மீனாக்ஷி திருக்கல்யாணம்
இறைவன் திருக்கல்யாணம் நடக்கும் மிகச்சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ள கல்யாண மண்டபம்.
ம்துரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோத்ஸவம் மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுகிறது ..
மதுரையில் சித்திரை திருவிழாவின் கடைசி நாள் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள்.
சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது.
எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் தவற விடவே கூடாத அளவுக்கு மிகவும் புண்ணியமான தரிசனம் ....
ரிஷபம் என்றும் காளை தர்மத்தின் சின்னமாகும்.
காளையின் கட்டான உடல் நமக்கு திடமனது வேண்டும் என்பதையும் கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதை தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும்,
காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க
வேண்டும் என்பதையும்,
வேண்டும் என்பதையும்,
கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும்
ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும்,
ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும்,
கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள் இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.
ரிஷப தரிசனம் மட்டும் ஏதோ ஒரு முன் பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.
ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால் இவ்வுலகில் என்னென்ன தான தர்மங்கள் உண்டோ அத்தனையும் செய்த புண்ணியம் கிடைக்கும்.
இந்த புண்ணியத்தை தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே மீனாட்சியும் சுந்தரேசுவரரும் ஒன்றாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.
Very Very Good Morning !
ReplyDelete’முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா’
இந்தத் தங்களின் தலைப்பே முத்திரை பதிப்பதாகவும் அசத்தலாகவும் உள்ளது. ;)
மீண்டும் பிறகு வருவேன் .
>>>>>
வணக்கம் ஐயா..
Deleteமுத்திரைபதிக்கும் கருத்துரைகளால் பதிவைப்
பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
new information about rishaba dharisanam
ReplyDelete
ReplyDelete//ரிஷபம் எ ன் னு ம் காளை தர்மத்தின் சின்னமாகும். //
ஆஹா ! [என்றும்? or என்னும்]
//காளையின் கட்டான உடல் நமக்கு திடமனது வேண்டும் என்பதையும்
கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதை தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும்,
காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும்,
கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும்
ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும்,
கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி ’ஜ க ம ணி க ள்’ இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன. //
எது சொன்னாலும் அதை நீங்க சூப்பராச் சொல்றிங்கோ. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>>>
//ரிஷப வா க ன தரிசனம் மட்டும் ஏதோ ஒரு முன் பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.
ReplyDeleteரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால் இவ்வுலகில் என்னென்ன தான தர்மங்கள் உண்டோ அத்தனையும் செய்த புண்ணியம் கிடைக்கும். //
ரிஷப வாகனம் வரும்போது கட்டாயமாக அதைப்போய் தரிஸிக்க வேண்டும் என என் அப்பாவும் சொல்லியிருக்கிறார்.
>>>>>
ReplyDeleteமேலிருந்து கீழாக இரண்டு மற்றும் மூன்று இரு படங்கங்களும் இன்னும் திறக்க மறுக்கின்றன.
அவை எவ்வளவு ஜோரான படங்களோ?
தாங்கள் காட்டியும் எனக்குப் பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை. ;((
மற்றபடி காட்டியுள்ள அனைத்துப்படங்களும் சூப்பரோ சூப்பர் தான்.
முதல் படம் வழக்கம் போல முதல் தரமான படமாக உள்ளது.
கடைசியில் காட்டியுள்ள ’கோபு’ரங்கள், அழகர் ஆற்றில் இறங்கும் குதிரை, தேர் முதலியன ஜோராக உள்ளன.
யானைகள், கல்யாண மண்டபம், கற்சிலைகள், ஆட்டுகடா வாகனம் எல்லாமே ஓ.கே.
முக்கியமாக ரிஷபவாகனம் பற்றி எழுதிவிட்டு, ரிஷப வாகனப்படத்தையே கண்ணில் காட்டாதது, சற்றே வருத்தமாக உள்ளது. ;(
>>>>>>
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு,
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இனிப்பான [தேங்காய்ச்] சேவை. ;)))))
ooooo 885 ooooo
கண் காது எல்லாம் நல்லதையே சிந்திக்க விளக்கிய விதம் அருமைங்க. படங்கள் எப்பவும் போல அழகு அருமை. நன்றிங்க.
ReplyDeleteநல்ல தகவல்கள்.....
ReplyDeleteஊரில் தங்கைகள் திருவிழாவுக்கு வரச்சொல்லி அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் பதிவின் மூலம் சித்திரை திருவிழாவை கண்டு களித்தேன்.
ReplyDeleteரிஷப தரிசன விளக்கம் அருமை.
வாங்க கோமதி அரசு . வாழ்க வளமுடன் ...
Deleteஅருமையான கருத்துரைகளுடன்
திருவிழாவைக் கண்டு களித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்
அருமை அருமை... சித்திரைத் திருவிழா அற்புதமாக இருக்கிறது.
ReplyDeleteஅழகிய படங்களுடன் நல்ல பதிவு.
பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி!
வாங்க இளமதி ,
Deleteஅழகிய இளநிலவாய் இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்
ReplyDeleteவணக்கம்!
சித்திரை நன்னாளைச் சிந்தையில் நன்றாக
முத்திரை இட்டீா் மொழிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா..
Deleteமுத்திரை இட்ட கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
ரிஷப வாகன தரிசனத்தை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteவாங்க பூவிழி .
Deleteபூவாய் மலர்ந்த இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்
முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா – கவிதையாய் ஒரு தலைப்பு. படங்களும் கவிதையாய் மிளிர்கின்றன.
ReplyDeleteவணக்கம் ஐயா..
Deleteநலமுடன் கவிதையாய் கருத்துரை வழங்கிச்
சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
நமஸ்காரம் அம்மா.நாராயணீயம் துவாதசிகளில் பாராயணம் என்று படித்தேன்.எப்படி ஆரம்பித்து எத்தனை ஸ்லோகம் பாராயணம் செய்யவேண்டும்?தினமும் பராயணம் செய்யலாமா?ஆவலுடன் தங்களின் பதில் எதிர்பார்க்கிறேன் அம்மா.
ReplyDeleteவாங்க இந்திரா ..நமஸ்காரம் ..
Deleteநாராயணீயம் நூறு தச்கம் .. தசகம் ஒவ்வொன்றிலும் பத்துப் பாடல்கள்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்லோக்ங்கள் ..
சிடிக்களும் , காஸ்ட்களும் அர்த்தத்துடன் கிடைக்கின்றன ..
சேங்காலிபுரம் அனந்தநாராயண தீட்சிதர் மிக அருமையாக பிரவசனம் செய்தது காசட்களாக கிடைக்கிறது ..
இப்போது அவரது பேரன் நாராயணீயம் உபன்யாசம் செய்கிறார் ..
நாராயணீயம் புத்தகம் அண்ணா அவர்கள் உரையுடன் கிடைக்கிறது ..வாங்கி சிடிபோட்டு கேட்டுக்கொண்டே படித்தால் சுலபமாக இருக்கும் ..
எளிதானது ச்த்சங்கத்தில் பலருடன் சேர்ந்து படிக்கும்போது உற்சாகமாக்வும் இனிமையாகவும் அனைவரும் சேர்ந்து படித்த பயனும் கிடைக்கும் ...
பத்துபேர் சேர்ந்து படித்தால் ஒவ்வொருவரும் பத்துமுறை பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்..
Deleteசூரிய உதயத்தில் படிக்க ஆரம்பித்து சூரிய அஸ்தமனத்தில் பாராயணத்தை நிறைவு செய்யவேண்டுமாம் ..
ஒவ்வொரு நாராயணத்திலும் கட்டாயம் பால்பாயாசம் நைவேத்யம் ரொம்ப விஷேசம் ..
இந்த பால்பாயாசம் நைவேத்யம் சாப்பிட்ட புத்திரபாக்கிய வேண்டுதல் உள்ளவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறியதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன் ..
இரத்தப்புற்றுநோயால் அவதிப்பட்ட ஒருவர் தகுந்த மருத்துச்சிகிச்சையுடன் நம்பிக்கையான நாராயணீயப் பாராயணத்தால் மீண்டு நலன் பெற்றதையும் கண்டு உணர்ந்திருக்கிறேன்..
தினமும் பாராயணம் செய்யலாம்
ReplyDeletehttp://jeevagv.blogspot.in/2009/01/blog-post_16.html
http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
http://tamilhelp.wordpress.com/2009/07/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
இந்த லின்ங்குகள் பயனுள்ளவையாக இருக்கிறதா என்று தெரிவியுங்கள்...
விரிவான பதில்களுக்கு மிகவும் நன்றி அம்மா. நீங்கள் கொடுத்த தகவல பலருக்கும் உதவியாக இருக்கும்.மிகவும் சந்தோஷம்.நன்றி அம்மா.
ReplyDeleteஇப்போது படம்-2 + படம்-3 மிகச்சிறிய கட்டங்களாகிவிட்டன. ஆனால் அவைகள் இன்னும் திறக்கப்படவே இல்லை.
ReplyDeleteஇருப்பினும் கீழே தனித்தனியாக மூன்று, ரிஷப வாகனத்துடன் கூடிய ஸ்வாமி அம்பாள் படங்கள் புதிதாகக் காட்சியளிக்கின்றன. அதில் மூன்றாவது வெள்ளி ரிஷபமாகவும் உள்ளது. ஏதோ மாற்றங்கள் செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எப்படியோ ரிஷப வாகனங்களை தரிஸிக்க முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
அம்மா.நீங்கள் கொடுத்த லிங்க்குகள் மிகவும் பயனுள்ளது.எனக்கு நாராயணீயம் பற்றி ஏதும் தெரியாது தோழி ஒருவர்தனக்கு கிடைத்த இந்த பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்தார் என்றாவது ஒருநாள் இதன் பலன் கிடைக்கும் என்றார் வேறுதகவல் எதுவும் இன்றி.இன்று தாங்கள்தான் எத்தனை விபரம் கொடுத்துள்ளீர்கள்.பயன்படுத்தி கொள்கிறேன். ருசியில் தேன் அல்லாடுபவர்களுக்கு ஔடதம் நாராயணீயம் என்று தெரிவித்து விட்டீர்கள்.மிகவும் நன்றி அம்மா.
ReplyDeleteஅருமை. சீசன் பதிவாக சித்திரைத் திருவிழாவைப் பதிப்பத்தமைக்கு நன்றிகள்
ReplyDelete