

ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்கும் ஆலயத்தில் ஈசன் கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
சித்திரை 7,8,9 தேதிகளில் சூரியன் உதயம் ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது விழும் வகையில் வடக்கு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ தொலைவில் உள்ள பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
வடதமிழ்நாட்டில் இந்த ஒரே ஆலயம் ஒன்று தான் சனிபகவானுக்கு என்று சனிதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கி வருகின்றது.
இதனால் பக்தர்கள் இக்கோவிலை வட திருநள்ளாறு என்று வர்ணிக்கிறார்கள். சனிபகவான் எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்தார்.இதனால் இவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்ள இக் கோவிலில் நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவபெருமானை வழிபட்டார்.
இதன் மூலம் சனிபகவான் பிறருக்கு செய்த தன் பாவத்தை போக்கி பாவவிமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாறுக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார்.
ஆலயத்தில் சனிபகவானுக்கு நைவேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும்.
காக்கை, மாடு, நாய்க்கு அன்ன தீவனம் அளித்தால் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.
காக்கை, மாடு, நாய்க்கு அன்ன தீவனம் அளித்தால் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும்.
அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வரராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர்.
அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வரராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர்.
. 





ரசித்தேன்.
ReplyDeleteசிறப்பான தகவலுடன் பகிரப் பட்ட படங்களும்
ReplyDeleteஅருமை !...வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு .
அறியாத தலம்... படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி...
ReplyDeleteசனி தோஷ நிவர்த்திக்கு சென்னையில் கோவிலா? தெரியாத தகவல். நன்றி...
ReplyDeleteசனி பகவான் பற்றி அருமையான செய்திகள். சென்னை சென்றால் தரிசித்து வர எண்ணம் வந்து விட்டது.
ReplyDeleteநன்றி.
gud information......
ReplyDeletethanks..
கவனத்தில் கொள்கிறேன். நேரம் கிடைக்கையில் சென்று வருகிறேன்.
ReplyDeleteநன்றி.
மிகவும் அருமையான படங்களுடன் அழகான பதிவு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ooooo 887 ooooo
வட திருநள்ளாறு! இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி!
ReplyDeleteஅருமை. சனீஸ்வரன் கோவில் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteசென்னையிலேயே சனிதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலம் இருப்பதை தெரிவித்தமைக்கு நன்றி. வழக்கம்போல் படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteதகவல்களும், படங்களும் சேர்ந்து அருமையான பகிர்வாக இருந்தது.
ReplyDeleteநானும் இந்தக் கோவிலிற்கு சென்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் சனி சந்நிதி இவ்வளவு பிரும்மாண்டமாக இருந்ததில்லை .இப்பொழுது பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது .
ReplyDeleteநன்றி வெகு நாட்களுக்குப் பிறகு இந்தக் கோவிலுக்கு அழைத்து சென்றதற்கு.
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteபடத்துடன் விளக்கமும் நன்றி
ReplyDeleteநீண்ட நாட்களின் பின் வந்திருக்கிறேன் எனக்கு நல்ல தரிசனம் கிடைத்திருக்கு இங்கு. எனக்கு சிவலிங்கம் பார்த்தாலே ஏனோ ஒரு பரவசம், ஆனந்தம் வந்துவிடுகிறது. சிவனையும் சிவலிங்கத்தையும் ரொம்பவும் பிடிக்குமெனக்கு.
ReplyDelete