Tuesday, April 23, 2013

சொக்கருக்கு மாலையிட்ட சொக்கத்தங்க மீனாட்சி




அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெற ஏற்பட்டதே 
இறைவன்-இறைவி திருவீதி உலா. 

எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய இறைவன் அருளுருக் கொண்டு 64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும்,‘பூலோக கயிலாயம்’  என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்
சித்திரை மாதம் சித்திரை திருவிழாவில் 12 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றது. 
ஒவ்வொருவரும் குரு மூலமாக உபதேசம் பெற்று, இறைவனின் அருள்பெற வேண்டுமென்று வேதங்கள் கூறியவாறு உபதேசம் பெற இயலாதவர்கள், சாம்பவி தீஷை என்ற  இறைவன், இறைவி இருவரும் ஒரு சேர திருவீதி உலா வரும்பொழுது தரிசித்தால் அவர்களுக்கு இறைவனே குருவாக இருந்து உபதேசம் அளிக்கிறார் என்பது ஐதீகம். 
சுவாமியும், பிரியாவிடை அம்மனும், கேட்டதைத் தரும் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள் புரியவும் , நகர் சோதனைக்காகவும் நான்கு மாசி வீதிகளில்  வலம் வருவதாக மரபு.
[1+(4).jpg]
இரண்டாம் நாள் இறைவன் ஐம்பூதங்களையும் அடக்கி தன் ஆணை வழி செலுத்துபவன் என்பதை  சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா வரும் வாகனம் உணர்த்துகிறது.
 சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அடியார்கள் வேண்டுவோர் வேண்டுவனவற்றை வழங்கவே மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
[1+(7).jpg]
நான்காம் நாள் காலையில் சுவாமியும், பிரியாவிடை அம்மனும் மீனாட்சியும் தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக கோயிலுக்கு வருவார்கள்...
[1+(8).jpg]
ஐந்தாம் நாள் சுவாமியும், அம்மனும் குதிரை வாகனத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. 
அடியவர்களின் குறைகளை விரைவாக களைவதற்காக வேகமாக செல்லக்கூடிய குதிரையில் எழுந்தருளுவதாக ஐதீகம்.
[1+(10).jpg]
ஆறாம் நாள் ஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்ற நிகழ்ச்சி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, பாடல்கள் பாடி லீலை நிகழ்த்தப்பெறும். பிறகு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.
[1+(13).jpg]
ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனம் மீதும் பவனி வருவர். இறைவன் பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு இவ்வாகனத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம். 

எட்டாம் நாள், இரவு மீனாட்சி பட்டாபிஷேகம், 
[1+(9).jpg]
கழுத்தில் அக்காலத்திய பாண்டிய மன்னர்கள் அணியும் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பிப்பார். 
[1+(11).jpg]
சித்திரை மாதம் முடிசூட்டப்பட்டதன் முதல் ஆடி மாதம்வரை அம்மன் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. 
பின்னர் ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கு(சுவாமி) பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனிவரை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. 

ஒன்பதாம் நாள் விழா அன்று மாலை அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறும். 

பத்தாம் நாள் அன்று  நடைபெறும். மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருக்கல்யாணத்தன்று மட்டும் சுவாமிக்கு திருஷ்டி பொட்டு வைக்கப்படும். 

 சுவாமிக்கு பாதபூஜை செய்து காப்பு கட்டி, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்வார். கலசபூஜையில் விநாயகர், பிரம்மா, மகாவிஷ்ணு, சோமன், உமாமகேஸ்வரி தங்குவதாக ஐதீகம். 
 கல்யாணத்திற்கு பின்னர், உபச்சார தீபாராதனை முடிந்து, பழைய கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார்கள்.. 

ஜாதி, மத பேதமின்றி ஊர்கூடி பக்தர்கள் ‘சம்போ ஹர, ஹர மகாதேவா’ என கோஷம் எழுப்பி தேருக்கு வடம் பிடித்து  மேள, தாளங்கள் முழங்க தேர் மாசி வீதிகளை சுற்றி வரும். 

தேரில் சுவாமி பவனி வரும்போது சம்ஹார கோலத்தில் வருவார். சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட மாட்டாது. 

  ஒரே சப்த வர்ண சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் எழுந்தருளி வலம் வரும்போது சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்படும்....
இந்த வலம் வருதலை காண்பவர்களுக்கு ஏழு ஜென்ம பாவம் போகும் என்பது ஐதீகம். 

நிறைவு நாளில்  சுவாமி, பிரியாவிடை ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் புரிவது கண்கொள்ளாக்காட்சி ..!
[1+(1).jpg]

25 comments:

  1. கல்யாண வைபவத்தைக் கண்டு களித்தேன்.

    ReplyDelete
  2. எனது ஏழு ஜென்மப் பாவம் நீங்கிற்று. நன்றி...

    ReplyDelete
  3. great pictures about meenatchi sundareswarar chithirai thiruvila

    ReplyDelete
  4. ”சொக்கருக்கு மாலையிட்ட சொக்கத்தங்க மீனாக்ஷி”

    அடேங்கப்பா! தலைப்புத்தேர்வே மிக அருமை.

