ந்ண்பர்களுக்கும் உகாதி/புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அனைத்து நண்பர்களுக்கும் யுகாதி தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்களுக்கும் , அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய யுஹாதி தினவாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களுக்கும் , அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய யுஹாதி தினவாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உகாதி தின சிறப்பு பதிவு அருமை. உகாதி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அனைவ்ருக்கும் யுகாதித் திருநாள் நல் வாழ்த்துகள்.

    யுகாதிப்பண்டிகை பற்றிய அனைத்து விபரங்களும் அருமை.

    படங்கள் யாவும் பதிவுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 876 ooooo

    ReplyDelete
  8. அருமையான பதிவு. நல்ல விளக்கம். இன்றுதான் இதன் அர்த்தம் புரிந்துகொண்டேன்.
    படங்கள் யாவும் ரொம்ப அழகு!
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

    அனைவருக்கும் யுகாதி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்! திண்பண்டங்கள் நாக்கில் நீர் ஊறுகிறது!

    ReplyDelete
  10. யுகாதித் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்

    ReplyDelete
  11. தகவல்களுடன் யுகாதி தினம் பற்றி தெரிந்துகொண்டேன் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு.

    ReplyDelete
  12. அனைத்து தோழர் தோழிகளுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள்
    படங்கள் அதனையும் சிறப்பு

    ReplyDelete
  13. யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  14. எல்லோருக்கும் புதுவருட (யுகாதிப் பண்டிகை) வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  15. வாழ்க்கையே பல சுவைகள் கொண்டது என்று எடுத்துக்காட்ட பல்சுவைப் பண்டங்கள் கொடுப்பதும் எடுப்பதும் அருமை. சில சீலங்கள் பாடம் போதிப்பவை. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete