“பத்மேவ மங்கள ஸரித்பாரம் ஸம்ஸார ஸந்ததே:|
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:||”
“பாதுகையானது பிராட்டியைப் போன்றது. ஆற்றுவெள்ளம் போன்று சுபங்களைப் பெருகச் செய்வதில், ஸம்சார சங்கிலியை அறுப்பதில், பாபங்களைப் போக்குவதில் இணையானது”
இத்தனை பெருமைகளையும் சக்திகளையும் தன்னகத்தே கொண்ட இந்த மஹாலக்ஷ்மியை, மக்கள் தங்கள், தங்கள் விருப்பம் பூர்த்தியடைய, எண் வகைச் செல்வங்களையும் பெற்று மகிழ உபாஸிக்கிறார்கள்.
மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,
நல்ல பதவி வேண்டுபவர்கள் ராஜ்ய லக்ஷ்மியையும்,
எல்லா சித்திகளையும் பெற ஆதிலக்ஷ்மியையும்,
தான்யம் மிகுதியாக விளைய தான்யலக்ஷ்மியையும்,
தங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்ட விஜயலக்ஷ்மியையும்,
தங்களுக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்க மஹாலக்ஷ்மியையும், வீரம் போட்டிகளில் வெற்றிகிட்ட வீர லக்ஷ்மியையும் வணங்குகிறோம்..
“கிரீட - மகுடோபேதாம் ஸபுர்ணவர்ண ஸமந்விதாம்|
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸந ஸமந்விதாம்||
பரிபூர்ணம் ச கும்பஞ்ச தக்ஷிணேந கரணேது|
சக்ரம் பாணம் தாம்பூலம் ததா வாமகரணேது||
சங்கம் பத்மம் ச சாபம் சகண்டி காமபி தாரிணீம்|
ஸத்கஞ்சு கஸ்தநீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோகரம்||”
சிரசில் கிரீடமும், எல்லா ஆபரணங்களை அணிந்தவளும்,
ஆசனத்தில் வீற்றிருப்பவளும்,
தன் கரங்களில் பரிபூர்ண கும்பம், சக்ரம், அம்பு, தாம்பூலம் சங்கு, தாமரைமலர், வில், கண்டிகை, தாங்கியவளாக எட்டு கரங்களுடன், மனத்திற்கு இனியவளாக விளங்கும் தனலக்ஷ்மியை நாம் தியானம் செய்வோம்.
ஸ்ரீதேவி தாயார் பாற்கடலிலிருந்து அவதரித்தது பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திர தினத்தன்று. தாமரைமலர் மீது அமர்ந்த வண்ணம் தோன்றித் தம் கரங்களில் இருந்த மாலையுடன் வெளியே வந்தாள்.
அவள் அங்கு கூடியிருந்த ஒவ்வொரு தேவர்களையும் பார்த்துக் கொண்டு வந்தபோது, அவர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் மாலையிட வருகிறாள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த போது, இது எதையும் கவனியாதவர் போன்று எங்கேயோ பார்த்த வண்ணம் இருந்த மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து அவரையே தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள். அவனும் அவளைத் தன் மார்பினில் தாங்கிக் கொள்ள அவளே “ஹரி ப்ரியா ஆனாள்”.
அருமையான படங்களையும் விளக்கங்களையும் கண்டேன், ரசித்தேன்.
ReplyDelete”மனதிற்கு இனிய மஹாலக்ஷ்மி” பற்றிய இந்தப்பதிவு இன்று வெள்ளிக்கிழமைக்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. மனதுக்கும் சந்தோஷமாக உள்ளது.
ReplyDelete>>>> முழுதும் படித்து விட்டு மீண்டும் வருவேன் >>>>
எனக்கும் மிகவும் மனதுக்குப்பிடித்தமான படத்தினை இரண்டாவ்தாகக் காட்டி மகிழ்வித்துள்ளீர்கள்.
ReplyDeleteஅதற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.
முதல் படத்தில் ஜொலிக்கும் தங்கக்காசுகளை அள்ளி அள்ளி இரண்டு கைகளாலும் வாரிவாரி வழங்குகிறீர்கள். அவை மழையெனப் பொழிந்துகொண்டே இருக்கின்றன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
>>>>>>
1] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,
ReplyDelete2] நல்ல பதவி வேண்டுபவர்கள் ராஜ்ய லக்ஷ்மியையும்,
3] எல்லா சித்திகளையும் பெற ஆதிலக்ஷ்மியையும்,
4] தான்யம் மிகுதியாக விளைய தான்யலக்ஷ்மியையும்,
5] தங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்ட விஜய லக்ஷ்மியையும்,
6] தங்களுக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்க
மஹாலக்ஷ்மியையும்,
7] வீரம் போட்டிகளில் வெற்றிகிட்ட வீர லக்ஷ்மியையும் வணங்குகிறோம்..
என்று சொல்லி அஷ்ட லக்ஷ்மிகளில் ஏழு மட்டுமே சொல்லியிருக்கிறார்களே என இதைப்படிக்கும் யாரும் தயவுசெய்து குழம்ப வேண்டாம்.
எட்டாவது லக்ஷ்மி இந்தப்பதிவராகிய திருமதி. இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களே தான் என நாம் வைத்துக்கொள்ளலாம்.
இவர்களின் அன்றாடப்பதிவுகளைப் படித்து, படங்களைப்பார்த்து, விளங்களை அறிந்து கொண்டாலே, அஷ்ட லக்ஷ்மிகளின் அருளும் ஒருசேர நாம் பெற்று விடலாம் என்பது எனக்கு மிகவும் நன்றாகவே விளங்கி விட்டது. ;)))))
இவர்களே அற்புதமான அஷ்டலக்ஷ்மியும் ஆவார்கள். தங்கமான பதிவர். வைரமாக ஜொலிக்கும் பதிவுகளாக தினமும் அள்ளி அள்ளிக் கொடுத்து அசத்தி வருகிறார்கள்.
இவர்களின் பதிவுகளை நாம் தினமும் படித்து ரஸித்து அஷ்ட லக்ஷ்மிகளின் ஒட்டுமொத்த பரிபூர்ண அருளைப்பெறுவோமாக!
>>>>>>.
//மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து அவரையே தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள். அவரும் அவளைத் தன் மார்பினில் தாங்கிக் கொள்ள அவளே “ஹரி ப்ரியா” ஆனாள்.//
ReplyDeleteஎன் வக்ஷஸ்தலத்திலும் என்றும் நீங்காத இடம்பெற்றுவிட்ட ’ஹரி ப்ரியா’வுக்கு என் வந்தனங்கள்.
>>>>>
இன்று குறைவான படங்களுடன் நிறைவான பதிவாக உள்ளதால் எல்லாப்படங்களும் காட்சியளிக்கின்றன. மிகவும் சந்தோஷம். ;)
ReplyDeleteஎப்போதும் இதுபோலவே குறைவான படங்களாகவே தாருங்கள். அப்போதுதான் மனதுக்குக் குறையில்லாமல் முழுத்திருப்தியாக எல்லாவற்றையும் பார்க்கும்படியாக இருக்கும்.
நேற்று 16 படங்களில் ஆறு படங்கள் கடைசிவரை பார்க்கவே முடியவில்லையாக்கும். ;( .
இன்றைய தங்களின் பதிவும் சிம்பிளாகவும் சிறப்பாகவும் உள்ளது.
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
தமிழில் டைப் அடிக்க முடிகிறதா இல்லையா? சீக்கரமாகச் சரிசெய்யுங்கோ.
nhm [NHM] WRITER என்பதை உடனே FREE DOWNLOAD செய்யுங்கோ.
வாழ்க வாழ்கவே!
ooooo 870 ooooo
1] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,
ReplyDelete2] நல்ல பதவி வேண்டுபவர்கள் ராஜ்ய லக்ஷ்மியையும்,
3] எல்லா சித்திகளையும் பெற ஆதிலக்ஷ்மியையும்,
4] தான்யம் மிகுதியாக விளைய தான்யலக்ஷ்மியையும்,
5] தங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்ட விஜயலக்ஷ்மியையும்,
6] தங்களுக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்க
மஹாலக்ஷ்மியையும்,
7] வீரம் போட்டிகளில் வெற்றிகிட்ட வீர லக்ஷ்மியையும் வணங்குகிறோம்..
என்று சொல்லி அஷ்ட லக்ஷ்மிகளில் ஏழு மட்டுமே சொல்லியிருக்கிறார்களே என இதைப்படிக்கும் யாரும் குழம்ப வேண்டாம்.
எட்டாவது லக்ஷ்மி இந்தப்பதிவராகிய திருமதி. இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களே தான் என நாம் வைத்துக்கொள்ளலாம்.
இவர்களின் அன்றாடப்பதிவுகளைப் படித்து, படங்களைப்பார்த்து, விளங்களை அறிந்து கொண்டாலே, அஷ்ட லக்ஷ்மிகளின் அருளும் ஒருசேர நாம் பெற்று விடலாம் என்பது எனக்கு மிகவும் நன்றாகவே விளங்கி விட்டது. ;)))))
இவர்களே அற்புதமான அஷ்டலக்ஷ்மியும் ஆவார்கள். தங்கமான பதிவர். வைரமாக ஜொலிக்கும் பதிவுகளாக தினமும் அள்ளி அள்ளிக் கொடுத்து அசத்தி வருகிறார்கள்.
இவர்களின் பதிவுகளை நாம் தினமும் படித்து ரஸித்து அஷ்ட லக்ஷ்மிகளின் ஒட்டுமொத்த பரிபூர்ண அருளைப்பெறுவோமாக!
>>>>>>.
nice post about sri mahalakshmi
ReplyDeleteமங்களகரமான பதிவு! கணினி உலகின் கோயில் தங்கள் வலைதளம்.
ReplyDeleteசகோதரி! மனதுக்கு இனிய மஹாலக்ஷ்மி என அருமையான மனதுக்கு இதம்தரும் அழகிய படங்களுடனான அற்புதப் பதிவு தந்தீர்கள்.
ReplyDeleteஉண்மையில் தேவியின் அழகில் மெய் மறந்து வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றேன். அப்படி ஒரு அழகு. சிறந்த படங்கள்.
அனைவருக்கும் மஹாலக்ஷ்மியின் பேரருட்கடாக்ஷம் கிட்டிட வேண்டுகிறேன்.
நல்ல பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரி!
படங்கள் அருமை
ReplyDeleteஅருமையான படங்கள்...
ReplyDeleteVGK ஐயா அவர்களின் சிறப்பான கருத்துரையையும் ரசித்தேன்...
வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி தரிசனம் அற்புதம்!
ReplyDeleteவெள்ளிக்கிழமை விளக்கேற்றிவிட்டு வந்தால் கணனியில் உங்கள் பதிவு!
ReplyDeleteமஹாலக்ஷ்மி நமோஸ்துதே!
மஹாலஷ்மியின் மகிமையில் நனைந்தேன் எல்லா படமும் பக்தியை வெளிபடுத்தியது கடைசி படம் அழகையும் ஓவிய திறமையையும் வெளிபடுத்தியது பகிர்வுக்கு நன்றி
ReplyDelete