    தலைப்பைப்படித்ததும் நானும் சொக்கிப்போய் உள்ளேன்.

    ரஸித்துப்பார்த்து படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    >>>>>>

    ReplyDelete

  5. முதல் படம் கிளி வாகனத்தில் சும்மா ஜொலிக்குது

    பச்சைக்கிளிக்கு 'கோ வை' ப்பழச்சிவப்பில் அலகு ! பிரமிக்க வைக்கிறது.

    புஷ்பமாலைகள் அத்தனையும் அழகோ அழகு. அதிலும் தாமரைப்பூக்களில் மாலை கோர்த்துள்ளது அடடா ..... ஒரே அமர்க்களம் தான். எண்ணிப்பார்த்தேன், எண்ணினேன் ... மிகச்சரியாக 888 தாமரைகள் உள்ளன. ;))))).

    >>>>>>

    ReplyDelete
  6. //அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெற ஏற்பட்டதே இறைவன்-இறைவி திருவீதி உலா. //

    மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

    //எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய இறைவன் அருளுருக் கொண்டு 64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும்,‘பூலோக கயிலாயம்’ என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்
    சித்திரை மாதம் சித்திரை திருவிழாவில் 12 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றது. //

    சூப்பரான தகவல்கள். இதுபோன்ற தகவல்களால், அழகழகான படங்களால் தங்களின் தளமும், அன்றாடப்பதிவுகளும் கூட இன்று உலகப்பிரஸித்து பெற்றுள்ளன. ;) மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

    >>>>>>

    ReplyDelete

  7. படம் 2, 3, 4, 5 எல்லாமே அழகோ அழகு தான். படம் மூன்றில் சிவந்த செந்தாமரைகள் க்ளோஸ்-அப் பில் மாலையாக மலர்ந்து ...... ஜோர் ஜோர்.

    படம் ஐந்தில் பசுமையாக அந்த மீனாக்ஷி .... பார்க்கவே பரவசப்படுத்துகிறாள்.

    படம் ஆறு: அன்னபக்ஷி வாகனம் அட்டகாசம்.

    படம் 7 ல் அம்மனுக்கு குட்டியூண்டு பாவாடை ஜோராக விசிறி மடிப்புடன் உள்ளது. ;)

    படம் 8ல் கைலாச பர்வத வாகனம் அபூர்வமாக உள்ளது. ;)

    >>>>>

    ReplyDelete
  8. என்னே படங்கள் அம்மா... நன்றி...

    நானும் பிறகு வருகிறேன்...

    ReplyDelete

  9. படம் 9ல் பிரியாவிடை அம்மனுடன் தங்கப்பல்லக்கில், வைத்த கண்களை பிரிய மனமில்லாமல் வெகு நேரம் பார்க்க வைத்துவிட்ட மிக நல்ல படம்.

    படம் 10ல் தங்கக்குதிரை வாகனம் தத்ரூபமாக உள்ளது. ;)

    படம்-11

    //ஆறாம் நாள் ஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்ற நிகழ்ச்சி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, பாடல்கள் பாடி லீலை நிகழ்த்தப்பெறும். பிறகு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.//

    காணக்கண்கோடி வேண்டும். சூப்பரோ சூப்பர். ;)))))

    >>>>>>>

    ReplyDelete

  10. படம் 12 முதல் படம் 20 வரை மீண்டும் எல்லாமே நல்ல அழகாகக் காட்சியளிக்கின்றன. எவ்ளோ படங்கள், எவ்ளோ விளக்கங்கள் !!!! மிகவும் வியப்பளிக்கின்றன.

    >>>>>>

    ReplyDelete

  11. பத்தாம் நாள் அன்று நடைபெறும். மீனாட்சி சுந்தரேஸ்வரர்
    திருக்கல்யாணத்தன்று மட்டும் சுவாமிக்கு திருஷ்டி பொட்டு வைக்கப்படும். //

    அழகழகான பதிவுகளை அதிசயமாகத் த்ந்துவரும் தங்களுக்கு தினமுமே தங்கள் தாயாரை விட்டு திருஷ்டிப்பொட்டு வைக்கச்சொல்ல வேண்டும். ;)

    //தேரில் சுவாமி பவனி வரும்போது சம்ஹார கோலத்தில் வருவார். சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட மாட்டாது. ஒரே சப்த வர்ண சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் எழுந்தருளி வலம் வரும்போது சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்படும்....//

    தங்களின் இந்த மிக அழகான பதிவுக்கு, மிகக்கடுமையான தங்களின் உண்மை உழைப்புக்கு, தங்களுக்கே வைரக்கிரீடம் அணிவிக்க வேண்டும் போல பேரெழுச்சி ஏற்படுகிறது ;)))))

    >>>>>>>>

    ReplyDelete

  12. மனதைக்கொள்ளை கொள்ளும் பதிவு,

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள் கூறிக்கொண்டு தங்களின் இந்தப்பதிவிலிருந்து நானும் “பிரியாவிடை” பெற்றுக்கொள்கிறேன்.

