Monday, April 8, 2013

வழிகாட்டும் வள்ளல்

ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும்.


மூவலூர் தல லிங்கமூர்த்தியை அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளும் வழிபட்டகாரணமாக  மூவலூர் என்று பெயர் பெற்றது ... 



புன்னாகவனம் என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கும் புன்னாகவனேஸ்வரர் என்னும் பெயரும் விளங்குகிறது.
மதுரையைப்போல  பார்வதிக்குரிய தலம்
பார்வதி தேவியின் அம்ச மான துர்க்கை சிவபெரு மான் தந்த சூலாயுதத்தால் மகிஷாசுரனைச் சம்ஹரித்த பின்னர் துர்க்கை வடிவம் நீங்கிப் பழைய உருவம் பெற வேண்டும் என்று சிவபெருமானை வேண் டினாள். 
சிவபெருமான் மூவலூர் சென்று தவமிருக்கும்படி தேவிக்கு அறிவுறுத்தியவாறே தவமிருந்த தேவி இறைவனின் அருளால் பழைய வடிவம் பெற்று  இறைவனை மணந்ததால்  திருமணத் திருத்தலமாகத்திகழ்கிறது. 

பங்குனி மாதம் திருக்கல்யாணத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 
திருமண வரம் வேண்டி பக்தர்கள்  இறைவன்- இறைவியை வணங்கி மணப்பேறும் மகப் பேறும் பெறுகின்றனர்

"வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன்' என்ற மூன்று அசுரர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்று "மூன்று பறக்கும் கோட்டை'களாக அலைந்து அனைவரையும் துன்புறுத்தி வந்தவர்களை சிவபெருமான் வதம் செய்த திரிபுர தகனம் நிகழ்ச்சி மூவலூர் தலத்தில்தான் நடைபெற்றதாம்.

தேவர்கள் தங்களது முயற்சியால்தான் அசுர வதம் நடைபெற்றதாக செருக்குடன் அலைய, திருமால், பிரம்மா இருவரையும் தவிர அனைத்து தேவர்களையும் சிவபெருமான் சாம்பலாக்கினாராம். 

 பிரம்மா சிவனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, மூவலூரில் உள்ள புன்னை மரத்தின்கீழ் தானே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்வது பற்றிக் கற்றுக் கொடுத்தாராம். 

சிவ பெருமானே சிவ வழிபாடு பற்றி கற்றுக் கொடுத்தபடியால் இவருக்கு வழிகாட்டும் வள்ளல் (மார்க்க சகாயர்) என்று பெயர் ஏற்பட்டதாம்.

ஐந்து நிலைகளைக் கொண்ட சிறிய ராஜ கோபுரத்தைக் கடந்தால் பலிபீடத்தைக் காணலாம். நான்கு புறமும் நான்கு சிறிய நந்திகள் அமைந் துள்ள அரிய அமைப்பில் இந்த பலிபீடம் காணப் படுகிறது. 

வாயிலின் இருபுறம் ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்னும் பெயர்களுடன் துவாரபாலகர்கள் சிறப்பாக அமைந்துள்ளனர்.

கருவறையில் ஈசன் மார்க்க சகாயேஸ்வரர் (வழிகாட்டும் வள்ளல்) என்னும் திருப் பெயருடன் விளங்குகிறார். 

அன்னை சௌந்தர நாயகி (மங்களாம்பிகை) என்னும் பெயரில் தனிச்சந்நிதியில் அருளுகிறாள்.

வெளிச்சுற்றில் ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள்  அருள்பாலிக்கின்றனர் .. 

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடிகளின் கீழ் யானை முகம், மான், சிங்கம், ரிஷபம் ஆகியவற்றோடு வழக்கம்போல, முயலகன், சனகாதியர் உள்ளனர். 

தட்சிணாமூர்த்தி நந்தியெம்பெருமான்மீது வீற்றிருப்பது சற்று வித்தியாசமான அமைப்பாகும். 

தல மரமான புன்னை மரத்துடன் மிகப் பழமை வாய்ந்த பலா மரமும் உள்ளது.

சப்த மாதர்களான மகேசுவரி, கௌமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, பிராமணி, இந்திராணி, வாராஹி ஆகியோர்  இறைவனை வழிபட்டுள்ளனர்.

துன்பம் நிறைந்த இவ்வுலகில் மக்கள் உய்ய நல்ல வழிகாட்டும் வள்ளல் இந்த சிவபெருமான்.. 

இறைவியை ஞானாம்பிகையென்றும் அழைக்கின்றனர்.

அப்பர் வாக்கில் இது ஒரு வைப்புத் தலமாகக் கூறப்பட்டுள்ளது. 

திருவாவடு துறை ஆதீன முதற்குரவரான நமசிவாய மூர்த்தியின் அவதாரத் தலம் இது.

சமுதாய மேம்பாட்டிற்கு மிகவும் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஊர் இது. 
 மூவலூரை அடுத்துள்ள தேரழுந்தூர் எனப்படும் திருவழுந்தூர் கம்பர் அவதரித்த ஊராகும்.

மயிலாடுதுறை ஆலயம் நடுவிலிருக்க, 
கிழக்கே திருவிளநகரில் துறைகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், 
தெற்கே பெருஞ்சேரி என்னுமிடத்தில் மொழி காட்டும் வள்ளல், 
வடக்கே உத்திர மயிலாடுதுறையில் கைகாட்டும் வள்ளல் (தட்சிணாமூர்த்தி) என்று நான்கு வள்ளல்கள் (சிவபெருமான்கள்) மயூரநாதரைச் சுற்றி கோவில் கொண்டுள்ளனர் 

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் மூவலூர்.

19 comments:

  1. ஈசனுக்கு இணையானோர் இவ்வுலகில் யாருண்டோ?
    இப்படிப் பதிவுகள் தருவதற்கும் உங்களைத்தவிர யாருண்டு

    ReplyDelete
  2. இனிமையான் தகவல் நன்றி

    ReplyDelete
  3. I had not seen the temple. Thanks for the post. I am making a note of this place to visit.
    The pictures are really very nice.
    viji

    ReplyDelete
  4. மூவலூர் மார்க்கசகாயர் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    பிரதோஷ பூஜை, துர்க்கை வழி பாடு, குரு வாரம் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

    அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு போய் கடவுளை வணங்கி விட்டு சிறிது நேரம் அங்கு அமர்ந்து வருவேன்.
    சில படங்கள் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  5. எப்பொழுதும்போல அழகிய படங்களுடன் அறிந்திராத நல்ல தகவல்களுடனான சிறந்த பதிவு சகோதரி!

    அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அருமையான தகவல்களுடன் அழகான படங்கள் அம்மா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. திங்கள் சிவனுக்கு உரிய நாள் அல்லவா இன்று சிவா பெருமானின் பகிர்வு திறந்தவுடன் மனம் நிறைவு கொண்டேன்மூவலூரையும் மேலும் அதில் உள்ள சிறப்பையும் பகிர்ந்தற்கு நன்றி முதல் படம் சூப்பர்

    ReplyDelete
  8. நமச்சிவாய பதிகத்தைச் சொல்லும் போதே
    நம்முள் அடங்கி நிற்கும் எப் பிணியும் தீரும் என்று
    அன்று தொட்டு இன்றுவரை நம்புபவள் நான்
    அருமையான இந்தப் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன் .
    வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  9. மன அமைதி தரும் தெய்வீக தரிசனம்.. பதிவிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. இன்று ஸோமவாரத்திற்கு ஏற்ற மிகவும் அழகான பதிவு. பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருவேன். இங்கு இன்றும் நாளையும் பராமரிப்பு வேலை என்ற பெயரில் முழுநேர மின் தடையால் கணினியில் நெட் கனெக்‌ஷன் கிடைக்காமல் பாடாய்ப்படுத்தி வருகிறது.

    இந்த 2013ம் ஆண்டின், நாளைய தங்களின் வெற்றிகரமான நூறாவது பதிவுக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்.

    எங்களுக்கு ஆன்மிகத்தில் “வழிகாட்டும் வள்ளல்” ஆகத்திகழ்பவர் தாங்கள் மட்டுமே. தங்களுக்கு என் அன்பான வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  11. மேலிருந்து கீழே படம் 4 மற்றும் 5 திறக்க மறுக்கிறது. ;(

    அதுபோலவே கீழிருந்து மூன்றாவது படமும் தரிஸிக்க முடியவில்லை.;(

    மற்ற எல்லாப்படங்களும் மிகவும் அழகாகவே உள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  12. சமுதாய மேம்பாட்டுக்காக மிகவும் உழைத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரையின் வெங்கலச்சிலையையும் காட்டி, அவர்கள் பிறந்த ஊர் எனச்சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளது, தங்களின் புத்திசாலித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)

    ReplyDelete
  13. கம்பர் பிறந்த தேரழுந்தூர் அருகே மூவலூர்.

    ஆஹா! அருமையான தகவல் தான் இதுவும்.

    கோயில் அமைந்துள்ள இடம், செல்லும் வழி முதலியன சொல்லியுள்ளது வழக்கம் போல் அருமை.

    இப்போது எல்லாப்படங்களுமே காட்சியளிக்கின்றன. கவலையில்லை. கீழிருந்து மூன்றாவது படத்தில் கோபுர தரிஸனம் - கோடி புண்ணியம் பெற்றேன், தங்களால் இன்று.

    >>>>>

    ReplyDelete
  14. முதல் படம் மிக அருமையான தேர்வு.

    மொத்தத்தில் ”வழிகாட்டும் வள்ளல்” மிக நல்ல பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 873 ooooo

    ReplyDelete
  15. நல்ல அருமையான பதிவு ... படங்கள் அனைத்தும் அருமை அம்மா....

    ReplyDelete
  16. படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஆனாலும் பார்க்க நேரம் பிடிக்கிறது. நல்ல பகிர்வு நன்றிங்க.

    ReplyDelete
  17. இன்று எல்லாப் படமும் பார்க்க முடிந்தது.
    அருமைப் பதிவு.
    மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. எல்லா வள்ளல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete