புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
ஞானோதயம் அடைந்த புத்தரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை
இன்றும் வழி நடத்துகிறது.
புத்த பூர்ணிமா வைசாக மாதத்தில்
(ஏப்ரல் அல்லது மே) கொண்டாடப்படுகிறது.
(ஏப்ரல் அல்லது மே) கொண்டாடப்படுகிறது.
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது.
நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.
மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்..
தனது 80 – வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார்.
ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.உலகமே உன் காலடியில் இருக்குபோது எதற்காக நீ ஆசைப்படுகிறாய்? எல்லாமே உன்னுடையது எனும்போது எதற்கு ஆசைப்படுகிறாய்? ஆசை என்பது தேவையற்றதுதானே? தேவையற்ற ஆசை அழிவைத்தானே தரும்."
எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே ..!!
விளக்கங்கள் அருமை... நன்றி...
ReplyDeleteமுதல் படமே மனதை மிகவும் கவர்ந்து விட்டது...
வாழ்த்துக்கள் அம்மா...
நல்ல படங்கள்.
ReplyDeleteபுத்த மதம் பின்பற்றப்படும் சீனா, இலங்கையில் இதனைக் கொண்டாடுகிறார்களா?
புத்த பூர்ணிமா வெசாக் என அவர்களால் சொல்லப்படுவது. அழகிய புத்தபிரானின் படங்கள். அவர்பற்றி நல்ல தகவல்கள்.
ReplyDeleteபடமும் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரி!
புத்த பூர்ணிமாவின் சிறப்புகள் அறிந்து கொண்டேன்...
ReplyDelete'புத்த பூர்ணிமா' பற்றி மிகச்சிறப்பான பதிவு. படங்களும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteooooo 891 ooooo
புத்தன் என்ற சொல்லுக்கு விழித்தெழுந்தவன் நல்ல விளக்கம். ஒரு வித அமைதி உணர முடிகிறது. நன்றிங்க.
ReplyDeleteபுத்தரின் அமைதி ததும்பும் முகம் மனத்தில் அப்படியே நின்று விட்டது. இந்த உலகெங்கும் அவர் காட்டிய அமைதி நிலவட்டும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபுத்தபகவனைப் பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது படங்கள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படங்களும் விளக்கமும் அருமை!
ReplyDeleteசித்தார்த்தன் .... சித்தம் தெளிந்து புத்தன் ஆனான்...
ReplyDeleteபெயர்க்காரணமும் ... புத்த பூர்ணிமா பற்றிய
விளக்கங்களும் மிக அருமை...
புத்த பூர்ணிமா என்ற சொல்லை முதல் அறிந்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
தங்களுக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள் அவரின் கோட்பாடுகள் உண்மையான வழயில் பின்பற்ற படட்டும் அத்தனை படங்களும் சிறப்பு
ReplyDeleteபுத்தர் விஷ்ணுவின் அவதாரமென்பதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என்று பார்த்தேன்... :)
ReplyDelete