    தாங்கள் நீடூழி வாழ்க! தங்களின் இந்தப்பணி மேலும் மேலும் வளர்க!!

    ooooo 888 ooooo

    [888 மிகச்சிறப்பான ஒரு எண்ணிக்கை. 8 எனக்கு மிகவும் ராசியான எண்ணாக்கும்!]

    ReplyDelete
  13. அதனை நாட்களின் படங்களின் மூலம் இங்கு அழகாய் அவதரித்தாள் அன்னை மீனாட்ச்சி கண்டேன் கண்குளிர
    அதனையும் அருமை சகோதரி

    ReplyDelete
  14. காணக்கிடைக்காத காட்சியெல்லாம் ஒருங்கே உங்கள் தயவால் இங்கு காண்பதுவும் எம் புண்ணியபலனென்றே எண்ணுகின்றேன்.

    இப்படி இவற்றைக்காணும் எமக்கு கோவிலுக்குப்போகாவிட்டாலும் அங்கு போவதால் கிடைக்கும் பலனில் ஒரு பத்துவீதமாவது கிடைத்திட நீங்கள்தான் பரம்பொருளிடம் விண்ணப்பித்து அருள் வாங்கி தரவேண்டும்...

    அருமை சகோதரி. பதிவும் படங்களும் பரவசப்படுத்துகிறது.
    தினமும் கணனி திறந்தவுடன் முதலில் உங்கள் பதிவு பார்த்து அப்புறமே என் வலைப்பூவும் ஏனையவையும் பார்ப்பது என் வழமை.

    அவ்வகையில் இன்றும் நல்ல தரிசனம் கிடத்தது. மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  15. பச்சை வண்ண மீனாட்சியும், சொக்க நாதருக்கு மாலையிட்ட சொக்கத் தங்க மீனாட்சியும் மனத்தைக் கொள்ளையடிக்கிறாள்.
    இவ்வளவு அழகான விஷயங்களுடன், அருமையான போட்டோக்களையும் போட்டு அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  16. ஏழு ஜன்ம பாவங்கள் போக வழிகாட்டிய தங்களுக்கு நன்றி Beautiful photography as usual God Bless you and with you always to publish similar publication to us.
    licsundaramurthy@gmail.com
    salemscooby.blogspot.com

    ReplyDelete
  17. சித்திரை மாத உற்சவ புகைப்படங்கள் அருமை. 6 மாதம் மீனாட்சியும், 6 மாதம் சுந்தரேஸ்வரரும் ஆட்சி செய்யும் செய்தி தெரிந்து கொண்டேன்.

    மீனாட்சி கல்யாணமே வைபோகமே!

    ReplyDelete
  18. திருக்கல்யாணம் என்பது மதுரை சுற்றுப்புற மக்களுக்கும், அதனை குலதெய்வமாகக் கொண்டவர்களுக்கும் மிக முக்கிய திருவிழா. அதனை அற்புதமாகப் பதிவிட்டது அருமை.

    ReplyDelete
  19. //அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெற ஏற்பட்டதே இறைவன்-இறைவி திருவீதி உலா. //

    திருவீதி உலா ஏன் வருகிறது என்பதற்கு இன்று மெய்ப் பொருள் கண்டேன். கோவில் வராத மக்கள் வீதி தோறும் உண்டு. அவர்களும் கடவுளை கண்டு தரிசனம் செய்ய வழி இல்லையா என்பதற்கு திருவீதி உலா. உள்ளபடி அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெற்றவர்கள்தாம்.

    ReplyDelete
  20. //எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய இறைவன் அருளுருக் கொண்டு 64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும்,‘பூலோக கயிலாயம்’ என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை மாதம் சித்திரை திருவிழாவில் 12 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றது.//

    காணக் கண் கோடி வேண்டும். திருக்கல்யாணம் நடக்காதவர்களுக்கு அதுவும், நடந்தவர்களுக்கு குழந்தைப் பேறும், பிரச்னை ஆனவர்களுக்கு மன மகிழ்ச்சியும், பிள்ளைகளுக்கு திருக்கல்யாணமும் வரம் தரும் வைபவம். நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்றது....

    ReplyDelete
  21. மிகச் சிரத்தையாக தேர்ந்தெடுத்து இணைத்திருக்கும் படங்கள் பளபள .....

    ReplyDelete
  22. தங்கள் இந்தப் பதிவு மனதிற்கு மிகவும் அமைதியையும் சாந்தியையும், மகிழ்ச்சியையும், சமாதனத்தையும் தருகின்றது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. இன்று காலையில் தான் ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பினைக்
    கண்டு மகிழ்ந்தேன் .மிக சிறப்பாக நிகழும் இத் திருக் கல்யாண
    வைபவத்தைக் காணும் பாக்கியம் பெற்றவர்களுக்கும் உங்களுக்கும்
    என் வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி சிறப்பான பகிர்வு இதற்க்கு !

    ReplyDelete
  24. சொக்கனுக்கு மீனாட்சி அருமைப் பதிவு.
    படங்கள வழமையான சிறப்பு.
    இனிய பாராட்டு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. மனமுருகச் செய்யும் மதுரையம்பதியின் திருவீதி உலா தரிசனம் குறித்த சிறப்பானதொரு பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete